stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates     

 1. Past hour
 2. சாவை... அழைப்பது (தியாகி திலீபன்)
 3. இப்படுகொலையின் சூத்திரதாரி சந்திரிக்கா அம்மையார்.. நல்லாட்சியின் தேவ தூதுவராகி இருக்க.. அனுரத்த ரத்வத்த.. செய்த கொடுமை காணும் என்று.. இயற்கையே அழைச்சுப் போய் சேர்ந்திட்டார். நினைவு வணக்கங்கள்.
 4. Today
 5. யாழில் சற்று முன்னர் விபத்து; இருவர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்! யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை ஐந்து மணிக்கு அண்மித்த வேளையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவரது கை மிகவும் சிதைவடைந்துள்ளது. குப்பிளான் வடக்குச் சந்தியில், இரு இளைஞர்கள் பயணித்த உந்துருளி ஒன்றின்மீது வீதி விதிகளை மீறி வந்த பார ஊர்தி மோதியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பார ஊர்தியினை ஓடிச் சென்ற சாரதி அதிலிருந்து குதித்து தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தப்பியோடிய சாரதியைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/accident-at-the-kuppilaan-north-junction
 6. கூட்டமைப்பின் கட்சி மாநாடு கல்முனையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சி மாநாடு மட்டக்களப்பு –கல்முனையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போது சமகால அரசியல் சூழ்நிலைகள், யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெற்றும் இந்த மாநாடு இறுதியாக வவுனியாவில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு முன்னர் மட்டக்களப்பு – வந்தாறுமூலை – கிரான் பிரதேசத்தில் 300 மில்லியம் ரூபாய் நிதியில் அமைக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://news.ibctamil.com/ta/internal-affairs/T-N-A-Party-Conference-Kalmunai
 7. கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வுக்கு 2 வாரத்தில் அனுமதி! மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னையைச் சேர்ந்த கனிமொழிமதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”மதுரையிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2000 ஆண்டு பழைமையான 5300 பழைமையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருள்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. ஆனால், ஒரு ஏக்கர் பரப்பளவில்தான் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. கீழடியில் அகழ்வாய்வுப் பணியை தொடரவும், பழங்கால பொருள்களை கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ''கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக்கூடாது. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடம் அப்படியே இருப்பதுதான் சிறப்பு. ஹரப்பா, மெகஞ்சதாரோவில் அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்படாமல் தான் உள்ளது. அகழாய்வு நடைபெற்று வரும் இடங்களை தனியாருக்கு இழப்பீடு வழங்கி அரசு பெற நடவடிக்கை எடுக்கலாம்'' என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், கடந்த 19-ம் தேதி நீதிபதிகள் கீழடி சென்று நேரில் ஆய்வுசெய்தனர். அப்போது, அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் குறித்தும் கைப்பற்றப்பட்ட பொருள்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது என்பன குறித்தும் அகழாய்வு கண்காணிப்பாளரிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் ஸ்ரீராம் கூறுகையில், வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை அதிகமாக இருக்கும். மேலும், இங்கிருக்கும் நில உரிமையாளர்கள் நிலத்தை தர தாமதிப்பதாக கூறினார். அப்போது நீதிபதிகள், நிலத்தை தர மறுப்பவர்கள் யார். யார்? என்பதுகுறித்து நாளை தெரிவிக்க வேண்டும். 4-ம் கட்ட அகழாய்வை நடத்த மத்திய தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தி, மாநில தொல்லியல் துறையினருக்கு ஆய்வுநடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கூறியதோடு, அன்றைய தினம் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் ஆஜரானார். அப்போது நீதிபதிகள், " சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள் , தமிழக அரசு உள்ளிட்ட பலதரப்பினர் நான்காம் கட்ட அகழாய்வு தொடங்கவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். வரும் நவம்பர், டிசம்பர் மழைக்காலங்களாக இருந்தாலும் இங்கு முந்தைய அகழாய்வில் பழங்கால மற்றும் ரோமானிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதால் மிகவும் தொன்மையாக கருதப்படுகிறது. எனவே, அனுமதியை இரண்டுவார காலத்தில் வழங்க வேண்டும். மேலும் அதன் பணியை விரைவாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியதோடு, வழக்கு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர். http://www.vikatan.com/news/tamilnadu/103014-high-court-madurai-branch-orders-central-government-in-keezhadi-issue.html
 8. ஜெயலலிதா மரணத்தில் இன்னும் விலகாத 16 மர்மங்கள்! 'தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பால் (Cardiac Arrest) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்' என்று அந்த மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை அமைக்கப்படும்' என அறிவித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'எந்த நீதிபதி விசாரணையைத் தொடங்கப் போகிறார்?' என தமிழக அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. ‘75 நாள்களாக ஜெயலலிதாவைச் சுற்றி என்ன நடந்தது? அவர் இயற்கையாகத்தான் இறந்தாரா?' என்ற சந்தேகம் இன்றளவும் பொதுமக்கள் மத்தியில் உலவி வருகிறது. 'எங்கள் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இந்த விசாரணைக் கமிஷன் உதவும்' என அப்போலோ மருத்துவமனையும் அறிக்கை வெளியிட்டுவிட்டது. ஆனால், 'ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவருக்கு உண்மையில் என்ன ஆனது என்பதை வெளிக்கொண்டு வருவதில் அரசு இயந்திரங்கள் ஏன் இவ்வளவு மெத்தனம் காட்டுகின்றன?' என்ற கேள்வி எழாமல் இல்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களைப் போக்குவதற்காக அவர் இறந்து 60 நாள்கள் கழித்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பெயலும் அப்போலோ மருத்துவர்களும். இந்த சந்திப்பில், 'முதல்வருக்கு வீட்டில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டபோது அவரது மூச்சுத்திணறல் மேலும் அதிகமாகியது. அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது மூச்சு மண்டலம் திடீரென்று செயலிழந்துபோனதுதான் (Acute Respiratory Failure) அவருக்கு ஏற்பட்டுள்ள மூச்சுத் திணறலுக்கான காரணம் என்ற முதல்கட்ட முடிவுக்கு வந்தனர். 'திடீரென்று அவரது மூச்சு மண்டலம் ஏன் செயலிழந்து போக வேண்டும்' என்ற கேள்விக்கான பதிலை அவர்கள் தேடுகையில், 'கிருமித் தொற்றுதான் (Infection) அதற்கான காரணம்' என்ற முடிவை எட்டினர். 'இந்தக் கிருமித் தொற்றானது சிறுநீரகம் அல்லது நுரையீரலில் துவங்கியிருக்கலாம்' என்று கருதினர். இதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டபோது அவரது ரத்தத்திலேயே பாக்டீரியா கிருமித் தொற்று இருப்பதை அறிய முடிந்தது. 'இந்தக் கிருமிகள் அவரது இதயத்தின் உள் அடுக்கில் குடிகொண்டு Endocarditis (இருதய உள்ளடுக்கு அழற்சி) என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன' என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது. மேலும், இந்தக் கிருமித் தொற்றானது உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்புகளையும் முடுக்கிவிட்டிருந்தது; அவை நோயை எதிர்த்ததோடு நிற்காமல் அவரது உடல் உறுப்புக்கள் பலவற்றையும் தாக்கத் தொடங்கியிருந்தன என்பதை அறிந்துகொண்டனர். இந்த செயல்பாடே செப்சிஸ்(Sepsis) என்று அழைக்கப்படுகிறது. இதுவே முதல்வரின் மூச்சு மண்டலத்தைத் தாக்கியிருப்பதையும் அதன் விளைவாகவே அந்த மண்டலம் திடீரென்று செயலிழந்து போயிருப்பதையும் அவர்கள் அறிந்துகொண்டனர். இதன் காரணமாக அவருக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. கூடுதலாக, முதல்வருக்கு இருந்த பிற நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவையும் இந்தப் பிரச்னைகளை சிக்கலாக்கின' - இது லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலின் கருத்து. “அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முதல்வர் கொண்டுவரப்பட்டபோது அவர் அரைத் தூக்க நிலையில்(drowsy) இருந்தார். முதல் ஆறு நாள்களுக்கு மாஸ்க் மூலம் பிராண வாயுவைக் கொடுத்தோம். அதன்பிறகும் அவரது மூச்சுத் திணறல் குறையவில்லை; எனவே, அவரது மூச்சுக் குழாய்க்குள் செயற்கை மூச்சுக் குழாய் நுழைக்கப்பட்டு (intubate) செயற்கை சுவாசக் கருவியுடன் (ventilator) இணைக்கப்படவேண்டி வந்தது. இதன் பிறகும் கூட அவரது மூச்சுத் திணறல் குறையவில்லை. செயற்கை மூச்சுக்குழாய் நுழைக்கப்பட்டதற்கு 10 நாள்களுக்குப் பிறகு அவரது மூச்சுக் குழாயிலேயே துளைபோட்டு (Tracheostomy) செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது” - இது மருத்துவர் பாபு ஆப்ரஹாமின் கூற்று. “முதல்வர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்த் தொற்று இருந்ததை அறிந்துகொண்டோம்” - இது டாக்டர். பாலாஜியின் வாதம். மருத்துவர்களின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை அடிப்படையாக வைத்து விரிவான ஆய்வை நடத்தி முடித்தனர் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி மற்றும் கோவை மருத்துவர் ரமேஷ். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இவர்கள் முன்வைத்த ஆய்வுக் குறிப்புகள் பொதுவெளியில் அதிர்வை ஏற்படுத்தின. ஜெயலலிதா மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை இவ்விரு மருத்துவர்களின் ஆய்வுகளில் இருந்தே பார்ப்போம். 1. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட், மருத்துவர்கள் பாபு ஆப்ரஹாம், பாலாஜி ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழகப் பத்திரிகைகளில் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதிக்குள் வெளிவந்த பெரும்பாலான தகவல்களோடு ஒத்துப்போகின்றன. இதே பத்திரிகைகளில், 'முதல்வர் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே காய்ச்சலால் அவதியுற்றார்' என்ற செய்திகள் உள்ளன. செப்டம்பர் 21-ம் தேதியன்று அவரால் திறக்கப்படவிருந்த 107 அம்மா உணவகங்களுக்கான திறப்புவிழா நிகழ்ச்சி காரணம் ஏதுமின்றி ரத்துசெய்யப்பட்டது என்பதும், அதேநாளில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்ட மெட்ரோ ரயில் துவக்கவிழா நிகழ்ச்சியில் மிகவும் சிரமப்பட்டே அவர் கலந்துகொண்டார் என்பதும் அவருக்கு இருந்துவந்த உடல் நலப்பிரச்னைகளால்கூட இருந்திருக்கக் கூடும் என்றே கருதத் தோன்றுகிறது. 'அவருக்கு ஏற்கெனவே இருந்து வந்த பிரச்னைகளைத் திறம்பட கையாளாமல், தாமதமாக மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றதே அனைத்துக் குளறுபடிகளுக்கும் காரணம்' என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். 2. தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் ஒருவர், சசிகலாவிடம் 2017 பிப்ரவரி 8-ம் தேதியன்று நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில், 'மருத்துவமனைக்கு முதல்வரைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதா?' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு, “தாமதமின்றி, உடனடியாகக் கொண்டுவந்துவிட்டீர்கள். அதனால் பிரச்னை இல்லை என்று அப்போலோ மருத்துவர்கள் 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு என்னிடம் கூறினார்கள்” என்ற பதிலை சசிகலா அளித்துள்ளார். ஆனால், முதல்வரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஏற்பட வாய்ப்புள்ள விளைவுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, “முன்கூட்டியே முதல்வரைக் கொண்டுவந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது அனுமானம் தொடர்பான கேள்வி; என்னால் அதற்குப் பதிலளிக்க முடியாது; மேலும், எமது பணி முதல்வர் மருத்துவமனைக்கு வந்த பிறகே என்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்” என்றும் டாக்டர். பாபு ஆப்ரஹாம் பதிலளித்தார். ஆனால், நோயாளியை மருத்துவர் ஒருவர் புதிதாகப் பரிசோதனை செய்யும்போது அந்த நோயாளியின் மருத்துவ மற்றும் உடல்நலம் குறித்த வரலாறு அனைத்தையும் மருத்துவர் சேகரித்தாக வேண்டும் என்பதும் இந்தத் தகவல்கள் அந்த நோயாளியின் சிகிச்சைக்கு இன்றியமையாதவை என்பதும் பாபு ஆப்ரஹாம் அறியாததல்ல. அப்போலோ மருத்துவமனையில் உலகத்தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஒரு திறந்த புத்தகம் என்றும் அந்த மருத்துவமனை நிர்வாகமே கூறிவருகிறது. அப்படி இருக்கும்போது டாக்டர்.பாபு ஆப்ரஹாமோ அவரைச் சார்ந்தவர்களோ மேற்கூறிய தகவல்களை பொதுவெளியில் வைக்க ஏன் தயங்க வேண்டும்? 3. செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் முன்வைத்த தகவல்களில் பெரும்பாலான தகவல்களை, பல்வேறு நாள்களில் அப்போலோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகளில் காணமுடியவில்லை. “அரைத் தூக்க நிலை, மூச்சுத் திணறல், மூச்சு மண்டல செயலிழப்பு, கிருமித் தொற்று, கிருமித் தொற்றால் தூண்டப்படும் உடலின் எதிர்வினைகளால் ஏற்படும் விளைவு (Sepsis), கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு, இதய உள் அடுக்கு அழற்சி (Endocarditis), எளிய பிராண வாயு சிகிச்சை, கிருமிகளைக் கண்டறியத் தேவையான பரிசோதனைகள்” -ஆகியவையே செப்டம்பர் 22-29-ம் தேதிவரை நடந்த நிகழ்வுகள் என்று 2017 பிப்ரவரி 6 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட டாக்டர் பெய்ல் மற்றும் பாபு ஆப்ரஹாம், பாலாஜி ஆகியோர் கூறினர். இந்தக் காலகட்டத்தை முதல் காலகட்டம் என்று அழைப்போம். ஆனால், அப்போலோ மருத்துவமனையால் இந்த முதல் காலகட்டத்தின்போது (செப்டம்பர் 22-29) முன்வைக்கப்பட்ட செய்திக்குறிப்புகளில் இவை எதுவும் இடம் பெறவில்லை. மாறாக. 'காய்ச்சல்; நீர்ச்சத்துக் குறைவு; பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; சிகிச்சையால் உடல் நலம் நன்றாக முன்னேறிக்கொண்டிருக்கிறது; வழக்கமான உணவை உட்கொள்ளத் தொடங்கியுள்ளார்' என்ற குறிப்புகளையே காணமுடிகிறது. முதலாம் காலகட்டத்தின்போது, 'முதல்வருக்கு காய்ச்சல் குறைந்தது என்றும், ஆனால் அவரது மூச்சுத் திணறல் கூடுதலாகிப் போனது என்றும், அதனால் எளிய முறையில் அளிக்கப்பட்டுவந்த பிராண வாயுவுக்குப் பதிலாக, மூச்சுக்குழாய்க்குள் செயற்கை மூச்சுக்குழாயை நுழைத்து அதை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்க வேண்டி வந்தது' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் தெரிவித்தனர். 4. ஆனால், அப்போலோ அறிக்கைகளோ இந்த முதலாம் காலகட்டத்தின்போது முதல்வரின் உடல்நலம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது என்றே அறிவித்தது. 2016 செப்டம்பர் 30-ல் இருந்து அக்டோபர் 7-ம் தேதிவரை உள்ள காலகட்டத்தை இரண்டாம் கால கட்டமாகக் கொள்ளலாம். முதல்வரது மூச்சுக்குழாய்க்குள் செயற்கை மூச்சுக்குழாயை நுழைத்து அதை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைத்ததில் இருந்து (endotracheal intubation) மூச்சுக் குழாயில் துளையிட்டு (Tracheostomy) அதனை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்கும் செயல்பாடு வரை உள்ள காலகட்டமே இது. இந்த இரண்டாம் காலகட்டத்தின்போது -அதாவது அக்டோபர் 2,3,4 மற்றும் 6-ம் தேதியன்று அப்போலோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில்-'முதல்வரது உடல்நிலை தொடர்ச்சியாக முன்னேற்றம் அடைந்து வருவதாகவே' கூறப்பட்டது. ஆனால், முதல்வருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் பிப்ரவரி 6-ம் தேதியன்று இந்த காலகட்டத்தைப் பற்றிக் கூறும்போது, 'முதல்வரின் மூச்சுத் திணறல் வெகுவேகமாக மோசமடைந்து கொண்டிருந்தது' என்றனர்; இதன் காரணமே, செப்டம்பர் 29-ம் தேதியன்று செயற்கை மூச்சுக் குழாயை அவரது மூச்சுக் குழாய்க்குள் நுழைத்தும் பின்னர் அது எதிர்பார்த்த பலனைத் தராத காரணத்தால் அக்டோபர் 7-ம் தேதியன்று அவரது மூச்சுக்குழாய் துவாரமிடப்பட்டது என்றும் கூறினர். 5. முதல்வரின் மூச்சுக் குழாய் துளையிடப்பட்ட நாளுக்கு அடுத்த நாளான அக்டோபர் 8-ம் தேதியில் இருந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நாளான டிசம்பர் 4-ம் தேதிவரை உள்ள காலகட்டத்தினை மூன்றாம் காலகட்டம் என்று கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தின்போது இரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் பெரிதளவில் மாறுபடவில்லை. 6. அப்போலோ அறிக்கைகளின்படியும் பிப்ரவரி 6-ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவர்களின் விளக்கத்தின்படியும் ' அக்டோபர் மாத இறுதியில் இருந்தே முதல்வரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. என்றாலும் கூட, டிசம்பர் 4-ம் தேதி மாலை சுமார் 4.30 மணி அளவில் அவரது இதயம் திடீரென செயலற்றுப்போய், துடிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது' என்றும் அவர்கள் கூறினர். நின்றுபோன இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் முதல்வருக்கு ஏற்கெனவே இருந்து வந்த நோய்கள் காரணமாகவே (அவை என்ன என்பதை அந்த அறிக்கை தெரிவிக்கவில்லை) தோல்வியில் முடிந்தன என்று அப்போலோ நிர்வாகத்தின் டிசம்பர் 5-ம் தேதிக்கான அறிக்கை கூறியது. இதுவரை நன்றாக இருந்து வந்த முதல்வரின் இதயம் திடீரென்று செயலிழந்து நின்றுபோனதற்கான (Cardiac Arrest) காரணம் தங்களுக்குத் தெரியாது என்று மருத்துவர் பெய்லும் பாபு ஆப்ரஹாமும் அடித்துக் கூறினார்கள். 'முதல்வரின் வயது, அவரது இதயத்தைப் பாதித்திருந்த கிருமித் தொற்று, கிருமித் தொற்றினால் ஏற்பட்ட உடலின் எதிர் விளைவுகள், அவரைப் பல ஆண்டுகள் பாதித்திருந்த சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்கள் ஆகியவற்றால் ஒருவேளை இது நிகழ்ந்திருக்கலாம் என்றாலும் உறுதியாகக் கூற இயலாது' என்று டாக்டர் பெய்ல் கூறினார். 7. ரத்தத்தில் உள்ள பொட்டாசியம் அளவின் மாற்றம், குறிப்பாக உயர் அளவு இதயத் துடிப்பை செயலிழக்கும் தன்மை (Cardiac arrest) கொண்டது. அவருக்கு இதயத் துடிப்பில் மாற்றம் அடிக்கடி வந்து போயுள்ள நிலையில், குறிப்பாக ரத்தத்தில் உள்ள பொட்டாசியம், கால்சியம், பிற தேவையான விஷயங்கள் அளக்கப்பட்டு, தேவைக்கேற்ப உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக, அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி காலையில் அது உயர் விளிம்புக்குச் சென்றுள்ளது. அதற்காக மருந்துகளில் மாற்றம் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் மறுநாள் காலை அது வழக்கமான அளவை எட்டியது. அன்று மாலை 4:20 மணிக்கு அவருக்கு இதயத் துடிப்பு செயலிழந்த பாதிப்பு, (Cardiac arrest) ஏற்பட்டபின் செய்த ரத்தப் பரிசோதனையில் (Venous Blood Gas Analysis)-ல் பொட்டாசியத்தின் அளவு 6.2 என இருந்ததால் அதைக் குறைப்பதற்காக, கால்சியம் குளூக்கோனெட், இன்சுலின்/டெக்ஸ்ட்ரோஸ், பை கார்பனேட் சிகிச்சை அளிக்கப்பட்டது. 8. இவையனைத்தும் ரத்தத்தில் உள்ள பொட்டாஷியத்தின் அளவைக் குறைக்க கொடுக்கப்பட்ட சிகிச்சைகள். எனவே, இதயத் துடிப்பு செயலிழந்து போனதற்கு உயர் பொட்டாசிய அளவு ஏன் காரணமாக இருக்கக்கூடாது? டிசம்பர் 3-ம் தேதி காலையில் அவருக்கு பொட்டாஷியத்தின் அளவு உச்சத்தை எட்டிய நிலையில், அவரை ஏன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றவில்லை. இதில், மருத்துவமனையின் நடவடிக்கைகள் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. பிப்ரவரி 6 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இதயத்துடிப்பு செயலிழந்து போனதற்கு பொட்டாஷிய அளவு காரணமா? என்று கேள்வி எழுப்பியபோது, அன்று காலை செய்த பரிசோதனையில் ரத்தத்தில் பொட்டாசிய அளவு வழக்கமானதாக இருந்தது என்று பாபு ஆபிரகாம் பதிலளித்தார். ஆனால், முந்தைய நாளில் வழக்கமான அளவின் உச்சத்தை அது எட்டியிருந்தது என்பதையும், இதய முடக்கம் வந்தபின் அதன் அளவு அதிகரித்தது (6.2 meq/Dl) என்பதையும் ஏன் மறைக்க வேண்டும்? 9. 'முதல்வரின் இதயம் செயலிழந்து நின்ற பிறகு அதை மீண்டும் இயங்கச் செய்யும் நடவடிக்கைகள் (Cardio Pulmonary Resuscitation-CPR) உடனடியாக எடுக்கப்பட்டது' என்று பாபு ஆப்ரஹாம் கூறினார். இந்த நடவடிக்கை 20 நிமிடம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இறுதியில் அதனால் பலனில்லை (Refractory Cardiac Arrest - CPR நடவடிக்கைக்கு 15 நிமிடங்களுக்கு மேலும் இதயம் செயல்படாது நிற்கும் நிலை) என்று அறிந்த உடனேயே, முதல்வர் இருந்த அறையிலேயே தயாராக வைக்கப்பட்டிருந்த (உடம்புக்கு வெளியில் நுரையீரலாக செயல்பட்டு உடல் உறுப்புகளுக்குத் தேவையான பிராண வாயுவை அளிக்கும்) ECMO (Extra Corporeal Membrane Oxygenation) கருவியுடன் முதல்வரின் ரத்த நாளங்கள் இணைக்கப்பட்டன' என்றார்; 'அடுத்த 24 மணி நேரம் அந்தக் கருவி இயக்கப்பட்ட பிறகும்கூட முதல்வரின் இதயத்தால் மீண்டும் இயங்கமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி அவரை மீட்க விளையும் மருத்துவ நடவடிக்கைகளை நாங்கள் நிறுத்திக் கொண்டோம்' என்று கூறினார். இந்த நடவடிக்கையை சந்தேகத்துக்கு இடமின்றி விளங்கிக் கொள்ள மேலும் சில தகவல்களை அவர் அளித்திருக்க வேண்டும். 'இதயம் செயலிழந்து போயுள்ளது' என்பதை அறிந்த உடன் அடுத்த 20 நிமிடங்களுக்கு CPR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நின்றுபோன இதயத்தை மீண்டும் துடிக்கச்செய்வதே CPR நடவடிக்கையின் நோக்கமாகும். 8-10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவானது தடைபட்டால் மூளைச் சாவு ஏற்படும். இந்த நிலையில் 20 நிமிடங்களுக்கு CPR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முதல்வர் எக்மோ கருவியில் இணைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. முதல்வரை எக்மோ கருவியில் இணைக்க எவ்வளவு நேரம் எடுத்தது. ரத்த நாளங்களுக்குள் எக்மோ குழாய்களைப் பொருத்த ஆகும் சராசரி நேரமே 32 நிமிடங்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. அப்படியென்றால், எக்மோ கருவி எப்போதிருந்து இயங்கத் தொடங்கியது, இடைப்பட்ட நேரத்தில் முதல்வர் அவர்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது மிக முக்கியமான கேள்விகள். 10. 'முதல்வரை (எக்மோ கருவியுடன் சேர்த்து?) அன்று இரவு 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு சென்றார்கள்' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர்.பாலாஜி கூறியிருக்கிறார். 'எதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?' என்று பாபு ஆப்ரஹாம் பதில் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். '75 நாட்கள் போடப்பட்ட அனைத்து முயற்சிகளும் ஒரு வினாடியில் வீணாகிப் போயின. இதுபோன்ற நிகழ்வு இன்னொருமுறை நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?' என்ற கேள்வியை அப்போலோ நிர்வாகமோ, மதிப்பிற்குரிய இந்த மருத்துவர்களோ எழுப்ப மறந்துவிட்டனர். தீவிர சிகிச்சையில் உலக அளவில் புகழைப் பெற்ற மருத்துவர் பெய்ல் அவர்களே இந்தக் கேள்வியை எழுப்ப மறந்துபோனதுதான் ஆச்சர்யம் மற்றும் கவலையை அளிப்பதாக இருக்கிறது. 'இதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்றுபோன இதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் ரிச்சர்ட் பெயலும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. உலகம் முழுவதும் கடந்த இருநூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் செயல்பாடுதானே இது? 11. உண்மை இப்படியிருக்க, முதல்வரின் உடல் மருத்துவ அடிப்படையிலான பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை; உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை உலகத்தரம் வாய்ந்த அப்போலோ மருத்துவமனையோ, முதல்வருக்கு இரவு பகல் பாராது சிகிச்சை அளித்த மருத்துவர்களோ முன்வைக்கவில்லை. என்றாலும்கூட, உயிரற்ற அவரது உடலில் இருக்கும் ரத்தத்தை வெளியில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அவரது ரத்த நாளங்களிலும், வயிறு-நெஞ்சு-கபாலம் ஆகிய உள்வெளிகளிலும் நச்சுத் தன்மை மிகுந்த வேதித் திரவங்களின் கலவையை ஏற்றி உடலினை வறண்டு-கெட்டுப் போகாமல் இருக்க வைக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ளவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டபோது அதற்கான மாற்றுக் கருத்தினை எவரும் முன்வைக்கவில்லை. அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட முதல்நாள் தொட்டே அவரது உடல்நிலை மற்றும் அதற்கான சிகிச்சை குறித்தான கவலைகள், சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் பொதுவெளியில் பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றன. அவற்றுக்கான தீர்க்கமான, அறிவியல் அடிப்படையிலான, முழுமையான பதில்களை இன்றளவும் அப்போலோ நிர்வாகமோ, சிகிச்சை அளித்த மருத்துவர்களோ, தமிழ்நாடு அரசோ முன்வைக்கத் தவறியுள்ளன என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல்வரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்தாமல், அதன் ரத்தம் அனைத்தையும் வெளியில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாகக் கடுமையான நச்சுத் திரவக் கலவையை உள்ளே செலுத்துவதென்பது அவரது உடலின் உண்மை நிலைமையை அழிக்கும் செயலாக அமைந்துவிடும் என்பது அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் மருத்துவர்களுக்கும் தெரியாதா என்ன? 12. ஒருவேளை, அவரது இறப்புக்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தாக வேண்டும் என்ற முடிவை நீதிமன்றம் எடுக்கும்பட்சத்தில் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடம்பானது ரத்தம் நீக்கப்பட்டு, கடுமையான நச்சுத் திரவங்களால் அடைக்கப்பட்ட ஒன்றாகத்தானே இருக்கும்? அந்தத் திரவக் கலவையானது உடலின் அனைத்து இடுக்குகளிலும் புகுந்து உடல் உறுப்புக்களின் இயல்புத் தன்மைகளை அறவே மாற்றி அமைக்கும் திறனைக்கொண்டது என்பதை உறுதிசெய்யும் ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றன என்பது அப்போலோ நிர்வாகத்துக்கும் மருத்துவர்களுக்கும் தமிழக-இந்திய அரசுகளுக்கும் தெரியாதா என்ன? இதற்குப் பதிலாக, அவரது இறப்புக்குக் காரணமாகக் கூறப்படும் இதய செயலிழப்புக்கான காரணங்களை அறிய உதவிடும் மருத்துவரீதியான பிரேதப் பரிசோதனையை நடத்தியிருப்பதுதானே அறிவுகூர்ந்த செயலாக இருந்திருக்க முடியும்? மேற்கத்திய உலகில் நடைமுறையில் உள்ள நிகழ்வுதான் இது என்றாலும் கூட, மேற்கத்திய உலகுக்கும் மருத்துவம் செய்யும் அப்போலோ நிர்வாகமோ, மருத்துவர்களோ இந்த நடவடிக்கையை சம்பந்தப்பட்டோர் மேற்கொள்ள வேண்டும் என்று ஏன் நிர்ப்பந்திக்கவில்லை? தமிழக - இந்திய அரசுகள் இந்த நடவடிக்கையில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பூத உடலைக் காப்பாற்ற ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை? 13. 2016 டிசம்பர் 5-ம் தேதியன்று இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. அதையடுத்த ஐந்து நிமிடத்தில் (இரவு 11.35 மணி) தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறையின் தலைவரான டாக்டர். சுதா சேஷய்யனிடம், 'முதல்வர் மரணமடைந்து விட்டார். அவரது உடலை உடனடியாகப் பதப்படுத்தியாக வேண்டும்' என்றும் அதற்காக அவர் அவரது பணியாளர்களுடன் அப்போலோ மருத்துவமனைக்கு விரைய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். டாக்டர். சுதா சேஷய்யனும் அவரது பணியாளர்களும் அடுத்த 45 நிமிடங்களில் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளார்கள். 6-ம் தேதியன்று அதிகாலை 12.20 மணிக்கு முதல்வரின் உடலைப் பதப்படுத்தும் பணி துவங்கியது. வலது தொடையில் உள்ள ஃபெமோரல் தமணியின் வாயிலாக அவர்கள் 5.5 லிட்டர் பதப்படுத்தும் திரவத்தை உடலுக்குள் செலுத்தினர். இதற்காக அவர்கள் தானியங்கி பம்ப் ஒன்றை உபயோகித்தனர். இந்தப் பணி அடுத்த 15 நிமிடங்களில் - அதாவது, டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 12.35 மணிக்கு - முடிவுக்கு வந்தது. வழக்கமாகப் பயன்படுத்தும் உடல் பக்குவத் திரவத்தை (embalming fluid) முதல்வரின் தோல் நிறத்தை மனதில் கொண்டு சற்று மாற்றி அமைக்க மருத்துவர். சுதா முடிவு செய்தார். '5.5 லிட்டர் திரவத்தில் 2.5 லிட்டர் அளவுக்கு ஃபார்மலின் திரவத்தையும் கூடுதலாக ஐசோ புரோப்பைல் ஆல்கஹாலையும் கலந்தது இதற்காகத்தான்' என்று கூறினார். ரத்தக் குழாய்களைத் தவிர, நெஞ்சு - வயிறு - கபாலம் ஆகிய உள்வெளிகளிலும் இந்த உடல் பக்குவத் திரவத்தை செலுத்த வேண்டும் என்பது நியதி. ஆனால், அவ்வாறு செலுத்தப்பட்டதா என்பது பற்றி 6 பிப்ரவரி 2016 அன்று தமிழக அரசால் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது அவர் தெளிவுபடுத்தவில்லை. முதல்வர் அவர்களின் இடது கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகளுக்கான காரணம் என்ன என்பதையும் அவரால் விளக்க முடியவில்லை. 14. முதல்வர் அவர்களின் எடை 105 கிலோ என்று கூறப்படுகிறது. இந்த எடையைக் கொண்ட ஒருவருக்குத் தேவைப்படும் பதப்படுத்தப்படும் திரவத்தின் அளவு என்ன? வெறும் 5.5 லிட்டர் திரவத்தால் இது சாத்தியம்தானா? முதல்வரின் உடலைப் பக்குவப்படுத்தும் செயலைத் தொடங்கும் முன்பு அதற்கான விண்ணப்பப் படிவம் யாரிடம் பெறப்பட்டது என்பது பற்றியோ, காவல்துறையிடமிருந்து ‘இந்த உடம்பைப் பதப்படுத்துவதற்கு ஆட்சேபனை ஏதும் இல்லை’ என்பதற்கான சான்றிதழ் வாங்கப்பட்டதா என்பது குறித்தோ, மருத்துவமனையில் இருந்து இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்டதா என்பது குறித்தோ, மருத்துவ அடிப்படையிலான பிரேதப் பரிசோதனை நடத்த அப்போலோ நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் எண்ணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அவர் தன்னைத் தெளிவுபடுத்திக் கொண்டாரா என்பது பற்றியோ மருத்துவர் சுதா ஏதும் பேசவில்லை. முதல்வரின் உடல் எவ்வாறு அடக்கம் செய்யப்பட உள்ளது என்பது பற்றியும் எத்தனை நாள்களுக்கு அது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது என்பது பற்றியும் சிந்தித்து அதற்கேற்ற உடல்பக்குவ திரவத்தை அவர் தேர்வு செய்தாரா என்பது பற்றியும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் ஏன் தெளிவுபடுத்தவில்லை? இறந்தவர் ஒருவரின் உடலைப் பக்குவப்படுத்தும்போது அவர் என்ன காரணத்தால் இறந்தார் என்பதை பக்குவப்படுத்தும் குழுவினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்பது நியதி. ஏனெனில், மரணமடைந்தவர் கடுமையான நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரது ரத்தம் மற்றும் உடலில் இருக்க வாய்ப்புள்ள கிருமிகளால் பக்குவப்படுத்தும் பணியினை மேற்கொள்பவர்கள் பாதிப்புக்கு உள்ளாக முடியும். முதல்வர் அவர்களின் ரத்தத்தில் கலந்திருந்த நோய்த்தொற்று குறித்து அப்போலோ மருத்துவர்கள் சுதா சேஷய்யனிடம் விளக்கினார்களா என்பது குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை. முதல்வரின் ரத்தம் முழுவதையும் வெளியேற்றிவிட்டு அதற்குப் பதிலாக உடலைப் பதப்படுத்தும் நச்சுத் திரவத்தை அவரது உடலுக்குள் செலுத்தும் பணியை சுதா சேஷய்யன் குழுவினர் அப்போலோ மருத்துவமனையில் எங்கு மேற்கொண்டார்கள் என்பது குறித்தும் அவர் தகவல் தெரிவிக்கவில்லை. 15. இறந்தோரின் உடல் இரண்டு காரணங்களுக்காகப் பக்குவப்படுத்தப்படுகிறது. அடக்கம் செய்வதற்கு முன்பாகவே அந்த உடம்பு கெட்டுப்போய்விடக்கூடாது என்பது ஒரு காரணம். உடற்கூறு கல்விக்காக நீண்டகாலம் பதப்படுத்த வேண்டியது மற்ற காரணம். முதலாவது காரணத்துக்காகவே முதல்வரின் உடல் பக்குவப்படுத்தப்பட வேண்டியிருந்தது என்று டாக்டர். சுதா சேஷய்யன் குறிப்பிடுகிறார். அடுத்த 19 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்யப்படவுள்ள, இரண்டு கம்ப்ரெஸ்ஸர்களைக் கொண்ட சிறப்பு குளிர்சாதன சவப் பெட்டியில் வைக்கப்படவுள்ள ஓர் உடலைப் பதப்படுத்த வேண்டியது அவசியம்தானா என்ற கேள்வியை அவர் எழுப்பினாரா? முதல்வர் அவர்கள் ஐயங்கார் இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரது உடல் எரியூட்டப்படுவதே மரபு. அப்படி இருக்கும்போது அதற்கேற்ற பதப்படுத்தும் வேதிப்பொருள்களைத் தேர்வு செய்யாமல், எளிதில் வெடிக்கும் தன்மை கொண்ட ஐசோபுரப்பைல் ஆல்கஹால்(Iso propyl alchohol)ஐ உடலைப் பதப்படுத்தும் திரவத்தில் கலந்ததற்கான காரணம்தான் என்ன? 16. முதல்வர் அவர்களின் தோலின் நிறத்தை நாள் முழுதும் குன்றாமல் வைக்கவேண்டுமென்றால், அதற்கான சிறப்பு பதப்படுத்தும் திரவங்கள் அனேகம் உள்ளனவே… அவற்றையெல்லாம் பயன்படுத்தாமல் மிகவும் விலை குறைந்த, மலிவான வேதிப்பொருள் ஒன்றை மருத்துவர் சுதா சேஷய்யன் எதற்காக தேர்வு செய்தார்? உடலைப் பதப்படுத்துவதற்குக் குறைந்தது 3-4 மணி நேரமாவது தேவை. மிக விரைவில் அதை முடிக்க வேண்டும் என்றால்கூட குறைந்தது ஒரு மணி நேரமாவது அவசியமாகும். உடலைப் பதப்படுத்தக் கோரும் விண்ணப்பப் படிவத்தை சரிபார்க்க வேண்டும். உடலைப் பதப்படுத்தும் திரவத்தை ரத்த நாளங்களுக்குள் செலுத்துவதற்கு முன்பாக ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். பின்னர் வயிறு, நெஞ்சு மற்றும் கபால உள் வெளிகளுக்குள்ளும் திரவத்தை செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் பணியாளர்களுக்குக் கேடு ஏற்படாத வண்ணம் செய்து முடிக்க வேண்டும். திரவத்தை உடலுக்குள் ஏற்றிய பிறகு அது எங்காவது கசிகிறதா என்று பார்க்க வேண்டும். பின்னர் அந்த உடம்பை சுத்தம்செய்து, அடக்கத்துக்குத் தயார் செய்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தனை செயல்பாடுகளையும் வெறும் 15 நிமிடங்களில் முடித்துவிட்டதாக அவர் கூறுகிறார். இதுதான் முதல்வர் ஜெயலலிதா மரணம் மீதான பல கேள்விகளை எழுப்புகின்றன. http://www.vikatan.com/news/tamilnadu/103011-16-mysterious-facts-behind-jayalalithaas-death.html
 9. “தினகரன் அணியில் முதல்வரின் ஸ்லீப்பர் செல்ஸ்!” - பரபர பின்னணி #VikatanExclusive தினகரன் அணியிலிருக்கும் பெரும்பாலான எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், முதல்வரின் 'ஸ்லீப்பர் செல்ஸ்' எனத் தெரியவந்துள்ளதால், தினகரன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைய 30 நாள்கள் காலஅவகாசம் கொடுத்திருந்தார் தினகரன். 'ஆகஸ்ட் புரட்சி' என்று காத்திருந்த தினகரனுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தினகரனுக்கு ஆதரவாக 37 எம்.எல்.ஏ-க்களும் 10 எம்.பி-க்களும் குரல் கொடுத்தனர். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் காட்டலாம் என்று முடிவுசெய்த தினகரன் தரப்பு, கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வதுக்கு வழங்கப்பட்ட துணை முதல்வர் பதவியைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதையும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், கடந்த ஆகஸ்ட் 22ல் ஆளுநரைச் சந்தித்தனர். இதற்கு பதிலடியாக, தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தினகரன் தரப்பு , சட்டரீதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடிகொடுக்க முடிவுசெய்து, நீதிமன்றத்தை நாடியுள்ளது. மேலும், திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் மாஸ் காட்டியுள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள். உளவுத்துறைமூலம் தினகரனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, அடுத்தடுத்து அவரது நடவடிக்கைகளுக்கு செக் வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். தினகரன் எடுக்கும் ரகசிய முடிவுகள்கூட எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குச் சென்றுவிடுகிறது. இதனால், தினகரன் தன்னுடைய விசுவாசமுள்ள ஆதரவாளர்களைத் தவிர வேறுயாரிடமும் எந்தத் தகவலையும் சொல்வதில்லையாம். சமீபகாலமாக தினகரனின் தகவல்கள் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிவதில்லை. இதனால், தினகரன் அணியிலிருப்பவர்களைத் தங்களுடைய ஸ்லீப்பர் செல்களாக மாற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவுசெய்தனர். தினகரனிடம் விசுவாசமாக இருந்த டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. தளவாய்சுந்தரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் ஸ்லீப்பர் செல் என்று கருதிய தினகரன், உடனடியாகத் தளவாய் சுந்தரத்தை டெல்லி பிரதிநிதி பதவியை ராஜினாமா செய்யும்படிக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், தினகரன் அணியிலிருந்த தளவாய் சுந்தரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். கடந்த செப்டம்பர் 12ல் நடந்த பொதுக்குழுவில் பங்கேற்று, தினகரனுக்கும் சசிகலாவுக்கும் அதிர்ச்சி கொடுத்தார். பொதுக்குழுவில், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்குக்கூட தளவாய்சுந்தரம் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தினகரன், மேலும் மூன்று எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநரைச் சந்திக்கும் தகவல், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு முன்கூட்டியே தெரியவந்தது. இதனால், தினகரன் ஆளுநரைச் சந்திக்கும் நேரத்தில், அவரது அணியிலிருந்த ஜக்கையன் எம்.எல்.ஏ மூலமே தினகரனுக்கு பதிலடிகொடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவுசெய்தனர். இதனால், ஜக்கையனிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், தினகரன் ஆளுநரைச் சந்தித்த நேரத்தில் ஜக்கையன், சபாநாயகரையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தார். அவர்தான், முதல்வரின் இரண்டாவது ஸ்லீப்பர் செல் என்று தினகரனுக்குத் தெரியவந்தது. இதன்பிறகு தினகரன், ரகசியம் காக்கத் தொடங்கினார். அவரது அடுத்தகட்ட நடவடிக்கைகள்கூட அவருடன் இருக்கும் நால்வரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. சசிகலாவுக்கு எதிராக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், விஜிலா, வசந்தி உள்ளிட்ட எம்.பி-க்கள் டெல்லிக்குச் சென்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தனர். அதில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று குறிப்பிட்டனர். மேலும், நாங்கள்தான் அ.தி.மு.க அம்மா அணி என்று கூறியதோடு, எங்களின் கருத்தைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். இதனால், சசிகலாவின் கட்சிப் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்தவித முடிவையும் தெரிவிக்கவில்லை. தினகரன் டெல்லிக்குச் செல்லும் தகவல், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குத் தெரிந்துள்ளது. அன்றைய தினத்தில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தினகரன், தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்ததால், அவர்கள் பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டனர். இந்தச் சூழ்நிலையில், வசந்தி முருகேசன் எம்.பி-யின் இல்லத் திருமண விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் அமைச்சர்கள் மூன்று பேர் பங்கேற்றனர். இது, தினகரன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு, வசந்தி முருகேசனும் முதல்வரின் ஸ்லீப்பர் செல்லாக இருக்கலாம் என்ற சந்தேகம் தினகரன் ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டது. இதனால், தினகரன் அணியிலிருந்த வசந்திமுருகேசன் எம்.பி., முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்தார். வசந்தி முருகேசன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால். தினகரன் அணி பலவீனமடைந்துள்ளது. தினகரன் அணியிலிருக்கும் இன்னும் சிலர், முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உற்சாகத்தில் உள்ளனர். அதே நேரத்தில், கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்களில் சிலர், அணி மாறும் மனநிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களைச் சமரசப்படுத்தும் முயற்சியில் தினகரன் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினரகனுக்கும் நடந்துவரும் மோதல், இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'இரட்டை இலை' சின்னத்தை மீட்டெடுத்துவிட்டால் கட்சி, ஆட்சி தங்கள் கைக்கு முழுமையாக வந்துவிடும் என்று கணக்குப் போட்டு காயை நகர்த்திவருகின்றனர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். இதற்காக, அந்த அணியைச் சேர்ந்த எம்.பி-க்கள், அமைச்சர்கள் டெல்லிக்குச் சென்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில், "தினகரனை நம்பி எம்.எல்.ஏ-க்கள் பதவியை இழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வருத்தத்தில் உள்ளனர். அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்திக்க அனுமதி கேட்டு தூது அனுப்பியுள்ளனர். அதுதொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது. தகுதி நீக்க உத்தரவை சபாநாயகருக்குத் திரும்பப் பெறும் அதிகாரம் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு ஒருவாய்ப்பு உள்ளது. அதாவது, நீதிமன்றத்தில் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டால், அரசு மேல்முறையிடாது என்ற உத்தரவாதத்தைக் கொடுக்க முடியும். மேல்முறையீடு செய்யவில்லை என்றால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் பதவி கிடைக்கும். அந்த உத்தரவாதத்தைப் பெற தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள்மூலம் பேசிவருகின்றனர். தினகரன் கூறியதுபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் அவரது ஸ்லீப்பர் செல்ஸ் இல்லை. நாங்கள்தான் அவரது அணியில் எங்களின் ஸ்லீப்பர் செல்ஸை வைத்திருக்கிறோம்" என்றனர். http://www.vikatan.com/news/tamilnadu/102991-cm-s-sleeper-cells-in-dinakaran-s-wingvikatanexclusive.html
 10. இளமை புதுமை பல்சுவை

  இன்ஸ்டாகிராமில் காண கிடைக்கும் இந்தியாவின் ரயில் பயணங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ரயில் பயணங்களை மிகவும் விரும்புகின்ற ஷான்னு பாபார் ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்த, பிறரும் அவரோடு சேர்ந்து ஆவணப்படுத்தினர் 5 வயது குழந்தையாக இருந்தபோது ஷாயனு பாபார் முதல்முறையாக ரயிலில் பயணம் செய்தார். ரயில் பயணங்களின் மீது நீண்டகாலமாக தொடரும் விருப்பம் அப்போதுதான் தொடங்கியது. கல்லூரியில் படிக்கும்போது, ஆய்வுக் கட்டுரைக்காக தன்னுடைய ரயில் பயணங்களை அவர் ஆவணப்படுத்தினார். இந்த சுயப்படம் இந்தியாவின் தெற்கு பகுதியிலுள்ள கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள ஒரு ரயில் நிலையம் ஒன்றில் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஜூலை 21: இஸ்டாகிராமில் பாபார் தன்னுடைய பயணங்களை பதிவு செய்ய “@வின்டோசீட்புராஜெக்ட்” என்ற ஹேஸ்டேக்கோடு பதிவிட தொடங்கினார். “சன்னலோர இருக்கை”தான் இத்தகைய ரயில் பயணங்களில் அவர் எப்போதும் அமர விரும்புகிற இடம் என்கிறார். இந்தியாவின் தெற்குப் பகுதியில் வண்ணமயமான ஏர்காடு விரைவு ரயிலில் இந்த புகைப்படத்தை எடுப்பதற்கு சௌகரியமான இடமும் இந்த சன்னலோரம்தான். ஒவ்வொரு ரயில் பெட்டியும் வேறுப்பட்ட வணிக பிராண்டுகளின் விளம்பரங்களை கொண்டிருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு, பிற இன்ஸ்டாகிராம் பயனாளர்களும் “@வின்டோசீட்புராஜெக்ட்” ஹேஸ்டேக்கோடு சேர்த்து தங்களுடைய இந்திய ரயில் பயணங்களை வரிசையாக பதிவிடதொடங்கினர். கொல்கத்தாலுள்ள இந்த உள்ளூர் ரயிலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் உள்பட இந்தப் படங்களை எல்லாம் பாபார் மீண்டும் பதிவிட்டுள்ளார். அதிக பொருட்களின் மத்தியில் களைப்படைந்த தொழிலாளர்கள் குட்டித் தூக்கம் போடுவதை பார்ப்பது மனதை இளக செய்கிறது. பங்களிப்போர் பலரிடம் இருந்து புகைப்படங்கள் வெள்ளம்போல பெருகத் தொடங்கியதால், “@வின்டோசீட்புராஜெக்ட்” அதிக புகைப்படங்களை காணத்தருகின்ற காட்சி நூலகமாகியது. இந்தியாவில் கிராமப்புற பண்ணைகளில் இருந்து நகர்ப்புறப் பண்ணைகளுக்கு பால் விவசாயிகள் பாலை எப்படி பிற இடங்களுக்கு அனுப்புகிறார்கள் என்பது பற்றி இதில் பாபார் காட்டுகிறார். இவ்வளவு கேன்களை வைக்க ரயிலுக்குள் இடமில்லை என்பதால்தான் இவ்வாறு செய்கிறார்கள் மீண்டும் பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படம், ரயில் பயணங்களில் காண கிடைக்கின்ற தராள இயற்கைக்காட்சிகளை காட்டுவதாக பாபார் தெரிவிக்கிறார். அறியாதவர் சிலர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் அவர்களோடு படுக்கின்ற இடத்தை பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர்களுடைய முன்பதிவு, அவர்கள் ரயிலில் ஏறிய பின்னர்தான் உறுதி செய்யப்படும். இந்த புகைப்படத்தில் சட்டை இல்லாமல், குளிரூட்டும் வசதியில்லாத ரயில் பெட்டியில் இருவர் படுத்துள்ளனர். ரயில் பயண வழிகளில் கிடைக்கின்ற பல வகையான உணவு பொருட்கள் இந்திய ரயில் பயணங்களின் ஒரு பாரம்பரியம் என்கிறார் பபார். குழம்புகள், ரொட்டிகள், சோறு மற்றும் மசாலா கலக்கப்பட்ட பாலாடையுடன் கிடைக்கும் மசாலா பூரிகள் என இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள குன்றுகளையொட்டி ஆண்டுதோறும் செல்லுகின்றபோது, குடும்பங்களின் விருந்துகளை இந்த உணவு பொருகள் நினைவூட்டுவதாக அவர் தெரிவிக்கிறார். 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மதிய வேளையில் டெல்லியில் நிஸாமுதீன் ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயிலில் இந்த மனிதர்களை கடந்து நடந்து சென்றதை நினைவுகூர்கிறார் புகைப்படக்லைஞரான ஹார்ஷிதா மகாஜன். அவர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு பெரியதொரு புகைப்படக் கருவியை அவர் வைத்திருந்தார். “அவர்களுடைய வெளிப்பாடுகளில் இருந்து ஆர்வமும், உற்சாகமும்தான் என்னை மிகவும் தொட்டது” என்று அவர் கூறுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலான பின்னர், இந்த புகைப்படம் “@வின்டோசீட்புராஜெக்ட்”டில் மீண்டும் பதிவிடப்பட்டது சீட்டு விளையாடுவதைவிட வேறு எதுதான் நம்முடைய அறிமுகமின்மையை நீக்க முடியும்?” என்று வினவுகிறார் பாபார். இந்த விளையாட்டின் மூலம், மனிதர்கள் சிரித்தனர், கூக்குரலிட்டனர், விவாதித்தனர். அவர்கள் தங்களுடைய பெயரையே பரிமாறிக்கொள்ளாத அந்நியர்கள். ஆனால், அவர்கள் நண்பர்களைபோல விளையாடினர் என்று அவர் கூறுகிறார். பாபார் இந்த சீட்டு விளையாட்டில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு அடுத்ததாக நடைபெற்று கொண்டிருந்த கெரோக்கி அமர்வை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார். வழக்கமற்றவைகளில் இருந்து தீங்கற்றவைகள் வரை “@வின்டோசீட்புராஜெக்ட்” ஹேஸ்டேக்கில் 26 ஆயிரம் படங்கள் உள்ளன என்று பாபார் தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படம் ஹௌரா-ஜமால்பூர் விரைவு ரயில் எடுக்கப்பட்டு பாபாரால் மீண்டும் பதிவிடப்பட்டது. இந்த ரயில் பாதை இந்தியாவின் கிழக்கில் அமைந்துள்ள மேற்கு வங்கத்தை 9 மணிநேரத்தில் செல்ல உதவுகிறது. முதியோரும், ஏழைகளும் ரயில் கால அட்டவணையை வாசிக்க தெரியாதவர்களாக இருப்பதால் பெண் பயணிகள் மிகவும் கவலையோடு தொன்றுவதாக அவர் எண்ணுகிறார். இந்த புகைப்படத்தை எடுத்த திவ்யா துர்கா, நாங்கள் இந்த விலங்கு குட்டிகளோடு முதல் வகுப்பில் பணிக்கிறோம்” என்கிறார். செல்ல விலங்க்களோடு ரயில் பயணம் மேற்கொள்வோர் தங்களுடைய படுக்கையையும், அல்லது கூண்டையும் முதல் வகுப்பிலேயே வைக்க இடம் ஒதுக்க வேண்டும். இதுதான் அவளுடைய நாய், மார்க்கோபோலோ, டெல்லியில் இருந்து இமய மலைக்கு செல்கிறது. அவர் தன்னுடைய செல்ல நாயோடு 4 மறை ரயிலில் பயணித்துள்ளார். மிக நீண்ட தூர பயணம் 30 மணிநேரங்கள். துர்க்காவின் புகைப்படங்கள் ஒரேயொரு முறை “@வின்டோசீட்புராஜெக்ட்” ஹேஸ்டேக்கில் பதிவிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தியாவின் மத்தியில் செல்லும் ஷோபூர் கலன் விரைவு ரயிலின் மேற்கூரையில் ஏறிவிட்டார் பாபார். ரயிலின் உள்ளே இடம் இல்லாததால் பயணிகள் கூரையில் ஏறி அமர்ந்தனர். அவர்கள் செய்தித்தாள் வாசித்தனர். தூங்கினர். குகைப்பகுதியை நெருங்கியபோது, அனைவரும் ஒன்றாக தலையை தாழ்த்தி கொண்டனர் என்று பாபார் நினைவுகூர்கிறார். மக்களின் பழக்கம் மிகவும் விநோதமானவை என்று அவர் தெரிவிக்கிறார். http://www.bbc.com/
 11. 'மெர்சல்' திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள் படத்தின் காப்புரிமைTWITTER மெர்சல் படத்தின் முன்னோட்டம் யூ டியூபில் வெளியான ஒரு மணிநேரத்திற்குள் அதிக பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், மெர்சல் பற்றிய 6 சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இது. இந்தக் கூட்டணியில் ஏற்கனவே உருவான 'தெறி' திரைப்படத்தில் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய்யின் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது இது மூன்றாவது முறை. ஏற்கனவே உதயா, அழகிய தமிழ்மகன் என இரண்டு விஜய் படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அழகிய தமிழ் மகன் திரைப்படம் வெளிவந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு மெர்சல் திரைப்படத்துக்காக விஜய்யும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளனர். இயக்குனர் அட்லீக்கு செப்டம்பர் 21 பிறந்தநாள். அதனை முன்னிட்டே மெர்சல் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரபல இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் அட்லீ. இவர் ஏற்கனவே ராஜா ராணி, தெறி என இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். மெர்சல் அவருக்கு மூன்றாவது படம். மெர்சல் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் விஜயுடன் இணைந்து நடித்துள்ளனர். நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் அந்த மூன்று கதாநாயகிகள். படத்தின் காப்புரிமைGOOGLE விஜய் - வடிவேலு இணை காமெடிகள் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றவை. கடைசியாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் 'காவலன்'. அத்திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்திருக்கிறது இந்தக் கூட்டணி. இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டாவது படம் குஷி. இத்திரைப்படம் 17 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. விஜய் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். குஷி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எனினும், அதன் பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்கவில்லை. இந்நிலையில் மெர்சல் படத்தில் விஜயுடன் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. http://www.bbc.com/tamil/arts-and-culture-41351294 'மெர்சல்' பெயரில் விஜய் படத்தை விளம்பர செய்ய இடைக்காலத் தடை! ரசிகர்கள் அதிர்ச்சி! மெர்சல் என்கிற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை - ஏ.ஆர்.ரஹ்மான். நேற்று இயக்குநர் அட்லியின் பிறந்தநாள். அதனையொட்டி மெர்சல் பட டீசர் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களில் டீசர் சாதனை படைத்துள்ளது. உலகளவில் யூடியூபில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மெர்சல் டீசர் பெற்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியாக இருந்தார்கள். இந்நிலையில் மெர்சல் என்கிற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தயாரிப்பாளர் ராஜேந்திரன் தன்னுடைய மனுவில் கூறியதாவது: ஏ.ஆர். பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் மெர்சலாயிட்டேன் என்கிற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறேன். 2014-ல் இந்தத் தலைப்பைப் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் மெர்சல் என்கிற தலைப்பில் நடிகர் விஜய்யும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மெர்சல் மற்றும் மெர்சலாயிட்டேன் ஆகிய இரு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம் தான். மெர்சல் என்கிற தலைப்பில் படம் வெளிவந்தால் எனக்குப் பாதிப்பு ஏற்படும் என்று மனுவில் குறிப்பிடிருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதையடுத்து, மெர்சல் என்கிற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை இடைக்காலத் தடையை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகப் பொருட்செலவில் படம் தயாரிப்பதால் தடை விதிக்கக்கூடாது என்று தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மெர்சல் தலைப்பைப் பயன்படுத்தக்கூடாது என்கிற இந்த உத்தரவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். http://www.dinamani.com/cinema/cinema-news/2017/sep/22/mersal-2777820.html
 12. ஜெயலலிதா நினைவிடத்தில் சீன தூதர் அஞ்சலி தமிழகம் வந்த சீன தூதர் தனது குடும்பத்தாருடன் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இந்தியாவுக்கான சீனதூதராக இருப்பவர் லோ சாஓஹுய். 1985-ல் ஆசியா வெளியுறவுத்துறை செயலராக பொறுப்பேற்ற இவர் 1989 ஆம் ஆண்டு வரை இந்த பதவியில் இருந்தார். 1989 முதல் 1993 வரை சீனத்தூதரகத்தின் இரண்டாவது செயலராக பதவி வகித்தார். பின்னர் 1993 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை வட அமெரிக்காவில் சீன வெளியுறவு அதிகாரியாக பணியாற்றினார். 96 ஆம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டுவரை அமெரிக்காவிற்கான சீனத்தூதரக அலுவலக இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றினார். 2006 முதல் 2016 வரை பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரியாக பணியாற்றிய லோ சாஓஹுய் 2016-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கான சீனத்தூதராக நியமிக்கப்பட்டார். இந்தியாவுக்கான சீன தூதரான இவர் இன்று சென்னைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்தார். பின்னர் திடீரென தனது மனைவி மற்றும் மகளுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு திடீர் விஜயம் செய்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தியாவிற்கான சீனத்தூதர் திடீரென மெரினாவில் ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தது போலீஸ் அதிகாரிகள் இடையே பரபரப்பையும், அங்கு வந்திருந்த அதிமுக தொண்டர்களிடையே ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. http://tamil.thehindu.com/tamilnadu/article19735904.ece?homepage=true
 13. சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு ஏற்பு: தகுதி நீக்க வழக்கின் நிலை என்ன?- ஓர் அலசல் சட்டப்பேரவை சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை வரும் அக்டோபர் 2-வது வாரம் முதல் விசாரிக்க உள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் பெண் எம்.எல்.ஏ தொடுத்த வழக்கில் சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு வழக்கை கையிலெடுத்த உச்ச நீதிமன்றம் அக்டோபபர் 2-ம் வாரம் முதல், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து உச்ச நீதிமன்றம் வழக்கை கையிலெடுத்ததால் தமிழகத்தில் நடக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் நிலை என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இந்தியா முழுதும் மாநில சட்டப்பேரவை தலைவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த வழக்குகள் அவ்வப்போது நீதிமன்ற கதவை தட்டுகின்றன. இதில் வெவ்வேறு வகையான தீர்ப்புகளும் வழங்கப்படுகின்றன. இவற்றில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்குகளே முக்கியத்துவம் பெறுகின்றன. சட்டப்பேரவையில் ஒரு அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது ஏற்படும் பிரச்சனையில் சபாநாயகர்கள் எடுக்கும் முடிவு சர்ச்சைக்குள்ளாகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உதவும் வகையில் சபாநாயகர்கள் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நீதிமன்ற கதவை தட்டும் போது நீதிமன்றம் சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. நீதித்துறை போன்றே சபாநாயகருக்கும் வானளாவிய அதிகாரம் உள்ளதால் சபாநாயகரின் முடிவில் எந்த அளவுக்கு நீதித்துறை தலையிட முடியும் என்ற குழப்பம் பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி ஏற்படுகிறது. சபாநாயகர்கள் எடுக்கும் முடிவுகளால் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தை அதிகமாக நாடுவது வடகிழக்கு மாநிலங்களாகவே உள்ளன. தமிழகத்தில் 1988-ம் ஆண்டும், 1994-ம் ஆண்டும் சபாநாயகரின் தீர்ப்பு பிரச்சனையாக மாறியது. அதன் பின்னர் தற்போது 18 எம்.எல்.ஏக்கள் இடை நீக்கம் விவகாரம் நீதிமன்ற முடிவை நோக்கி சென்றுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் , மறுப்பவர் இரண்டு பக்கமும் உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மோதுகின்றனர். சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது. மாநிலத்திற்கு மாநிலம் சபாநாயகர்களின் தீர்ப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் நீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு எடியூரப்பா வழக்கில் சபாநாயகரின் உத்தரவை நீதிமன்றம் ஏற்கமறுத்து ரத்து செய்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சபாநாயகரின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துவிட்டன. தற்போது 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் கர்நாடக அரசின் தீர்ப்பின் அடிப்படையில் அணுக வேண்டும் என சிலரும், உத்தரகாண்ட் தீர்ப்பின் அடிப்படையில் தான் அணுக வேண்டும் என்று சிலரும் வாதிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஆந்திர எம்.எல்.ஏ ஒருவர், சபாநாயகர் அதிகார வரம்பு குறித்து தொடுத்த வழக்கை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கில் சபாநாயகரின் அதிகாரம் குறித்தும் எந்த அளவுக்கு சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் செல்லலாம் என்பது குறித்தும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது. சபாநாயகர் எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு அவர்களுக்கு பதிலளிக்க கொடுக்கப்படும் கால அவகாசம், அதில் இடைப்பட்ட காலத்தில் முடிவெடுத்தால் விதிமீறல் உள்ளதா போன்ற விவகாரங்களை பற்றி அமர்வு விசாரிக்கும். சபாநாயகர்களின் வானளாவிய அதிகாரங்கள் குறித்தும் கேள்விகள் வைக்கப்பட உள்ளன. இந்த அமர்வுக்கும் தமிழக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்குக்கும் சம்பந்தம் உள்ளதா என கேட்டபோது தகுதி நீக்க வழக்கு தனியாக நடக்கும். இது அரசியல் சாசன அமர்வு விசாரணை மட்டுமே, இதற்கும் தமிழக அரசின் வழக்குக்கும் சம்பந்தமில்லை. மேலும் உச்ச நீதிமன்ற வழக்கு நடக்கும் காலகட்டத்தில் பழைய முறைகளே நடைமுறையில் இருக்கும். ஆகவே இது தமிழகத்தின் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று டெல்லி உச்ச நீதிமன்ற சட்ட ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அரசியல் அமர்வு விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளிக்கும் பட்சத்தில் அந்த தீர்ப்பின் அடிப்படையில் அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தனர். http://tamil.thehindu.com/tamilnadu/article19735082.ece?homepage=true
 14. நீர்க் குமிழி 1: திடுக்கிட வைத்த ‘வனமோகினி’ கே.தவமணி தேவி ‘ராஜகுமாரி’ படத்தில் சுகுமாராக எம்.ஜி.ஆர், விஷாராணியாக தவமணிதேவி கே.தவமணி தேவி ‘ராஜகுமாரி’ படத்தில் சுகுமாராக எம்.ஜி.ஆர், விஷாராணியாக தவமணிதேவி சினிமாவில் சின்ன துரும்பைக் கிள்ளிப் போடுவதென்றால் கூட, ஏழுகடல் ஏழு மலை தாண்டி வட இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டும். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற ‘மாயாலோக’ த்தை சேலத்தில் உருவாக்கி, இந்தத் தேவையற்ற அலைச்சலைப் போக்கியவர் ‘செல்லுலாய்டு சீமான்’ டி.ஆர்.சுந்தரம். ஒரு டாக்கீயை உருவாக்க அனைத்து வசதிகளையும் அங்கே நிர்மாணித்த பிறகு, 1937-ல் அவர் தயாரித்து, இயக்கி, வெளியிட்ட முதல் படம் ‘சதி அகல்யா’. அதில்தான் அறிமுகப்படுத்தப்பட்டார் ‘சிங்களக் குயில்’ கே. தவமணிதேவி. பரபரப்பான பத்திரிகையாளர் சந்திப்பு இந்தப் படத்தின் பூஜை 1936-ல் நடந்தபோது, அதைத் தொடங்கிவைத்தவர் அன்றைய காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமதி ருக்மணி லட்சுமிபதி. பூஜை முடிந்து படப்பிடிப்பு தொடங்கவிருந்த சில தினங்களுக்கு முன் மதராஸிலிருந்து பத்திரிகையாளர்களைச் சேலத்துக்கு வரவழைத்தார் சுந்தரம். ‘சதி அகல்யா’ படத்தின் கதாநாயகியைப் பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். பதினைந்து வயதே நிரம்பிய தவமணிதேவி, இலங்கைப் பெண்களின் கலாச்சார உடையில் பத்திரிகையாளர்களைக் கைகூப்பி வணங்கினார். சிங்களம் கலந்த தமிழில் கொஞ்சிக் கொஞ்சி பதில்கள் கூறினார். பதின்மம் விலகாத தன் கற்கண்டுக் குரலால் ஒரு ஆங்கிலப் பாடலை பாடிக் காட்டினார். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பின் ‘சதி அகல்யா’ படத்தில் ரிஷி பத்தினி அகலிகையாக நடிக்கவிருந்த தவமணி தேவியின் புகைப்படங்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டன. அதில் நீச்சல் உடையில் ஒய்யாரம் காட்டிய தவமணி தேவியைக் கண்டு பத்திரிகையாளர்கள் ஆடித்தான் போனார்கள். பன்னிரண்டு முழம் சேலை கட்டும் தமிழ்நாட்டுக்குள் இப்படியொரு துணிச்சல் பெண் இலங்கையிலிருந்து நுழைந்தால் எப்படியிருக்கும்! நீச்சல் உடைப் புகைப்படங்களால் ‘சதி அகல்யா’ படம் வெளியாகும் முன்பே ‘கிளாமர் குயின்’ஆகப் பிரபலமாகிவிட்டார் தவமணி தேவி. அப்படியிருக்க தெய்வீகத் தன்மைகொண்ட அகலிகை வேடத்தில் அவரை நடிக்கவைக்க இந்தத் திருச்செங்கோட்டுக்காரருக்கு எவ்வளவு துணிவு வேண்டும்’ என்று ஆச்சரியமாகப் பேசிக்கொண்டார்கள் அன்று. ‘ஒருகால் அகலிகையை கவர்ச்சியாகச் சித்தரிப்பாரோ’ என்று அனுமானம் செய்தவர்கள், படம் வெளியானபோது ஏமாந்துபோனார்கள். திடுக்கிட வைத்த மேனகை ஆனால் அடுத்தடுத்து நடிக்த படங்களில் அவர் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். வெகு சில படங்களே நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவின் முதல் ‘கவர்ச்சிச் கன்னி’யாக மட்டுமல்ல, டி.ஆர்.ராஜகுமாரிக்கு முன் முதல் கனவுக் கன்னியாகவும் ஆனார் தவமணி தேவி. எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி முதன்முதலாக நடித்த ‘சகுந்தலை’யில் ‘மேனகை’யாகத் தோன்றினார். மார்பில் கச்சை கட்டிக்கொண்டு, ‘மேகத்துயில்’ என அன்று வர்ணிக்கப்பட்ட, உடல் வெளியே தெரியும் மெல்லிய ‘ட்ரான்ஸ்பரண்ட் ஜார்ஜெட்’ துணியால் ஆன பாவாடை அணிந்து, விஸ்வாமித்திர முனிவரின் கடும் தவத்தைக் கலைக்க இவர் ஆடிய நடனம், திரையரங்குகளில் வெப்ப அலைகளை உருவாக்கியது. வனமோகினியும் ராஜகுமாரியும் அடுத்து வெளியான ‘வனமோகினி’யில் தனது செல்ல யானையுடன் காட்டில் வாழும் பெண்ணாகக் கவர்ச்சி உடையில் தோன்றி கதிகலங்கவைத்தார் தவமணி தேவி. கவர்ச்சி உடை என்றால் மலேயா, மாலத்தீவு, ஹவாய் போன்ற தேசங்களில் பெண்கள் அணியும் ‘சாரத்தை’(sarong) என்ற பூப்போட்ட நீளமான துணியை உடலில் சுற்றி கழுத்தில் முடிச்சிட்டுக்கொள்ளும் ஆடையை தவமணி அணிந்திருந்தார். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே அப்படியொரு ஆடையைக் கதாநாயகி அணிந்தது அதுவே முதல்முறை. ‘வனமோகினி’யில் பத்துக்கும் அதிகமான பாடல்களைத் தன் இனிய குரலால் பாடி அசத்திய தவமணிதேவி, அந்தப் படம் வெளியான அதே ஆண்டில் வெளியான ‘வேதவதி அல்லது சீதா கல்யாணம்’ படத்தில், ‘வனமோகினி’க்கு நேர் எதிராக சீதையின் வேடத்தில் வந்தார். அதில் இந்திரஜித்தாகச் சிறுவேடத்தில் நடித்திருந்த எம்.ஜி.ராமச்சந்தர், பின்னர், ‘ராஜகுமாரி’யில் கதாநாயகனாக அறிமுகமானர். காலம் எல்லாவற்றையும் நீர்க்குமிழியாக மாற்றிவிடுகிறது. இப்போது ‘ராஜகுமாரி’ படத்தில், எம்.ஜி.ராமச்சந்தரைத் தன் அழகால் மயக்கமுயலும் சர்ப்பத்தீவின் விஷாராணியாக காமக் கதாபாத்திரம் ஒன்றை தவமணிதேவிக்கு வழங்கியது. திறமைகளின் மொத்த உருவம் தவமணிதேவியை அன்றைய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவர்ச்சி பிம்பமாகச் சித்தரித்தார்கள். அவரை வைத்து தங்கள் கல்லாவை நிரப்பிக்கொண்டார்கள். அவரிடமிருந்து கவர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்க வைத்தார்கள். ஆனால் பரதம், கண்டி நடனம், ராக் அண்ட் ரோல், பாலே உள்ளிட்ட பல நடனங்கள் கற்றவர்தவமணிதேவி. சிறந்த பாடகி. ஆங்கிலத்தில் கவிதையும் பாடலும் எழுதும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆடை வடிவமைப்பு, ஒப்பனைக்கலை ஆகியவற்றை அறிந்தவர். யாழ்ப்பாணத்தின் இணுவில் பிறந்து வளர்ந்து 5 வயதுமுதல் அங்கே நடனமும் பாட்டும் கற்று, தங்கத் தட்டில் உண்டு வளர்ந்த தவமணிதேவியின் தந்தை கதிரேசன் சுப்ரமணியம் கொழும்பு நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றியவர். தவமணிதேவியின் தாய் மாமா பாலசிங்கம், இலங்கை வெள்ளைக்கார அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர். 15 படங்களே நடித்த தவமணிதேவி, புதிய நடிகைகளின் வரவால் 1962-ல் சினிமாவிலிருந்து முற்றாக விலகி கோடிலிங்க சாஸ்திரியை மணந்து ராமேஸ்வரத்தில் குடியேறி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தவர், தனது 81-வது வயதில் மறைந்தார். http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19733680.ece
 15. தரணி ஆளும் கணினி இசை 1: முதல் முதலா ஒரு பாட்டு... ‘விக்ரம்’ படத்தில் கமல், லிஸி கமலுக்கும் கம்ப்யூட்டர் இசைக்கும் ஒரு சுவாரசியமான தொடர்பு உண்டு. பல கலைகளில் வல்லவராக விளங்கும் கமலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ‘சகலகலா வல்லவன்’. அந்த வெற்றியைச் சிறியதாக மாற்றிவிட ஒரு அதிநவீன திரைப்படத்தை எடுத்து, அதில் நடித்துவிடவேண்டும் என்று முடிவு செய்தார். அந்தப் படம் 1986-ம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’. கம்ப்யூட்டர் இசை தன் முகத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலாகக் காட்டியது அந்தப் படத்தில்தான். ‘விக்ரம்’ படத்தின் முதல் காட்சி நீதிமன்றத்தில் தொடங்கும். நீதிபதி, வழக்கறிஞர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் காட்சி, பென்சில் ஸ்கெட்ச் ஓவியமாகக் காட்டப்பட்டு, அது மெல்ல மெல்லத் திரைப்படமாக மாறும். இந்த ‘சேஞ்ச் ஓவ’ரின் பின்னணியில் இசைக்கப்பட்ட ஒலித்துணுக்கு, கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்பட்ட சேம்பிளர் (sampler) ஒலித் தொகுதியிலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஒன்று. நீதிமன்றக் காட்சியைத் தொடர்ந்து திரையில் விரிந்த டைட்டில் பாடல்.. ‘விக்ரம்ம்…. விக்ரம்ம்ம்ம்ம்… நான் வெற்றிபெற்றவன்… இமயம் தொட்டுவிட்டவன்.. பகையை முட்டிவிட்டவன்’ என, கமல் பாடிய இந்தப் பாடலை, ‘சைடு ஸ்பீக்கர்கள்’ பொருத்தப்பட்ட திரையரங்குகளில் கேட்டபோது, இளைஞர்கள் ஒரு சின்ன திடுக்கிடலோடு எழுந்து நின்று, விசிலடித்து ஆர்ப்பரித்துக் கைதட்டினார்கள். அது கமல், இளைராஜா ஆகிய இரு ஆளுமைகளுக்காக மட்டுமே அல்ல; ‘விக்ராம்ம்ம்ம்…’என்ற அந்தக் குரல் இரண்டாவது முறையாக எக்கோ எஃபெக்டுடன்,‘மெட்டல் வாய்ஸாக’ உலோகக் குரலில் ஒலித்தது. இதை எந்தப் பாடகரும் அப்படிப் பாடிவிட முடியாது. தமிழ் சினிமா இசையில் ஒலிகள் மட்டுமல்ல, குரலும் கணினி நுட்பத்தை உள்வாங்கி ஒலித்தது அதுவே முதல் முறை. ‘விக்ரம்’ படம் புதுமையான விருந்தாக இருக்கப்போவதற்கு அந்தப் பாடலின் பின்னணி இசைக்கோவையில் இடம்பெற்றிருந்த எலெக்ட்ரானிக் வாத்திய ஒலிகள் கட்டியம் கூறின. அதற்காகவும்தான் திரையரங்கில் அத்தனை ஆர்ப்பரிப்பு. ‘விக்ரம்ம்ம்..’ பாடலில் மட்டுமல்ல, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’பாடலிலும் பின்னணி இசைக்கோவையில் இடம்பெற்ற ஒலிகளில் பெரும்பாலானவை கணினியில் உள்ளீடு (Feeding) செய்யப்பட்ட சேம்பிளர் (sampler) இசையிலிருந்து தொகுக்கப்பட்டவைதான். எதிர்பாராமல் அமைந்த பொருத்தம் கமலிடம் ஒரு பெரிய பிரச்சினை உண்டு. வெகுகாலம் கழித்து நடிக்க வேண்டிய, எடுக்க வேண்டிய படங்களை எல்லாம் முன்னரே எடுத்து விடுவார். எந்தப் புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதல் ஆளாகத் தனது படங்களில் பரிசோதனை செய்து பார்த்துவிடுவார். அப்படித்தான் பல புதுமைகளை ‘விக்ரம்’ படத்தில் பயன்படுத்தினார். அவற்றில் கம்ப்யூட்டர் இசை முக்கியமானது. தமிழ் அறிவியல் புனைவுக் கதைகளின் முன்னோடியான எழுத்தாளர் சுஜாதா, எழுதிய நவீன அறிவியல் தொடர்கதையில் தன் கனவுப் படத்துக்கானத் திரைக்கதையைக் கண்டு அவரை எழுத வைத்தார். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உருவாக்க, ‘ப்ளூ மேட்’ திரையின் பின்னணியில் பல காட்சிகளை முதல் முறையாகப் படம்பிடித்தார். இப்படிப் பல ‘முதல்’களைச் செய்த கமல், கம்ப்யூட்டர் எனும் சாதனத்தை முதன்முதலில் திரையில் காண்பித்ததும் இந்தப் படத்தில்தான். கம்ப்யூட்டர் காட்டப்பட்ட படத்தில், கம்ப்யூட்டர் இசை முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது எவ்வளவு பொருத்தம்! இசைஞானியிடம் ஓர் இளைஞர் எந்த வகைப் பாடலாக இருந்தாலும் அதில் இசையின் துடிப்பை பொங்கிவரும் ஒரு நீரூற்றைப்போல உணரச்செய்துவிடும் ‘இசைஞானி’யின் படைப்பாற்றல். அதிலிருந்து விலகாமல், ஆனால் திடீரென்று ராஜாவின் இசை டிஜிட்டலாக மாறி ஒலித்ததைத் தமிழகம் ஆச்சரியமாகக் கேட்டு ரசித்தது. அடுத்து ‘புன்னகை மன்னன்’படப் பாடல்களின் பின்னணி இசைக்கோவையிலும் பின்னணி இசையிலும் ராஜா நவீன இசையைத் தந்து ஆச்சரியப்படுத்திபோது, அவரிடம் ஆர்.எஸ். திலீப்குமார் என்ற இளைஞர், கீபோர்ட் பிளேயராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர்தான் இன்றைய ‘மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்’என்று புகழப்படும் ஏ.ஆர்.ரஹ்மான். ‘ரோலேண்ட்’ எஸ்.770 சேம்பிளர் ‘புன்னகை மன்னன்’ படப் பாடல்களின் பின்னணி இசைக்கோவையில் இடம்பெற்ற புதுமையான ஒலிகளை ராஜா எப்படி உருவாக்கினார்? ரஹ்மான் பயன்படுத்திய ‘ரோலேண்ட் எஸ்770’(Roland S770) என்ற சேம்பிளர் கருவியிலிருந்து தேர்வுசெய்து அவற்றை தன் கற்பனைக்கு ஏற்ப மாற்றினார். சேம்பிளர் என்பது பல வாத்தியக்கருவிகளின் ஒலி மாதிரிகளைச் சேமித்து வைத்துக்கொள்ளும் புராசஸர் கொண்ட ஒரு ஹார்டுவேர் கருவி. இப்படி சேம்பிளர் கருவியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஒலிகளை நம் கற்பனைக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்றால் அந்த ஒலிகளை எப்படி அணுகுவது? அதற்குள் நுழைய (input) பாலம் போன்ற ஒரு ஊடகம் தேவை. அந்தப் பாலம்தான் ‘மிடி’ கீபோர்டு. அது என்ன ‘மிடி கீபோர்டு? ‘மிடி’ கீபோர்டு என்பது இசைக்கருவிபோல் காட்சியளிக்கும் ஒரு டம்மி கீபோர்டு. இதை வாசித்தால் ஒலி வராது. ஆனால் இதைக் கேபிள் மூலம் சேம்பிளர் உடன் இணைத்து, சேம்பிளரின் நினைவகத்தில் (Memory card) பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த வகை வாத்திய ஒலியையும் எளிதில் அணுகி, உங்கள் கற்பனைக்கு ஏற்ப வாசிக்கவும் மாற்றி அமைக்கவும் முடியும். ‘மிடி’ கீபோர்டில் ஒரு ‘பியானோ’வில் இருப்பதுபோல் கருப்பு-வெள்ளை கட்டைகள் (Keys) இருக்கும். இந்தக் கட்டைகளில் தன் விரல்களை இழையவிடும் இசை அமைப்பாளர், எப்போதும்போல் தனது கற்பனையின் ஜாலத்தைக் காட்டுகிறார். ‘மிடி’ கீபோர்டு இசையமைப்பாளர் கம்போஸ் செய்த ஒலி மாதிரிகளை, சேம்பிளரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த வாத்தியமாகவும் ஒலிக்கச் செய்யலாம். பியானோ பட்டன்களின் வழியே நீங்கள் தவில் வாசிக்கலாம், வயலின் வாசிக்கலாம். கிட்டார் வாசிக்கலாம். இப்போது கூறுங்கள் ‘மிடி’ கீபோர்டு (MIDI-Musical Instrument Digital Interface) இசையுலகத்துக்கு அறிவியலின் ஆச்சரியமான பரிசுதானே. ஆக ‘மிடி’ கீபோர்டை கணினி இசையின் வரம் என்று வர்ணிக்கலாம். வாத்திய ஒலிகள் சேமிக்கப்பட்ட ஒரு கணினி (சேம்பிளர்) இருந்தால் போதுமா…கணினி இசையை உருவாக்க கற்பனைத் திறன் தேவைப்படாதா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளும்முன் இசைஞானி கூறுவதைக் கேளுங்கள், “இன்றைய இளம் இசையமைப்பாளர்களே… கம்ப்யூட்டர் இசையைத் தூக்கி எறியுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்”. ஏன் இளையராஜா இப்படிப் பேசினார்… ரகசியம் மேலும் உடையும்... ---------------------------------------------------------------------------------------------------------------------------------- பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ‘வம்சம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தாஜ்நூர். இதுவரை 20-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பாடல் வரிகளைச் சிதைக்காமல், கதைக்கான இசையை நவீனம் குழைத்துத் தருவதில் வல்லவர். அடிப்படையில் மல்டி மீடியா பட்டதாரியான இவர், ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் தொடங்கி ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானிடம் 15 ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர். திரைப்படங்களுக்கும் விளம்பரங்களுக்கும் இசையமைத்தாலும் இன்னொருபக்கம் நவீனத் தமிழ்க் கவிதைகள், திருக்குறள், புறநானூறு, அகநானூறு ஆகிய சங்க இலக்கியப் பாடல்களுக்கும் இசையமைப்பதில் அதிக ஆர்வமுடன் இயங்குபவர். இசையைச் சமூக மாற்றத்துக்காக பயன்படுத்திவருவதற்காக திராவிடர் கழகத்தின் ‘பெரியார் விருது’ பெற்றவர். http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19733736.ece
 16. இவருக்கு என்ன விசா கொடுத்தவை...??! விசேட விசாவா. சாமானிய மக்களுக்கு கொடுக்கும் விசாவில்.. அரசியல் நடவடிக்கைகளில்.. பிரமுகர்களை சந்திக்க தடை இருக்கே.
 17. இரண்டு பேருக்கும் பிரச்சனை என்றால்.. இரண்டு பேரும் அணு ஆயுதங்களையும் பொறுக்கிக்கிட்டு.. பூமியை விட்டு வெளில போய் நின்று மல்லுக்கட்டுங்க.. இல்ல.. ஆளையாள் மோதுங்க. ஆனால்.. அப்பாவி மக்களையும்.. பூமியையும் நாசமாக்க.. இந்த இருவருக்கும் மனித இனம் அனுமதி அளிக்காது.. என்பதை இருவரும் நினைவில் நிலைநிறுத்திக் கொள்வது நல்லம். மனித இனம் மீது இன்னொரு அணு ஆயுதப் பிரயோகத்தை அமெரிக்காவும்.. எவரும் எனி செய்ய மனித இனம் அனுமதிக்கக் கூடாது. எல்லா மக்களும் திரண்டு.. அணு ஆயுதங்களையும்.. பேரழிவு ஆயுதங்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க போராடும் காலம் நெருங்கிவிட்டுள்ளது. அணு ஆயுத சக்திகள்.. இந்தப் பூமியில்.. இருக்க அனுமதிக்கக் கூடாது.
 18. சிறீயர் பள்ளிக்கூட வாத்தியாராய் இருந்தவர் பாருங்கோ.... கைய டப்பக்கெண்டு தூக்குவார். தம்பிக்காரர் வேற லங்காசிறி.கொம் ஓனர். காசு இருக்கு. அண்ணயப் பிடிக்கேலுமே?
 19. இலங்கை வந்துள்ள அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை தடை விலக்கப்பட்டதையடுத்து இருபது ஆண்டுகள் கழித்து இலங்கை வந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல், கொழும்பிலும் வடபகுதியிலும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புலிகளுடன் தொடர்புடைய, பயங்கரவாதத்துக்கு உதவும் குற்றச்சாட்டுகளின் பேரில் சுமார் நானூறு தனி நபர்களையும் அமைப்புகளையும் கடந்த ஆட்சியின்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தடை செய்திருந்தார். அந்தத் தனி நபர்களுள் அருட்தந்தையும் ஒருவர். இந்தக் குற்றச்சாட்டையடுத்து அருட்தந்தை 1997ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தார். எனினும், புலம்பெயர் அமைப்புகளுடன் கலந்துரையாடி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களை மீளக் கட்டியெழுப்பும் தற்போதைய அரசின் முயற்சியின் கீழ் மேற்படி தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இதையடுத்தே அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் இலங்கை வந்துள்ளார். இதன்போது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷப் உட்பட இலங்கையின் தென், வட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் குற்றச்சாட்டினால், ஒரு கிறிஸ்தவ அருட்தந்தையான தாம் சமய ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24796
 20. விமானக் குண்டு வீச்சில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல் Share நாகர்கோயில் மாக வித்தியாலயம் மீது நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வு பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நடைபெற்றது. 1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 21 மாணவர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகாயமடைந்தனர். http://newuthayan.com/story/30997.html
 21. கிழவனான டொனால்ட் டிரம்பை அடக்குவேன்: வடகொரியா ஜனாதிபதி சவால்..! வட கொரியா மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்த டொனால்ட் டிரம்பை கடுமையான தாக்குதல்கள் மூலம் அடக்குவேன் என வட கொரியா ஜனாதிபதி கிம் யோங் உன் சவால் விடுத்துள்ளார். வட கொரியா 6வது முறையாக அணு ஆயுத பரிசோதனை செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை நேற்று அறிவித்தது. இத் தடை மூலம் வட கொரியா அணு ஆயுத பரிசோதனை செய்வது தாமதமாக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு வட கொரியா பதிலடி கொடுத்துள்ளது. வட கொரியா ஜனாதிபதி அறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசாங்க ஊடகத்திற்கு அனுப்பியுள்ளார். அவ் அறிக்கையில், ‘அறிவில்லாத கிழவனான டொனால்ட் டிரம்பை கடுமையான தாக்குதல்கள் மூலம் அடக்கிக் காட்டுவேன். டொனால்ட் டிரம்ப் பின் விளைவுகளை சிந்திக்காமல் வட கொரியாவை சீண்டி வருகின்றார். டிரம்பின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அவர் கற்பனையிலும் எண்ண முடியாத முடிவுகளை சந்திப்பார். இது தொடர்பாக நாங்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றோம் ’ என எச்சரிக்கை விடுத்துள்ளார். https://news.ibctamil.com/ta/world-affairs/North-korean-president-warns-donald-trump
 22. யாழ்ப்பாணம் திரைவிழாவில் பார்வையாளர் விருது THE BORDER பெற்ற குறும்படம் ! இலங்கையில் உருவாக்கப்பட்ட "எல்லை" எனும் குறும்படம் Jaffna Film Festival திரைவிழாவில் பார்வையாளர் விருதினைப் பெற்றுள்ளது. ரீ.சமீதனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படம் இலங்கை - இந்திய தமிழ் மீனவர்களின் பிரச்சனையினை பேசு பொருளாக கொண்டுள்ளது. யாழ் திரைவிழாவில் தமிழகத்தில் இருந்து இயக்குனர் ராம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்திருந்தார். ஏற்கனவே பல்வேறு திரைவிழாக்களில் பங்கெடுத்துள்ள இக்குறும்படம் விரைவில் புலம்பெயர் நாடுகளிலும் திரையிடப்பட இருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது. https://news.ibctamil.com/ta/cinema/the-border-film-wiinig-award
 23. இளமை புதுமை பல்சுவை

  ஈக்களை ஏன் அடிக்க முடியவில்லை தெரியுமா? வீட்டில் பறந்துக்கொண்டிருக்கும் ஈக்களை நாம் அடிக்க முயலும்போது, அவை எப்படியாவது தப்பித்து சென்றுவிடும். ஈக்களை நம்மால் ஏன் அடிக்க முடிவில்லை என்பதை விளக்கும் காணொளி.
 24. இலங்கை ராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் - ஞானசார தேரர் சாட்சியம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த காலத்தில் இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் தான் நெருக்கமாக செயல்பட்டதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் மேல்முறையிட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வழக்கொன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது அளித்த சாட்சியத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளளார். கடந்த 2016ஆம் ஆண்டு 25 ஆம் தேதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகோடா காணாமல் போனது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி அப்போதைய ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிவானாக கடமையாற்றிய ரங்க திசாநாயக்க ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்தபோது சாட்சியமளித்த ஞானசார தேரர் யுத்தம் நடைபெற்றபோதும், யுத்தம் முடிவடைந்த பின்னரும் தான் இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார். ராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ரீதியில் தான் உதவியுள்ளதாக கூறிய அவர், பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்காக அவர் ராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு ஆதரவு அளித்து வந்ததாகத் தெரிவித்தார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகோடா காணாமல் போனது தொடர்ப்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சில முக்கிய ராணுவ புலனாய்வு துறை அதிகாரிகளை போலீசார் கைது செய்ததாக குற்றம்சாட்டிய ஞானசார தேரர், தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் ராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் செயல்பாடுகளை முடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலதிக வழக்கு விசாரணை அடுத்த மாதம் முன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக பொதுபல சேனா அமைப்பு மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன் அந்த அமைப்புக்கு இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் ஆதரவு கிடைத்து வருவதாக அப்போது ஊடகங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர். இந்தப் பின்னணியில் ஞானசார தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.com/tamil/sri-lanka-41357095?ocid=socialflow_facebook
 25. ''100 பெண்கள்''

  100 பெண்கள்: 'வேலையில் தீவிரமாக ஈடுபட தலைமுடியை பழுப்பு நிறமாக மாற்றினேன்' பகிர்க படத்தின் காப்புரிமைEILEEN CAREY உலகின் மிகப்பெரிய உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் பெண், தனது கூந்தலுக்கு பழுப்பு வண்ண சாயம் ஏற்றினார். அணிந்திருந்த உயர்ந்த குதிகால் கொண்ட காலணிகளையும், கண்ணில் அணிந்திருந்த காண்டெக்ட் லென்சையும் புறம்தள்ளி, வணிகத்தில் முன்னேறிய ரகசியத்தை வெளிப்படுத்துகிறார். வெற்றிகரமான தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிவரும் எய்லீன் கேரே முப்பதுக்கும் சற்று கூடுதலான வயது கொண்டவர். கண்களில் கண்ணாடியும், அடர் பழுப்பு வண்ண கூந்தலுடன் காணப்படும் அவர் எப்போதும் இதே தோற்றத்தில் இருப்பதில்லை. "மூலதன ஆலோசகரான ஒரு பெண்ணின் ஆலோசனையின்படியே முதல் முறையாக எனது முடிக்கு சாயம் பூசினேன்" என்று கூறுகிறார் எய்லீன் கேரே. கேரே, தனது தோற்றத்தை இன்னும் வசதியாக கையாள்வதற்கு பொன்னிறத்தை விட அடர் பழுப்பு நிற கூந்தல் உகந்ததாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கூறினார்கள். 100 பெண்கள்: உலகத்தை ஒரே வாரத்தில் பெண்களால் மாற்ற முடியுமா? "நிதி திரட்டுவதில் இது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் என்னிடம் இந்த அறிவுரை கூறப்பட்டது. ஏனென்றால் அடர் பழுப்பு நிற கூந்தல் கொண்ட பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் வலுவானவர்களாக அங்கீகரிக்கப்படுவது இங்கு ஒரு முறைமையாக இருக்கிறது" என்று அவர் விளக்குகிறார். அங்கீகார முறைமை (Pattern recognition) என்பது மக்களுக்கு பழக்கமான அனுபவங்கள் அல்லது நன்கு அறியப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் பரிந்துரைக்கும் ஒரு கோட்பாடு. உணரப்பட்ட அபாயங்களை கருத்தில் கொண்டு, அவர்களை வசதியாக உணர வைக்கும் கோட்பாடு இது. பொன்னிற கூந்தலைக் கொண்டிருந்தபோது, சர்ச்சைக்குரிய தெரோனெஸ் நிறுவனத்தின் எலிசெபத் ஹோம்ஸுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டதாக எய்லீன் கேரே கூறுகிறார். "பழுப்பு வண்ண கூந்தலை கொண்டிருப்பதால் நான் சற்று முதிர்ந்த தோற்றத்துடன் காட்சியளிப்பது எனக்கு வசதியாக இருக்கிறது, அதுதான் எனக்கு தேவையானதும்கூட. இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நான் உணர்ந்தேன்" என்று சொல்கிறார் கேரே. படத்தின் காப்புரிமைEILEEN CAREY Image captionஎய்லீன் கேரே பொன்னிற கூந்தல் மற்றும் காண்டெக்ட் லென்சுடன் பன்முகத்தன்மையுடன் மேம்படுத்தப்பட்ட கணினி மென்பொருட்களை பிற நிறுவனங்களுக்கு வழங்கும் 'கிளாஸ்ப்ரேக்கர்ஸ்' (Glassbreaker s) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் எய்லீன் கேரே. தனது நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணலின்போது, தங்களது பொன்நிற கூந்தலை அடர் பழுப்பு வண்ணமாக சாயமேற்றியிருந்த பல பெண்களை அவர் சந்தித்தார். "பொன்னிற கூந்தலால் அசெளகரியங்கள் ஏற்படுவது பற்றி நாங்கள் விவாதித்தோம்" என்கிறார் கேரே. "மது அருந்தகத்திற்கு செல்லும்போது பொன்னிறமானவர்கள் தாக்கப்படுவது சகஜமாக இருக்கிறது. இது பொதுவான பிரச்சனை." "இந்த தொழில்நுட்பத் துறையில் நான் வெற்றிகரமாக இயங்க வேண்டுமானால், பிறரின் கவனத்தை அதிகமாக ஈர்க்கக்கூடாது அதிலும் குறிப்பாக பாலியல்ரீதியாக எந்தவிதத்திலும் பிறரை ஈர்க்ககூடாது." அவர் சொல்வது கூந்தலின் நிறத்தை பற்றி மட்டும் அல்ல. காண்டாக்ட் லென்சை பயன்படுத்தி கொண்டிருந்த கேரே, இப்போது வழக்கமான கண்ணாடிகளை பயன்படுத்துகிறார். ஆண் பெண் என்று அடையாளப்படுத்த முடியாத வகையிலான (androgynous) ஆடைகளையும், தளர்வான ஆடைகளையும் உடுத்துகிறார். ஆண்களின் மேலாதிக்கம் கொண்ட பணிச்சூழலில், சற்று வயதான தோற்றமளிக்க முயற்சிப்பது தனக்கு வசதியாக இருப்பதாக கேரே கருதுகிறார். 100 பெண்கள் தொடரின் நோக்கம் என்ன? உலகெங்கிலும் உள்ள செல்வாக்கான மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய பெண்களை பற்றிய தொடர் பிபிசி 100 பெண்கள். 2017ஆம் ஆண்டில், இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளான கண்ணுக்கு தெரியாத தடைகள், பெண்களுக்கு கல்வியின்மை, பொது இடங்களில் துன்புறுத்தல், விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றை சமாளிக்க 100 பெண்களுக்கு சவால் விடுகிறோம். உங்கள் உதவியுடன், இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளுடன் அவர்கள் வெற்றிபெறுவார்கள், உங்கள் கருத்துகளுடன் நீங்களும் இதில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறோம். பேஸ்புக், இன்ஸ்ட்ராகாம் மற்றும் டிவிட்டரில் எங்களை தொடரலாம். # 100 Women (#100 பெண்கள்) என்ற டேகை பயன்படுத்துங்கள். "வணிகத்தில் ஒரு தலைவராக பார்க்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன், பாலியல் பொருளாக அல்ல. இந்தத் துறையில் இதை நான் அடிக்கடி சந்திக்க, கடக்க வேண்டியிருக்கிறது" என்று அவர் விளக்குகிறார். இருந்தபோதிலும், வேலை அல்லது பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மிகவும் பொதுவானதாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார் அவர். "எங்கள் தொழிலில், இந்த காலத்தில் பாலியல் துன்புறுத்தல் என்ற பிரச்சனை இருக்கிறது," என்று அவர் விளக்குகிறார். மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுக்கான ஒரு சமீபத்திய நிகழ்வில், தேவதைகள் போல் அலங்கரிக்கப்பட்ட பெண் மாடல்கள் மது வகைகளை பரிமாறினார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒருசில பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளில் தானும் ஒருவராக இருந்ததை குறிப்பிடும் கேரே, அந்த சூழ்நிலை பொருத்தமற்றதாகவும், நேர்மையற்றதாகவும் தோன்றியது என்கிறார். Image 4 பன்முகத்திறமை கொண்ட தொழிலாளர்களை வழங்கும் மென்பொருளை வழங்கும் கிளாஸ்ப்ரேக்கர்ஸ் நிறுவனம் ஆண்மையையும் பெண்மையையும், பாலின சிக்கல்களையும் பொதுவாக அணுகும் முறையில் தனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தனது தாயார் எய்லீன் சீனியர் என்று கூறுகிறார் எய்லீன் கேரே. கேரேயின் தாயும் அத்தையும் 1980களிலேயே பெண்ணியவாத சிந்தனைகளை கொண்டவர்கள். "ஓட்ட வெட்டிய முடியுடன் இருக்கும் என் அம்மா ஒப்பனை செய்யமாட்டார், உயர் குதிகால் கொண்ட காலணிகளையோ, ஈர்க்கக்கூடிய ஆடைகளையே அணிய மாட்டார்" என்று சொல்கிறார் கேரே. கடந்த காலத்தில் தலைமுடி வெட்டப்பட்டு, நகங்களை அழகுபடுத்தியிருந்தார் கேரே. "இப்போதுதான் என் அம்மாவுக்கு ஏற்ற பெண்ணாக இருக்கிறேன், ஒப்பனை செய்துகொள்ள விரும்பவில்லை, அதிக உயரமான குதிகால் உள்ள காலணிகளை அணிய விரும்பவில்லை, வேலையில் இருக்கும்போது வசதியாக உணர்கிறேன்" என்று சொல்கிறார் எய்லீன் கேரே. படத்தின் காப்புரிமைLAUREN HEPLER Image captionபொன்னிற கூந்தலில் எய்லீன் கேரே கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பின்னணியை கொண்ட குடும்பங்களில் வளர்க்கப்பட்ட பெண்களுக்கு உள்ள அழுத்தம் தனக்கு இருப்பதாக கேரே உணரவில்லை. "மிக இளம் வயதில் வழக்கமான பாலின நடத்தைகளை பின்பற்ற வேண்டும் என்ற அழுத்தம் இல்லாதது அதிர்ஷ்டம் என்றே சொல்வேன்." தொழில்நுட்ப துறையில் பாலியல் மற்றும் பாலினம் பற்றிய புதிய செய்திகளே அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றன, அது ஊபெராக இருந்தாலும் சரி, கூகுளாக இருந்தாலும் சரி. எங்கு வேலை செய்வது என்ற தெரிவு பணியாளர்களிடம்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் எய்லீன் கேரே. ஒரு நிறுவனத்திற்குள் தனியாக ஒரு கலாச்சாரத்தை மாற்ற முயற்சிப்பது கடினம் என்று கூறும் கேரே, மேலும் அங்கே பணிபுரியும் காயமடைவதாக உணர வழிவகுக்கும் என்று சொல்கிறார். இது, "ஒரு மில்லியன் காகிதத்துண்டுகள், நுண்ணிய ஆக்கிரமிப்புகள், சிறிய விஷயங்கள்" நோக்கிச் செல்லும் என்றும் கூறுகிறார். நீங்கள் ஒரு நிறுவனத்தை மாற்ற விரும்பினால், "அது உலகில் நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருக்கட்டும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை. பாரபட்சம் காட்டுவதற்கான வழக்குக்காக தியாகம் செய்யலாம். துரதிருஷ்டவசமாக, நீங்கள் தொழில்களை மாற்ற வேண்டியிருக்கும்." இல்லையெனில், "எங்கே வெற்றியடைய முடியுமோ அங்கே செல்லுங்கள்." சிலிக்கன் பள்ளத்தக்கில் 2016இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, தொழில்நுட்ப துறையில் 60 சதவிகித பெண்கள் ஏதாவது ஒருவிதத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அதே ஆண்டில் பணியிடங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 91,503 வழக்குகளில் 30% பாலியல் தாக்குதல் தொடர்பானவை. 2013 இன் ஒரு கணக்கெடுப்பின்படி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் 75 சதவிகிதத்தினர் இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை என்பதால் உண்மையான பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். அனைவருடன் இணைந்து செல்லாத, பெண்களின் தலைமைத்துவத்திற்கு இடமளிக்காத, பெண்களுக்கு சிக்கலான சூழலை உருவாக்கும் நிறுவனங்கள் நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்று சொல்கிறார் எய்லீன் கேரே. "நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள், தலைமைப் பண்பை கவனியுங்கள், அங்கு வேலை செய்யும் பெண்களிடம் பேசுங்கள், உங்கள் திறனை பயன்படுத்த அவர்களால் முடியாது என்று நினைத்தால், அங்கே வேலை செய்யாதீர்கள்" என்று கேரே அறிவுரை கூறுகிறார். http://www.bbc.com/tamil/global-41327537
 26. 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி – இது திலீபனுடன் 8 ஆம் நாள் Share (கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து) இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்க வேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்களில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிக்கின்றனர் என்று பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள். தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாநகரில் ‘மதன் என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாள்களில் ஆரம்பிக்கவுள்ளார் என்று என்னிடம் மாத்தா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ஆம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார். மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள் இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல. லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான். தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் திருச் செல்வம் என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை தொடங்கவுள்ளனர் என்ற செய்திகள் வெளிவந்தன. தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது. திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லையென்றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா? வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள். ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன. இந்த எழுச்சியை மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள். புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல, அகிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாள்களை வெற்றிகரமாக முடித்தவர் என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன். அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன. வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை. பேச முடியவில்லை…… சிரிக்க முடியவில்லை……… ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது? முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள். சிந்திய குருதியால் சிவந்த தமிழ் மண்ணில் சந்ததி ஒன்று சரித்திரம் படைக்க முந்திடும் என்பதால் முளையிலே கிள்ளிட சிந்தனை செய்தவர் சிறுநரிக் கூட்டமாய் இந்தியப்படையெனும்’ பெயருடன் வந்தெம் சந்திரன் போன்ற திலீபனின் உயிரைப் பறித்திட எண்ணினால் பாரிலே புரட்சி வெடித்திடும் என்று வெறியுடன் அவர்களை எச்சரிக்கின்றேன் !” மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. இரத்த அழுத்தம் -80/50 நாடித் துடிப்பு -140 சுவாசம்-24 http://newuthayan.com/story/31047.html
 1. Load more activity