All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. ஆழ்ந்த அனுதாபங்கள் மீண்டும் இலங்கை வர மாட்டார்கள் வேறு நாடாவது இவர்களை பொறுப்பேற்க்காத என்ன இந்த தமிழர் நலன் சார்ந்த அமைப்புக்கள் எத்தனை இருக்கிறது இவைகளால் ஏதும் செய்ய இயலாதா என்ன அவர்களை மீண்டும் இலங்கையில் கூட விரும்பியோரை குடியேற்ற நடவடிக்கை எடுக்க இய்லாதா என்ன??
 3. அரசியல் வாதிகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டாம் என்று கூறி என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன்
 4. ஒரே இந்த பேச்சை கேட்டு கேட்டு கேடு கெட்டு போனோம் வியாழேந்திரன் நீங்களெல்லாம் தேர்தல் வந்தால் மட்டுமே கூவுகிறீர்கள் மற்ற நேரம் யாரோ கைப்பொம்மைகளாக இருக்கிறீர்கள் எத்தனை கட்சிகளும் கேட்கட்டும் மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களே தீர்மானிக்கட்டும் இன்று கிழக்கு மாகாணத்தில் இத்தனை பேர் இருந்தும் தமிழ் மக்கள் அடைந்த பயன்களை கூறுங்கள் ஆற்றுக்கு வந்ததை கால்வாய்க்கு திருப்பின நிகழ்வுதான் நடந்திருக்கு மற்ற படி உருப்படியாய் ஒன்றும் நடக்கவில்லை தமிழர் நிலங்கள் மட்டும் நாளுக்கு நாள் பறி போய் கொண்டிருக்கு தெருந்தும் நீங்களெல்லாம் செகிட்டு மந்தைகள் போல் திரிந்தாலும் தேர்தல் வந்தால் மட்டும் உங்களால் எப்படித்தா ன் விழித்தெழ முடிகிறதோ.......................................
 5. இளமை புதுமை பல்சுவை

  வலைபாயுதே twitter.com/HAJAMYDEENNKS தமிழ்நாட்டில் பண்டிகைகள் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், இடைத்தேர்தல்...! twitter.com/Thaadikkaran நமக்குன்னு டிரெஸ் எடுக்கப் போனா ஒரு டிரெஸ்ஸும் பிடிக்கிறதில்லை; கூட இருக்கிறவனுக்கு டிரெஸ் எடுக்கப் போனா துணிக்கடையே பிடிக்குது! facebook.com/Brinda Keats வர வர இந்தத் தமிழ்நாட்டு ஆண்களுக்கு வெட்கம் இல்லாம போயிடிச்சி. ‘சார், உங்க பனியன் ஸ்ட்ராப் தெரியுது. சரி பண்ணுங்கனு’ சொல்றேன், சரி பண்ணாம முறைச்சிட்டுப் போறான். எல்லாம் கலிகாலம்! twitter.com/thoatta அவனவன் டெங்குல செத்துக்கிட்டிருக்கான், இவங்க சிங்கக்குட்டிக்குப் பேர் வச்சு, காது குத்தி, கெடா வெட்டிக்கிட்டிருக்காய்ங்க! twitter.com/HAJAMYDEENNKS டெங்கு மரணங்களையும் பயத்தையும் தாண்டி மக்கள் கொஞ்சம் சிரிக்கிறாங்கன்னா அதுக்கு நம் அமைச்சர்கள்தான் முழுக் காரணம்! twitter.com/smhrkalifa நம் கோபங்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பது நம் தாயிடம் மட்டுமே. twitter.com/Kannan_Twitz பொய்களிலேயே ஆகச்சிறந்த பொய்! ‘எல்லாருமே சொல்றாங்க.’ facebook.com/Vijayasankar Ramachandran கவிழவேண்டிய ஆட்சியைக் காத்து நிற்பவர்கள், குஜராத்தில் நடக்க வேண்டிய தேர்தலை நடத்தத் தயங்குபவர்கள் அடுத்த பொதுத் தேர்தலை நடத்தி நியாயமான ஆட்டம் ஆடுவார்கள் என்று தோன்றவில்லை. இன்னும் இந்த ஆட்சியின் தன்மை குறித்து வாதங்கள் நடத்திக்கொண்டிருப்பவர்களைக் கண்டு கோபப்படாமல் இருக்க முடியவில்லை. twitter.com/ameerfaj ஹோட்டல்ல சாப்பிட இடம் கிடைக்கலனா, சாப்பிடறவன் தட்டைக் குறுகுறுனு பார்த்தால்போதும், இடம் எளிதில் கிடைத்துவிடும் என்பதை அறிக! twitter.com/nathanjkamalan வசதிகள் இல்லாவிட்டாலும் சொந்தமான வீடு என்ற கர்வம் கிராமவாசிகளிடம் மட்டுமே இருக்கிறது! twitter.com/saravananucfc பெருசா சொல்ற மாதிரி ஒண்ணும் இல்ல, ஆனால் சொல்ற அளவுக்கு இருக்கு வாழ்க்கை. twitter.com/karunaiimaLar சம்பாதிக்க ஆரம்பிக்காத வரை எல்லாப் பண்டிகையையும் சந்தோஷமா கொண்டாடியிருப்போம்! twitter.com/umakrishh என் மௌனங்கள் யாவும் உனக்கான கவன ஈர்ப்புத் தீர்மானங்களே... வந்து என்னவென்றுதான் கேளேன்... பேசமாட்டேன் என்றாவது பேசிவிடுவேன்! twitter.com/HAJAMYDEENNKS கிராமத்து டீக்கடைகள் ஒரு அறிவு வளர்ப்பு மையம்...! twitter.com/Tamil_Zhinii கல்யாணத்த பண்ணிப் பார்! வீட்ட கட்டிப்பாருங்கறதோட நிறுத்தாம, பண்டிகை சமயத்துல வீட்ட சுத்தம் பண்ணிப் பாருங்கறதையும் சேர்த்துடலாம்!!! twitter.com/Tamizha_Hiphop ஒவ்வொரு உண்டியலும் சேமித்து வைத்துள்ளது ஓரிரு சில்லறைகளையும் ஓராயிரம் ஆசைகளையும்... twitter.com/Kozhiyaar பின்னிரவிற்குப் பின்னான ஆண்களின் விழிப்பு, ஒன்று காதல் பிரச்னையாக இருக்கும், இல்லை காசு பிரச்னையாக இருக்கும்! twitter.com/ajmalnks வக்கீல்களின் குறுக்குக் கேள்விகளுக்கு இணையானவை குழந்தைகள் கேட்கும் குறுக்குக் கேள்விகளும். twitter.com/abuthahir707 நம்ம ஆளுங்கட்சில இருக்குற விஞ்ஞானிகளை வெச்சி நம்மளே ஒரு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பலாம்போல! twitter.com/manipmp நல்ல வேளை, டெங்கு நோயைக் கட்டுப்படுத்த மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லல! facebook.com/tvignesh49 முன்னாடியெல்லாம் தமிழ்நாட்டுல கல்லெறிஞ்சா இன்ஜினீயர் மேல விழும். இனி அந்தக் கல் போட்டோகிராபர்கள் மேல விழும் நாள் வெகுதொலைவில் இல்லை! http://www.vikatan.com
 6. “கமல் சார் எனக்குக் கடவுள் மாதிரி!” சனா - படங்கள்: கே.ராஜசேகரன் தமிழ்நாடே ஓவியா ஃபீவரில் இருக்க செம உற்சாகத்தில் இருக்கிறார் ஓவியா. ``நிறைய பேசணும். ஆனா எல்லாத்தையும் பேச முடியுமான்னு தெரியல” என கேஷுவலாகப் பேசுகிறார். ஓவியாவுடன் காரில் சென்னையைச் சுற்றிக்கொண்டே பேசிய அரை மணி நேரமும் சிரிப்பு, கலாய்ப்பு, அழுகை என உருக வைத்தார் ஓவியா. ``அப்புறம்... சொல்லுங்க, எப்படி இருக்கீங்க?’’ ``இப்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். கொஞ்சம் மன உளைச்சல்ல இருந்ததால்தான் பிக்பாஸ் வீட்டிலிருந்தே வெளியே வந்தேன். வெளியே வந்ததும் மனசு ஒரு மாதிரி இருந்துச்சு. சாப்பிடப் பிடிக்கல. தூக்கம் வரல. நான் நானாவே இல்ல. என்னைச் சுத்தி எப்போதும் இருந்த மைக்கையும், கேமராவையும் ரொம்ப மிஸ் பண்ணுனேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாத்தான் வழக்கமான லைஃப்புக்கு வந்து, ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் பார்த்தேன். செம சந்தோஷம். எனக்கு இவ்ளோ மக்கள் சப்போர்ட்டானு ஆச்சர்யமா இருந்துச்சு. அப்புறம் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு `வெர்கலா’ போயிட்டு வந்தேன். ட்ரிப்பை நல்லா என்ஜாய் பண்ணுனேன். எனக்கு டூர் போறது அவ்ளோ பிடிக்கும். இப்போ ஐ’ம் நார்மல்.’’ ``பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்ததுதான் ரியல் ஓவியாவா?’’ ``எந்தக் கவலையும் இல்லாம குழந்தைகள் ரொம்ப ஹேப்பியா இருப்பாங்க. அதுமாதிரிதான் நானும். எனக்குள்ள நிறைய குழந்தைகள் இருக்கு. அதனால்தான், குழந்தைத்தனமா இருக்கேன். பிக்பாஸ் வீட்டுக்குள்ளே நீங்க பார்த்ததுதான் ரியல் ஓவியா.’’ ``ஹெலன் எப்படி ஓவியாவா மாறினாங்க?’’ ``சின்ன வயசிலிருந்தே ரொம்ப சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான். யாருகிட்டயும் எந்த ஹெல்ப்பும் கேட்கமாட்டேன். என் செலவைக்கூட நானே பார்த்துக்குவேன். அந்த வயசுல பணம் சம்பாதிக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் மாடலிங் சான்ஸ் வந்துச்சு. மாடலிங், சின்னச் சின்ன விளம்பரங்கள் பண்ண ஆரம்பிச்சேன். என் பாக்கெட் மணிக்கு அது சரியா இருந்துச்சு. அப்போதான் என் மாடலிங் போட்டோஸ் பார்த்துட்டு ‘களவாணி’ படத்தின் டைரக்டர் கூப்பிட்டார். ‘களவாணி’ படத்திலிருந்து ஹெலன் ஓவியாவா மாறியாச்சு.’’ ``பிக்பாஸ் ஷோ பற்றி நல்லா தெரிஞ்சுதானே உள்ள போனீங்க. பாதியிலயே வெளியே வந்துட்டோமேன்னு ஃபீல் பண்ணுனீங்களா?’’ ``எனக்கு எதையாவது புதுசு புதுசா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிட்டே இருக்கணும். அனுபவங்கள்தான் ரொம்ப முக்கியம்னு நினைப்பேன். அது புது மனுஷங்ககூடப் பழகறப்பதான் கிடைக்கும். அதனால புது மனுஷங் களைப் பார்க்க, அவங்ககிட்ட பேச ரொம்பப் பிடிக்கும். என்னோட ஆசைகள் ஒவ்வொண்ணா நிறைவேத் திட்டே இருக்கும்போதுதான் பிக்பாஸ் சான்ஸ் வந்துச்சு. ஒரு ரியாலிட்டி ஷோ அப்படிங் குறதையும் தாண்டி அந்த வீட்டுக்குள்ளே இருக்கிறது ஒரு புது அனுபவமா இருக்கும்னுதான் நான் பிக்பாஸ் ஷோ-க்கு ஓகே சொன்னேன். பிக் பாஸ் வீட்ல இருந்த சில நாள்களிலேயே எனக்கு அந்த அனுபவம் கிடைச்சிருச்சு. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் திரும்பவும் வீட்டுக்குள்ளே போகணும்னு தோணுச்சு. ஆனா, அப்பா அதை விரும்பல. கொஞ்சம் பயந்துட்டார். வீட்ல அப்பா, பாட்டி, என் செல்ல நாய்க்குட்டினு ரொம்பக் குட்டியான குடும்பம் எங்களுடையது. திரும்பவும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே போய் ஏதாவது கஷ்டம் எனக்கு வந்துருமோனு அப்பா யோசிச்சார். அதனால்தான் நான் திரும்பவும் அந்த வீட்டுக்குள்ளே போகல.’’ ``பிக்பாஸ் உங்களுக்கு நிறைய புகழ் கொடுத்திருக்கு. இப்ப பணமும் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு. என்னென்ன படங்கள் பண்றீங்க?’’ ``உண்மையைச் சொல்லணும்னா, பிக்பாஸ் முன்னாடி சினிமா சான்ஸ் ரொம்ப கம்மியா இருந்துச்சு. ஆனா, இப்போ நிறைய சான்ஸஸ் வருது. பட், இவ்ளோ சான்ஸஸ் வருதுனு எல்லாப் படத்துலயும் நடிக்க விரும்பல. எனக்குப் பிடிச்ச படங்கள் மட்டும் பண்றதுன்னு தெளிவா இருக்கேன். இப்போதைக்கு `காஞ்சனா 3’ மட்டும்தான் பண்றேன். எனக்கு `காஞ்சனா’ படம் ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் லாரன்ஸ் கேட்டவுடன் படத்தில் நடிக்கச் சம்மதிச்சேன். எந்த இமேஜுக்குள்ளயும் சிக்காம நல்ல படங்கள் பண்ணணும்னு நினைக்கிறேன்.’’ `` `ஓவியா ஆர்மி’ பத்தி என்ன நினைக்கிறீங்க?’’ ``ரொம்ப ரொம்ப ஹேப்பி. ஓவியா ஒரு நடிகையா இருக்கும்போது எனக்கு இவ்ளோ ஃபேன் ஃபாலோயர்ஸ், சப்போர்ட் இல்ல. என் நடிப்புக்காக ஓவியா ஆர்மி வரல. என்னுடைய ரியல் கேரக்டரைப் பார்த்துட்டுத்தான் இவ்ளோ ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டுக்குள்ளே இருக்கும்போதே மக்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுச்சு. ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமை வரும்போதும் கமல் சார், ‘ஓவியா, உங்கள் பேக்கையெல்லாம் பேக் பண்ணிட்டீங்களா’னு கேட்பார். `யெஸ்’னு தலையாட்டுவேன். ஆனா, எனக்குத் தெரியும், ஃபேன்ஸ் என்னைக் காப்பாத்திடுவாங்கனு. ஃபேன்ஸூக்கு என்னைப் பிடிச்சிருக்குனு தெரிஞ்சுச்சு. ஆனா, இந்தளவுக்கு, ஓவியா ஆர்மி எல்லாம் இருக்கும்னு தெரியாது. இதெல்லாம் ஓர் ஆசீர்வாதம். எல்லோருக்கும் கிடைக்காது. ரொம்ப சந்தோஷம்.’’ ``வெளியே வந்ததும் செலிபிரிட்டீஸ் யாரெல்லாம் போன் பண்ணுனாங்க?’’ ``பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததுமே என் போன் நம்பரை மாத்திட்டேன். அதனால் எனக்கு யாரும் நேரடியா போன் பண்ணமுடியல. நண்பர்கள் மூலமா சிவகார்த்திகேயன் கூப்பிட்டுப் பேசினார். `ரொம்ப ஹேப்பியா இருக்கு ஓவியா. பிக் பாஸ் உங்களுக்குக்காகவே டெய்லி பார்ப்பேன்’னு சொன்னார். அப்புறம் கீர்த்தி சுரேஷ் என்னை நேரா வீட்டுக்கே வந்து பார்த்தாங்க. என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டாங்க. அதுக்கு முன்னாடி கீர்த்தியை நான் பார்த்ததே இல்லை. ஒரு ஆக்ட்ரஸ் இன்னொரு ஆக்ட்ரஸைப் புகழ்கிறதெல்லாம் பெரிய விஷயம். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. அப்புறம் சிம்பு. எல்லோருக்குமே ரொம்ப நன்றி.’’ ``பிக் பாஸ் கமல் பற்றிச் சொல்லுங்க?’’ ``ஸ்கூல் போற பசங்களுக்கு எப்படா சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வரும்னு இருக்குமோ அப்படித்தான் எனக்கும் இருக்கும். அவரைப் பார்க்க அவ்ளோ ஆர்வமா இருப்பேன். ரொம்ப மன உளைச்சல்ல இருந்தப்பெல்லாம் யாராவது நம்மகிட்ட பேசினா நல்லாயிருக்கும்னு தோணும். அதைக் கமல் பண்ணுவார். அவரைப் பார்த்தாலே புது உற்சாகம் வரும். பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். அவருடைய ஸ்டைல், ஷோ பண்ணுற விதம் எல்லாம் எனக்குப் பிடிக்கும். எனக்கு ரொம்பப் பிடிச்சவங்ககிட்ட அதிகமா பேச மாட்டேன். கொஞ்சம் ஒதுங்கிப் போவேன். கமல் சாரை தூரத்திலிருந்து அவ்ளோ ரசிப்பேன். அவர் எனக்குக் கடவுள் மாதிரி. ‘மன்மதன் அம்பு’ படத்தில் நடிக்கும்போது எனக்கு அவருடன் சீன்ஸ் இல்லை. அப்போ கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் ஒருமுறை ஃப்ளைட்டில் பார்த்திருக்கேன். அவ்ளோதான். ஆனா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமா என் ஆசையெல்லாம் நிறைவேறிடுச்சு.’’ ``பிக்பாஸ் வீட்டுக்குள்ள நீங்க டாக்டர்ஸ்கிட்ட பேசுறதைப் பார்த்தோம். டாக்டர்ஸ் உங்ககிட்ட என்ன சொன்னாங்க?’’ ``பிக்பாஸ் வீட்டுக்குள்ளே எனக்கு மூணு முறை கவுன்சலிங் கொடுக்க டாக்டர்ஸ் வந்தாங்க. என்கிட்ட நிறைய நேரம் பேசினாங்க. (தேம்பித் தேம்பி அழுகிறார்). ஸாரி ப்ளீஸ்...’’ ``பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்த கொஞ்ச காலத்திலேயே எப்படி ஆரவ்வை அவ்ளோ பிடிச்சிருச்சு?’’ ``ஆரவ், ரொம்ப ஸ்ட்ராங்கான பெர்ஸன். அவர் ரொம்ப கம்போஸ்டான ஆள். கோபம்கூட அவ்வளவு சீக்கிரம் ஆரவ்க்கு வராது. அதனாலகூட அவரை எனக்குப் பிடிச்சிருக்கலாம்.’’ ``ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை ஜெயிப்பார்னு நினைச்சீங்களா?’’ ``சினேகன், ஆரவ் ரெண்டு பேரில் யாராவது நிச்சயம் பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணுவாங்கன்னு நினைச்சேன். நூறு நாளை நிச்சயம் ஆரவ் கம்ப்ளீட் பண்ணுவார்ங்கிற கான்ஃபிடன்ஸ் எனக்கு இருந்துச்சு.’’ ``ஆரவ்கூட சேர்ந்து நடிப்பீங்களா?’’ ``எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்ல. கதை பிடிச்சிருந்தா நிச்சயம் நடிப்பேன்.’’ http://www.vikatan.com
 7. மெலனியா... ஒருவரா? இருவரா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப், தன்னைப் போன்ற மற்றொரு பெண்ணை பொது நிகழ்வுகளுக்கு ட்ரம்ப்புடன் அனுப்பி வைக்கிறார் என்ற குற்றச்சாட்டு இணையத்தைக் கலக்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, புயலால் பாதிக்கப்பட்ட புவர்ட்டோரிக்கோவுக்கு நிதி வழங்குவது பற்றிய திறந்தவெளிச் சந்திப்பொன்றில் ட்ரம்ப் கலந்துகொண்டார். அவருடன் சமுகமளித்திருந்த மெலனியா ட்ரம்ப்பின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்தே, மெலனியா, தன்னைப் போன்றதொரு நகலை அவ்வப்போது பயன்படுத்தி வருவதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. மெலனியாவின் நகல் என்று அறியப்படுபவர், பெரிய குளிர் கண்ணாடியை அணிந்திருப்பதுடன், அவரது மூக்கு, மெலனியாவின் மூக்குக்கு இணையான பொய் மூக்கு ஒன்றையும் அணிந்திருப்பதாகத் தகவல்கள் கிளம்பியுள்ளன. மேலும், குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், “எனது மனைவி மெலனியா இங்குதான் நிற்கிறார்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டது பற்றியும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதாவது, சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் தெரியும் வகையில் மெலனியா நின்றிருக்க, ட்ரம்ப் அவ்வாறு கூறியது, ‘இது மெலனியாதான்’ என்பதை அழுத்திக் கூறுவதற்காகவா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/26022
 8. Today
 9. புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என வெளியான செய்தி தொடர்பில் ரணில் ஆவேசம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினது மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது தற்போதைய அரசியலமைப்பில் திருத்தமொன்றோ அவசியம் கிடையாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களை தவறாக வழிநடத்துவது யார் எனவும் கேள்வி எழுப்பினார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை ஊடக கல்லூரி உட்பட மூன்று நிறுவனங்கள் மேற்கொண்டிருந்த ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், புதன்கிழமையும் வியாழக்கிழமையும் அனைத்து ஊடகங்களினையும் அவதானதித்திருந்தேன். அவை அனைத்தும் தலைப்புச் செய்தியாக புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் திருத்தங்களோ தேவையில்லை என அஸ்கிரிய மற்றும், மல்வத்து பீடங்கள் தீர்மானித்ததாக அவர்களின் படங்களை பிரசுரித்து தலைப்புச் செய்திகளை வெளியிட்டிருந்தன. அதிலும் குறிப்பாக மல்வத்து பீட மகாநாயக்கரின் படத்தை பிரசுரித்திருந்தன. மல்வத்து பீட மகாநாயக்கர் தற்போது நாட்டில் இல்லை. நான் இன்று அவருடன் தெலைபேசியில் பேசினேன். அவர் இலங்கையில் இல்லை. பின்னர் எப்படி அவருடைய படத்தினை பிரசுரிக்க முடியும். புதிய அரசியலமைப்பொன்று தேவையில்லை என்ற தலைப்புடன் செய்திகளில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடதிபதிகளின் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளபோதிலும், அந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த கூட்டத்திற்கு அவ்விரு மகாநாயக்கர்களும் சென்றிருக்கவில்லை. அப்படியிருக்கையில், உண்மையை திரிபுபடுத்தி உண்மைக்கு புறம்பான செய்தியே வெளியிடப்பட்டுள்ளமையானது ஏன் என்பது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்கள் , ஊடக செய்தி பிரதானிகளிடம் உடனடியாக கேட்டுச் சொல்லமுடியுமா? என்று நான் உங்களிடம் (ஊடகவியலாளர்களிடம்) கேட்கின்றேன். எனது கேள்விக்குப் பதிலொன்றை பெற்றுத் தந்தால் தான அதற்கு என்னால் பதிலளிக்க முடியும். அப்போது அதனையும் இணைத்து செய்தியாக பிரசுரிக்கு முடியும். புதிய அரசியலமைப்பொன்று இன்னும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை என ஜனதிபதியும் நானும் (பிரதமர்) கூறுவதை ஏற்றுக் கொள்வதாக மல்வத்து பீட மகாநாயக்கர் தமது அபிப்பிராயத்தை அண்மையில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார். அவ்வாறான நிலையில் குறித்த கூட்டம் சம்பந்தமான செய்தியை வெளியிடுவது தொடர்பில் யாருடைய படத்தினை பிரசுரிக்க வேண்டும் என்று சிந்தித்திருக்க வேண்டும். குறித்த கூட்டத்திற்கு கண்டி தியவடன நிலமேயினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் மகாநாயக்கர்களின் படங்களுக்கு பதிலாக நிலமேயின் புகைப்படமே செய்தியில் பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே இந்தக் கூட்டத்தினை மையப்படுத்தி மக்களை தவறாக வழி நடத்தவேண்டாம். மகாநாயக்கர்கள் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்துக் கூறுவார்களாக இருந்தால் அதைச் செய்தியாக வெளியிடுங்கள். அதற்கு நாங்கள் தடை விதிக்கப்போவதில்லை. அதைவிடுத்து இல்லாதவொன்றை செய்தியாக பிரசுரிக்க வேண்டாம் என்று நான் அனைத்து ஊடகங்களையும் கேட்டுக்கொள்கின்றேன். அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருக்காத நிலையில் அவர்களது படங்களை மையமாகக் கொண்டு தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில், நான் தெரிவிக்கும் பதில் கருத்துக்களுக்கும் அந்தளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டு தலைப்புச் செய்தியாக வெளியிடப்படுமா? எனது கருத்துக்களை தலைப்புச்செய்தியாக செய்தியாக வளியிடுவதாக உறுதிமொழியொன்று தருவீர்களா? அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையொன்றை வழங்கியிருக்கின்றார்கள். அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (சிங்கள, ஆங்கில ஊடங்களின் பெயர்களை குறிப்பிட்டு) இந்த விளையாட்டுக்களை நடத்த வேண்டாம். புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான நடவடிக்கைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் விவாதமொன்று நடைபெறவிருக்கின்றது. அதன்போது நாம் வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிந்துகொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/26023
 10. காத்தான்குடிக்கு அங்கால, தூசணப்பிக்கரோட சந்தோசமாக இருக்க வேண்டியது தான்.
 11. பிரிச்சாலும் வவுனியாவோடை சரி.....கிழக்கு மகாணத்தைப்பற்றி வாயும் திறக்கப்படாது.
 12. சசி வர்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
 13. இளமை புதுமை பல்சுவை

  பெண் பேய் பயத்தில் தெலங்கானா கிராமம்: இரவில் ஊர் தங்காத ஆண்கள் காசிகூடா கிராமத்தில் இரவில் ஆண்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை. கிராமத்தில் பேய் நடமாடுவதாக நம்புவதுதான் இதற்கு காரணம். இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் நிர்மல் மாவட்டத்திலுள்ள இந்த கிராமத்தில் 60 குடும்பங்கள் வாழ்கின்றன. அனைவரும் இந்த கிராமத்தில் பேய் இருக்கிறது என்று நம்புகிறார்கள். கடந்த 3 மாதங்களில் இங்குள்ள 3 பேர் திடீரென இறந்திருப்பது, இங்கு பெண் பேய் உலவுகிறது என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இங்கு உலவுவது பெண் பேய் என்றும், அது ஆண்களை குறிவைத்துப் பழிவாங்குவதாகவும் நம்பப்படுகிறது. அதனால், இரவு நேரத்தில் ஆண்கள் யாரும் கிராமத்தில் இருப்பதில்லை. பேய் பயத்தால் இதுவரை 12 குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறியுள்ளன.
 14. தனக்­குள் இருக்­கும் பேயையே மைத்­தி­ரி­ குறிப்­பிட்­டா­ராம்!- மகிந்த கடந்த வாரம் யாழ்ப்­பா­ணத்­தில் பேசிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனக்­குள் இருக்­கும் பேயைக் குறிப்­பிட்­டாரே தவிர, தன்­னைப் பேய் என்று குறிப்­பி­ட­வில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. ‘‘மாவ யக்கா அவு­சன்­னேப்பா’ என்ற சிங்­கள வச­ன­மா­னது கோபத்­தின் வெளிப்­பா­டா­கும். எனக்­குள் இருக்­கும் பேயை வெளியே கொண்டு வர­வேண்­டாம் என்­பதே அதன் அர்த்­த­மா­கும். யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் இதைத்­தான் சொல்­லி­யி­ருந்­தார். அவர் என்­னைக் குறி­வைத்­துத்­தான் பேசி­னார் என்று நீங்­கள் தவ­றாக எடை­போ­ட­வேண்­டாம்’’ என்றார் மகிந்த. யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற தேசிய தமிழ் மொழித் தின விழா­வில் உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தன்­னைப் பல­வீ­னப்­ப­டுத்­தி­னால் பேய்­கள்­ தான் சக்தி பெறும் என்று கூறி­யி­ருந்­தார். 2015 அரச தலை­வர் தேர்­த­லுக்­கான பரப்­பு­ரை­யின்­போது யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து அப்­போ­தைய ஆட்­சி­யா­ளர் மகிந்த ராஜ­பக்ச தெரி­யாத தேவ­தை­யை­விட தெரிந்த பிசாசு எவ்­வ­ளவோ மேல் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார். மைத்­தி­ரி­யின் பேச்சு அதற்­கான பதில் என்று அர­சி­யல் அவ­தா­னி­கள் குறிப்­பிட்­டி­ருந்­த­னர். இது தொடர்­பில் மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் கேட்­கப்­பட்­டது. ‘‘இந்த அரசு கிட்­டத்­தட்ட பாம்பு செத்த பாம்­பாட்­டி­யின் நிலை­யில்­தான் இருக்­கி­றது. மக்­க­ளின் ஆத­ரவு இவர்­க­ளுக்கு இல்லை. அரச தலை­வ­ருக்கு வாக்­க­ளித்த தமிழ் மக்­களே அவரை வெறுக்­கின்­ற­னர். அவர் பேய் என்று என்­னைச் சொல்­ல­வில்லை. நாங்­கள் கோபப்­ப­டும்­போது நமக்­குள் இருக்­கும் பேயை வெளியே கொண்டு வர­வேண்­டாம் என்­ப­தற்­காக ‘மாவ யக்கா அவு­சன்­னேப்பா’ என்று சிங்­க­ளத்­தில் சொல்­வோம். அத­னைத்­தான் மைத்­திரி சொல்­லி­யுள்­ளார். அது­தான் உண்மை. நன்­றாக யோசித்­துப் பாருங்­கள். புரி­யும். இப்­போது தேர்­தல்­களை ஒத்­தி­வைப்­பது யார்? பேயின் அவ­தா­ரங்­களா?’’ – என்­றார். http://newuthayan.com/story/38510.html
 15. தீபா­வளி பட்­டா­சுத் தர்க்­கம் வந்து முடிந்­தது வாள்வெட்­டில் தீபா­வளி தின­மான நேற்று வெடி­கொளுத்­தி­ய­தில் ஏற்­பட்ட வாய்த் தர்க்­கம் வாள்­வெட்­டில் முடிந்­தது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். பரு­த்தித்­துறை சுப்­பர்­ம­டம் பகு­தி­யில் நேற்­று­ மாலை 5.30 மணிக்கு இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வத்­தில் காய­ம­டைந்­த­வர்­கள் என்று தெரி­வித்து மூவர் மந்­திகை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். ‘‘சுப்­பர்­ம­டப் பகு­தி­யில் இளை­ஞர்­கள் சிலர் வெடி­கொ­ழுத்தி விளை­யா­டி­னர். அங்­கி­ருந்த வீடு ஒன்­றி­னுள்­ளும் வெடி­கள் வீழ்ந்­துள்­ளன. வீட்­டுக்­குள் ஏன் வெடி­கொ­ழுத்­திப் போட்­டீர்­கள் என்று இளை­ஞர்­க­ளி­டம் வீட்டு உரி­மை­யா­ளர் கேட்­டுள்­ளார். இது வாய்த்­தர்க்­க­மாக மாறி­யது. திடீ­ரென வீட்டு உரி­மை­யா­ள­ரை­யும் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளை­யும் இளை­ஞன் ஒரு­வன் வாளால் வெட்­டி­யுள்­ளான். மூவர் இதில் காய­ம­டைந்­த­னர். மூவ­ரும் மந்­திகை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். வாளால் வெட்­டிய இளை­ஞன் உள்­ளிட்ட தர்க்­கத்­தில் ஈடு­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­ப­டும் மூன்று இளை­ஞர்­களை தேடி­வ­ரு­கின்­றோம்’’ என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். http://newuthayan.com/story/38513.html
 16. திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடக்கம்! திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா நாளை 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி வரும் 26-ம் தேதி வரை நடக்கிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இந்தத் திருவிழாவின் தொடக்க நாளான நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்தில் நடக்கின்றன. இத்திருவிழாவின் 2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை தினமும் காலையில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்தில் நடக்கிறது. இத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி வரும் அக்டோபர் 25-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளான அக்டோபர் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்கப் பெருமாள் - தெய்வயானை அம்பிகை தோள்மாலை மாற்றுதலும் தொடர்ந்து இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறும். சூரசம்ஹாரத்தைக் காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுவார்கள் என்பதால் இந்த ஆண்டு 550 சிறப்பு பேருந்துகளும், 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/105339-thiruchendur-kantha-sashti-festival-start-from-tomorrow.html
 17. மைத்திரி- ரணில் அரசாங்கமும் தமிழ் அரசியல் கைதிகளும் ருத்திரன்- ஒரு சதாப்த காலமாக உரிமைக்காக போராடி வரும் தமிழ் தேசிய இனத்தின் ஆயுதவழிப் போராட்டமானது மௌனிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகனள் இன்னும் தீர்க்கப்படவில்லை. முன்னைய மஹிந்தா ஆட்சிகாலமாக இருந்தாலும் சரி, தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்குளால் உருவான மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமாக இருந்தாலும் சரி அதனை தீர்ப்பதற்கு காட்டும் கரிசனை என்பது உளப்பூர்வமானதாக இல்லை. இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுதல் என்பது ஒருபுறமிருக்க, அவசியமானதும், அவசரமானதுமான பல பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. அதனை தீர்ப்பதற்கான காத்திரமான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கத் தவறியுள்ளது. தமிழ் தேசிய இனத்தின் தலைமைகளாக தம்மை காட்டிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் காத்திரமான அழுத்தம் கொடுத்ததாக தெரியவில்லை. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் மஹிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் அடக்கப்பட்ட போதும், சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை மஹிந்த நிறைவேற்றத் தவறியிருந்தார். அதன் விளைவாக இந்த நாட்டில் 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்திற்காக மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய இனமும் கைகோர்த்து மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தை நல்லாட்சி அரசு எனற பெயரில் உருவாக்கினர். ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு இருந்த அழுத்தம் குறைவடைந்து ஐ.நா மனிதவுரிமை பேரவையில் தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் இணை அணுசரணை வழங்கும் நிலை உருவாகியிருந்தது. சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்கும் முகமாகவே அரசாங்கம் கண்துடைப்பாக சில கருமங்களை ஆற்றியிருக்கின்றது. அதன்மூலம் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத் தொடரில் மீண்டும் கால நீடிப்பைப் பெற்றிருக்கின்றது. தமிழ் மக்களது ஆணையைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையையும் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு சென்று அவர்களது ஆதரவுடன் இத்தகைய நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. சர்வதேச சமூகமும் அரசாங்கத்தினது நிகழ்ச்சி நிரலுக்குள் தன்னையும் இணைத்து கொண்டுள்ளதாக தமிழ் மக்கள் எண்ணுகின்ற நிலையானது உருவாகியிருக்கிறது. தமிழ் மக்களது அபிலாசைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக அரசாங்கத்தினது செயற்பாடுகள் அமையவில்லை. இதன் விளைவாகவே தமிழ் தேசிய இனம் வீதிகளில் கொட்டகைகளை அமைத்து மழை, வெயில், இரவு, பகல் என பாராது கடந்த 8 மாதங்களுக்கு மேலாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் எட்டு மாதத்தை எட்டியுள்ளது. நில மீட்புக்கான போராட்டமும் 7 மாதத்தை தொட்டு நிற்கின்றது. தொடர் போராட்டங்களாலும், அந்த போராட்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காமையாலும் தமிழ் மக்கள் நல்லாட்சி அரசாங்கம் மீதும் நம்பிக்கையிழந்து விட்டார்கள். அரசாங்கத்திற்கு போதிய அழுத்தத்தை வழங்காது இணக்க அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராகவும் மக்கள் போராடும் நிலை உருவாகியிருக்கிறது. தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் அரசாங்கம் உண்மையாகவும், நேர்மையாகவும் அவர்களும் இந்த நாட்டு பிரஜைகள் என்று கருதி செயற்படுவதாக தெரியவில்லை. இராணுவ சுற்றிவளைப்புக்களின் போதும், சந்தேகத்தின் அடிப்படையிலும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற குற்றச்சாட்டின்அடிப்படையிலும் பலர் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக எந்தவித விசாரணைகளும் இன்றி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 132 இற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் கூட செய்யப்படாத நிலையில் கடந்த 10, 15, 20 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதும் அவர்களது வழக்கு விசாரணைகள் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. சந்தேகத்தின் பேரில் எவரையும் நீண்டகாலம் தடுத்து வைத்திருப்பது அடிப்படை மனிதவுரிமை மீறல் என்று யாழ் மேல் நீதிமன்றம் அண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கியிருந்தது. ஆனாலும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பை பேணியதாக கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாகவுள்ளோர் கைது செய்யப்பட்ட காலம் முதல் இன்று வரை விளக்கமறியலிலேயே வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசியல் கைதிகள் விடயத்தில் நீதித்துறையின் செயற்பாடு என்பது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகின்றது. வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் அரசியல் கைதிகளின் வழக்குகள் கூட வடக்கு பகுதி நீதிமன்றங்களில் இருந்து தென்பகுதி நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் கடந்த 8 ஆண்­டு­க­ளாகத் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள இரா­ஜ­துரை திரு­வருள், மதி­ய­ழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவ­ருக்கு எதி­ராக கடந்த 2013 ஆம் ஆண்டு வவு­னியா மேல்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு மீதான விசாரணைகள் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக நடை­பெற்று வந்­தன. வவு­னியா மேல் நீதி­மன்­றதில் இடம்­பெற்று வந்த வழக்­கினை சட்­டமா அதிபர் திணைக்­களம் அனுராதபுரம் மேல் நீதி­மன்­றுக்கு இடம் ­மாற்­றி­யுள்­ளது. இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்து தொடர்ச்­சி­யான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தில் அம்­மூன்று அரசியல் கைதிகளும் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஈடு­பட்­டுள்­ளனர். கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தியும், தம்மீதான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியும் பல்வேறு வழிகளிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அந்த அடிப்படையில் இம் மூன்று அரசியல் கைதிகளும் கைதிகளாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களால் மேற்கொள்ளப்படும் 11 ஆவது உணவு தவிர்ப்பு போராட்டமே இதுவாகும். தற்போது இவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரவில்லை. தம்மீதான வழக்கு விசாரணைகளை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்ற வேண்டாம் என்பதே. சந்தேக நபர்கள் அவ்வாறு கோருவதற்கான இடமும் உள்ளது. திருகோணமலை குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான பாதுகாப்பு தரப்பினர் தமது வழக்கை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரியிருந்தனர். அதனடிப்படையில் அந்த வழக்கு மாற்றப்பட்டு அவ் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இத்தகைய ஒரு அணுகுமுறை பின்பற்றப்படவில்லை. அவர்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து கரிசனை காட்டப்படவில்லை. இவ்வாறு வழக்கு விசாரணைகளை மாற்றுவதால் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் சட்டத்தரணிகளை பெற்றுப் கொள்வதிலும் அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வதுடன், அவர்களது குடும்பத்தினர் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளின் போது கலந்து கொள்வதற்கும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். மொழி சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். அதனால் இந்த வழக்கினை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து மாற்றுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். திருகோணமலை குமாரபுரம் படுகொலை வழக்கை திருனோணமலையில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றி அதனுடன் சம்மந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை அங்கு மாற்றி அவர்களுக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசாங்கம் முயல்கிறது என்ற குற்றச்சாட்டையும் மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கின்றனர். அதாவது இராணுவத்திற்கு ஒரு நீதியும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதியும் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் மக்கள் பிரதிநிதிகனள் சிலர். சட்டமா அதிபர் திணைக்களம் வவு­னியா மேல் நீதி­மன்றத்தில் இவ்­வ­ழக்கு விசா­ரணை இது­வரை காலமும் நடை­பெற்­றி­ருந்­தாலும் தற்­போது அங்கு சென்று சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு சாட்­சி­யா­ளர்கள் விரும்­பவில்லை. அவர்கள் அநு­ரா­த­புர மேல் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு தயா­ராக இருக்­கின்­றார்கள். குறிப்­பாக வவு­னி­யா­விற்கு செல்­வ­தற்கு தமது பாது­காப்பு கார­ணங்­களை காட்­டியே சாட்­சி­யா­ளர்கள் நிரா­க­ரித்­துள்­ளனர். ஆகவே அவர்­களின் கோரிக்­கையில் காணப்­படும் நியா­யத்தின் அடிப்­ப­டையில் தான் அவ்­வ­ழக்கு அநு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. அதனை மீண்டும் வவு­னி­யா­வுக்கு மாற்ற முடி­யாது என்று குறிப்­பிட்­டுள்ளது. யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கில் ஆயுதக் கலாசாரம் இல்லை. தற்போது பாதுகாப்பு தரப்பை தவிர எவரிடமும் ஆயுதம் இல்லை. இந்நிலையில், பயங்கரவாதத்தை ஒழித்து நட்டை மீட்டுவிட்டோம் என வெற்றிவாத பரப்புரை செய்யும் அரசாங்கம் சாட்சியாளருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக் கூறுவது வேடிக்கையானதே. சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல் விடப்போவது யார்…?, இந்த வழக்கில் சாட்சியாளர்களதக உள்ளவர்களில் பெரும்பாலனவர்கள் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால், அந்த பாதுகாப்பு தரப்பு எப்படி நாட்டை பாதுகாக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் போன்றவற்றுக்கு உள்ளகப் பொறிமுறையில் நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியும் என அரசாங்கம் கூறி வருகின்றது. இந்த நிலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிளுக்கு எதிரான பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியாத நிலையில் உள்ள அரசாங்கம் இலங்கை பாதுகாப்பு தரப்போடு சம்மந்தப்பட்ட மேற்சொன்ன குற்றங்களுக்கு சாட்சியமளிக்க முன் வருபவர்களை எப்படி பாதுகாக்கப் போகின்றது. கடந்த காலத்தில் பரணகம தலைமையிலான காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த சிலர் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. ஆகவே தான், தமிழ் மக்கள் நீதியான விசாரணைக்காக சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் கோரி நிற்கின்றார்கள். உள்ளக விசாரணையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கமோ அல்லது அதன் நீதித்துறையோ செயற்படவில்லை. சாட்சியாளருக்கான பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. வித்தியா கொலைத் தீர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்றைப் பெற்றுள்ள போதும், அது தேசிய இனப்பிரசனையுடன் சம்மந்தப்பட்ட அல்லது தமிழ் தேசிய போராட்டத்துடன் சம்மந்தப்பட்ட ஒரு விவகாரம் அல்ல. அது சட்டவிரோத மாபியா கும்பல் ஒன்றுக்கு எதிரான நடவடிக்கை. அதன் நீதி என்பது வேறு. தேசிய இனப்பிரச்சனையுடன் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான நீதி என்பது வேறு. இந்த இரண்டும் வேறு வேறு கோணங்களிலேயே அரசாங்கத்தாலும், அதன் கீழ் உள்ள நீதித்துறையாலும் அணுகப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதசேதத்தில் மக்கள் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை தொடர் போராட்டங்களாக இடம்பெறவுள்ளது. சிறைச்சாலைகளில் தடுத்து வைகப்பட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகளும் போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றனர். வடக்கில் வெள்ளிக்கிழமை பூரண வழமை மறுப்பு போராட்டமும் இடம்பெற்றுள்ளது. தொடர் வெகுஜனப் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றார்கள். இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் ஜனாதிபதிக்கு அரசியல் கைதிகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடயத்தில் காத்திரமாக செயற்பட தவறியிருக்கின்றது. இந்நிலையில் மக்கள் போராட்டம் வீச்சுப் பெறத் தொடங்கியுள்ள நிலையில், தமது இருப்பை தக்க வைப்பதற்கும் அடுத்து வரும் தேர்தலை இலக்கு வைத்தும் கூட்டமைப்பு தலைவர் நித்திரை விட்டு எழுந்தவர் போல் தற்போது அரசியல் கைதிகள் குறித்து கடிதம் எழுதியிருக்கிறார். நேரடியாக யுத்த்தில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் 12 ஆயிரம் பேர் வரையில் புனர்வாழ்வின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், விடுதலைப்புகளுக்கு ஆதரவு வழங்கியோர், சாப்பாடு கொடுத்தோர், வாகனம் வழங்கியோர் மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் என சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் விடுவிக்கப்படாது தமது வாழ்நாளையும், இளமைக் காலத்தையும் சிறையில் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை எண்ணி அவர்களது குடும்பங்கள், பிள்ளைகள் தினமும் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் அரசியல் கைதிகள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் போன்று நல்லாட்சி எனக் கூறப்படும் இந்த அரசாங்கத்தின் மனநிலையிலும் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. தமிழ் தேசிய இனத்தின் ஆணையைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும் காத்திரமான முறையிலும், இராஜதந்திர ரீதியிலும் இந்த விவகாரத்தை அணுகவில்லை. சர்வதேச சமூகமும் இந்த விடயத்தில் இலங்கைக்கு காத்திரமான அழுத்தத்தை பிரயோகிக்கக் கூடிய வகையில் கூட்டமைப்பு தலைமை செயற்படவேண்டும். தமது தலைமைகளுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தத்தை கொடுக்கும் வகையிலும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழ் மக்களும் அணிதிரண்டு வெகுஜன போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். அத்தகைய போராட்டங்கள் மூலமே அரசியல் கைதிகள் விடயத்தில் இந்த அரசாங்கத்திடம் இருந்து நீதியையும், நியாயத்தையும் எதிர்பார்க்க முடியும். ஆகவே, ஒரு தேசம் சிந்திக்க முற்பட்டால் அதன் வேகத்தை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை. http://www.samakalam.com
 18. ஜே ஆர் காலம் வேறு. உலகம் கவனித்துக் கொண்டுள்ள இன்றைய காலம் வேறு. நாட்டை பிரித்து தர முயலும் உங்களுக்கு எமது பேராதரவு உண்டு.
 19. பரவை முனியம்மாவின் தற்போதைய நிலை! விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் “சிங்கம் போல நடந்து வாரன் செல்லப் பேரண்டி…“ என்ற பாடல் மூலம் பிரபலமடைந்தவர் பரவை முனியம்மா. அவர் தற்போது உடல் நலக்குறைவால் தனக்கு உதவி செய்யுமாறு பலரிடம் கேட்டுள்ளார். சில நடிகர்கள் தாமாகவே அவருக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர். சிவசிவகார்த்திகேயன், விஷால், தனுஷ் என சிலர் நிதியுதவி செய்துள்ளனர். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் மாதாந்தம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. எனினும் தற்போது அவருக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அதனால் தனக்கு வழங்கும் நிதியுதவியை அதிகரித்து வழங்குமாறு அவர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/38352.html
 20. அதிக சிக்சர்கள்; கெய்ல், தோனி கிளப்பில் இணைந்தார் டிவில்லியர்ஸ்: சுவையான தகவல்கள் வங்கதேசத்துக்கு எதிராக 2-வது ஒருநாள் போட்டியில் 104 பந்துகளில் 176 ரன்கள் விளாசி மைதானம் நெடுக வங்கதேச பீல்டர்களை அலைய வைத்த டிவில்லியர்ஸ் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் பட்டியலில் உயர்மட்ட கிளப்பில் இடம்பிடித்தார். ஒருநாள் போட்டிகளில் ஷாகித் அஃப்ரீடி 351 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்க, ஜெயசூரியா 270, கெய்ல் 252, தோனி 213, டிவில்லியர்ஸ் 201 என்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் நேற்று 176 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருக்கு முன்னே கேரி கர்ஸ்டன் 188 ரன்களுடன் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கர் எடுக்கும் அதிகபட்ச ரன்கள் இடத்தில் முதலிடம் வகிக்கிறார். டுபிளெசிஸ் 185 ரன்கள் எடுத்து 2-ம் இடத்திலும் டி காக் 178 ரன்கள் எடுத்து 3ம் இடத்திலும் உள்ளனர், டிவில்லியர்ஸ் தற்போது 176 ரன்களுடன் 4-ம் இடத்திலும் கிப்ஸ் 175 ரன்களுடன் 5-ம் இடத்திலும் உள்ளனர். டிவில்லியர்ஸ் நேற்று அடித்த சதம் அவரது 25-வது ஒருநாள் சதமாகும். 25 அல்லது அதற்கும் அதிகமான ஒருநாள் சதங்களை எடுத்த 7வது பேட்ஸ்மென் ஆனார் டிவில்லியர்ஸ். ஹஷிம் ஆம்லாவுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணியில் இவர் 25 சதங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார். அவரது 25 ஒருநாள் சதங்களும் 100 ரன்கள் என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுக்கப்பட்டது. இதில் 6 சதங்களை 70-க்கும் குறைவான பந்துகளில் அடித்துள்ளார் டிவில்லியர்ஸ். அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் நீங்கலாக பழைய ஐசிசி அனைத்து முழு உறுப்பு நாடுகளுக்கு எதிராகவும் டிவில்லியர்ஸ் சதம் கண்டுள்ளார். இந்தவகையில் பாண்டிங், சச்சின், ஆம்லா, விராட் கோலி, ராஸ் டெய்லர், ஆகியோருடன் டிவில்லியர்ஸ் இணைந்தார். ஏப்ரல் 2011க்குப் பிறகு வங்கதேச அணி நேற்றுதான் எதிரணிக்கு 350 ரன்களை வாரி வழங்கியது. ஹஷிம் ஆம்லா, டிவில்லியர்ஸ் 12 சதக்கூட்டணி அமைத்துள்ளனர். இந்த வகையில் தென் ஆப்பிரிக்காவின் சிறந்தக் கூட்டணியாகத் திகழ்கிறார்கள். ஹர்ஷல் கிப்ஸ், கிரேம் ஸ்மித் 11 முறை சதக்கூட்டணி அமைத்துள்ளனர், அதனை டிவில்லியர்ஸ், ஆம்லா தற்போது கடந்துள்ளனர். http://tamil.thehindu.com/sports/article19882178.ece?homepage=true
 21. சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

  செயற்கை சுவாசத்தில் வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது தொட்டி மீன் ஏழை கொடுத்த மனு வரிசைப்படுத்தியிருக்கிறது சவரக்கடை நன்னீர் விஷக்கிருமியாகியது டெங்கு அறுவடை செழித்தும் வாழ்க்கை செழிக்கவில்லை விவசாயக்கடன் காட்டுக்கு ராஜா என்ன தவறு செய்தாரோ மிருக்ககாட்சி கூடத்தில் சிறை
 22. ஆஃப்கானை உலுக்கிய தற்கொலைப் படைத் தாக்குதல் - 43 வீரர்கள் பலி ஆஃப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 43 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தெற்கு காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவத் தளத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். அதில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தலிபான் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாகவும், திருடப்பட்ட வாகனத்தை வைத்து இந்த பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகம் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/105334-afghanistan-suicide-bombing-attack-killed-43-soldiers.html
 23. இளமை புதுமை பல்சுவை

  செல்பி பிரிட்ஜ் அறிமுகம் !! தொலைபேசி வைத்திருக்கும் பலரும், அதிகமாக இன்று பயன்படுத்தும் சொல் 'செல்பி' ஆகும். இதன் மூலம் தன்னைத் தானே விரும்பிய வகையில், விரும்பிய வடிவங்களில் புகைப்படம் எடுத்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ்ச்சியடைகின்றனர். இந்த வரிசையில் 'செல்பி பிரிட்ஜ்' (குளிர்சாதனபெட்டி) தொழில்நுட்பமும் சேர்ந்துள்ளது. அமெரிக்காவில் இவ்வகை குளிர்சாதனபெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் நகரம் - கிராமம் வித்தியாசமின்றி பெரும்பாலான வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி உள்ளது. இந்த செல்பி பிரிட்ஜால் ஏற்கனவே இருக்கின்ற பொருளை மீண்டும் வாங்கி வந்து சிரமப்படுவது தவிர்க்கப்படுகிறது. அந்த பொருட்களுக்கான செலவும் குறைக்கப்படுகிறது. நாம், காய்கறி பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்க, கடைக்குச் சென்றால், என்ன பொருட்கள் தேவை என்பதை ஏற்கனவே பார்த்து, சிட்டையில், குறிப்பெடுத்துக்கொண்டு கடையில் சென்று அதைப்பார்த்து வாங்குவோம். ஆனால் புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த செல்பி பிரிட்ஜால், நாம் எந்த குறிப்பையும் கடைகளுக்கு எடுத்துச் செல்ல தேவையில்லை. அதே போல எந்த பொருட்களையும் மறந்து விட்டோம் என கவலைப்பட தேவையுமில்லை. எப்படியெனில் இந்த நவீன பிரிட்ஜில் என்ன பொருட்கள் இருக்கிறது, இல்லை என்பதை, அதுவே செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை நமது தொலைபேசிக்கு அனுப்பி விடுகிறது. அதனை பார்த்து, அதற்கேற்றவாறு தேவையான பொருட்களை வாங்கலாம். இதற்காக அந்த குளிர்சாதனபெட்டிக்குள், 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் நாம் குளிர்சாதனபெட்டியின் கதவை திறந்து பின் மூடும் போது, அது செல்பி எடுத்து அலைபேசிக்கு அனுப்பி விடுகிறது. அமெரிக்காவில் இவ்வகை பிரிட்ஜ் விற்பனையில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://news.ibctamil.com/
 24. டோனியின் தந்திரம் அம்பலம்! வெற்றிக் கிண்ணங்களை இளம் வீரர்களிடம் கையளித்ததன் பின்னணியில் உள்ள இரகசியத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி வெளியிட்டுள்ளார். பிரபல இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆடுகளத்திலும், ஆடுகளத்துக்கு வெளியிலும் தனது செயல்களால் இரசிகர்களையும் இரசிகரல்லாதோரையும் கவர்ந்திருப்பவர் டோனி. அணித் தலைவராகப் பதவியேற்றபின், தாம் விளையாடிய போட்டிகளிலும் போட்டித் தொடர்களிலும் வெற்றிபெற்ற சந்தர்ப்பங்களில், வெற்றிக் கிண்ணத்தை இளம் வீரர்கள் கையில் கொடுத்துவிட்டு, ஒரு ஓரமாகப் போய் நின்றுகொண்டவர் டோனி. “அது ஒரு விளையாட்டுத் தந்திரம்” என்று தனது செயலுக்கு விளக்கமளித்திருக்கிறார் டோனி. “வெற்றி பெற்றதற்கு அடையாளமே வெற்றிக் கிண்ணம். அதை யார் வைத்திருந்தால்தான் என்ன? அதேநேரம், ஒரு வெற்றிக் கிண்ணத்தை அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஒரு இளம் வீரரிடம் கையளிப்பதன் மூலம் அவரை உயர்த்திக் காட்டவும் அவரைச் சந்தோஷப்படுத்தவும், அவரைத் தன்னம்பிக்கை கொள்ளவைக்கவும் முடிகிறது. “அதுமட்டுமல்ல. அந்த வெற்றிக்கு அவர் பங்களிப்புச் செய்திருப்பதை நாம் பாராட்டுகிறோம் என்பதையும் அது உணர்த்துகிறது. அத்துடன், தொடர்ந்து பொறுப்புடன் விளையாட வேண்டியதன் அவசியத்தையும் அவருக்கு அந்தக் கிண்ணம் உணர்த்தும். “அடுத்தடுத்த போட்டிகளில் அவர் இன்னும் சிறப்பாக விளையாடினால் அது அணிக்கு நல்லதுதானே?” என்று கூறியிருக்கிறார் டோனி! http://www.virakesari.lk/article/26008
 25. பிக்­கு­கள் படை­யு­டன் கள­மி­றங்­கும் மகிந்த புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ரான பரப்­பு­ரையை நேரில் கள­மி­றங்கி வழி­ந­டத்­து­வ­தற்­குத் தீர்­மா­னித்­துள்ள முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, இதற்­காக முன்­னணி பௌத்த பிக்­கு­க­ளைக் கொண்ட பேர­வை­யை­யும் அமைக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளார். இதற்­கு­ரிய பேச்­சு­கள் வெற்­றி­க­ர­மாக நடந்து முடிந்­துள்ள நிலை­யில், பேர­வைக்­கான அறி­விப்பை விரை­வில் அவர் வெளி­யி­டு­வார் என்று அறி­ய­மு­டி­கின்­றது. இத­னா­லேயே, புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­ந­டத்­தும் குழு­வின் இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரித்து அவர் கடந்த 16 ஆம் திகதி அறிக்­கை­யொன்றை விடுத்­தி­ருந்­தார். மக்­கள் மத்­தி­யில் நன்­ம­திப்­புள்ள, கல்­வித் துறை­யில் தேர்ச்சி பெற்ற பிக்­கு­களை உள்­ள­டக்கி குறித்த பேரவை அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த அமைப்­புக்கு முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தலை­மை­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள வெளிச்­சம் (எலிய) அமைப்­பின் ஆத­ர­வும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. ஆட்­சி­பீ­டத்­தி­ன­தும், அர­சி­ய­லி­ன­தும் கடி­வா­ள­மா­கப் பௌத்த பிக்­கு­களே திகழ்­கின்­ற­னர். பிக்­கு­க­ளைப் பயன்­ப­டுத்­தித்­தான் பண்­டா­ர­நா­யக்க ஆட்­சி­பீ­ட­மே­றி­னார். பிக்­கு­க­ளைக் கள­மி­றக்­கித்­தான் பண்டா- – செல்வா ஒப்­பந்­தத்­துக்கு எதி­ரான பரப்­பு­ரையை முன்­னாள் அரச தலை­வர் ஜே.ஆர். ஜய­வர்­தன முன்­னெ­டுத்­தி­ருந்­தார். இப்­போது அதே உத்­தி­யையே தானும் கையாள்­வ­தற்கு மகிந்த ராஜ­பக்ச முற்­பட்­டுள்­ளார். http://newuthayan.com/story/38458.html
 26. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நீதிமன்ற விசாரணை பதிவேடு 4ஆயிரம் பக்கத்தில் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவடைய குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்கு மேலாகும் என குற்றவாளிகள் தரப்பில் மேன்முறையீடு செய்த சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் தரப்பில் யாழ்.மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை இன்றைய தினம் முன் வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாய (ராயலட் பார் ) விசாரணை பதிவேடுகள் சுமார் 4ஆயிரம் பக்களைகொண்டு உள்ளன. அவற்றினை சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்ய குறைந்த பட்சம் ஒரு வருட காலம் தேவைப்படும். அதன் பின்னர் பிரதம நீதியரசர் 5 நீதியமைச்சர்களை நியமித்து , அந்த நீதியமைச்சர் குழாம் குறித்த வழக்கினை முழுமையாக படிக்க வேண்டும். அதன் பின்னர் விசாரணைகளுக்கு திகதியிட ப்பட்ட பின்னர் , வழக்கில் ஒவ்வொரு விடயத்திலும் விடப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்ட முடியும். அவ்வாறாக மேன்முறையீட்டின் இறுதி முடிவு கிடைக்க குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கு மேலாகும் என எதிர்ப்பார்க்கிறேன் என தெரிவித்தார். http://globaltamilnews.net/archives/45976
 27. யாழ். ஆவரங்காலில் பட்டப்பகலில் கத்திக் குத்து யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியில் வைத்து, நபரொருவர் மீது மர்ம நபர் இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (19) காலை பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆவரங்கால் சர்வோதயா வீதியில், உள் வீதிக்கு வந்த இருவர் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் குறித்த நபர் மீது சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில், ஆழமான குத்துக் காயமொன்று கழுத்துப் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், குத்திய கத்தி, கழுத்துப் பகுதியில் அரைவாசியுடன் முறிவடைந்துள்ளது. வீதியில் துடிதுடித்துக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை ரஜீவன் வயது (32) என்ற குறித்த நபரை, அப்பகுதியில் சென்ற இளைஞர்கள் காப்பாற்றி, அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில், ஆரம்ப கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு குறித்த நபர் மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. குறித்த சம்பவம் ஏன், எதற்கு மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் தெரியவந்திருக்கவில்லை. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழ்-ஆவரங்காலில்-பட்டப்பகலில்-கத்திக்-குத்து/71-205831
 1. Load more activity