All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. தா. பாண்டியனின் அற்புதமான உரை.... நாம் நம் புராதனங்கள் எல்லாவற்றையும் சுயநலம் பேணும் அரசியல்வாதிகளால் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்......! 😕
 3. அயல்நாடு வந்தும் அழகான தேரில் களமாடி வரும் கருணைக் கந்தன்.....!
 4. புத்தன் ஐயா, ஒருகாலத்தில் ரூப்பிதெரா மஸ்தானா...... மேரே மித்துவா...... ஏ..தோஸ்துகி..... தேரே மேரே கித்துமே.... என்றெல்லாம் பாடி மகிழ்ந்த ஆக்கள் ஆராதனா.., நாகினா..குர்பானி, சோலே..ஏக் துஜெ கெலியே, சனம் தெரி கசம் போன்ற படங்களை திரும்ப திரும்ப பார்த ஆக்கள்... இப்ப இந்தி தெரியதென்றீங்கள்?
 5. anbujaya (37 years old) devapriya (51 years old) Eezhan (39 years old) varippuli (47 years old) கவிப்புயல் இனியவன் (53 years old) கவிப்புயல் இனியவனுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......! 🌼
 6. சபாநாயகரின் கதிரையில் தண்ணி ஊற்றிய... புத்திசாலியை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இந்த அமளிக்குள்... ஒருத்தர், தலை இழுத்துக் கொண்டு இருக்கிறார். 🤑
 7. “மாற்றம் ஒன்று மட்டுமே.... உலகில் நிலையானது” சித்தாந்தம் அருளியவர்கள்:- தமிழ் தேசிய கூட்டமைப்பு.
 8. தமிழ் சிறி

  நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

  சீமானின்.... குரலில், இணையத்தைக் கலக்கும் இளைஞர்கள்.
 9. வேட்டியால் மூடி... நவீன முறையில் சிலை திறப்பு. மய்யம் Vs வேங்கை மகன். கிழிஞ்சது கிருஷ்ணகிரி 😂😂
 10. MEERA

  தாய் மண்

  கிருபன் நீங்களே எழுத்து பிழை விடலாமா? பரித்தித்துறை அல்ல பருத்தித்துறை. ஒரு காலத்தில் வடக்கிற்கே உணவளித்த துறைமுகம் இது.
 11. Today
 12. கிருபன்

  தாய் மண்

  யாழின் துறைமுக நகரம் பரித்தித்துறை http://athavannews.com/யாழின்-துறைமுக-நகரம்-பரி/
 13. நான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி Share நான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவரல்ல ரவி சாஸ்திரி என இந்திய அணியின் தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு இந்திய அணியினர் பயணமாவதற்கு முன்னர் விராட்கோலி இதனை தெரிவித்துள்ளார். நீங்கள் சொல்வதெற்கெல்லாம் ரவிசாஸ்திரி தலையாட்டுவாரா என நிருபர் ஒருவர் விராட்கோலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள விராட்கோலி நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் வேடிக்கையான விடயம் இதுதான் என குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் நான் தெரிவித்த பல விடயங்களை அதிகம் நிராகரித்தவர் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரிதான் என விராட்கோலி குறிப்பிட்டுள்ளார். நான் நேர்மையான கருத்தொன்றை பெறக்கூடிய நபர் ரவிசாஸ்திரி என தெரிவித்துள்ள விராட்கோலி ஒரு விடயத்தை செய்யக்கூடாது என்றால் அவர் அதனை செய்யவேண்டாம் என தெரிவிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். நான் வேறு யாரை விடவும் ரவிசாஸ்திரியை செவிமடுத்தே எனது விளையாட்டில் அதிக மாற்றங்களை மேற்கொண்டுள்ளேன் என கோலி தெரிவித்துள்ளார். இந்த அணியை நாங்கள் மீளகட்டியெழுப்ப ஆரம்பித்த பின்னர் ரவிசாஸ்திரி பல வீரர்களிற்கு அவர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் என விராட்கோலி குறிப்பிட்டுள்ளார். 2014 இங்கிலாந்;து தொடரிலிருந்து மீண்டு நான் மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கும் சிகார் தவான் மீண்டும் சிறப்பான நிலைக்கு திரும்புவதற்கும் சாஸ்திரியே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வீரர்களை முகாமைத்துவம் செய்வதே மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ள விராட்கோலி ரவிசாஸ்திரி அதனை சிறப்பாக கையாண்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/44590
 14. 144 தடை உத்தரவுடன் சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி உத்தரவிட்டது. குறித்த உத்தரவை பெண்கள் அமைப்புகள் சில வரவேற்றாலும், ஐய்யப்ப பக்தர்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இந் நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அளவு நிலைமை மோசமானது. பதற்றம் நிலவியது. பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல இளம்பெண்கள் ஐய்யப்பன் சன்னிதானத்துக்கு 100 மீற்றர் தொலைவிலுள்ள வலியநடை பந்தல் வரை சென்றும், கடும் எதிர்ப்பால் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உருவானது. திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பாலராமவர்மாவின் பிறந்த தினத்தைமுன்னிட்டு கடந்த 5ஆம் திகதி நடை திறந்து, 6ஆம் திகதி சாத்தப்பட்டபோதும், பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும், முந்தைய உத்தரவுக்கு தடை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந் நிலையில் சபரிமலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடை திறக்கவுள்ளது. மண்டல பூஜை, மகர விளக்கு வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோயில் நடை திறந்திருக்கும். இதனை முன்னிட்டு பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, நிலையில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. சபரிமலை கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பா, சன்னிதானம் போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக பெண்ணியவாதி திருப்தி தேசாய் விமானம் மூலமாக கொச்சி வந்துள்ளார். திருப்தி தேசாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்துக்கு வெளியே கடும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத திருப்தி தேசாய் மற்றும் அவருடன் வந்த குழுவினர், காலை உணவை விமான நிலையத்திற்குள்ளேயே வைத்து எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். http://athavannews.com/144-தடை-உத்தரவு-பிறப்பிப்பு/
 15. நிறைவேற்று அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர போராடுவோம்: ரணில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வரும் வரை போராடுவதற்கு வருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினர் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்தனர். இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுயுள்ளதாவது, “தற்போது தேவையேற்படின் மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை நிரூபித்துக் காண்பிக்க எம்மால் முடியும். மக்கள் 85 வருடங்களுக்கு மேலாக தங்களின் வாக்குகளை பயன்படுத்தி நாடாளுமன்றினை தேர்வு செய்து ஜனநாயத்தை உறுதிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் மக்கள் ஆணையினை அரசாங்கம் மீறும் பட்சத்தில் அவர்களை பதவியிலிருந்து நீக்குவதே எந்ததொரு நாட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது எமது நாட்டின் ஜனநாயகம் கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகத்தினையும், நாடாளுமன்றத்தையும் நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். ஆகையால் எதிர்வரும் தேர்தலில் உங்களுக்கு விருப்பமான நாடாளுமன்ற உறுப்பினரையும், கட்சியினையும் தேர்வு செய்யவும் உங்களுக்கு வாய்ப்பு விரைவில் வழங்கப்படும். ஆகையால் மக்களாகிய நீங்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டியது அவசியம். அந்தவகையில் ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் உட்பட்டு ஆட்சியொன்றை அமைத்து, நாம் தேர்தலை எதிர்நோக்க தயாராகவே உள்ளோம்” என ரணில் தெரிவித்துள்ளார். http://athavannews.com/நிறைவேற்று-அதிகாரத்தை-மு/
 16. இந்தச் சண்டையில்.. அனல் பறக்க... குனிந்தார்... சம்பந்தர். எரிமலை... "சும்மை" தாண்டி... சம்மையும், ரணில் மாத்தையாவையும்... யாரும்.. நெருங்க முடியாது. 😎 நெருப்புடா, தமிழன்டா, கெத்துடா, செம்புடா.... 🤑
 17. மாலேயில் செய்ததை புதுடில்லி கொழும்பில் செய்யமுடியாது - கொன்ஸரான்ரினோ சேவியர் இலங்கையின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் கண்கள் கொழும்பை மாத்திரமல்ல, புதுடில்லியையும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன. அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதன்மை கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது மாலைதீவில் எதேச்சாதிகாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தலையீடு செய்து வெற்றிகண்டதைப் போன்று கொழும்பிலும் இந்தியா செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனநாயக மீட்சியை நோக்கி நெருக்குதலைப் பிரயோகிக்க இந்தியாவினால் இயலுமாக இருந்தது என்று மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், இலங்கை மாலைதீவு அல்ல. கடந்த இரு வாரங்களாக இலங்கையின் அரசியல் நெருக்கடி தொடர்பில் புதுடில்லியின் அணுகுமுறை ஜனநாயக செயன்முறைகள் தொடரவேண்டும் என்ற ஒழுக்க நியதியின்படி 'பொறுத்திருந்து பார்க்கும்' கொள்கையாகவே இருந்துவருகிறது. இலங்கையின் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இடைக்கால உத்தரவும் அதைத் தெடர்ந்து பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டமையும் அதிகாரத்தை அரசியலமைப்புக்கு புறம்பான வழிமுறைகளில் அபகரிக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆசியாவின் பழைமை வாய்ந்த ஜனநாயக நாடுகளில் ஒன்றான இலங்கையில் இது சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த ஒழுங்கு முறைசார்ந்த ஒரு வெற்றியாக இருக்கின்ற அதேவேளை, தற்போதைய அரசியல் நெருக்கடியின் மூலக்காரணியைத் தீர்த்துவைக்கப்போவதில்லை.தேர்தல்கள் நடத்தப்படும்வரை உறுதிப்பாடின்மை தொடரவே செய்யும். பதவி நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டரீதியான போராட்டத்திலும் பாராளுமன்றப் போராட்டத்திலும் வெற்றியைப் பெறலாம். ஆனால், இலங்கையன் வீதிகளில் காணக்கூடியதாக இருக்கின்ற உணர்வுகள் சிங்கள ஜனரஞ்சகவாத அரசியல் கூட்டணியின் மீள்வருகைக்குச் சார்பானதாகவே இன்னமும் இருக்கிறது. இந்தியா தன்னடக்கத்துடனான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்கின்ற அதேவேளை ஏதோ ஒரு வழியில் ராஜபக்ஷவின் மீள்வருகைக்கு இந்தியா தன்னைத் தயார்படுத்தவேண்டும் என்பதை இரு மதிப்பீடுகள் அவசியப்படுத்துகின்றன. முதலாவது, 2015 சிறிசேன - விக்கிரமசிங்க செயற்கைக் கூட்டணி சிறிசேனவின் விசுவாசிகள் இரு வாரங்களுக்கு முன்னர் வெளியேறுவதற்கு வெகு முன்னதாகவே இயற்கை மரணமெய்திவிட்டது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவரை மற்றவர் மலினப்படுத்துவதற்கு மேற்கொண்ட குரோதத்தனமான முயற்சிகள் அரசாங்கத்தை முடமாக்கிவிட்டன. அவை இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளையும் கூட பாதித்தன. இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ராஜபக்ஷ கண்ட பெருவெற்றியையும் சிறிசேனவுடனான அவரின் புதிய கூட்டணியையும் கருத்திற்கொண்டு நோக்குகையில், அவர்கள் இருவரும் எந்தவழியில் என்றாலும் எப்போதாவது ஒரு நாள் அதிகாரத்தைக் கூட்டாக வலுப்படுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு மெய்யாகிவிட்டது என்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 'ஜனநாயக விழுமியங்களையும் அரசியலமைப்புச் செயன்முறைகளையும் ' மதித்துச் செயற்படுமாறு இரு தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்து ஒரு நேர்மையான நிலைப்பாட்டையே இந்தியா இதுவரையில் கடைப்பிடித்துவந்திருக்கிறது. ஆனால், நெருக்கடிக்கு உடனடித்தீர்வைக் காண்பதற்கு திரைமறைவில் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட சந்தடியில்லாமல் இந்தியா நாட்டம் காட்டக் கூடும் என்கின்ற அதேவேளை, இலங்கையில் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தீர்மானிப்பதற்கு புதுடில்லியிடம் மத்திரக்கோல் கிடையாது. மாலைதீவில் பிரயோகிக்கக்கூடியதாக இருந்ததைப்போன்ற அதே செல்வாக்கு இலங்கையில் புதுடில்லிக்கு இல்லை என்பது மாத்திரம் நிச்சயம்.இலங்கையில் அதிகாரச் சமநிலை எதிரணிக்குச் சாதகமானதாகவே இருக்கிறது என்பது தெளிவானது. கடந்த வாரங்களில் தன்னடக்கமான அணுகுமுறையை இந்தியா கடைப்பிடிப்பதிலிருந்து இதை விளங்கிக்கொள்ளமுடியும்.ஆனால், அடுத்த ஒரு சில வாரங்களில் நெருக்கடி மேலும் தீவிரமடையுமானால் புதிதாக தேர்தல்கள் நடத்தப்படக்கூடிய சாத்தியம் தோன்றும்.தேர்தல்கள் பெரும்பாலும் சிறிசேனவுக்கும் ராஜபக்ஷவுக்கும் சார்பாகவே அமையும். இரண்டாவது, ராஜபக்ஷ ' சீனாவுக்குச் சார்பானவர் ' என்று சுலபமாக முத்திரை குத்தலாம் என்றபோதிலும், அவர் சொல்லிலும் செயலிலும் ' முதலில் இந்தியா ' என்ற கொள்கையைக் கடைப்பிடித்தவவர் என்பதற்கு கடந்தகால நடவடிக்கைகள் சான்றாக இருக்கின்றன. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின்போது ( 2006 - 2009 ) காணக்கூடியதாக இருந்தததைப் போன்று அவரது தந்திரோபாய மதிக்கூர்மை வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் துலாம்பரமாக தெரிந்ததில்லை.தமிழ்நாடு காரணி மற்றும் சீன இராணுவ உதவி ஆகியவை உட்பட பல சவால்கள் இருந்தபோதிலும் அந்த காலகட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கையைச் சம்பாதிக்க ராஜபக்ஷவினால் இயலுமாக இருந்தது. இலங்கையைச் சீனக் கடன் பொறிக்குள் தள்ளிவிட்ட பாரிய உட்கட்டமைப்புத் திட்ட உடன்படிக்கைகள் பலவற்றுக்கு அனுமதியளித்தவர் ராஜபக்ஷ என்றபோதிலும், சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் உட்பட பல திட்டங்களை பொறுப்பேற்குமாறு முதலில் அவர் இந்தியாவிடம்தான் கேட்டார். புதுடில்லி மறுத்த பிறகே பெய்ஜிங்கிடம் கையளித்தார்.(இப்போது அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது.) குறிப்பாக இதன் காரணத்தினால் தான் கடந்த செப்டெம்பரில் பிரதமர் மோடியை பிரச்சினை எதுவுமின்றி அவரால் சந்திக்கவும் அதன் மூலமாக 2014 இல் கசப்புக்குள்ளான உறவுகளை மீளவும் சீர்செய்யவும் முடிந்தது. இது ராஜபக்ஷ இந்தியாவுக்குச் சார்பானவர் என்று அர்த்தப்பட்டுவிடாது.இலங்கையில் சீனாவின் ஈடுபாடு கடுமையாக அதிகரித்திருக்கும் நிலையில்,அவர் திரும்ப அதிகாரத்துக்கு வரும்பட்சத்தில் இந்து சமுத்திரத்தில் இலங்கையின் கேந்திரமுக்கியத்துவ இட அமைவை உச்சபட்சம் அனுகூலமாகப் பயன்படுத்துவதற்கு இந்தியாவுடனும் சீனாவுடனும் சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில் நாட்டம் காட்டுவார். ஆனால், இத்தடவை ஆசியாவின் இரு வல்லாதிக்க நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்தி பயனடைவது ராஜபக்சவுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மோடிக்கும் சீன ஜனாதிபதி சிஜின் பிங்கிற்கும் இடையில் வூஹான் நகரில் நடைபெற்ற உச்சிமகாநாட்டுக்குப் பிறகு இந்தியாவின் பாரம்பரிய செல்வாக்குப் பிராந்தியங்களில் முன்னரைக் காட்டிலும் கூடுதலான அளவுக்கு தன்னடக்கமான அணுகுமுறையை சீனா கடைப்பிடிக்கின்றது. அத்துடன் நெருக்கடிகள் தோன்றுகின்ற தருணங்களில் புதுடில்லியுடன் விட்டுக்கொடுத்து இணங்கிச் செயற்படுவதிலும் சீனா நாட்டம் காட்டுகிறது.புதுடில்லியைப் பொறுத்தவரை மேற்கூறப்பட்ட அணுகுமுறைகள் தெற்காசியாவின் ஏனைய நாடுகள் தொடர்பில் சீனாவுடன் ஆழமான பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துபவையாக இருக்கின்றன. அதேவேளை, ராஜபக்ஷவையோ அல்லது இலங்கையின் வேறு எந்தவொரு தலைவரையுமோ இந்தியாவுக்குச் சார்பானவரென்றோ அல்லது எதிரானவர் என்றோ அடையாளத் துண்டு ஒட்டுவதிலும் அர்த்தமில்லை. கொழும்பில் எந்த அரசியல் அணி அதிகாரத்தில் இருந்தாலும் அது ' முதலில் இலங்கை' என்ற கொள்கையையே எப்போதும் கடைப்பிடிக்கும். அதனால், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது இலங்கையில் அதிகரித்துவருகின்ற சீனச் செல்வாக்கை தடுப்பதற்கான இந்தியாவின் ஆற்றல் அந்தத் தீவில் ஆட்சியதிகாரத்தில் இருக்கக்கூடியவரில் பெருமளவுக்குத் தங்கியிருக்கி இருக்கப்போவதில்லை. அரசியலுக்கும் பாதுகாப்புக்கும் அப்பால் இலங்கையிலும் பிராந்தியத்திலும் இந்தியாவின் மணடல முக்கியத்துவம் பாரிய உட்கட்டமைப்பு இணைப்புத்திட்டங்களை சிறந்த முறையில் விரைவாகவும் கூடுதலான அளவிலும் செய்துகொடுப்பதில் அதற்கு இருக்கக்கூடிய ஆற்றலிலும் பொருளாதாரச் சார்பிலுமே தங்கியிருக்கும். (கட்டுரையாளர் புரூக்கிங்ஸ் இந்தியா நிறுவனத்தின் வெளியுறவுக் கொள்கை கற்கைகள் ஆய்வாளர்) http://www.virakesari.lk/article/44579
 18. புதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி நிலை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் இந்த சதித்திட்டங்களுக்கு அமெரிக்க மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் உதவி புரிந்து வருகின்றன. இதன் மூலம் புதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அத்துடன் பாராளுமன்றத்தில் பிரதானமானவரான சபாநாயகருக்கே பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றி தெளிவுபடுத்த தேவை தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/44592
 19. வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஐந்தாம் திகதி கொழும்பில் யப்பானிய தூதுவருக்கும், ஹலோ ட்ரஸ்ட் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் அதிகாரிக்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. 2020 கண்ணி வெடி அற்ற இலங்கை எனும் இலங்கை அரசின் இலக்கை நோக்கி பயணிப்பதற்கு யப்பானிய அரசின் இவ்வுதவி பெரும் பங்களிப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/44589
 20. ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் November 16, 2018 1 Min Read 2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விடுத் துள்ள செய்திக்குறிப்பில் உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த வருடம் மே 30-ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே ஐபிஎல் போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஐபிஎல் போட்டி யில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் பங் கேற்க முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது அதே வேளை நடப்பு உலகக் கிண்ண சம்பியன் என்பதால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பை போட்டிதான் முக்கியம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கருதுவதாகவும் இதனால் உலகக் கிண்ணப் போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 வீரர்களும் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/103446/
 21. பிரெக்ஸிற் வரைவு ஒப்பந்தம் ஏற்படாமல் போக வாய்ப்பு November 16, 2018 பிரெக்ஸிற் வரைவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக எழுந்துள்ள கருத்தை மறுத்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரித்தானியாவில் நிலவும் அரசியல் சூழலால் இந்த ஒப்பந்தம் ஏற்படாமல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வரைவு ஒப்பந்தம் தற்போது தயாராகி விட்டநிலையில் இது குறித்து மறு பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சே இல்லை என ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மோர்கல் தெரிவித்துள்ளார். இதேவேளை பிரெக்ஸிற் தொடர்பான பிரித்தானியாவின் நிலையில்லாத்தன்மையால் எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் போகும் சாத்தியமும் வரக்கூடும் எனவும் அதற்குத் தயாராக வேண்டும் எனவும் என பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மக்ரோன தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கூ ஒன்றியத்திலிருந்து விலகும் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் பிரித்தானியாவில் 4 அமைச்சர்கள் பதவிவிலகியுள்ள நிலையில் பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார். மேலும் இந்த வரைவு ஒப்பந்தத்தில் உள்ள அதிருப்தி காரணமாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பிலேயே பிரதமர் தெரசா மேயுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/103458/
 22. எழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு நோர்விச் நகர மேயர் கடிதம் November 16, 2018 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சந்தேக நபர்கள் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அமெரிக்காவின் நோர்விச் நகர மேயர் கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆர்ப்பாட்டங்கள், அஞ்சல் அட்டை அனுப்புதல், சைக்கிள் பேரணி என வௌ;வேறு வடிவங்களில் வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி அமெரிக்காவின் நோர்விச் நகர மேயர் பீட்டர் அல்பர்ட் நிஸ்ட்ரோம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆவர் தனது கடிதத்தில், 28 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையிலிருக்கும் ஏழு பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்த புலனாய்வில் கலவையான தடயங்களும், முரண்பட்ட அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. அவர்கள் ஏழு பேரும் அப்பாவிகள். எனவே அவர்கள் ஏழு பேரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழ அவர்களின் விடுதலையை மனித நேயத்துடன் அணுக வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/103452/
 1. Load more activity