Jump to content

கார்த்திகைப் பூ



மாவீரர் மாதம்தமிழீழ தேசம் எங்கும் மலர்ந்தது கார்த்திகைப் பூ, அது காற்றில் அசைந்தாடி மாவீரர் தினத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.


தமிழீழ தேசிய மலரான கார்த்திகைப் பூ தமிழர் தாயகத்தில் பூக்கத் தொடங்கியுள்ளது. 

தமிழீழ மாவீரர் நாள் நெருங்குகின்ற நிலையில், மாவீரர்களின் கல்லறைகளுக்குச் சூடுகின்ற கார்த்திகை மலர் மலர்ந்து மாவீரர் தினத்தை மக்களுக்கு நினைவூட்டியுள்ளது. 

தமிழீழ தேச விடுதலைக்காக போரிட்டு வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூரும் தமிழீழ மாவீரர் தினம் வருடந்தோறும் கார்த்திகை 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. அதையொட்டி 21௨7 வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது. 

மாவீரர் தினத்தின்போது மாவீரர்களின் கல்லறைகளில் தமிழீழ தேசிய மலரான காந்தள் மலர் என அழைக்கப்படும் கார்த்திகை மலர் வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்படும். 

கார்த்திகைப் பூ வருடத்தில் ஒரு மாதத்தில் மட்டும், அதாவது கார்த்திகை மாதத்தில் மலரும். அந்த வகையில், தற்போது தமிழர் தாயகத்தில் ஆங்காங்கே கார்த்திகை மலர் மலர்;ந்து தமிழீழ மாவீரர் தினத்தை நினைவூட்டியுள்ளது. 

தமிழீழ மக்களின் மனங்களில் இருந்து மாவீரர்களின் நினைவுகளையும் கனவுகளையும் மறக்கச் செய்வதற்கு தமிழீழ தேசத்தில் உள்ள மாவீரர்களின் கல்லறைகளை சிறிலங்கா படைகள் துவம்சம் செய்தன.  

ஆனால், கார்த்திகை மாதத்தில் மலரும் காந்தள் மலரை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த மலரைக் கண்ட சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் மாவீரர்களை நினைவிற்கொள்வர். 

அந்த வகையில் தமிழீழ மாவீரர் தினம் அடுத்த மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், தற்போதே கார்த்திகை மலர் மலர்ந்திருக்கின்றது. 

அது தமிழீழ மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க மக்களுக்கு அழைப்பு விடுப்பது போலக் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருக்கின்றது.

  

http://sankathi24.com

From the category:

விம்பகம்

· 8165 images
  • 8165 images

Photo Information

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.