24 hours

Showing topics posted in for the last 1 days.

This stream auto-updates     

 1. Past hour
 2. IndvsNZ: இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பல்! இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பியுள்ளனர். இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. இந்தப் போட்டிக்கான டாஸை இந்திய கேப்டன் விராட் கோலி வென்றார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் தவான் முறையே 20 மற்றும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருவரையும், நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் பெவிலியன் அனுப்பினார். தற்போது கேப்டன் விராட் கோலியும், கேதார் ஜாதவ்வும் களமிறங்கி அணியை சரிவில் இருந்து மீட்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 54/2 என்ற நிலையில் ஆடி வருகிறது. http://www.vikatan.com India 114/3 (24/50 ov)
 3. கந்தரப்பம் செட்டிநாட்டின் மிக முக்கியமான பலகரமாக பரிமாறப்படுகிறது. இது மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.கந்தரப்பம் செட்டிநாட்டின் பெரும்பாலான விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு முக்கிய பலகாரம். தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப் புழுங்கல் அரிசி - 1/2 கப் உளுந்து - 2 மேஜைக்கரண்டி வெந்தயம் - 1/2 தேக்கரண்டி ஏலக்காய் - 3 தேங்காய் துருவியது - 1 மேஜைக்கரண்டி எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு வெல்லம் - 1 கப் பொடித்தது செய்முறை: அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊரவைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும், ஏலக்காய், தேங்காய் மற்றும் வெல்லப்பொடி சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை 1 வரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். கடாயில் எண்ணெய் காய வைக்கவும். காய்ந்த பின் 1 கரண்டி அளவு மாவை எடுத்து காய்ந்த எண்ணெயின் நடுவில் மெதுவாக உற்றவும். ஓரங்களில் வெந்த பின், திருப்பி விட்டு 1/2 நிமிடத்தில் எடுக்கவும். இது போன்று மீதமுள்ள மாவையும் ஒன்றொன்றாக சுட்டு எடுக்கவும். சுவையான செட்டிநாட்டு சிறப்பு கந்தரப்பம் தயார். http://tamil.webdunia.com/article/sweets-in-tamil/chettinad-special-kandharappam-to-make-117102100031_1.html
 4. திரைப் பார்வை: அவன் வீட்டில் கல்லெறியுங்கள்! - ராமலீலா (மலையாளம்) ‘ராமலீலா’ படத்தில் தீலிப், ப்ரயாகா மார்டின் பி ரபல நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் மலையாள நடிகர் திலீப். சிறைக்குச் செல்வதற்கு முன் இவர் நடித்த படம் ‘ராமலீலா’. அக்டோபர் 13 அன்று வெளியான ‘ராமலீலா’, நல்ல விமர்சனங்களைப் பெற்று சிறப்பான வசூலையும் குவித்து வருகிறது. அருண் கோபி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் சச்சி. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் சேரும் ராமன் உண்ணி (திலீப்) அக்கட்சியின் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிப்படையான எதிர்ப்பையும் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் வாய்ப்பைப் பறிகொடுத்தவர்களின் மறைமுக எதிர்ப்பையும் மீறி, அதிக ஆதரவாளர்களைப் பெற்று வெற்றிவாய்ப்பை நோக்கி நகர்கிறான். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொலைப்பழி ராமன் மீது விழுகிறது. அதிலிருந்து ராமன் மீண்டானா, உண்மையான கொலையாளி யார், தேர்தல் முடிவு என்ன ஆகிய கேள்விகளுக்கான பதில்களைத் தேடிப் புறப்படுகிறது திரைக்கதை. கேரளத்தில் கம்யூனிஸ்ட்- காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொன்றுதொட்டுத் தொடரும் அரசியல் பகை, அந்தந்தக் கட்சிகளுக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்களின் முகம், அரசியல் போட்டியில் விரவிக் கிடக்கும் வன்மம் பழிவாங்கும் உணர்ச்சியாக நிறம் மாறுவதைப் படத்தின் முதல் பாதி மிகத் துல்லியமாகத் தேர்ந்த திரைமொழியுடன் பதிவு செய்தபடி நகர்கிறது. குறிப்பாகக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பும் வெறுப்பும் மிரட்டல்களும் கட்சியின் இறுக்கமான கட்டமைப்பைப் பற்றிய விமர்சனமாகப் பதிவாகின்றன. அதேநேரம் படத்தின் முடிவு கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பெருமைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. ராமன், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் கும்பலாக வந்து அவனது வீட்டுக்குள் கற்களை எறிகின்றனர். அப்போது ஒரு மூத்த உறுப்பினர் “சகாவு ராகினி (ராமனின் அம்மா) வீட்டில் கல்லெறியாதீர்கள்” என்று சொன்னவுடன் அனைவரும் நிறுத்திவிடுகின்றனர். அப்போது வெளியே வரும் ராகினி (ராதிகா) “இது வர்க்க வஞ்சகன் ராமனின் வீடு; கல்லெறிவதை நிறுத்தாதீர்கள” என்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியினரின் தீவிர கொள்கைப் பிடிப்பை இப்படி ஒரு தாய்க் கதாபாத்திரத்தின் மூலம் பதிவுசெய்திருப்பது படத்தின் சிறப்பான அம்சங்களில் ஒன்று. அம்மாவும் மகனும் தேர்தல் களத்தில் அரசியல் எதிரிகளாக நிறுத்தப்படுவதும் திரைக்கதையின் சுவாரசியமான திருப்பம். முதல் பாதியில் அரசியல் படமாக இருக்கும் ராமலீலா, இரண்டாம் பாதியில் மர்மப் படமாக மாறிவிடுகிறது. மர்மப் படம் என்கிற அளவில் திருப்பங்களும் சுவாரசியமும் நிறைந்திருக்கின்றன. என்றாலும் முதல் பாதியில் கேரள அரசியலை அவ்வளவு விரிவாகப் பதிவுசெய்தது எதற்காக என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால், படத்தின் இறுதியில் வரும் எதிர்பாராத் திருப்பம் அவ்வளவு நீண்ட அரசியல் கள விவரிப்பை நியாயப்படுத்துகிறது. படத்தின் சில திருப்பங்கள் ஊகிக்கக்கூடியவையாக இருப்பதும் சில தர்க்கப்பூர்வமான கேள்விகள் எழுவதும் குறிப்பிடத்தக்க குறைகள். அரசியல் தந்திரம், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் சாதுர்யம் மிக்க கதாபாத்திரத்தில் திலீப் அசத்தியுள்ளார். மகன் மீது கொலைப் பழி விழுவதைத் தாங்கிக்கொள்ள முடியாவிட்டாலும், கட்சிக்குக் கட்டுப்பட்டு அவனுக்கு எதிராக இருக்க வேண்டிய தர்மசங்கடத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் ராதிகா. திலீப்பின் தேர்தல் உதவியாளராக இருந்து அவருடன் கொலைக் குற்றச்சாட்டில் அகப்பட்டுக்கொள்பவராக வரும் கலாபவன் ஷாஜன் இரண்டாம் பாதியில் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகிறார். பெரிதும் இரு துருவமயப்பட்ட கேரள அரசியல் அனலின் பின்னணியில், ஆர்வத்தைக் கூட்டும் மர்மமும் திருப்பங்களும் ஊகிக்க முடியாத முடிவும் கொண்ட சுவாரசியமான த்ரில்லர் படம் ‘ராமலீலா’. http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19882174.ece
 5. *ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் , ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.....
 6. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 7. ஊழலும் முறைகேடும் இல்லையென்றால் ஏன் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்தைப்பார்த்து ஏன் பயப்பிடுகிறது அரசு!
 8. மைத்திரி காட்டும் பூதம் “விரோ­தங்கள் வன்­மு­றை­களின் மூலம் என்னைப் பல­வீ­னப்­ப­டுத்­தினால், தீய சக்­திகள் தான் பலம் பெறும்” - கடந்த 13ஆம் திகதி யாழ்ப்­பாணம் இந்துக் கல்­லூ­ரியில் நடந்த தமிழ்­மொழித் தின விழாவில் உரை­யாற்­றிய போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறிய விட­யமே இது. இந்த விழாவில் பங்­கேற்க யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக போராட்டம் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களைக் கடந்து சென்ற போது, வாக­னத்தை விட்டுக் கீழே இறங்கி, அவர்­க­ளுடன் பேச்சு நடத்­தி­யி­ருந்தார் ஜனா­தி­பதி. அதற்குப் பின்னர், தமிழ்­மொழித் தின விழாவில் உரை­யாற்­றிய போதே, தன்னைப் பல­வீ­னப்­ப­டுத்­தினால், தீய­சக்­திகள் பலம் பெறும் என்று அவர் கூறி­யி­ருந்தார். இதனை அறி­வுரை என்று எடுத்துக் கொள்­வதா- அல்­லது எச்­ச­ரிக்கை என்று எடுத்துக் கொள்­வதா என்­பது அவ­ரவர் பார்வைக் கோணத்தைப் பொறுத்த விடயம். ஆனாலும், தன்னைப் பல­வீ­னப்­ப­டுத்­தினால் தீய­சக்­திகள் பலம் பெறும் என்­பது போன்ற கருத்­து­களின் ஊடாக, ஜனா­தி­ப­தியும் அவ­ரது அர­சாங்­கமும், தமிழ் மக்­களின் கோரிக்­கைகள், நியா­யங்கள், உரி­மை­களை அடக்­கு­வ­தற்கே முனை­கின்­றனர் என்­பது வெளிப்­படை. யாழ்ப்­பா­ணத்தில் ஜனா­தி­பதி மாத்­திரம் இந்தக் கருத்தைக் கூற­வில்லை. அது­போல, தமிழர் தரப்பை நோக்கி இது முதல் முறை­யாகக் கூறப்­பட்ட கருத்தும் அல்ல. அண்­மையில் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஒரு செவ்­வியில் இது­பற்றி விரி­வாகக் கூறி­யி­ருந்தார். “அர­ச­த­ரப்பில் உள்­ள­வர்கள் எம்­முடன் வந்து நன்­றாக கலந்­து­ரை­யா­டு­வார்கள். நாங்கள் அவர்­க­ளிடம் எமது கோரிக்­கை­களை முன்­வைப்போம். அதனை நிறை­வேற்­று­வ­தாக வாக்­கு­றுதி அளித்து விட்டுப் போவார்கள். ஒன்றும் நடக்­காது. பின்­பொ­ரு­முறை சந்­திக்கும் போது அளிக்­கப்­பட்ட வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்று கேட்டால், அதனை நிறை­வேற்­றினால், மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியைக் கவிழ்த்து விடுவார், அவர் மீண்டும் ஆட்­சிக்கு வந்து விடுவார் என்று பயம் காட்­டு­கி­றார்கள்” என்று அவர் கூறி­யி­ருந்தார். அதா­வது தமிழ் மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான வாக்­கு­று­தி­களைக் கூடக் காப்­பாற்ற முடி­யாத அர­சாங்­க­மாகத் தான் இது இருக்­கி­றது. இத்­த­கைய தரு­ணங்­களின் போதெல்லாம், தீய­சக்­திகள் பலம் பெறும் என்றோ, மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியைக் கவிழ்த்து விடுவார் அல்­லது அதி­கா­ரத்­துக்கு வந்து விடுவார் என்றோ பய­மு­றுத்­து­வது தான் அர­சாங்­கத்தின் வழக்­க­மாக மாறி­யி­ருக்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷவை அல்­லது தீய­சக்­தி­களைக் காண்­பித்து தமி­ழர்­களைப் பய­மு­றுத்தி, அவர்கள் தரப்பு நியா­யங்­களை அர­சாங்கம் அமுக்கப் பார்க்­ கி­றதோ என்ற சந்­தேகம் தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷவின் ஒரு தசாப்த ஆட்­சிக்­காலம் என்­பது, தமி­ழர்­களைப் பொறுத்­த­வ­ரையில் மிக மோச­மா­னது என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை. படு­கொ­லைகள், போர்க்­குற்­றங்கள், காணாமல் ஆக்­கப்­ப­டு­தல்கள், கைதுகள், சித்­தி­ர­வ­தைகள், இடம்­பெ­யர்­வுகள் என்று இந்த ஆட்­சிக்­கா­லத்தில் தமி­ழர்கள் சந்­தித்த துன்ப துய­ரங்கள், முன்­னைய எந்­த­வொரு ஆட்­சிக்­கா­லத்­திலும் அனு­ப­வித்­தி­ரா­தவை. சர்­வ­தேச நாடுகள் பல­வற்­றினால் கூட இன்று எதேச்­சா­தி­கார ஆட்சி என்று வர்­ணிக்­கப்­படும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில், தமிழ் மக்கள் மோச­மாக நடத்­தப்­பட்­டனர். மோச­மான வாழ்வு நிலைக்குள் சிக்­கி­யி­ருந்­தனர். அதி­லி­ருந்து வெளியே வர வேண்டும் என்­ப­தற்­காக மாத்­திரம், தமிழ் மக்கள் ஒன்­றி­ணைந்து, 2015 இல்­ஆட்சி மாற்­றத்தை நிகழ்த்­த­வில்லை. தமக்கு நீதியும், நியா­யமும், உரி­மையும், அதி­கா­ரங்­களும் கிட்ட வேண்டும் என்­ப­தற்­கா­கவும் தான், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாகச் தெரிவு செய்­வ­தற்குத் தமிழ் மக்கள் துணை நின்­றனர். மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில், தமிழ் மக்கள் மிக மோச­மான சூழ்­நி­லைக்குள் இருந்த போதும் கூட, தமது கோரிக்­கைகள், உரி­மைகள், அதி­கா­ரங்கள் விட­யத்தில், ஒரு­போதும் விட்­டுக்­கொ­டுக்­கவோ, போரா­டாமல் ஒதுங்­கி­யி­ருக்­கவோ இல்லை. அடக்­கு­மு­றை­க­ளுக்கு மத்­தி­யிலும், தமது எதிர்ப்­பு­களை சாத்­தி­ய­மான வழி­களில் எல்லாம் வெளிப்­ப­டுத்திக் கொண்­டே­யி­ருந்­தனர். 2015 ஆட்சி மாற்றம், புதிய சூழ­லையும், ஜன­நா­யக இடை­வெ­ளி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இந்த மாற்­றத்­தினால் தான், ஜனா­தி­பதி பங்­கேற்கும் நிகழ்­வுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டத்­தையும் நடத்த முடிந்­தி­ருக்­கி­றது. இதுவே மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் என்றால், அதி­கார பலத்தைக் கொண்டு அடக்­கப்­பட்­டி­ருக்கும் அல்­லது அகற்­றப்­பட்­டி­ருக்கும். அதற்­காக தற்­போ­தைய அர­சாங்கம், போராட்­டங்­களை அனு­ம­திக்­கி­றது என்­ப­தற்­காக, அதற்­கான சூழல் விட்டு வைக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தற்­காக, தமிழ் மக்­களின் கோரிக்­கை­க­ளையோ, உரி­மை­க­ளையோ, அதி­கா­ரத்­தையோ நியா­ய­மற்­ற­தாக காட்­டு­வது அல்­லது விட்­டுக்­கொ­டுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­து­வது தவ­றா­னது. மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்து விடுவார் என்று கூறி, பேசாமல் அமை­தி­யாக இருக்கச் செய்­வது தான், அர­சாங்­கத்தின் உத்­தி­யாக இருக்­கி­றது. அவ்­வா­றாயின், தமிழ் மக்­களின் கோரிக்­கை­க­ளான, அடிப்­படை உரி­மை­க­ளையும், அதி­கா­ரத்­தையும் எப்­போது கோரு­வது, எப்­போது அதற்­கான போராட்­டங்­களை நடத்­து­வது? ஓர் அர­சாங்கம் என்­பது ஒரு­போதும் நூறு வீதம் பாது­காப்­பா­னது என்று கூற­மு­டி­யாது. அதுவும் ஜன­நா­யக அர­சியல் சூழல் உள்ள நாடு­களில், நிலை­யான அர­சாங்கம் இருப்­பது போலத் தோற்­ற­ம­ளித்­தாலும், அதற்குப் பின்னால் ஆபத்து ஒளிந்து கொண்­டே­யி­ருக்கும். ஆளும்­கட்­சியைப் பிள­வு­ப­டுத்தி, அல்­லது தமது பக்கம் இழுத்து என்று பல்­வேறு வழி­களில் ஆட்­சியைக் கவிழ்க்க முனை­வது வழக்கம். எந்­த­வொரு அர­சியல் கட்­சி­யி­னதும் பிர­தான இலக்கு ஆட்­சியை. அதி­கா­ரத்தைப் பிடிப்­பது தான். அந்த இலக்­கில்­லாமல் நடத்­தப்­படும் கட்­சி­களால் ஒரு­போதும் உருப்­ப­டவே முடி­யாது. அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­காக மோது­வதும், போரா­டு­வதும் தான் அர­சியல். அதி­கா­ரத்தில் இருந்து தோன்­றி­யது தான் அரசு. இங்­கேயும் அதில் எந்த மாற்­றமும் இல்லை. மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியைப் பிடிக்க முனை­வதும், அதனைத் தடுப்­ப­தற்­கான காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுப்­பதும் தான், அர­சி­யலில் நிலைத்­தி­ருப்­ப­தற்­கான ஒரே வழி. தன்னைத் தெரிவு செய்த மக்கள் கூட்­டத்தின் கோரிக்­கை­க­ளையும், தேவை­க­ளையும் நிறை­வேற்­று­வதே ஒரு அர­சாங்­கத்தின் கடமை. அந்தக் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­கான வழி­களைத் தேடு­வ­தற்குப் பதி­லாக, அதி­லி­ருந்து விடு­பட்டு ஓடி ஒளி­வ­தற்­கான வழி­க­ளையே தேடு­கி­றது தற்­போ­தைய அர­சாங்கம். அர­சாங்கம் எதைச் செய்யப் போகி­றது என்­பதை, எதிர்க்­கட்­சியே தீர்­மா­னிக்­கி­றது என்ற நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இதுதான் மிகவும் பல­வீ­ன­மான ஓர் அர­சாங்­கத்தின் அறி­குறி. தற்­து­ணிவின் பேரில் முடி­வு­களை எடுத்துச் செயற்­படத் திரா­ணி­யற்ற அர­சாங்­கங்கள் தான் எதிர்க்­கட்­சியைக் காரணம் கூறும். அத்­த­கைய நிலையில் தான் தற்­போ­தைய அர­சாங்கம் இருந்து கொண்­டி­ருக்­கி­றது. அதி­கார ஆச­னத்தை இறுகப் பற்றிக் கொண்­டி­ருப்­பது மாத்­திரம் முக்­கி­ய­மல்ல. அதனை மக்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்திக் கொள்­வதும் முக்­கியம். அதுதான் ஆட்­சியை நிலைப்­ப­டுத்தும். தற்­போ­தைய அர­சாங்கம் எதற்­கெ­டுத்­தாலும், மஹிந்த என்ற பூதத்தைக் காட்டி தமிழ் மக்­களின் வாயை அடைக்கப் பார்க்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷ போன்ற எதிர்த்­த­ரப்­பி­னரால் அர­சாங்கம் மாத்­திரம் நெருக்­க­டி­களை எதிர்­கொள்­ள­வில்லை. தெற்கில் நடப்­பது போன்ற இதே இழு­பறிப் போர் வடக்­கிலும் நடக்­கி­றது. அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைத்துச் செயற்­படும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இதே பிரச்­சினை இருக்­கி­றது. அர­சாங்­கத்­துடன் விட்­டுக்­கொ­டுத்துச் செயற்­ப­டு­வ­தாலும், அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் போன்ற விட­யங்­க­ளுக்கு இணங்கிப் போவ­தாலும், தமிழர் தரப்பில் உள்ள கடும்­போக்­கா­ளர்­களின் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் எதிர்ப்­பையும் கூட்­ட­மைப்பு சந்­தித்துக் கொண்­டி­ருக்­கி­றது. அந்த எதிர்ப்­பு­களைக் கண்டு சம்பந்தன், தனது பாதையை மாற்றிக் கொள்ளவில்லை. தமது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சங்களை உதறி விட்டு அவர், தெரிவு செய்த வழியில் பிரச்சினைக்குத் தீர்வு காண முனைகிறார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, மஹிந்த ராஜபக் ஷ என்று பயமுறுத்தி, காலத்தைக் கடத்த முனைகிறார். அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இருந்து நழுவிக் கொள்வதற்கான ஒரு காரணியாக மஹிந்த ராஜபக் ஷவை காண்பித்து வருகிறது. தமிழர் தரப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதற்காக மஹிந்த ராஜபக் ஷவை ஒரு பூதமாக காண்பிக்கிறது. ஆனால், இந்த பயமுறுத்தல்கள் நீண்டகாலத்துக்கு பயனளிக்காது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். 'தெரியாத பேயை விட தெரிந்த பூதமே மேல்' என்று கூறும் வழக்கம் ஒன்று உள்ளது. தமிழ் மக்களும், அப்படியொரு முடிவை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பேயாகும். http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-22#page-1
 9. இளமை புதுமை பல்சுவை

  பெரு நாட்டில் இனிமேல் கஞ்சாவும் ஒரு மருந்து
 10. வி.டி. மகாலிங்கம் தொடரின் இறுதிப் போட்டி வி.டி. மகாலிங்கம் ஞாபகார்த்த பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியும் திருநெல்வேலி கிரிக்கெட் அணியும் மோதவுள்ளன. யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், வி.டி.மகாலிங்கம் ஞாபகார்த்த பிறீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது, இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது. இச்சுற்றுப் போட்டியில், யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 24 அணிகள் பங்குபற்றின. சென்றலைட்ஸ், ஜொலிஸ்ரார்ஸ், ஸ்ரீகாமாட்சி, ஸ்ரான்லி, அரியாலை மற்றும் விக்டோரியன்ஸ், ஜொனியன்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், ஹாட்லியன்ஸ், ஸ்கந்தா ஸ்ரார், றெஜின்போ, கிறாஸ்கொப்பர்ஸ், ஓல்கோட், சென்ரல், திருநெல்வேலி வை.எம்.எச்.ஏ, யூனியன்ஸ், பற்றீசியன்ஸ், மானிப்பாய் பரிஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி கிரிக்கெட் கழகம், டிறிபேக், நியுஸ்ரார், விங்ஸ், ரைரேன் ஆகிய அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றின. அணிகள், நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம்பெற்று அவற்றுக்கிடையில், லீக் முறையில் முதற்சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களையும் பெற்ற அணிகள், காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் விலகல் முறையில் நடைபெற்றன. மொத்தமாக 66 போட்டிகள் இதுவரையில் நடைபெற்று முடிந்து, இச்சுற்றுப் போட்டியானது தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அரையிறுதிப் போட்டிகளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, எட்டு ஓட்டங்களால் சென்றலைட்ஸ் அணியை வென்றது. அதேபோல், திருநெல்வேலி கிரிக்கெட் அணி, 21 ஓட்டங்களால் அரியாலை ஐக்கிய அணியை வென்றது. இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக. யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன், கௌரவ அதிதியாக, வட மாகாண கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் பி.றஜீவன், சிறப்பு அதிதிகளாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில்வேந்தன், மல்லாகம் கிராமிய அபிவிருத்திச் சங்கத் தலைவர் பாலாம்பிகை சிறிபாஸ்கரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இறுதிப்போட்டிக்கு முன்னதாக காலையில் மூன்றாமிடத்துக்கான போட்டியில் இடம்பெறவுள்ளது. இதில், அரியாலை ஐக்கிய அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதவுள்ளன. http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/வி-டி-மகாலிங்கம்-தொடரின்-இறுதிப்-போட்டி/88-205888
 11. BPL தொடரில் முதற்தடவையாக களமிறங்கவுள்ள மாலிங்க ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) டி20 தொடரில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க முதற் தடவையாக களமிறங்கவுள்ளார். இதன்படி, மஷ்ரபி பின் முர்தஷா தலைமையிலான ராங்பூர் ரைடர்ஸ் அணியில் லசித் மாலிங்க களமிறங்கவுள்ளதாக அவ்வணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் டி20 குளோபல் லீக் தொடர், நிலையானதொரு தொலைக்காட்சி உரிம ஒப்பந்தத்தை பெறாமை, தொடருக்கான பிரதான உரிமைகள் அனுசரணையைப் பெறாமை போன்ற காரணத்தினால் ஒத்திவைப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் காரணமாக குறித்த தொடரில் விளையாடுவதற்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட பல வெளிநாட்டு வீரர்கள் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு மீண்டும் சம்மதம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, ஸ்டெலன்போஸ்ச் கிங்ஸ் (Stellenbosch Kings) அணியின் வெளிநாட்டு நட்சத்திர வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை அணியின் லசித் மாலிங்க, 5ஆவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் முதல் தடவையாக விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 34 வயதாகும் மாலிங்க தனது 19 மாதகால உபாதையின் பின்னர் இலங்கை ஒரு நாள் மற்றும் டி20 அணி குழாமில் இணைந்த போதிலும் தனது வழமையான ஆட்டத்தைக் காட்டத் தவறியிருந்தார். இந்நிலையில், தனது மீள்வருகைக்குப் பின்னர் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றியிருந்த மாலிங்க, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருந்தார். இதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் அணியுடனான டி20 போட்டித் தொடரிலிருந்தும் விலகுவதாக மாலிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவருகின்ற டி20 போட்டித் தொடர்களில் விளையாடி அனுபவமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற மாலிங்க, உலக டி20 தொடர்களில் பங்கேற்று அதிகளவான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் 2 ஆவது இடத்திலும் உள்ளார். இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை மிர்பூர் மற்றும் சிட்டகொங் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள 5 ஆவது BPL தொடரில் ராங்பூர் அணிக்காக இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா மற்றும் சகலதுறை வீரரான திசர பெரேரா ஆகியோர் முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இவ்விரு வீரர்களும் BPL தொடரில் முதற்தடவையாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கடந்த வருடத்தைப் போல இவ்வருடமும் ராங்பூர் ரைடர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், சாமுவேல் பத்ரி, ஜொன்சன் சார்லஸ் மற்றும் இங்கிலாந்தின் ரவி போபரா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான பிரெண்டன் மெக்கலமும் முதல் தடவையாக களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக் (டி20) தொடரில், இலங்கையிலிருந்து 11 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஷெஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா, தசுன் சானக்க, அஞ்செலோ மெதிவ்ஸ், டில்ஷான் முனவீர மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ளனர். http://www.thepapare.com/
 12. Today
 13. இராக் ராணுவம், குர்து படை போர்: மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடித்தது அல்டன் குப்ரி நகரின் எல்லையில் நேற்று இராக் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட குர்து படை வீரர்கள். - படம்: ஏஎப்பி இராக் ராணுவம், குர்து படைகள் இடையே நேற்று கடும் சண்டை நடைபெற்றது. இதனால் அந்த நாட்டில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தப் பகுதி இராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. இந்நிலையில் தனிநாடு கோரி குர்து இன மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 25-ம் தேதி நடந்த பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மை குர்து இன மக்கள் தனிநாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து குர்து பகுதிகளில் இராக் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. குர்து இன மக்களுக்கு தனியாக படைப்பிரிவு உள்ளது. அந்த படையின் வீரர்கள் குர்து நகரங்களை பாதுகாத்து வருகின்றனர். இந்தப் பின்னணியில் குர்துகளின் அல்டன் குப்ரி நகரை நோக்கி இராக் ராணுவம் நேற்று முன்னேறியது. அவர்களை குர்து படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் கடும் சண்டை நடைபெற்றது. இதில் இராக் ராணுவத்தின் 10 கவச வாகனங்களும் ஒரு டாங்கியும் அழிக்கப்பட்டதாக குர்து படை தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இராக்கின் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியதால் அங்கு கடந்த சில ஆண்டுகளாக கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அமெரிக்க கூட்டுப்படையின் உதவியுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் இருந்த நகரங்களை இராக் ராணுவம் அண்மையில் முழுமையாக மீட்டது. தற்போது குர்துகள் தனி நாடு கோரி ராணுவரீதியாக போராடுவதால் அங்கு மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். http://tamil.thehindu.com/world/article19900673.ece
 14. என்னை பலாத்காரம் செய்த முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: - சரிதா நாயர் [Friday 2017-10-20 07:00] ‘கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி உட்பட தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர் கடிதம் அனுப்பியுள்ளார். கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ெபரும்பாலான அமைச்சர்கள் என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தினர். அவர்கள் பெண்களை ஒரு போக பொருளாகத்தான் கருதினர். அதில், நானும் பலிகடா ஆக்கப்பட்டேன். இது குறித்து நான் விசாரணை குழு தலைவராக இருந்த ஏடிஜிபி ஹேமச்சந்திரனிடம் கூறினேன். ஆனால், அது குறித்து விசாரணை நடத்த முடியாது என்று ஹேமச்சந்திரன் கூறிவிட்டார். நான் திருவனந்தபுரம் சிறையில் இருந்தபோது முன்னாள் அமைச்சர் கணேஷ் குமாரின் உதவியாளர் மாறுவேடத்தில் என்னை வந்து சந்தித்தார். அப்போது, உம்மன்சாண்டி மற்றும் அமைச்சர்கள் மீது புகார் கூறக் கூடாது என்று என்னிடம் கூறினார். வாரன்ட் இல்லாமல் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனக்கு தெரியாமலே என் வீட்டில் சோதனை நடத்தி லேப்டாப், செல்போன்களை கைப்பற்றி சென்றனர். அப்போது எர்ணாகுளம் ஐஜியாக இருந்த பத்மகுமார் என் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த வீடியோக்களை வௌியே விட்டார். எனவே, சோலார் கமிஷன் அறிக்கையில் கூறியுள்ளபடி உம்மன்சாண்டி உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது. இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=192340&category=IndianNews&language=tamil
 15. மெர்சலை விடுங்கள்... இந்தப் புள்ளிவிவரங்களுக்கு அரசிடம் பதில் இருக்கிறதா? தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களில், அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி மாபெரும் வெற்றியைத் தனதாக்கியிருக்கும் படம் 'மெர்சல்'. படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்' ரிலீஸ் முதலே பரபரப்பு பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. 'ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படம்' என்ற விவாதத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கியதென்றால், அதன் பின் வெளிவந்த டீஸரிலோ, ''ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆகும்'' என்ற அழுத்தமான வசனமோ அரசியல் அரங்கில் கடும் அனலைக் கிளப்பியது. விலங்குகள் நல அமைப்பிடம் அனுமதி வாங்காதது, படத் தலைப்பு பிரச்னை என ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தடைகளை உடைத்தெறிந்துதான் திரையரங்குகளில் வெளியானது 'மெர்சல்' திரைப்படம். இப்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களும் காட்சிகளும் மத்திய பி.ஜே.பி அரசின் திட்டங்களைக் கடுமையாகச் சாடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, இலவச மருத்துவம், மெடிக்கல் எரர் எனப்படும் மருத்துவத் தவறுகள் எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசுகிறது மெர்சல் திரைப்படம். இந்தக் கருத்துகளுக்கு பி.ஜே.பி. தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையானப் பின்னணி என்ன என்று பார்த்தால், கிடைத்தத் தகவல்கள் ஆச்சர்யமளிக்கின்றன. மருத்துவத் தவறுகள் : இந்தியாவில் மருத்துவர்கள் செய்யும் மருத்துவத் தவறுகள் காரணமாக மட்டும் ஆண்டுக்கு 52 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவக் கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 100 பேரில் 6 பேருக்குத் தவறான மருந்துகள் மூலமாகவோ அல்லது மருந்துகளின் செயல்பாட்டில் உள்ள மாற்றங்கள் காரணமாகவோ மருத்துவத் தவறுகள் நேர்கின்றன. வளரும் நாடுகளில், அதிக மருத்துவத் தவறுகள் நிகழும் நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு முன்னணி வரிசையில் இடம் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் 'மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காததே' என்கிறது ஹார்வர்டு ஆய்வு. மருத்துவத் தரவரிசை : உலக சுகாதார அமைப்பின் தரவரிசைப்படி மருத்துவம் முறையாகவும், தரத்தோடும் வழங்கப்படும் நாடுகளின் தரவரிசையில் இந்தியா 112-வது இடத்தைப் பிடித்துள்ளது. 'வளர்ந்துவரும் நாடுகள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளின் தரம் என்பது மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கிறது' என்று இதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்! இலவச மருத்துவம் தரும் நாடுகள் : ஃபிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, ஸ்வீடன், ஜப்பான், ஐஸ்லாந்து, நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில், மருத்துவம் இலவசமாகவும், மருத்துவத்துக்கான செலவுகளை அரசே மானியமாகக் கொடுக்கும் முறையும் உள்ளது. சிங்கப்பூரில், மருத்துவம் இலவசம் இல்லை என்றாலும் அங்கு காப்பீடு மூலம் மக்கள் மருத்துவச் செலவுகளைச் சரிசெய்துகொள்ளும் வசதி உள்ளது. அங்குள்ள மக்களில் 80 விழுக்காட்டினர் அரசு மருத்துவத் திட்டத்தைப் பயன்படுத்திப் பயன்பெறுகின்றனர். மருத்துவர்கள் தேவை : உலக சுகாதார அமைப்புத் தகவல்படி, '1000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர்' என்ற விகிதத்தில் மதிப்பிட்டால், இந்தியாவில் 5 லட்சம் மருத்துவர்களுக்கான தேவை உள்ளது. தற்போதுள்ள நிலையின்படி 1,674 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்த நிலைமை வியட்நாம், அல்ஜீரியா மற்றும் பாகிஸ்தானைவிடவும் மோசமானது. இந்தியாவிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெறும் 55 விழுக்காட்டு மருத்துவர்களில், பெரும்பாலானோர் நன்கொடை கொடுத்து மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள்தான். மேலும், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்திய மருத்துவ மாணவர்களில், '19 விழுக்காட்டினர்தான் முழு தகுதியுடன் இருப்பதாக' வெளிநாடு மருத்துவப் படிப்பு கழகம் தெரிவித்துள்ளது. உத்திரபிரதேசத்தில், ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி 63 குழந்தைகள் இறந்தன. மெர்சல் சினிமாவில் வரும் ஒரு காட்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து எதிர்ப்பதோடு, 'அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்' என்று வலியுறுத்தும் அரசியல் தலைவர்கள், மருத்துவத் தன்னிறைவு கொண்ட நாடாக இந்தியாவை மாற்றிக்காட்ட முன்வருவார்களா? http://www.vikatan.com/news/coverstory/105533-facts-behind-mersal-controversy.html
 16. இரண்டு நாட்கள் கூட நீடிக்காத சந்தோஷம்! சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் நேர் செட்டில் தோற்று இரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார் மரியா ஷெரபோவா. ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா, ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி போட்டிகளில் ஆடத் தடை செய்யப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகாலப் போராட்டத்தின் பின் மீண்டும் டென்னிஸ் அரங்கில் மீள் பிரவேசம் செய்த அவர், தான் இன்னமும் ஒரு வெற்றி வீராங்கனைதான் என்று நிரூபித்தார். நீண்ட இடைவேளைக்குப் பின் டென்னிஸ் களமிறங்கிய ஷரபோவா, ‘தியான்ஜின் ஓப்பன்’ தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்தார். ஆனால், இந்த மகிழ்ச்சி இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை. ஷரபோவாவின் சொந்த மண்ணான ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் நேற்று (21) ஆரம்பமான ‘கிரெம்ளின்’ கிண்ணத்துக்கான முதலாவது சுற்றில், உலக டென்னிஸ் தர வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ள மகதலேனா ரிபாரிகோவாவிடம் நேர் செட் கணக்கில் தோற்றார். சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்தப் போட்டியில், 7க்கு 6 மற்றும் 6க்கு 4 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வினார் ஷரபோவா! “உடல் ரீதியாக நான் பலத்துடன் இருந்தாலும், அது போதாது என்பதை இந்தத் தோல்வி எனக்குப் புரியவைத்திருக்கிறது. மறுபுறம், மகதலேனாவின் ஆட்டமும் மிகச் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு பந்துக்குமாக அவர் சளைக்காமல் ஓடியது ஆச்சரியமாக இருந்தது” என்று கூறியுள்ளார் ஷரபோவா! http://www.virakesari.lk/article/26145
 17. அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு எதிர்கட்சியாக இருந்து ஒத்தாசை வழங்கி வருகின்றோம் – சுமந்திரன்! அரசாங்கத்தின் முற்போக்கான செயற்றிட்டங்களுக்கு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து உதவியாகவும், உறுதுணையாகவும் செயற்பட்டு வருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று வவுனியாவில் நடைபெற்ற ஜனாதிபதியின் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் முற்போக்கானசெயற்றிட்டங்களுக்கு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையிலிருந்து உதவியாகவும் உறுதுணையாகவும் செயற்படுவதுஅரசாங்கத்துக்கு மாத்திரமல்ல அனைவருக்குமே நன்கு தெரியும். வடமாகாணத்தில் வவுனியாமாவட்டம் முக்கியமானதொரு மாவட்டமாகும். இங்கு தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். நாட்டில் இன ஐக்கியம் ஏற்படவேண்டும். தமிழ் மக்களின் அதிகளவான பங்களிப்புடனேயே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. இந்த அரசாங்கம் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அந்த வேலைத்திட்டத்திற்காக நாங்கள் எங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றோம். அது சரியான முறையில் நிறைவேறினால்தான், இத்தகைய வேலைத்திட்டத்தின் முழுப் பெறுமதியையும் நாங்கள் அடையக்கூடியதாக இருக்கும். இந்த நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்து மக்களும் சம பிரஜைகள் என்று வாழ்வதற்கான அத்த்திவாரமாகபோடப்படவேண்டிய புதிய அரசியலமைப்பு உருவாக்கந்தான் இந்த நாடு சுபீட்சம் அடைவதற்கும், ஒரு புதுப் பாதையில் பயணிப்பதற்கும் அத்திவாரமாக இருக்கும். அந்தப் பணியை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆரம்பித்திருக்கின்றனர். அப்பணி திறம்படத் தொடரவேண்டுமென வாழ்த்துகின்றேன் எனத் தெரிவித்தார். http://www.etr.news/அரசாங்கத்தின்-செயற்திட்/ மைத்ரியும் ரணிலும் வவுனியாவில் நிலமற்ற 5000 பேருக்கு காணிகளின் உறுதிப்பத்திரங்கள் வழங்கினர். இன்று வவுனியா சைவ பிரகாச மகளிர் வித்தியாலத்தில் இடம் பெற்ற வைபத்தில் கலந்து கொண்ட அதிபர் மைத்ரி மற்றும் பிரதமர் ரணில் நிலமற்ற 5000 மக்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார். http://sinhala.lankanewsweb.net
 18. இளமை புதுமை பல்சுவை

  ஐந்து முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒரே மேடையில்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionஒரே மேடையில் ஐந்து முன்னாள் அதிபர்கள் இந்த ஆண்டு, அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் கலைநிகழ்ச்சியில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஐந்து பேர் ஒரே மேடையில் கலந்துகொண்டனர். டெக்சஸ் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் பங்கேற்றனர். ஹார்வி, இர்மா மற்றும் மரியா சூறாவளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நடத்தப்பட்ட `தி ஒன் அமெரிக்கன் அப்பீல்` என்ற இந்த நிகழ்ச்சி, இதுவரை, 31 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம், ஹார்வி சூறாவளியால் பில்லியன் கணக்கான டாலர் சேதம் ஏற்பட்டு, டெக்சஸ் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போதே, இதற்கான முறையீட்டை தலைவர்கள் வைத்தனர். படத்தின் காப்புரிமைREUTERS தற்போது, புளோரிடா, போர்ட்டோ ரீக்கோ மற்றும் வெர்ஜின் தீவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் இந்த திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. "முன்னாள் அதிபர்கள் என்ற முறையில், எங்கள் சக அமெரிக்கர்கள் மீண்டுவர நாங்கள் உதவ வேண்டும் என நினைத்தோம்", என்று முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதிவு செய்யப்பட்ட செய்தி மூலம், நிகழ்ச்சிக்கு செல்பவர்களுக்கு விளக்கினார். "மக்கள் இங்கு துன்புறுத்தப்படுகிறார்கள். ஒரு டெக்சஸ் வாசியாக கூறுகிறேன். இங்கு தண்ணீரை விட, நிறைய அன்பை டெக்சஸ் வைத்துள்ளது", என்றார் ஜார்ஜ் புஷ். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு, தேசிய கீதத்திற்காக ஐந்து முன்னாள் அதிபர்களும் மேடையில் ஒன்றாக தோன்றினர். பின்னர், `அமெரிக்கர் என்பதில் பெருமைகொள்வோம்` என்ற லீ கிரீண் உட்டின் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில் பாடகி் லேடி காகாவும் பங்கேற்று பாடினார். படத்தின் காப்புரிமைREUTERS தற்போதைய அதிபர் டிரம்ப், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியின் "சிறப்பான பணியைப் பாராட்டியும், தனது மிகுந்த நன்றிகளைத் தெரிவித்தும்" அவர் ஒரு செய்தி அனுப்பியிருந்தார். கடந்த வாரம், முன்னாள் அதிபர்கள் ஒபாமா மற்றும் புஷ் ஆகியோர் ஆற்றிய உரைகள், தற்போதைய அதிபர் டிரம்ப் மீதான மறைமுக விமர்சனமாகவே பார்க்கப்படுகின்றன. http://www.bbc.com/
 19. ''100 பெண்கள்''

  ''100 பெண்கள்'' பட்டியலில் இடம்பெற்ற பத்து இந்தியப் பெண்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசியின் பிரபலமான, விருது பெற்ற ''100 பெண்கள்'' தொடரின் இந்த ஆண்டு பட்டியலில் இந்திய பெண்கள் பத்து பேர் இடம்பெற்றுள்ளனர். 100 பெண்கள் இடம் பெறும் இப்பட்டியலில் இதுவரை 60 பெண்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள 40 பெண்களின் பெயர்கள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியிடப்படும். இந்த வருடாந்திர தொடர், உலகம் முழுவதும் உள்ள பெண்களை பாதிக்கும் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துவதுடன், மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என பெண்களை ஊக்குவிக்கிறது. கவிதாயினி ரூபி கெளர், எழுத்தாளர் இரா திரிவேதி, பெண்ணுரிமை ஆர்வலர் மற்றும் கல்வியாளரான ஊர்வசி சாஹ்னி ஆகியோரும் ''100 பெண்கள்'' தொடரில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ள பத்து இந்திய பெண்கள் யார் என்பதை தெரிந்துக்கொள்வோம். 1. ஊர்வசி சாஹ்னி Image captionஊர்வசி சாஹ்னி 62 வயதான டாக்டர் ஊர்வசி சாஹ்னி 'ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளை' (Study Hall Educational Foundation) என்ற கல்வி அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. பெண்ணுரிமை ஆர்வலரும், கல்வியாளருமான ஊர்வசி, 34 ஆண்டுகளாக சமூக சேவைகளிலும், பெண்களின் உரிமைக்காகவும் பணியாற்றிவருகிறார். "கல்வி என்பது மாற்றத்தை கொண்டு வருவதற்கான சக்திவாய்ந்த ஆயுதம், ஆனால் மாற்றத்தை கொண்டுவரக்கூடிய கல்வியிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்" என்கிறார் ஊர்வசி சாஹ்னி. 2. மெஹ்ரூனிசா சித்திகி பாலிவுட் நடிகர் நவாஜுதீன் சித்திகியின் தாய் மெஹ்ரூனிசா சித்திகியும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 'கற்றலுக்கு வயது தடையில்லை' என்கிறார் 65 வயதான குடும்பத்தலைவி மெஹ்ரூனிசா சித்திகி. 3. இரா திரிவேதி Image captionஇரா திரிவேதி 32 வயதான இரா திரிவேதி, எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர். தன்னுடைய எழுத்தின் மூலம், கல்வியின் முக்கியத்துவத்தை புரியவைக்க முடியும், லாப நோக்கற்ற நடவடிக்கைகள் மூலம் மக்களின் மனதையும் எண்ணங்களையும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார். இரா திரிவேதி கூறுகிறார், "நம்மைப் பற்றிய சுய மதிப்பீட்டைவிட பல மடங்கு அதிக சக்தி வாய்ந்தவர்கள் நாம். நமக்குள் உள்ள சக்தி அபரிதமானது. வெளியுலகத்திற்காக நம்மை நாமே சுருக்கிக்கொண்டால், நமது எல்லையற்ற திறமைகள் முடங்கிவிடும். நம்முடைய வரம்பற்ற திறன்களைப் பயன்படுத்த முடியாவிட்டால், உலகத்தில் இருந்து தனிமைப்பட்டுவிடுவோம்." 4. அதிதி அஸ்வதி Image captionஅதிதி அஸ்வதி தொழிலதிபர் மற்றும் 'இம்பைப்' நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான 35 வயதான அதிதி கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி, கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை செய்ய விரும்புகிறார். "உலகில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரவேண்டும். அதற்காக, நேர்மறையான புரட்சியை உருவாக்குவோம்" என்று அவர் கூறுகிறார் 5. பிரியங்கா ராய் 16 வயதான பிரியங்கா ராய் 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மாணவி. மேற்கு வங்க மாநிலம் ராணாகாடில் இருந்து ஒரு வருடம் முன்பு டெல்லிக்கு வந்த பிரியங்கா, இப்போது கோவிந்த்புரியில் உள்ள டி.ஏ. காலனியில் தனது தாயுடன் வசிக்கிறார். "மற்றவர்களுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். என் சொந்த கால்களில் நிற்க விரும்புகிறேன்" என்பது பிரியங்காவின் விருப்பம். 6. நித்யா தும்மல்ஷெட்டி Image captionநித்யா தும்மல்ஷெட்டி 31 வயதான நித்யா தும்மஷெட்டி ஃபார்சுன்பிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் அதிபரான நித்யா, தொழில்நுட்ப படைப்பாற்றலின் மூலமாக கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாட்டை அழித்துவிடலாம் என்று கூறுகிறார். "தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கவேண்டும், பதில் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தொடர்ந்து கேள்வி கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டால், அநீதியும் பாகுபாடும் இயல்பானவை அல்ல என்பது புரிந்துவிடும்" என்று அவர் கூறுகிறார். 7. தூலிகா கிரண் ஆசிரியராக பணிபுரியும் 47 வயதான தூலிகா கிரண், சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த எட்டாண்டுகளாக டெல்லி திஹார் ஜெயிலில் குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அவர் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தவர். "உங்களை நேசிப்பவர்களை வெறுக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஏமாற்றாதீர்கள்" என்கிறார் தூலிகா கிரண். 8. ரூபி கெளர் Image captionரூபி கெளர் கவிதாயினியும் எழுத்தாளருமான ரூபி கெளர், வாழ்வியல் தொடர்பான கருத்துகளை தனது எழுத்தில் பிரதிபலிக்கிறார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கனடா நாட்டை சேர்ந்த ரூபி கெளர், ஒரு ஓவியரும் கூட. அன்பு, உடலுறவு, அதிர்ச்சி, சிகிச்சைமுறை, பெண்களின் பிரச்சினைகள் போன்ற பல விடயங்களை தனது படைப்புகள் மூலம் முன்வைக்கிறார். 9. விராலி மோதி 25 வயதான விராலி மோதி, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளுக்காக போராடுபவர் மற்றும் இளைஞர்களுக்கான தூதராகவும் செயல்படுகிறார். ஊக்கமூட்டும் பேச்சாளராக திகழும் அவர் நடிகையாகவும், மாடலாகவும் பணிபுரிகிறார். இந்திய ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு போதுமான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். 10. மிதாலி ராஜ் படத்தின் காப்புரிமைMITHALI RAJ FB PAGE Image captionமிதாலி ராஜ் இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவியான 34 வயது மிதாலி ராஜ், இந்த ஆண்டு 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய விளையாட்டு வீராங்கனை. "நான் கனவு காண்பேன், கடுமையாக உழைப்பேன். எனக்கு திருப்தி ஏற்படும்வரையில் உழைத்துக் கொண்டேயிருப்பேன்" என்கிறார் மிதால் ராஜ். ''100 பெண்கள்'' தொடர் எதைப் பற்றியது? உலகம் முழுதும் பெண்களை பாதிக்கும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்கும் ''100 பெண்கள்'' இந்த ஆண்டு தொடரில், மாற்றம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பெண்களுக்கான இச்சிறப்புத் தொடரில் இந்த ஏற்றத்தாழ்வுகளை, சமத்துவமின்மையை சமாளிக்க புதுமையான மாற்றங்களை, யோசனைகளை பெண்களிடம் கேட்கிறோம். ''100 பெண்கள்'' சிறப்புத் தொடரின் ஐந்தாவது ஆண்டான இந்த ஆண்டு, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தி இருக்கிறோம். அவை: 1. கண்ணுக்கு தெரியாத தடைகள் (glass ceiling), 2. பெண்களுக்கு கல்வியின்மை (female illiteracy), 3. பொது இடங்களில் துன்புறுத்தல் (street harassment), 4. விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம் (sexism in sport). http://www.bbc.com/tamil/india-41709509
 20. இடைக்கால முழுமையாக வாசிக்காது விமர்சிப்பது வேடிக்கையானது http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-22#page-11
 21. பிரபாகரன் எனது தலைவர் : கருணா அம்மான் விடுதலை புலிகளின் தலைவரை பயங்கரவாதி என கூறினால் என்ன ஆகுமோ என அச்சம் நிலைமையை தாம் எதிர்நோக்கியதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் தம்மை ஒருபோது துரோகி எனக் கூறியிருக்க மாட்டார் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு - கிரான் மத்திய கல்லூரியின் 72 ஆவது நிறைவு தின நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட விநாயகமூர்த்தி முரளிதரன், ஊடகவிலாளர் ஒருவர் பிரபாகரன் குறித்து தம்மிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்திருந்தார். எதிர்வரும் ஜனவரி மாதமளவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், பிரபாகரன் குறித்த கருத்துக்களை விநாயமூர்த்தி முரளிதரன் வெளியிட்டிருக்கின்றார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Prabhakaran-my-leader-Karuna-Amman
 22. நிலை­யான சமா­தானம், தீர்­வுக்கு ஐ.நாவின் பங்­க­ளிப்பு தொடரும் எதிர்க் கட்சித் தலை­வ­ரிடம் ஐ. நா. அறிக்­கை­யாளர் பப்லோ உறுதி (ஆர்.ராம்) இலங்­கையில் நிலை­யான சமா­தா­னத்­தினை ஏற்­ப­டுத்தும் நோக்­கிலும் அர­சியல் தீர்­வினை அடையும் வகை­யிலும் தனதும் ஐ.நாவி­னதும் தொடர்ச்­சி­யான பங்­க­ளிப்பு இருக்கும் என ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் பப்லோ டீ கிரிப் எதிர்க் கட்­சித்­ த­லை­வரும் (௧௦ ஆம் பக்கம் பார்க்க) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் தலை­வ­ரு­மான சம்­பந்­த­னி­டத்தில் உறு­தி­ப­டத்­தெ­ரிவி த்துள்ளார். இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள உண்மை, நீதி, இழப்­பீடு மற்றும் மீள்­நி­க­ழாமை உத்­த­ர­வா­தங்கள் பற்­றிய ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் பப்லோ டீ கிரீப்­பிற்கும் எதிர்க் கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் இடை­யி­லான உத்­தி­யோக பூர்வ சந்­திப்பு நேற்று சனிக்­கி­ழமை கொழும்பு தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் நடை­பெற்­றது. காணி விடு­விப்பு, காணாமல் ஆக்­கப்­பட்டோர், மற்றும் தமிழ் அர­சியல் கைதிகள் போன்ற விட­யங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களை விசேட நிபு­ணரின் கவ­னத்­திற்கு இரா. சம்­பந்தன் கொண்டு வந்தார். இக்­க­லந்­து­ரை­யா­டலில் காணி விடு­விப்பு தொடர்பில் கருத்து தெரி­வித்த இரா. சம்­பந்தன் "எமது மக்கள் தமது காணிகள் தொடர்பில் வெறும் உணர்ச்­சிக்கும் அப்­பா­லான இணைப்­பினை கொண்­டுள்­ளார்கள், இந்த மக்கள் சில பிர­தே­சங்­களில் கடந்த 300 நாட்­க­ளுக்கும் அதி­க­மாக தமது காணி­களை விடு­விக்­கக்­கோரி ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள் என தெரி­வித்தார். மேலும் இவர்கள் மழை­யிலும் வெயி­லி­லு­மாக பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் தமது காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும் என இந்த போராட்­டங்­களில் மிகவும் தீர்­மா­ன­மாக உள்­ளார்கள். மேலும், இந்த விட­ய­மா­னது மக்­களின் உணர்­வு­க­ளோடும் அவர்­க­ளது உரி­மை­க­ளோடும் சம்­பந்­தப்­பட்ட விடயம் என்­ப­தனை அர­சாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என வலி­யு­றுத்­திய இரா. சம்­பந்தன் உண்­மை­யான புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டு­மெனில் இந்த யதார்த்தம் புரிந்­து­கொள்­ளப்­பட வேண்டும் எனவும், எனவே இந்த விட­யங்கள் மேலும் தாம­த­மின்றி முடி­விற்கு கொண்டு வரப்­ப­ட­வேண்டும் எனவும் தெரி­வித்தார். காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்பில் கருத்து தெரி­வித்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர், "ஒரு தாய் தனது மகனை படை­யி­ன­ரி­டமோ அல்­லது பொலி­ஸா­ரி­டமோ கைய­ளித்­தி­ருந்தால் அவ­ருக்கு என்ன நடந்­தது என்­ப­தனை அறிந்து கொள்ளும் உரிமை உள்­ளது. அந்த உரி­மையை மறுக்க முடி­யாது எனவும் வலி­யு­றுத்­தினார். காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் செய­லாக்கம் தொடர்பில் காணப்­படும் தாமதம் குறித்து தமது கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­திய அவர் இந்த அலு­வ­லகம் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் நிறு­வப்­ப­ட­வேண்டும் எனவும் கேட்டுக் கெொண்டார் அர­சியல் கைதிகள் தொடர்பில் பேசிய எதிர்க்­கட்சி தலைவர் அவர்கள், "இவர்கள் களவு செய்த கார­ணத்­தி­னாலோ அல்­லது தமது நன்­மைக்­காக சூறை­யா­டிய கார­ணத்­தி­னாலோ காவலில் இருக்­க­வில்லை. இந்த ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் வழக்­குகள் அர­சியல் பரி­ணா­மத்­தினை கொண்­டுள்­ளது. ஆகவே இவை அந்த அடிப்­ப­டையில் நோக்­கப்­பட்டு முடி­விற்கு கொண்டு வரப்­ப­ட­வேண்டும் எனவும் தெரி­வித்தார். மேலும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­ட­மா­னது மிக கேடா­னதும் இந்­நாட்டு சட்ட புத்­த­கங்­களில் இருந்து நீக்­கப்­பட வேண்­டிய ஒன்றும் என அர­சாங்­க­மா­னது ஒப்­புக்­கொண்­டுள்ள போது, எந்த அடிப்­ப­டையில் அதே சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட இவர்­களை தொடர்ந்தும் சிறையில் வைத்­தி­ருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்­பினார். இந்த விட­யங்­களில் தவ­றி­ழைக்க முடி­யாது என தெரி­வித்த இரா. சம்­பந்தன் அவ்­வாறு தவ­றி­ழைக்­கின்ற பட்­சத்தில் அது நல்­லி­ணக்க படி­மு­றை­க­ளிலே பாரிய தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தும் எனவும் வலி­யு­றுத்­தினார். மேலும் ஒரு சிலர் நல்­லி­ணக்க மற்றும் அர­சியல் தீர்வு முயற்­சி­களை குழப்­பு­வ­தற்கு தயா­ராக உள்ள நிலையில் இந்த விட­யங்கள் அவர்­க­ளுக்கு சாத­க­மாக இருப்­ப­தனை அனு­ம­திக்க முடி­யாது எனவும் குறிப்­பிட்டார் . இலங்கை மக்­க­ளுக்கும் சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் நிறை­வேற்­று­வ­தனை ஐ.நா.உறுதி செய்­ய­வேண்டும் என விசேட நிபு­ணரை வலி­யு­றுத்­திய இரா. சம்­பந்தன் அவர்கள் இந்த வாக்­கு­று­திகள் இலங்கை நாட்­டி­னதும் அதன் மக்­களின் நன்­மை­யி­னையும் கருத்­திற்­கொண்டு இலங்கை அர­சாங்­கத்­தினால் தன்­னார்­வ­மாக கொடுக்­கப்­பட்­டவை என்­ப­தனை சுட்­டிக்­காட்­டிய அதே­வேளை அவற்­றினை இலங்கை அரசு மதித்து நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் எனவும் இவை வெறுமனே எழுத்துருவில் மாத்திரம் இருக்க கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் தனது விஜயத்தின் முடிவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தனது கருத்தினை தெரிவிக்கவுள்ளதாக கூறிய விசேட நிபுணர் இலங்கையில் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசியல் தீர்வினை அடையும் வகையிலும் தனதும் ஐ.நாவினதும் தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என்பதனையும் இச்சந்திப்பில் குறிப்பிட்டார் . http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-10-22#page-1
 23. `மரணத்தீவு`: ரஷ்யாவில் உள்ள பிரிட்டனின் சித்திரவதை முகாம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைALEKSEY SUHANOVSKY Image captionமட்யக் சித்திரவதை முகாமில் கொல்லப்பட்ட தனது மூதாதையருக்கு அஞ்சலி செலுத்தும் பெண் ரஷ்ய புரட்சிக்கு பிறகு, அந்நாட்டிற்கு பிரிட்டிஷ் வீரர்கள் அனுப்பப்பட்டபோது, அவர்களின் முதல் எதிரிகளாக இருந்தது ஜெர்மானியர்கள்.ஆனால் அவர்கள் போல்ஷ்விக்குகளுடன் (ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள் போல்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்) சண்டையிடவும், அவர்களை சிறையிலடைக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த வகையில் ரஷ்ய மண்ணில் அவர்கள் முதல் சித்திரவதை முகாமை தொடங்கினர். அந்த இடம்தான் `மரணத் தீவு` என அழைக்கப்படுகிறது. விளம்பரம் நெருங்கிச் சென்றபோது, என்னால் ஒரு கலங்கரை விளக்கத்தையும், சில வானொலி கோபுரங்களையும் பார்க்க முடிந்தது. நானும், என்னுடன் வந்தவர்களும் படகிலிருந்து குதித்து, பாலைவனமாக இருந்த கடற்கரையில் நடந்தோம். அங்கிருந்த நாய்கள் எங்களை சூழ்ந்து கொண்டு குரைத்தன. அவற்றுக்கு பார்வையாளர்களை பார்த்து பழக்கமில்லை. இந்த ஆள் அரவமற்ற பகுதியில் வாழக்கூடியவர்கள், எல்லை காவலர்களும் , ஒரு சில வானிலை ஆய்வாளர்களும்தான். சோவியத் சகாப்தத்தில் , இந்த மட்யக் தீவிலுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காக படகுகள் மூலமாக பார்வையாளர்கள் வந்தார்கள். எஞ்சியுள்ள சிறைக்கூடங்களின் எச்சங்களுக்கு மத்தியில் இது அமைந்துள்ளது. ஆனால் இது கடந்த 1918-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் பொறுப்பாளர்கள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் நாட்டவர்கள் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது. படத்தின் காப்புரிமைKIRILL IODAS இந்த பிராந்தியத்தின் தலைநகரான, ஆங்கிலத்தில் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க்-ஆர்கேன்ஜெல் என அறியப்படும் நகரில் வளர்ந்த சக பணியாளரான நடாலியா கோலிஷேவா, இந்த இடத்தின் மீது பயம் இருப்பதாகவும், உள்ளூர்வாசிகள் இதனை மரணத்தீவு என அழைப்பார்கள் எனவும் கூறினார். ``நான் சிறுகுழந்தையாக இருந்தபோது, நீ ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றால்,வெள்ளையர்கள் வந்து உன்னை மட்யுக்கிற்கு தூக்கிச் சென்றுவிடுவார்கள் என மக்கள் கூறுவார்கள்.எனக்கு அது புரியாது. மட்யக் என்றால் என்ன? வெள்ளையர்கள் யார்? என நான் கேள்வி கேட்கும் போது, எனது பாட்டி வாயை மூடு என எச்சரித்துவிட்டு, முகத்தை திருப்பிக் கொள்வார். இதற்கு அர்த்தம் இத்துடன் பேச்சு முடிந்துவிட்டது என்பதுதான்.`` என நடாலியா கூறினார். 1917-ஆம் ஆண்டு ரஷ்யப்புரட்சி ஏற்பட்ட பின்னர் வெள்ளையர்கள் என அழைக்கப்பட்ட குழுவினர் , போல்ஷ்விக்குகளுக்கு எதிரானவர்களானார்கள். ஜார் ராணுவத்தில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அணியும் கிரீம் நிற சீருடைகள் மூலம் அவர்களுக்கு இந்த பெயர் வந்தது. அவர்களில் சிலர் மீண்டும் முடியாட்சி வர வேண்டும் என விரும்பிய பிற்போக்கு ராணுவ அதிகாரிகள், மற்றவர்கள் மித சோஷியலிஸ்டுகள், சீர்திருத்தவாதிகள்,வர்த்தகர்கள், மீனவர்கள் அல்லது விவசாயிகள். 1917-ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் போல்ஷ்விக்குகள் ஆட்சியை கைப்பற்றியபோது, ஜெர்மனி மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து முதல் உலகப் போரில் ரஷ்யா தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தது. லெனின் ஆட்சிக்கு வந்ததும் உணவு உற்பத்தியை பெருக்கி,உயர்குடி மக்களின் நிலத்தை பகிர்ந்தளிப்பது மட்டுமல்லாமல் அமைதியையும் கொண்டு வருவேன் என தனது ஆதரவாளர்களுக்கு அவர் உறுதி அளித்தார். அவர் ஜெர்மனியுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களில், கூட்டணித் தலையீடு என்ற பெயரில் பிரிட்டன், பிரான்ஸ்,அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்காண ராணுவ வீர்ர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் சிலர் தென் பகுதிக்கும்,தொலைவில் உள்ள ரஷ்ய கிழக்குப் பகுதிக்கும்,பிரிட்டனின் கீழ் இருந்த பத்தாயிரம் வீர்ர்கள் ஆர்ட்டிக் துருவப் பகுதியில் உள்ள ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதிக்கும் அனுப்பப்பட்டனர். அந்த பகுதியில் ஜெர்மானியர்கள் நீர்மூழ்கிக் கப்பல் தளம் அமைக்காமல் தடுக்கவும், அங்கிருக்கும் ராணுவ மையத்தை பாதுகாப்பதும் இவர்களின் பணி என தெரிவிக்கப்பட்டது. படத்தின் காப்புரிமைLORD IRONSIDE Image caption1919-ஆம் ஆண்டு ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதியில் அணிவகுத்து நிற்கும் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் வீரர்கள் ஆனால் ரஷ்ய உள்நாட்டுப் போரின் ஆரம்பக்கட்டத்தில் போது, இந்த வெளிநாட்டுப் படைகள் வெள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்தனர். வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற சில ஐரோப்பிய அரசியல் தலைவர்களுக்கு, ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் பரவுவது கவலையை அளித்தது. ``1918-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி கூட்டணிப்படைகள் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதிக்கு வந்தடைந்த சில காலத்தில், அவர்கள் மக்களை சிறைபிடிக்கத் துவங்கினர். அவர்களுக்கு யாரை நம்ப வேண்டும் என தெரியவில்லை.யார் கம்யூனிஸ்ட்டுகள், யார் வெள்ளையர்கள் என்றும் அவர்களால் வேறுபாடு அறிய முடியவில்லை. இதனால் சந்தேகமிருக்கும் அனைவரையும் சிறைபடுத்த அவர்கள் முடிவெடுத்தனர்.``என மாஸ்கோவைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான லுட்மிலா நோவிக்காவா கூறுகிறார். மைய சிறைச்சாலையில் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்ததனால், பிரச்சனை ஏற்படுத்தக்கூடியவர்களாக கருதப்பட்ட கைதிகள், அங்கிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மட்யக் தீவுக்கு இடம் மாற்றப்பட்டனர். அங்கு முதற்கட்டமாக கொண்டு செல்லப்பட்ட கைதிகள், தங்களுக்கான சிறைச்சாலையை தாங்களே அமைக்க வற்புறுத்தப்பட்டனர். படத்தின் காப்புரிமைLIBRARY OF CONGRESS Image captionமட்யக் தீவின் சிறை முகாமில் வைக்கப்பட்டிருந்த போல்ஷ்விக் சிறைவாசிகள் போதுமான கழிப்பறை மற்றும் மாற்று உடைகள் வசதி இல்லாததால், அங்கிருந்த கைதிகளிடம் தைபஸ் காய்ச்சல் காட்டுத்தீ போல பரவியது. அங்கிருந்த 1000 கைதிகளில், நோய் காரணமாகவோ,சுடப்பட்டோ, சித்தரவதை செய்யப்பட்டோ 300 பேர் கொல்லப்பட்டனர். பனிக்காலத்தில் இங்கு தட்பவெட்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும். இதையும் கைதிகளை சித்திரவதை செய்ய பயன்படுத்திக் கொண்ட கூட்டணிப்படைகள், அங்கு `ஐஸ் செல்` எனப்படும் பனிக்கட்டி அறைகளை அமைத்தனர். இதில் அடைக்கப்படும் கைதிகள், குளிரினால் சித்திரவதை அனுபவிப்பார்கள் அல்லது உயிரிழப்பார்கள் அல்லது தோலுறைவு காரணமாக தங்கள் கால்களை இழப்பார்கள். சோவியத் காலகட்டத்தில், இங்கு சித்திரவதையை அனுபவித்த போல்விஷ்க்குகள் அதிகம் நினைவு கூறப்பட்டார்கள். இந்த முகாமிற்கு அருகில் உள்ள சிறிய குன்றில், 25 அடி உயரத்தில் இவர்கள் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் `தலையீட்டாளர்களின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த தேச பக்தர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அமைக்கப்பட்டது` என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. படத்தின் காப்புரிமைKIRILL IODAS Image captionமட்யக் தீவில் உள்ள நினைவுத்தூண் `வெள்ளையர்களை போலவே போல்விஷ்க்குகளும் பல குற்றங்களை இழைத்தனர். ஆனால் அவை சோவியத் ரஷ்யாவில் பல தசாப்தங்களுக்கு குறிப்பிடப்படவில்லை. இருபுறமும் கொடுமைகள் அரங்கேறின. ஆனால் அவற்றின் அளவுகள் வெவ்வேறானவை.` என வரலாற்றாசிரியர் லுட்மிலா தெரிவிக்கிறார். வடக்கில் பல மரண முகாம்கள் போல்ஷ்விக்குகளால் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க்கில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள ஹோல்கோமோரி பகுதியில் முதல் முகாம் அமைக்கப்பட்டது. இங்கு மூன்றாயிரத்திலிருந்து, எட்டாயிரம் வரையிலான கைதிகள் அடைக்கப்பட்டு, அவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் வெள்ளை ராணுவ அதிகாரிகள் மற்றும் குரோன்ஸ்டாட் பகுதியைச் சேர்ந்த போல்விஷ்க்குகளுக்கு எதிராக கலகம் செய்த மாலுமிகள். ஆனால் மற்றவர்கள் எதிர் புரட்சியாளர்கள் என முத்திரை குத்தப்பட்ட மதபோதகர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.com/tamil/global-41700517
 24. 1962 இந்திய-சீன போர்: எனது தோட்டா சீன சிப்பாயின் கண்ணை உரசிச் சென்றது பகிர்க அக்டோபர் 19ஆம் தேதி இரவு, அன்று கோர்க்கா படைப் பிரிவினருடன் இருந்தேன். அடுத்த நாள் காலை ராஜ்புத் படைப் பிரிவினரிடம் செல்லவேண்டும் என்பது திட்டம். ஆனால் அடுத்தநாள், சீனர்களின் விருப்பப்படியே நடந்து கொள்ள வேண்டியதாயிற்று. Image captionமேஜர் ஜெனரல் கே.கே.திவாரியுடன் பிபிசியின் ரெஹான் ஃபஜல் அடுத்த நாள் காலை ராஜ்புத் படையினரிடம் நான் சென்றேன் ஆனால் ஜெனரலாக அல்ல, யுத்தக் கைதியாக! அக்டோபர் 20ஆம் தேதியன்று காலை துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தைக் கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தேன். எனது பதுங்குக் குழியில் இருந்து வெளியே வந்தேன், அந்த உயரமான பகுதியில் சிக்னல் கிடைப்பதே கடினமாக இருக்கும் நிலையில், எப்படியோ சிரமப்பட்டு, தலைமைக்கு தகவல் கொடுக்க முயற்சித்தோம். தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் ரேடியோ சிக்னலின் மூலம் கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெறும் தகவலை பிரிகேட் தலைமையகத்திற்கு தெரிவித்துவிட்டேன். அசாதாரண அமைதிக்குப்பின் துப்பாக்கிச் சூடு சிறிது நேரத்தில் துப்பாக்கி சூடு நின்று அசாதரண அமைதி நிலவியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மலைப்பகுதியின் உயரத்தில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டே எங்கள் பதுங்குக்குழிகளை நோக்கி சீன வீரர்கள் வந்தார்கள். பட்டாலியனைச் சேர்ந்த அனைவரும் என்னையும் அங்கே விருந்தினர்களாக வந்திருந்த இரண்டு சிக்னல் ஆட்களையும் விட்டுவிட்டு பின்னடைந்துவிட்டார்கள் என்பதும் அப்போதுதான் தெரியவந்தது. எந்தவொரு சீன சிப்பாயையும் நான் அவ்வளவு அருகில் பார்த்தது கிடையாது. சூழ்நிலையின் தீவிரத்தால் இதயத்துடிப்பு எகிறியது. சீன சிப்பாய்களின் ஒரு குழு எங்களைத் தாண்டி இந்திய எல்லைக்குள் முன்னேறிச் சென்றது. பிரிகேட் தலைமையகத்தை நோக்கிச் செல்லலாம் என்று பதுங்குக்குழியில் இருந்து வெளியேறும்போது, சீனத் தரப்பின் அடுத்த குழு மலையில் இருந்து இறங்குவதைக் கண்டு மீண்டும் உள்ளே சென்றோம். அவர்களும் முதல் குழுவினரைப் போன்றே இடைவெளிகள் விட்டு துப்பாக்கிச் சூட்டை நடத்திக் கொண்டே முன்னேறினார்கள். ஒவ்வொரு பதுங்குக்குழியையும் சோதனையிட்டுக் கொண்டே வந்த இரண்டாவது குழு, இந்திய வீரர்கள் யாரும் அங்கு பதுங்கி இருக்கக்கூடாது என்பதற்காக அவற்றின் மீது கிரானைட் குண்டுகளை வீசிக் கொண்டே சென்றது. ஆறாக் காயங்கள், மாறா வடுக்கள் அந்த காலகட்டத்தில், என்னிடம் 9 எம்.எம் பிரவுனிங் தானியங்கி கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. எனது சடலத்தை இந்திய வீரர்கள் கண்டெடுக்கும்போது, அந்த துப்பாக்கியில் ஒரு தோட்டாக் கூட இருக்கக்கூடாது என்று முடிவு செய்துக்கொண்டேன். சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் சீனர்களை எதிர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாங்கள் இருந்த பதுங்குக்குழியை நோக்கி இரண்டு சீன சிப்பாய்கள் வந்தபோது, அவர்களை சரமாரியாக சுட்டேன். முதலில் இருந்தவனின் இடது கண்ணுக்கு மேற்புறமாக உரசிக் கொண்டு ஒரு தோட்டா சென்றது. அவன் அப்படியே சுருண்டு விழுந்துவிட்டான். அவன் கண்டிப்பாக இறந்திருப்பான். ஏனெனில் அவனிடமிருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை, அசைவும் இல்லை. இரண்டாவது சிப்பாயின் தோளில் குண்டு துளைத்து அவனும் கீழே விழுந்தான். சில நொடிகளில் அடுத்த ஆபத்தை எதிர்கொண்டேன். கூக்குரலுடன் பல சீன வீரர்கள் எங்கள் பதுங்குகுழியை நோக்கி சுட்டுக்கொண்டே வந்தார்கள். என்னுடன் இருந்த சிக்னல்மேன் படுகாயமடைந்து வீழ்ந்தார். அவரின் உடலில் இருந்து மிகுந்த அழுத்தத்துடன் தண்ணீரைப் போல ரத்தம் வெளியேறியதை பார்த்த காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. எங்கள் பதுங்குக்குழியில் குதித்த இரண்டு சீன வீரர்கள் துப்பாக்கியால் தாக்கி என்னை வெளியில் இழுத்துச் சென்றார்கள். சிறிது தூரம் நடத்தி செல்லப்பட்ட பிறகு உட்காரச் சொல்லி உத்தரவிட்டார்கள். இதயத்தை துடிக்க வைத்த காட்சி சிறிது நேரத்தில் அங்கு வந்த சீன ராணுவ அதிகாரி ஒருவர் சுமாரான ஆங்கிலத்தில் பேசினார். என்னுடைய தோள்பட்டையில் பொறிக்கப்பட்டிருந்த பதவியை குறிக்கும் அடையாள சின்னத்தைப் பார்த்த அவர், என்னை மிகவும் அவமரியாதையாக நடத்தினார். என் அருகிலேயே மயக்கமடைந்த நிலையில் ஒரு கோர்க்கா படைப்பிரிவின் சிப்பாய் இருந்தார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சிப்பாய், என்னை அடையாளம் கண்டுகொண்டு தண்ணீர் கோரினார். அவருக்கு உதவி செய்ய எழுந்த என்னை சீன அதிகாரி அடித்தான். முட்டாள் கர்னல், நீ கைதி, உட்கார், என்னுடைய உத்தரவில்லாமல் நீ நகர்ந்தாலும் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று உரக்கச் சத்தமிட்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு 'நாம்கா ச்சூ' நதியின் அருகே ஒரு குறுகிய பாதையில் அணிவகுத்து நடத்திச் செல்லப்பட்டோம். முதல் மூன்று நாட்களுக்கு எங்களுக்கு உணவு கொடுக்கப்படவில்லை, பிறகு முதல் முறையாக வேகவைத்த அரிசி சாதமும், வறுத்த முள்ளங்கியும் உணவாக வழங்கப்பட்டது. தனிமைச் சிறை, இருண்ட அறை சென்யேவில் இருந்த போர்க் கைதி முகாமிற்கு அக்டோபர் 26ம் தேதி அழைத்து வரப்பட்டோம். முதல் இரண்டு நாட்கள் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். அதன்பிறகு மிகவும் மோசமாக காயமடைந்திருந்த கர்னல் ரிக், நான் இருந்த இருண்ட அறைக்கு கொண்டுவரப்பட்டார். மோசமாக காயமடைந்த அவரைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது. முகாமில் நாங்கள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு, அதிகாரிகளும், சிப்பாய்களும் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டோம். அங்கிருந்த வெவ்வேறு சமையலறைகளில் சீனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இந்திய வீரர்கள் கைதிகளுக்காக சமைக்க அனுமதிக்கப்பட்டனர். காலை உணவு ஏழு முதல் ஏழரை மணிக்குள் கொடுக்கப்படும். மதிய உணவு காலை பத்தரை முதல் பதினொன்றரை மணிக்குள்ளும், இரவு உணவு மாலை மூன்றரை மணிக்கும் கொடுக்கப்படும். நாங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கு கதவுகளோ, ஜன்னல்களோ கிடையாது. அவற்றை எரிப்பதற்காக சீனர்கள் பயன்படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நேரத்தை போக்குவதற்காக சிறை வைக்கப்பட்ட இடத்திற்குள்ளேயே நடந்துக் கொண்டிருந்தேன். நடுங்க வைக்கும் குளிர் அங்கு கொண்டு செல்லப்பட்ட முதல் இரண்டு நாட்களும் இரவு நேரத்தில் கடுமையான குளிரால் உறைந்துபோனோம். அந்த இடத்தில் வைக்கோல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பயன்படுத்திக் கொள்ள சீனர்களிடம் அனுமதி கோரினோம். அதிர்ஷ்டவசமாக, எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு வைக்கோலை படுப்பதற்கான மெத்தையாகவும் போர்வையாகவும் பயன்படுத்தினோம். தவாங்கை கைப்பற்றிவிட்டதாக நவம்பர் 8 ம் தேதி சீனர்கள் சொன்னபோது, எங்கள் கவலை அதிகமானது. சண்டை நடப்பதே அதுவரை எங்களுக்கு தெரியாது! 1942 நவம்பர் நான்காம் தேதி ராணுவப் பணியில் சேர்ந்தவன் நான் என்பதை அவர்கள் எப்படியோ கண்டறிந்துவிட்டார்கள். எனவே 1962, நவம்பர் நான்காம் தேதியன்று பணியில் நான் சேர்ந்த இருபதாவது ஆண்டு நாளை கொண்டாடுவதற்காக ஒரு ஒயின் பாட்டிலுடன் ஒரு சீன அதிகாரி என்னிடம் வந்தார். இந்திய வீரர்களின் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்விதமாக, சிறப்பான நாட்களில் சிறப்பு உணவு வழங்கினார்கள், இந்திய திரைப்படங்களை திரையிடுவார்கள். எங்கள் முகாமில் மிகவும் அழகான ஒரு சீன பெண்மணி மருத்துவராக பணிபுரிந்தார். அவ்வப்போது எங்களை பரிசோதிக்க வந்த அந்த மருத்துவரின் அழகில் இந்திய போர்க் கைதிகள் அனைவருமே மயங்கினோம் என்றே சொல்லலாம். Image captionசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொடி செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து பொருட்கள் டிசம்பர் மாத இறுதியில், செஞ்சிலுவை சங்கம் இந்திய போர் கைதிகளுக்கு இரண்டு பொட்டலங்களை அனுப்பியது. ஒன்றில், ஆடைகள், குளிருக்கு பயன்படுத்த கம்பளி ஆடைகள், மஃப்ளர், தொப்பி, காலணிகள் மற்றும் துண்டுகள் இருந்தன. இரண்டாவது பொட்டலத்தில் உணவு பொருட்கள், இனிப்புகள், பால் டின்கள், ஜாம், வெண்ணெய், மீன், சர்க்கரை பாக்கெட்டுகள், மாவு, பயறுகள், உலர் பட்டாணி, உப்பு, தேநீர், பிஸ்கட், சிகரெட், விட்டமின் மாத்திரைகள் ஆகியவை இருந்தன. நவம்பர் 16 அன்று குடும்பத்தினருக்கு கடிதம் எழுத அனுமதி கிடைத்தது. நான்கு லெப்டினன்ட் ஜென்ரல்களுக்கு மட்டும் தந்தி அனுப்ப அனுமதி கிடைத்தது. எங்கள் கடிதங்கள் தணிக்கை செய்தபிறகே அனுப்பப்படும் என்பதால் நாங்கள் விவரமாக எதையும் எழுத முடியவில்லை. செஞ்சிலுவை சங்கம் மூலமாக எனக்கு சில கம்பளி ஆடைகளையும், உணவு பொருட்களையும் அனுப்புமாறு ஒரு கடிதத்தில் நான் எழுதியிருந்தேன். அந்த கடிதத்தில் நான் எழுதியிருந்ததை தெரிந்துக் கொண்ட என் நான்கு வயது மகள் ஆபா, அப்பா குளிரில் தவிக்கிறார், பசியுடன் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டாளாம்! இந்திய பாடல்களை சீனர்கள் தொடர்ந்து ஒலிபரப்புவார்கள். அவர்கள் தொடர்ந்து ஒலிக்கவிட்ட ஒரு பாடல் லதா மங்கேஷ்கர் பாடியது. 'எத்தனை நாள் இந்த புறத்தில் இருப்பேன்' என்ற பொருள் கொண்ட அந்த இந்தி மொழிப் பாடல் எனது குடும்பத்தினரின் நினைவையும், ஏக்கத்தையும் அதிகரித்தது. Image captionகே.கே. திவாரி சீன சிப்பாய்களின் பெயரை இந்தியில் எழுதியிருக்கிறார் பகதூர் ஷா ஜஃபரின் கஜல் பாடல்கள் ஒரு நாள் எங்கள் முகாமுக்கு வந்த சீன பெண்மணி ஒருவர் பகதூர் ஷா ஜஃபரின் கஜல் பாடல்களை பாடியது எங்களது வியப்பளித்தது. எங்கள் சகா ரதனும், அந்த பெண்ணுடன் இணைந்து ஜஃபரின் பாடல்களை பாடினார். அந்த பாடல்கள், டெல்லியில் இருந்து ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்ட (இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர்) பிறகு ஜஃபர் எழுதிய பாடல்கள். உருது தெரிந்த அந்த பெண், லக்னெளவில் சிறிது காலம் வசித்திருக்கலாம் என்று கருதினேன். சீனர்கள் ஊசிகளை கொண்டு (அக்குபஞ்சர்) சிகிச்சை செய்வதை நாங்கள் பார்த்தோம். நண்பர் ரிக்குக்கு கடுமையான தலைவலி என்னும் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது, அதற்கு சிகிச்சையும் தொடர்ந்தது. அவரின் தலைவலிக்கு காரணம் சிகிச்சையளித்தது நான் முன்னரே குறிப்பிட்ட அழகான பெண் டாக்டரா என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். இந்திய போர்க்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கு முன்பு சீனாவை சுற்றி காட்டவேண்டும் என்று சீனர்கள் முடிவு செய்தார்கள். போர்க்கைதிகளாக இருந்த மேலும் பத்து இந்திய ராணுவ அதிகாரிகளும் அழைத்து வரப்பட்டனர். அதில் மேஜர் தன்சிங் தாபாவும் அடங்குவார். வீரதீர செயல்களுக்காக பரம்வீர் சக்ர விருது பெற்றவர் தாபா. முதன்முறையாக சீனாவில் சுதந்திரமாக ரேடியோ கேட்க அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்து கொண்டே நீண்ட நாட்களுக்கு பிறகு ஆல் இண்டிய ரேடியோ மற்றும் பிபிசி செய்திகளை கேட்டோம். சீனாவை சுற்றி பார்க்க அழைத்து செல்லப்பட்டபோது, சாதாரண உடை அணிந்த சீன ராணுவத்தை சேர்ந்த ஒருவர் எங்களுடன் இருந்தார். அவர்களை ஜெனரல் என்று அழைத்தோம். அவரை பின்தொடர்ந்து செல்லும் சிப்பாய் ஒருவர் அவருக்கு உட்கார நாற்காலி எடுத்துப்போடுவது, தேநீர் தயாரிப்பது போன்ற எடுபிடி வேலைகளை செய்வார். அவரை ஜெனரலின் ஆடர்லி என்று அழைத்தோம். எங்களை இந்தியா அனுப்புவதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டபோது, விடுவிப்பு ஆவணங்களில் கையெழுத்திட்டது 'ஆடர்லி'. அப்போது அவர் கையெழுத்திடுவதற்கான பேனாவை எடுத்துக் கொடுத்தது, 'ஜெனரல்'. காலை ஒன்பது மணிக்கு குன்மிங்கில் இருந்து கிளம்பிய எங்கள் விமானம் மதியம் ஒரு மணி 20 நிமிடங்களுக்கு கல்கத்தாவை வந்தடைந்தது. ஆனால் தரையிறங்காமல் நீண்ட நேரமாக விமானம் வானிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. விமானத்தின் சக்கரங்கள் திறக்கவில்லை என்று சொன்ன விமான ஓட்டி, அதிரடியாக விமானத்தை தரையிறக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார். இறுதியாக இரண்டு மணி முப்பது நிமிடத்தில் தம்தம் விமான நிலையத்தில் இறங்கினோம். எந்தவொரு நிலைமையும் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நின்றிருந்தன. விமானம் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு தோன்றியது என்ன தெரியுமா? "இத்தனை நாள் போர்க்கைதிகளாக அந்நிய நாட்டில் இருந்த நாங்கள், பல பிரச்சனைகளுக்கு பிறகும் அங்கு மரணிக்காமல், நமது தாய் மண்ணில் அதிரடியாக தரையிறங்கும்போது மரணிப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்". (சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் கே.கே.திவாரியுடன் பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபஜல் உரையாடியதன் அடிப்படையில் எழுதப்பட்டது இந்த கட்டுரை. இப்போது கே.கே திவாரி உயிருடன் இல்லை. அவர் 2016 ஆம் ஆண்டு புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.) http://www.bbc.com/tamil/global-41708922
 25. http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-21#page-1
 1. Load more activity