Jump to content

கற்பகதரு.



ஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை அதன் முழுப் பயன் கருதி “கற்பகதரு” என்பர். போர்ச்சூழலிலும், பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி எமது இளைய தலைமுறையில் அறியாதிருக்கும் சிலர் அறிய பகிர்வதே இப்பதிவின் நோக்கம். “கடகத்தின்” பின் இளையோர் மாத்திரமன்றி நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும் பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும் எல்லோருக்குமுரிய மீட்டலாக  இது அமைகிறது.

குருத்து:- பனை தறிக்கும் போதோ, ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகள் குருத்து என்பர். இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும்.

கள் :- பூம்பாளையைச் சீவிக் கள் இறக்குவார்கள். முட்டிக்குள் சுண்ணாம்பிடுவதைக் கருப்பணியெனவும், தென்னிந்தியாவில் பதநீர் என்பர். சூட்டுடம்புக்காரருக்கு காலையில் அளவுடன் குடிப்பது நல்லதென்பர். சுண்ணாம்பு இடாதிருக்கும் கள்ளில் நொதியம் கலப்பதால் சற்றுப் புளிப்பு இருக்கும் இதைக் குடித்தால் வெறிக்கும் அளவுடன் குடித்தால் தீங்கற்ற பானம்.

பனங்கட்டி:- இதைப் பனைவெல்லம், பனங்கருப்பட்டி எனவும் கூறுவர். கருப்பணியைப் பதமாக வற்றக் காச்சிப் பெறும் இனிப்புப் பொருள் இது. இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்கொள்ளும் மருந்துகளுக்கு தேன் கிடைக்காத போது இதைச் சேர்க்கும்படி வைத்தியர் கூறுவர். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம். ஈழத்தில் பருத்தித்துறை இதன் தயாரிப்பிலும் செய்பாங்கிலும் பிரபலம்.

நுங்கு:- பனங்காயின் இளம் பருவத்தில் முற்றாத விதையை வெட்டி அதன் உட்பகுதியை உண்பர். மிக இனிமையான உணவு.

பனம்பழம்:- இதைச் சுட்டு, சற்றுப் புளிக்கரைசலில் தோய்த்துச் சாப்பிட்ட அருமையாக இருக்கும். பசியும் அடங்கும்.

பனங்காய்ப் பணியாரம்:- பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமை மாச் சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது. மிக வாசமாகவும் சுவையாகவும் இடுக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேட பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.

 

  • Like 1

From the category:

விம்பகம்

· 8165 images
  • 8165 images

Photo Information

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.