24 hours

Showing topics posted in for the last 1 days.

This stream auto-updates     

 1. Past hour
 2. பொயற் நீங்கள் வேறு ஏதோ விடயத்தையும் இங்கு சொல்ல வந்துவிட்டு சொல்லாமல் செல்வதாக தெரிகிறது. இன்னும் சற்று கூர்மையாக சிந்தியுங்கள் நினைவுக்குவரும்.
 3. விவாகம் என்பது திருமணம். விவாகரத்து என்பதும் விவகாரத்து என்பதும் ஒன்றில்லை. மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் விவாகமும் இல்லை.
 4. Today
 5. ஈழக் கவிஞனை கொண்டாடும் குர்திஸ்தானியர்கள் 144 0 ShareTweet ஈழக் கவிஞனை கொண்டாடும் குர்திஸ்தானியர்கள் அண்மையில் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கு குர்திஸ்தான் பிராந்திய மக்கள் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி அமோக ஆதரவைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் குர்திஸ்தானி மக்களின் தனிநாட்டுப் போராட்டு ஆதரவாக ஈழக் கவிஞர் தீபச்செல்வன் ‘குர்து மலைகள்’ என்ற கவிதையை எழுதியிருந்தார். இந்தக் கவிதையை தமிழகத்தை சேர்ந்த லதா ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். இந்தக் கவிதை குர்திஸ்தானை சேர்ந்த பலருக்கும் பிடித்துள்ளது. கவிதையினை வாசித்த குர்திஸ்தான் மக்கள் பலரும் தொடர்பு கொண்டு வருவதாக தீபச்செல்வன் குறிப்பிட்டார். குர்திஸ்தானிய போர்க்களத்திலிருந்து தொடர்பு கொண்ட நண்பர்கள் அக் கவிதையை குர்திஸ் மொழியில் மொழிபெயர்க்கப் போவதாகவும் கூறியுள்ளனர். குர்திஸ்தானிய போராட்டவாதிகளால் இயக்கப்படும் முகப்புத்தகம் ஒன்றிலும் இக் கவிதை பிரசுகரிக்கப்பட்டுள்ளது. குர்து மலைகள் கவிதை குர்திஸ்தான் பெண்களுக்கு முற்றிலும் பொருத்தமானது என்றும் குர்திஸ்தான் தலைவர்களைக் காட்டிலும் சர்வதேச அறிவுஜீவிகள் குர்திஸ்தான் மக்களின் தியாகங்கள் பற்றியும் சுதந்திரம் பற்றியும் அக்கறையும் எழுச்சியும் கொண்டிருப்பதாக இக் கவிதை பற்றி குர்திஸ்தானியரான அரிப் கிலானி குறிப்பிட்டுள்ளார். இக் கவிதையை வாசித்த குர்திஸ்தானியரான படைப்பாளி அப்துல்லாஸ் ஓமர், குர்திஸ்தானில், குர்திஸ்தானிய மக்களுடன் வாழ்ந்த. குர்திஸ் போராட்டத்துடன் ஒன்றித்த ஒருவரால் மாத்திரமே இக் கவிதையை எழுத முடியும் என்று பதிவிட்டுள்ளார். அந்தளவுக்கு குர்திஸ்தானிய மக்களின் வாழ்வியலையும் போராட்டத்தையும் அந் நிலத்தின் குறியீடுகளுடன் இக் கவிதை பதிவு செய்துள்ளது. இதேவேளை, குர்திஸ் மக்களின் எழுச்சியான போராட்டமும் எமது இனவிடுதலை குறித்த ஈடுபாடும் எமக்கு நம்பிக்கையையும் எம் தோள்களை இறுகப் பற்றும் உணர்வையும் தருபவை என்று கூறுகிறார் தீபச்செல்வன். இவர் எழுதிய ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை, ஆங்கிலம், டொச்சு, நோர்வேஜியன், பிரெஞ்சு, பாரசீகம், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலக வசகர்களிடையே வரவேற்பு பெற்றமை குறிப்பிடத்தக்கது. குர்து மலைகள் பெண் கொரில்லாக்கள் ஏந்தியிருக்கும் கொடியில் புன்னகைக்கும் சூரியனின் ஒளி அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க ஜூடி மலையிலிருந்து மிக நெருக்கமாகவே கேட்கிறது சுதந்திரத்தை அறிவிக்கும் குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக யூப்ரட் நதியிருகே ஒலீவ மரம்போல் காத்திருக்கும் பெண் ஒருத்தி இனி அவன் கல்லறைக்கு கண்ணீருடன் செல்லாள் ஓய்வற்ற இக்ரிஸ் நதிபோல தலைமுறை தோறும் விடுதலை கனவை சுமந்து சுதந்திரத்தை வென்ற உம் இருதயங்களில் பூத்திருக்கும் பிரிட்டில்லா மலர்களின் வாசனையை நான் நுகர்கிறேன் குருதி ஊறிய குர்து மலைகளே உமது தேசம் போல் எமது தேசமும் ஒர்நாள் விடியும் எமது கைகளிலும் கொடி அசையும் கோணமலையிலிருந்து உமக்குக் கேட்கும் எமது சுதந்திரத்தை அறிவிக்கும் ஈழச் சிறுவரின் குரல் லினுஸ் மலர்களை அணைப்பதைப்போல எமது கொடியினை ஏந்தி எம் கனவை உம் விழிகளிலும் எம் தாகத்தை உம் இருதயத்திலும் சுமந்த மலைகளே இறுக்கமாகப் பற்றுகிறோம் எம் நிலத்தின் விடுதலையை எதிர்பார்த்திருக்கும் உமது தோள்களை. ஒரு போராளியின் இறுதிப் பார்வைபோல திடமானது நம் சுதந்திரம் கொரில்லாக்களைப் போன்ற குர்து மலைகள் உமக்குத் தோழமை நீரோ எமக்குத் தோழமை குர்து மலைகளைப் போலவே புனிதமானது நமது விடுதலை. ●தீபச்செல்வன் http://www.ujirppu.com/?p=18874
 6. பூசி மெழுகி விடுவார்கள் சிங்கள அரசும் அதன் அடியாட்களும்.
 7. புல­னாய்­வா­ளர்­களே சுட்­டுக் கொன்­ற­னரா? அரி­யா­லை­யில் நேற்­று­ முன்­தி­னம் சுட்­டுக் கொல்­லப்­பட்ட இளை­ஞனை அடை­யா­ளம் காணப்­ப­டாத புல­னாய்வு அணி ஒன்றே சுட்­டுக்­கொன்றதா என்­ப­தைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்று உத­யன் அறிந்­தான். ‘‘இந்­தச் சம்­ப­வம் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் மேற்­கொள்­ளப்­பட்­டதா என்­பதை ஏற்­றுக் கொள்­ளவோ அல்­லது நிரா­க­ரிக்­கவோ மாட்­டேன்’’ என்று இது தொடர்­பில் உத­யன் பத்­தி­ரி­கைக்­குப் பதி­ல­ளித்த யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி காமினி ஹேவா­வி­தா­ரண தெரி­வித்­தார். அரி­யா­லை­யில் நேற்­று­முன்­தி­னம் மாலை நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச்­சூட்­டில் இளை­ஞன் ஒரு­வன் உயி­ரி­ழந்­தி­ருந்­தான். புல­னாய்­வுப் பிரி­வின் துப்­பாக்­கிச் சூட்­டி­லேயே இளை­ஞன் உயி­ரி­ழந்­தா­கப் பெரும் குற்­றச்­சாட்டு ஒன்று முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இந்­தக் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யி­டம் உத­யன் வின­வி­யது. ‘‘இந்­தப் பிர­தே­சத்­தில் மணல் அகழ்வு நடை­பெ­று­வது வழக்­கம். மணல் அகழ்வு சுற்­றி­வ­ளைப்­புக்கு எமது அதி­கா­ரி­கள் சென்­ற­னர். அதனை மக்­கள் தவ­றான எண்­ணி­யுள்­ள­னர். ஆனால், இந்­தச் சம்­ப­வம் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் மேற்­கொள்­ளப்­பட்­டதா என்­பதை ஏற்­றுக் கொள்­ளவோ அல்­லது நிரா­க­ரிக்­கவோ மாட்­டேன். மேலும், துப்­பாக்­கிச் சூடு தொடர்­பில் சில தட­யங்­கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளோம்’’ – என்­றார். பொலிஸ் புல­னாய்­வுப் பிரி­வி­னர் தவிர்ந்த வேறு படை­க­ளின் புல­னாய்வு அணி ஒன்று இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக என்­பது குறித்த விசா­ர­ணை­கள் ஏற்­க­னவே நடந்து வரு­கின்­றன என்று உத­யன் அறிந்­தான். ஹெரோ­யின் போதைப் பொருள் கடத்­தப்­ப­டு­வ­தா­கக் கிடைத்த தக­வல் ஒன்­றை­ய­டுத்து அந்­தப் பகு­திக்கு வந்த புல­னாய்­வா­ளர்­கள் இந்­தச் செய­லில் ஈடு­பட்­டி­ருக்­க­லாம் என்­கிற ஊகங்­கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால், பொலிஸ் தரப்­பி­லி­ருந்து இன்­னும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. http://newuthayan.com/story/39938.html
 8. ஆபத்தான அமைதி! யாழ்ப்பாணத்­தில் மீண்­டும் ஒரு கொலை நிகழ்ந்­ துள்­ளது. துப்­பாக்­கி­யால் சுட்டு இளை­ஞர் ஒரு­வர் கொல்­லப்­பட்­டுள்­ளார். ஏற்­க­னவே இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டுக் கொலை­கள் தீர்க்­கப்­ப­டா­மல் இருக்­கும் நிலை­யில் மற்­றொரு கொலை இடம்­பெற்­றுள்­ளது. இந்­தக் கொலையை யார் செய்­தார்­கள் என்ற மர்­மம் நேற்று இரவு வரை­யில் துலங்­க­வில்லை. போதைக் கடத்­தல், சட்­டத்­துக்­குப் புறம்­பான செயல்­கள் என்­ப­வற்­று­டன் தொடர்­பு­ப­டுத்தி பல்­வேறு ஊகங்­க­ளும் வதந்­தி­க­ளும் உலா­வு­கின்­றன. ஆனால், சம்­ப­வத்துக்கான கார­ணமோ குற்­ற­வா­ளி­கள் தொடர்­பான தக­வல்­களோ திட்­ட­வட்­ட­மாக வெளி­வ­ர­வில்லை. படை­க­ளின் புல­னாய்­வுக் குழுக்­கள் இந்­தக் கொலை­யு­டன் தொடர்­பு­பட்­டுள்­ளன என்­கிற ஊக­மும் கூட உலா­வு­கின்­றது. கொலையை நேரில் கண்ட சாட்­சி­யான மோட்­டார் சைக்­கி­ளைச் செலுத்­திச் சென்ற நபர், சுட்­ட­வர்­க­ளில் ஒரு­வ­ரைத்தான் பொலிஸ் நிலை­யங்­க­ளில் கண்­டி­ருக்­கி­றார் என்­றும் அவர் புல­னாய்­வுப் பிரி­வைச் சேர்ந்­த­வர் என்­றும் பல­ரி­டம் கூறி­யி­ருக்­கி­றார். ஆனால், அது பற்றி விசா­ரணை நடப்­ப­தா­கவோ சந்­தே­க­ந­பர்­கள் யாரா­வதுஇனங்­கா­ணப்­பட்­டி­ருப்­ப­தா­கவோ எந்­தப் பகி­ரங்­கத் தக­வல்­க­ளும் இது­வ­ரை­யில் கிடை­யாது. இந்­தச் சம­யத்­தில்­தான் ஒரு வரு­டத்துக்கு முன்­னர் நடந்த சம்­ப­வம் நினை­வில் ஊச­லா­டு­கி­றது. பல்­க­லைக்­க­ழக மாண ­வர்­கள் இரு­வர் பொலி­ஸா­ரால் சுட்­டுக்­கொல்­லப்­ப­ட்ட நிலை யில், அவர்­கள் இரு­வ­ரும் விபத்­தில் உயி­ரி­ழந்­தார்­கள் என்றே பொலி­ஸார் ஆரம்­பத்­தில் தக­வல்­களை வெளி­யிட்­டார்­கள். இப்­போது மணி­யந்­தோட்­டக் கொலை­யில் புல­னாய்­வா­ ளர்­க­ளின் தொடர்­பு­கு­றித்து அர­சல் புர­ச­லா­கக் கதை­கள் அடி­ ப­டும் நிலை­யில், பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் கொலை ­யின் போது பொலி­ஸார் நடந்­து­கொண்ட விதத்­தைச் சீர்­தூக்­கிப் பார்ப்­பது தவிர்க்க முடி­யா­தது. அத்­தோடு எங்­கேயோ இடிக்­கும் மற்­றொரு விட­யம், நல்­லூ­ரில் நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப் பாது­கா­வ­லர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­போ­தும், கொக்­கு­வி­லில் பொலி­ஸார் இரு­வர் வாளால் வெட்­டப்­பட்­ட­போ­தும் குற்­ற­வா­ளி ­க­ளைப் பிடிப்­ப­தில் பொலி­ஸார் காட்­டிய வேக­மும் அவ­ச­ர­மும் இந்­தக் கொலை­யில் ஏன் இல்லை என்­ப­து ­தான். எந்­தக் கொலை­யாக இருந்­தா­லும் சட்­டம் ஒழுங்­குக் காவ­லர்­கள் அதனை ஒரே மாதி­ரி­யா­கத்­தானே அணு­கி­யி­ருக்க வேண்­டும். அப்­ப­டி­யில்­லா­மல் சாட்­சி­கள் தெளி­வான தக­வல்­களை வழங்­கி­னால்­ தான் சந்­தே­க­ந­பர்­களை இனங்­கண்டு நட­வ­டிக்கை எடுக்­க­ மு­டி­யும் என்­பது போன்று பொலி­ஸார் இந்த வழக்­கில் நடந்­து­ கொள்­வது நியா­ய­மான சந்­தே­கங்­களை எழுப்­பு­கி­றது. அரி­யா­லைச் சம்­ப­வத்­தில் கொல்­லப்­பட்ட இளை­ஞன் மற்­றும் அவ­ரு­டன் கூடச் சென்­ற­வர் என இரு­வ­ருமே குற்­றப் பின்­னணி கொண்­ட­வர்­கள் அல்­லர் என்­கின்­றன தக­வல்­கள். அவர்­கள் மீது பொலிஸ் நிலை­யங்­க­ளில் முறைப்­பா­டு­களோ, நீதி­மன்­றங்­க­ளில் வழக்­கு­களோ இல்லை. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது அவர்­க­ளில் ஒரு­வர் கொல்­லப்­பட்­ட­தும், அவர்­கள் சட்­டத்துக்குப் புறம்­பான பல்­வேறு சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்­கிற கதை­கள் பரப்­பப்­ப­டு­வ­தன் பின்­ன­ணி­யும் கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டி­யதே! குற்­றங்­க­ளு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்­ப­தால் உயிர் வாழத் தகு­தி­யற்­ற­வர்­கள் என்­கிற மறை­மு­க­மான நியாயப்­ப­டுத்தல் இதற்­கூ­டாக சமூ­கத்­தின் ஏனைய கூறு­க­ளுக்­குக் கடத்­தப்­ப­டு­கின்­றதா என்ற கேள்­வி­யைத் தவிர்க்க முடி­ய­வில்லை. ஏனெ­னில் கொலை நிகழ்ந்து இரண்டு நாள்­கள் கடந்த பின்­ன­ரும்­கூட மனித உரிமை அமைப்­பு­களோ, பொது அமைப்­பு­களோ எது­வும் இந்­தக் கொலை தொடர்­பில் மூச்­சுக்­கூட விட­வில்லை. அர­சி­யல் கட்­சி­க­ளும் வாய்­மூடி மௌனி­க­ளா­கவே இருக்­கின்­றன. குற்­றங்­க­ளோடு தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்­றால் கேட்­டுக் கேள்­வி­யின்­றிக் கொல்­லப்­ப­ட­லாம் என்­ப­து­தான் நியா­யம் என்று ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளதா? இது மிக மிக ஆபத்­தான போக்கு. அதற்கு எதி­ராக ஒட்­டு­மொத்­தச் சமூ­க­மும் கிளர்ந்து எழ­வேண்­டும். http://newuthayan.com/story/39906.html
 9. தமிழ் விடுகதைகள்

  ஏணை !
 10. கேரளா உணவு வகைகள்

  கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார் தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் - 1 (நறுக்கியது) வெண்டைக்காய் - 4 (நறுக்கியது) கேரட் - 2 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்) உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்) வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) புளி துருவிய தேங்காய் சிறிது உப்பு தேவையான அளவு கொத்தமல்லி சிறிது பருப்பு வேக வைப்பதற்கு... துவரம் பருப்பு - 1 கப் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 3 கப் வறுத்து அரைப்பதற்கு... மல்லி - 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் வரமிளகாய் - 4 பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு... கடுகு - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2-3 கறிவேப்பிலை - சிறிது தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன் செய்முறை: முதலில் துவரம் பருப்பை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் 3 கப் தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்கி, குக்கரை திறந்து பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் புளியை ஒரு கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கவும். பிறகு அதில் காய்கறிகளை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும். காய்கறியானது நன்கு வெந்ததும், அதில் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் துருவிய தேங்காய் சிறிது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவி மூடினால், கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார் ரெடி!!!
 11. பிரியங்கா சோப்ராக்களும் இந்தியாவில் மட்டும் இல்லை! உலகம் முழுக்கவும் இருக்கிறார்கள்!
 12. தொட்டாலும் சனி....விட்டாலும் சனி....எண்டு சொல்லுறது இது தான் போல கிடக்குது!
 13. இளமை புதுமை பல்சுவை

  ♥ஒரு பெண் ஒரு ஆணிடம் எதிர்ப்பார்ப்பது உங்களின் அன்பு மட்டுமே. உங்களின் அன்பின் வெளிப்பாடு ஒன்றே அவர்களுக்கு போதும். அன்பின் வெளிப்பாடு எதுவாக இருந்தாலும் சரி. ஒரு சிலரைப் போல் நீங்கள் காதல் வசனங்கள் பேசத் தேவையில்லை, கண்ணும் கண்ணும் பல மணி நேரங்கள் கவி பாடத் தேவையில்லை. உங்களின் அன்பின் வெளிப்பாடான அக்கறையை மட்டும் காட்டுங்கள் போதும். ♥அவள் என்ன செய்கிறாள் என்பதை நீங்கள் கேட்டு தெரியாவிட்டாலும் அவள் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளும்போது கேளுங்கள். நீங்கள் தூரமாக இருந்தாலும் அவளின் அருகில் இருக்கும் உணர்வை அவளுக்குக் கொடுங்கள். அதுதான் அன்பு. ♥நீங்கள் உங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தும் நபராக இலாவிட்டாலும் உங்களின் பார்வை மட்டுமே அவள் மீது திருப்புங்கள். அதன் அர்த்தம் புரிந்தவளாகத்தான் உங்களை விரும்பும் பெண் இருப்பாள். ♥தான் விரும்பும் ஒருத்தரைப் பற்றி ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் நினைக்கின்றனர். இதனால் தான் உங்களிடம் பேசுவதையும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வதில் அக்கறை காட்டுகின்றனர். இந்த ஆர்வம் சில ஆண்களுக்கு அநாவசியமாகவும் எரிச்சலூட்டும் ஒன்றாகவும் இருக்கும். முக்கியமான விசயமாக இருந்தால் நானே சொல்ல மாட்டேனா என்பது ஆண்களின் எண்ணம். ♥ஆனால் உங்களைப் பற்றி அக்கறை படும் பெண்ணுக்கு உங்கள் தொடர்பான அனைத்து விசயங்களும் முக்கியமானதாகத்தான் இருக்கும். சில சமயங்களை உங்களைப் பற்றி அவளிடம் பகிர்ந்துக் கொள்வது உங்களை பலவீனமானவராக உங்களை காட்டும் என எண்ணாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்யாமல் இருப்பதுதான் அவளை பலவீனப்படுத்தும். என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் அவள் தவிக்கும் போதுதான் அவள் அதிகம் கஷடப்படுகிறாள். ♥உங்களின் சுக துக்கங்கங்களில் அவளால் எந்தவொரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியாவிட்டாலும் உங்களின் எண்ணங்களை அவளுடம் பரிமாறிக்கொண்டாலே போதும். எந்த நிலையிலும் தன்னுடைய நிழல் தான் விரும்பும் ஆணிற்கு நிழல் தரும் ஒன்றாக இருக்கிறது என்ற திருப்தியே பெண்களுக்கு போதும். ♥இதை செய்ய உங்களுக்கு தேவைப்படுவது ஆகக்குறைவு 5 நிமிடங்கள் மட்டுமே. இதை நீங்கள் செய்யாவிட்டால் அவர்கள் உங்களை நினைத்து ஏங்கும் காலம் என்பது அவர்களுக்கு தேவைப்படும் அந்த 5 நிமிடத்தை நீங்கள் அவர்களுக்காக ஒதுக்கும் வரை. ♥நீங்கள் விரும்பும் பெண்ணிடம் நீங்கள் அவரைப் பற்றி அதிகம் கேட்கத் தேவையில்லை. ஏனென்றால் ஒரு பெண் ஏதாவது இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டால் தான் அதிகம் நேசிக்கும் ஒருத்தரிடம் மட்டுமே தன் நிலையைப் பற்றி கூறுவாள். அது போன்ற சமயத்தில் அவள் அழைத்து பேசும் முதல் நபராக நீங்கள்தான் இருப்பீர்கள் என்று அவளுக்கும் தெரியும், உங்களுக்குத் தெரியும். இதனால்தான் சில ஆண்கள் மணிக்கு ஒரு முறை தொலைபேசியில் அழைத்து பேசுவதில்லை. என்ன செய்கிறாய் என குறுஞ்செய்தி அனுப்புவதில்லை. ♥ஆனால் பெண்களின் மனநிலை இது அல்ல. அவள் உங்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் மேல் அக்கறை கொண்டு அவளை உங்களில் ஒருத்தியாக நடத்துங்கள். நீங்கள் நினைப்பதை அவளுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அவளை நலம் விசாரிக்க யாரும் இல்லாவிட்டாலும் அவள் நலம் விசாரிக்க நீங்கள் ஒருத்தர் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஏதும் பேசாமல் அவளை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டாலே தன்னுடைய கஷ்டங்களை மறந்தவளாக இருப்பாள் அவள். காதல் மிக சுலபமான ஒன்று. அவள் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது உங்களின் அன்பு மட்டுமே உலகத்தமிழ் மங்கையர் மலர்♥
 14. உலகில் ஒரு ஹார்வி வெய்ன்ஸ்டீன் மட்டும் இல்லை: பிரியங்கா சோப்ரா வேதனை பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் போன்ற ஏராளமான மக்கள் இந்த உலகம் முழுவதும் இருக்கின்றனர் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். கடந்த 1998-ம் ஆண்டு வெளியாகி, சிறந்த படம் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் (65) கடந்த 35 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் படவிநியோகம் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகள், பெண் உதவியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கடந்த வாரம் ‘நியூ யார்க் டைம்ஸ்’ விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டது. இந்த செய்தி தந்த உந்துதலை அடுத்து ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகள் தாமாகவே முன்வந்து ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை கூறினர். ஹாலிவுட்டில் மிக அதிக ஊதியம் பெரும் நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலி, கைனத் பால்ட்ரோ, காரா டெலவிங் உட்பட பல முன்னணி நடிகைகளும் துணை நடிகைகளும் புகார் கூறி வருபவர்களில் அடங்குவர். இந்நிலையில் இதுகுறித்து பெண்கள் நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரியங்கா, ''ஹாலிவுட்டில் மட்டும் ஒரேயொரு ஹார்வி வெய்ன்ஸ்டீன் இல்லை. இதுபோன்ற ஏராளமான நிகழ்வுகள் இனி வெளிச்சத்துக்கு வரும் என்று நினைக்கிறேன். இது இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. பாலியல் தொந்தரவுகள் உலகம் முழுக்க இருக்கின்றன. பெண்களின் வலிமையை எடுத்தாள நினைக்கும் ஆண்களின் அதிகாரம் அது. உலகம் எப்போதுமே தலைசிறந்த இடமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது அப்படி இருப்பதில்லை. இது பாலினம் குறித்த பிரச்சினை அல்ல. பாலியல் குறித்ததும் அல்ல. அதிகாரம் பற்றிய வேட்கை அது. இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்கள் பறிபோகும் என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதன்மூலம் பெண்கள் விருப்பமில்லாமலேயே உடன்படுகின்றனர்'' என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். http://tamil.thehindu.com/cinema/hollywood/article19889909.ece
 15. விவகாரத்து தொகையாக அதிகளவு நிதியை வழங்குவதற்கு பிரித்தானிய பிரதமர் இணங்கியுள்ளாரா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான விவாகரத்து தொகையாக அதிகளவு நிதியை வழங்குவதற்கு பிரித்தானிய பிரதமர் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை கடுமையாக எதிர்த்துள்ளனர். பிரித்தானியா வழங்கவேண்டிய தொகைக்கு அதிகமாக ஒரு சிறிய தொகையை கூட வழங்ககூடாது என அரசாங்கத்தின் பி;ன்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். கொன்சவேர்ட்டிவ் கட்சியின் சிரேஸ்ட பி;ன்வரிசை உறுப்பினரான எட்வேர்ட் லெய் பிரதமர் என்ன உறுதிமொழியை வழங்கியுள்ளார் , அவர்கள் என்ன வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் என்பது தங்களிற்கு தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த வேண்டுகோள் ஐரோப்பிய ஓன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் பிரதமர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை வெளிப்படுத்தியுள்ளன. பிரித்தானியா செலுத்தவேண்டிய தொகை குறித்த இணக்கப்பாடு ஏற்படாத பட்சத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளிற்கு செல்ல தயாரில்லை என ஐரோப்பிய ஓன்றியம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/46670
 16. வடக்கு கிழக்கு அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு இரகசிய புலனாய்வு அறிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இரகசிய புலனாய்வு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வுப் பிரிவினர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளனர். இரண்டு மாகாணங்களிலும் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், அரசியல்வாதிகள் செயற்படும் விதம், அவர்களின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளுக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/46681
 17. இலங்­கைக்குள் நீதியை நிலை நாட்டாவிடின் அதனை சர்­வ­தேசம் பெற முயற்­சிக்கும் ; பப்லோ டி கீரீப் Published by Priyatharshan on 2017-10-24 10:18:10 இலங்­கைக்குள் நம்­ப­க­ர­மான மற்றும் சுயா­தீ­ன­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து நீதியை நிலை­நாட் ­டா­விடின் சர்­வ­தேச மட்­டத்தில் நீதியை தேடு­வ­தற்­கான முயற்­சிகள் மிகவும் வலு­ வான முறையில் இடம்­பெறும் என்­பதை அனை­வரும் மனதில் கொள்­ள­வேண்டும் என்று இலங்­கை்­கான விஜ­யத்தை முன்­னெ­டுத்த உண்மை, நீதி, நட்­ட­ஈடு,மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் தெரி­வித்தார். இதற்கு சிறந்த உதா­ர­ண­மாக பிரேஸில் நாட்டில் அண்­மையில் இலங்­கையின் முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜகத் ஜய­சூ­ரி­ய­விற்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கை குறிப்­பி­டலாம். இது­போன்ற சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் தொடர்ந்தும் இடம்­பெறும் என்றும் அவர் குறிப்­பிட்டார். யுத்த வெற்­றி­வீ­ரர்­களை நீதி­மன்­றத்தின் முன் கொண்­டு­வ­ர­மாட்டோம் என யாரும் கூற முடி­யாது. அதனை நீதி­மன்­றமே தீர்­மா­னிக்­க­வேண்டும். யுத்த வெற்­றி­வீ­ரர்­களை இவ்­வாறு பாது­காப்­ப­தாக கூறு­வது சுயா­தீன நீதித்­து­றையின் பண்­பு­களை மீறு­வதைப் போன்­ற­தாகும் என்றும் ஐ.நா. பிர­தி­நிதி சுட்­டிக்­காட்­டினார். பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை தொடர்ந்தும் தாம­த­மாக்­க­வேண்டாம். இவ்­வாறு தொடர்ந்தும் இந்த செயற்­பாட்டை தாம­த­மாக்­கு­வது உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. எனவே அர­சாங்கம் உட­ன­டி­யாக நம்­ப­க­ர­மான பரந்­து­பட்ட சுயா­தீ­ன­மான வெளிப்­படைத் தன்­மை­மிக்க அனை­வரும் பங்­கேற்­கக்­கூ­டிய பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­வைக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­து­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் தொடர்­பான விட­யத்தை அர­சாங்கம் உட­ன­டி­யாக மீளாய்வு செய்­ய­வேண்டும். அத்­துடன் வடக்கு, கிழக்கில் இரா­ணு­வத்தின் பிர­சன்­னத்தை குறைக்­க­வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை விரைவில் நீக்­க­வேண்டும் என்றும் ஐக்­கி­ய­நா­டு­களின் விசேட நிபுணர் சுட்­டிக்­காட்­டினார். இலங்­கைக்கு 14 நாள் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்ட உண்மை, நீதி, நட்­ட­ஈடு,மற்றும் மீள் நிக­ழாமை தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் நேற்று தனது இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்கு முன்பதாக கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து தனது மதிப்பீடுகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தபோதே மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/26199
 18. தமிழ் விடுகதைகள்

  தாலாட்டு
 19. இது இன்னொரு வாழ்க்கை! பகல் நேர பேருந்து பயணம், இம்சையாய் இருந்தது, கலியமூர்த்திக்கு! மனதின் கொதிப்பை விட, புறவெளியின் கொதிப்பு வெறுப்பாய், எரிச்சலூட்டுவதாய் இருந்தது. பஸ் புறப்பட சில நிமிடங்களே இருந்தன. பஸ்சில் ஏறிய இளம் பெண் ஒருத்தி, தான் முன்பதிவு செய்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் கலியமூர்த்தி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, நடத்துனரிடம் சொல்ல, அவர், பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த தம்பதியைப் பிரித்து, இவர் அருகில் உட்கார வைத்து, அந்தப் பெண்ணை மறுபுறமாய் அமர வைத்தார். பக்கத்தில் வந்து அமர்ந்த அந்த நபர், கொஞ்சம், பருமனாக இருந்தார். கூடவே, அவருடைய பத்து வயது மகனை, மடி மீது உட்கார வைத்ததும், கலியமூர்த்திக்கு, 'சுள்' என்று வந்தது. துறுதுறுவென்றிருந்த அந்த பயலோ, நெளியவும், மடங்கவும் என்று, தன் பாதி உடம்பை, கலியமூர்த்தியின் மீது கிடத்தியும், அவர் கால் வைக்கும் இடத்தில் நின்று, ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தான். 'பஸ் பயணம்ன்னாலே இம்சை தான்...' என்று முணுமுணுத்து, கண்களை மூடி இருக்கையில் சரிந்தார். மனம் இனம் புரியாத தவிப்பில், இலக்கில்லாத இந்த பயணத்தின் மீது எரிச்சல் வந்தது. நேற்றைய நிகழ்வுகள், கண் முன் படமாய் விரிந்தன... வீடியோ காலிங்கில் தெரிந்த, அமெரிக்காவில் உள்ள மகனுடைய வீடும், நவீன சோபாவும், அவனுடைய பொருளாதார வளர்ச்சியை காட்டியது. 'சந்துரு... உன்னையும், புள்ளைகளையும் பாக்க உங்கம்மா ரொம்ப ஆசையா இருக்கா... இப்பவும், நீ வர நேரமில்லன்னு சொல்றியேப்பா... இந்த தனிமை எங்கள ரெம்பவும் வாட்டுது...' என்றார் வருத்தமாக! 'ரெண்டு பேர் இருக்கிறது எப்படிப்பா தனிமை ஆகும்... கஷ்டப்பட்டு டாலரா அனுப்புறோம்; சகல வசதியோட வீடு, வாசல் இருக்கு; முதுமைய, 'என்ஜாய்' செய்ய வேண்டியது தானே...' என்றான் அலட்சியமாக! 'முதுமை, 'என்ஜாய்' செய்றது இல்ல சந்துரு... வாழ்க்கைக்கான மிச்சத் தேடல்; என் குழந்தை, பேரப்பிள்ளைன்னு வாழணும்ங்கிற இறுதி நாட்களுடைய ஏக்கம்...' 'எதுவுமே இறுதி இல்லப்பா; முடிஞ்சு போறது, இன்னொரு துவக்கத்துக்கான ஆரம்பம்...' 'அது எல்லாத்துக்கும் பொருந்தும்; மரணத்திற்கு பொருந்தாது...' அமைதியாக இருந்தான் சந்துரு. பேரப் பிள்ளைகள், கேமரா முன் நின்று, ஹாய் சொல்லின; மருமகள், குனிந்து நமஸ்கரித்து போனாள். இவருடைய மவுனமும், அமைதியான முகமும், அவனிடம் மிச்சமிருந்த பந்த பாசத்தை தூண்டி விட்டதோ என்னவோ, குழைவாய் கேட்டான்... 'வருத்தப்படுறீங்களாப்பா, யோசிச்சு பாருங்க... நான் களிமண் மாதிரி பிறந்தேன்; என்னை கனவுகளோடு உருவாக்கினது நீங்க; உயரம் தான் உலகத்துடைய பிரதானம்ன்னு கத்து குடுத்த நீங்க, இப்ப, நான் உயரத்தை எட்டும்போது சஞ்சலப்படலாமா...' 'சந்துரு... ஒரு தகப்பனுக்கு, தன் மகனுடைய உயரம், சஞ்சலமா இருக்கும்ன்னா நினைக்கிற... இல்லப்பா... நீங்க உயர உயர எங்க கண்ணை விட்டு வெதுதூரம் போயிடுறீங்க. ஒரு கட்டத்துக்கு பின், அந்த பிரிவை தாங்க முடியல. அதீதமான சவுகரியங்கள் கூட, கொஞ்ச நாள்ல அலுத்து போயிடுது. அந்த ஏக்கத்துல தான், உன்கிட்ட கேட்டேன்... உங்கம்மாவோ, இதெல்லாம் உனக்கு எடுத்து சொல்லத் தெரியாம, கோவிலே கதின்னு கிடக்குறா... இதெல்லாம் உனக்குப் புரியாது...' 'எனக்கான பொறுப்புகளும், கடமையும் புரியுது. ஆனா, நான் கடமைக்காக மட்டும் தான் படைக்கப்பட்டு இருக்கேனா... என் வாழ்க்கைய முழுமை செய்துக்க, இயங்கிட்டு இருக்கேன்; ஆனா, நீங்களும், அம்மாவும் உங்களுக்கு மகனா இருக்கிறது மட்டும் தான் என் வேலைன்னு சொல்றீங்க...' சுரீரென நிமிர்ந்தார்; கண்கள் கலங்கியது. நல்லவேளை, இந்த வார்த்தையை கேட்க, மனைவி அருகில் இல்லை. 'லேப் - டாப்'பை அணைத்து, வெளியே வந்தார். 'மார்பிலும், தோளிலும் தூக்கி வளர்த்த பிள்ளையே, 'உங்களுக்கு பிள்ளையாக இருப்பது என் வேலை இல்லை...' என்று சொன்ன பின், வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது... ஒரு முறை, ஊருக்குப் போய் உறவுகளை எல்லாம் பார்த்து வந்து, ஒரேடியாக போய் சேர்ந்து விட வேண்டியது தான்...' என்ற முடிவுடன் தான், ஊருக்கு கிளம்பி இருந்தார். ''தாத்தா தூங்குறாங்க... சும்மா அவுகள இடிச்சுட்டு இருக்கக் கூடாது...'' என்ற பக்கத்து சீட் ஆசாமியின் கட்டையான குரல் கேட்டு கண் விழித்தார். ''சார் தப்பா நினைக்காதீங்க... பையன் ரெட்டை சுழிக்காரன்; பத்து நிமிஷம் ஒரு இடத்துல உட்கார வைக்க முடியாது... உங்கள ரொம்ப தொந்தரவு செய்றான்னு நினைக்கிறேன்...'' பதில் பேசாமல் சிரித்தார், கலியமூர்த்தி. அந்த சிரிப்பை, நட்புக்கான அச்சாரமாக எடுத்துக் கொண்டான். ''நமக்கு பழங்காநத்தம்... விவசாயம் தான் தொழிலு; தென்னந்தோப்பும் இருக்கு. பெருசா விளைச்சல் இல்லாட்டியும், வீம்புக்காக விவசாயத்தை பிடிச்சுக்கிட்டு, காலத்தை ஓட்டுறோம்...'' என்றவன், ''சாருக்கு மதுரையில எங்க,'' என்றான். ''சோழவந்தான்... அக்கா, தம்பி எல்லாரும் அங்க தான் இருக்காங்க. படிச்சு, நான் வெளியில வந்துட்டேன். பேங்க் மேனேஜர் உத்யோகம்! 32 வருஷம் ஓடிப் போச்சு... ஒரே பையன்; அமெரிக்காவுல இருக்கான்...'' என்றார். உடனே, தன் பையனிடம், ''பாரு... சாரோட பையன் படிச்சு, பெரிய உத்யோகத்துல, வெளிநாட்டுல இருக்காரு. நீயெல்லாம் அங்க போக வேணாமா...''என்று, மகனின் தலையை அன்பாய் நீவி சொன்ன போது, கலியமூர்த்திக்கு கோபம் வந்தது. தன்னை மறந்து, ''இப்படித் தான் நானும் சொல்லி வளத்தேன்; கடைசியில, 'உங்களுக்கு புள்ளையா இருக்கறது மட்டும் தான், என்னோட வேலையா'ன்னு கேட்டுட்டான்; மனசு ஆற மாட்டேங்குது. இதுகள தூக்கி வளர்க்க கூடாது; அதுதான் நாம செய்யுற தப்பு...'' என்றவர், சட்டென்று, தன் தவறை உணர்ந்து, நாக்கை கடித்தார். அவரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்த பக்கத்து சீட்டுக்காரன், அவர் கண்களில் தெரிந்த விரக்தி, வெறுமையை கண்டு, 'வருத்தப்படாதீங்கய்யா... எல்லா கஷ்டமும் ஒருநாள் நம்மை கடந்து போயிடும்...'' என்றான், வேதாந்தி போலே! பரிச்சயம் இல்லாதவன் தான்; ஆனால், ஏதோ பந்தமிருப்பவனை போல், ஆறுதலாக பேசியது, இந்த சூழலுக்கு தேவையானதாய் இருந்தது. ''உங்களுக்கு புரியாது தம்பி... ஏன்னா, நீங்க இன்னும் அந்த வயச எட்டல. இதேமாதிரி தான் நானும், என் மகனை மடியிலயும், தோள்லயும் தூக்கி வளர்த்தேன். நாம வளர்க்கிற புள்ள, நாளைக்கு நம்மளவே தூரப்படுத்தி பேசினா, நம்ம வாழ்க்கைக்கு என்ன பாதுகாப்பு இருக்கு சொல்லுங்க...'' என்றார். ''சார்... நீங்க நிறைய படிச்சவங்க; உங்களுக்கு நான் என்ன சொல்றது... இருந்தாலும், என்னைப் பொறுத்தவர, பிள்ளைங்க மீது எதிர்பார்ப்பை வளர்த்துக்கிறது தப்புன்னு தான் சொல்வேன். அதுக்காக, உலகத்துல இருக்குற எல்லா மகனுகளும் சுயநலவாதிக; பெத்தவங்கள பாத்துக்கிறது இல்லன்னு சொல்ல வரல. நாம தான், நம்ம புள்ளைங்கள சுத்தி, நாம பின்னியிருக்கிற பாச வலையில இருந்து நம்மை விடிவிச்சுக்கணும். நாம வளர்ந்ததும், நம்ம அப்பா, அம்மாவை விட்டு, நம்மள விடுவிச்சுக்கும் போது, இதையெல்லாம் யோசிச்சமா என்ன! ''தன் குஞ்சுகள சிறகுகளுக்குள்ள வச்சு காப்பாத்துற பறவைங்க தான், குஞ்சுக்கு றெக்க முளைச்சதும், அதுங்கள கூட்டைவிட்டு துரத்துதுங்க... அதுக்காக, அதுகளுக்கு பாசம் இல்லன்னு அர்த்தமா என்ன... வாழ்க்கையில், ஒவ்வொரு கட்டத்துலயும் நமக்கு ஏதாவது ஒரு பிடிமானம் தேவைப்படுது; அந்த பிடிமானத்தை பிடிச்சு, அடுத்த கட்டத்துக்கு போன பின்பும், அந்த பிடிமானத்து மேல அபிமானம் வைக்கிறது தப்பிலீங்களா...'' என்றான். 'சொளேர்' என்று நிமிர்ந்து பார்த்தார். அவன் வார்த்தைகளில் இருந்த விஷய ஞானம், அவன் தோற்றத்திற்கு சம்பந்தமில்லாததாய் இருந்தது. ''குழந்தைங்க நம்ம மூலமா வந்தவங்க; நமக்காக வந்தவங்க இல்ல. புள்ளைங்க மேல நம்பிக்கை வைக்கலாம்; ஆனா, அவங்கள நம்பியே இருக்கக்கூடாது...'' கண்களை விரித்து, 'என்ன சொல்ல வர்றே...' என்பது போல் பார்த்தார், கலியமூர்த்தி. ''சார்... நமக்கு நடுவே, ஒரு பத்து மணி நேர பயணம் தான்... ஆனா, ஏதோ நம்பளை கட்டி வைக்கிறதா நீங்க நினைக்கிறீங்களான்னு எனக்குத் தெரியாது; ஆனா, நான் நினைக்கிறேன். அந்த நினைப்புல சொல்றேன்... பிள்ளைங்களும், நம்மோட வாழ்க்கையில பயணம் செய்ற பயணிங்க தான். மத்தவங்களுக்கும், அவங்களுக்கும் உள்ள வித்தியாசம், அவங்க நம்ம சொந்த ரத்தம்... அவ்வளவு தான். ''அவங்கள மட்டுமே நம்மோட உலகம்ன்னு நம்பிட்டு இருக்கிறத விட்டுட்டு, நமக்கான உலகத்துல, மத்தவங்களுக்கும் இடம் கொடுத்து பாருங்க... எந்த ஏமாற்றமும் இருக்காது. யாரையும் இழுத்து பிடிச்சு வச்சுக்கிறத விட்டுட்டு, நாம, நம்ம வேலைய பாத்தா, எல்லாம் தன்னால தேடி வரும்...'' என்று சொல்லி சிரித்தான். சிலிர்ப்பாய் இருந்தது கலியமூர்த்திக்கு! அப்படியே, கண்களை மூடி இருக்கையில் சரிந்தவர், உறங்கி போனார். மதுரைக்கு போய் வந்ததில் இருந்து, கணவருடைய போக்கில் தென்பட்ட மாற்றத்தை அதிசயமாக பார்த்தாள், கலியமூர்த்தியின் மனைவி. 'இது வயதான பறவைகளின் சரணாலயம்' என்று வாசலில், 'போர்டு' மாட்டினார். ஹாலில் டேபிள் போட்டு, நோட்டீஸ் மற்றும் வவுச்சருடன் அமர்ந்தார். தினமும் பலர் வந்து போக ஆரம்பித்தனர். ''என்ன தான் செய்றீங்க... ஒண்ணும் புரியல...'' என்ற மனைவியை, புன்னகையுடன் பார்த்து, ''மாடி போர்ஷனை காலி செய்து, 'ஓல்டு ஏஜ் ஹோம்' ஆரம்பிக்க போறேன். பிள்ளைகளால் ஒதுக்கப்பட்ட பெரியவங்க எல்லாரும் இங்க வந்து சேரலாம். மாசம் ஐயாயிரம் ரூபாய் முதல் அவங்க விருப்பப்பட்ட தொகைய தரலாம். அந்த தொகைய கொண்டு, ஏழை முதியவங்கள இலவசமா கவனிச்சுக்கலாம். ''அது மட்டுமல்ல, வருஷத்துக்கு, ஏதாவது கோவில் இருக்குற ஊருக்கு, டூர் கூட்டிட்டு போற, 'ஸ்கீம்' கூட இருக்கு. விளையாட்டா தான் பேப்பர்ல விளம்பரம் குடுத்தேன்; இதோட, நாலு பேர் போன் செய்துட்டாங்க. ஏதோ புதுசா வேலை செய்யப் போற நம்பிக்கை பிறந்திருக்கு...'' ''ஐயாவோட புது அவதாரம் நல்லாத்தான் இருக்கு; ஆனா, இந்த ஐயாயிரம் தந்தாத்தான் சேர்த்துப்பேன்னு சொல்றது மட்டும், கொஞ்சம் இடிக்குது...'' என்றாள் கேலியாக! ''அப்படியில்ல... பத்து பேர் சேர்ந்தாலும் சமைக்க ஆள் போடணும்; அவங்களுக்கு தேவையானதையெல்லாம் செய்யணும். அதுக்கெல்லாம் நம்மகிட்ட பொருளாதாரம் பத்தாது. நான், லாபம் சம்பாதிக்க, இந்த வேலைய செய்யல... நம்மளைப் போல வயசானவங்களும் இந்த உலகத்துல வாழறதுக்கு அர்த்தம் இருக்குன்னு காட்டத்தான், இந்த முயற்சிய செய்றேன்,'' என்றார். ''நம்மால் முடியுமாங்க...'' ''முடியும்ன்னு நம்புறேன்; ஒருவேளை, என்னால முடியாமப் போனா, இங்க வர்றவங்க யாராவது அதை எடுத்து நடத்துவாங்க...'' நாட்கள் வாரங்களாகி, வாரங்கள், மாதங்களாக உருண்டோடின. அப்பாவிடம் இருந்து போன் காலே இல்லை. 'தன் வார்த்தை அவரை இத்தனை விரக்தியடைய வைத்து விட்டதா...' என்ற குற்ற உணர்ச்சி உண்டானது, சந்துருவுக்கு! வீடியோ காலீங் செய்தான். தாமதிக்காமல் எடுத்தார், கலியமூர்த்தி. வீட்டில் கேட்ட பேச்சுக்குரலும், நடமாட்டங்களையும் உணர்ந்து, ''என்னாச்சுப்பா... வீட்டில் நிறைய பேச்சுக் குரல் கேட்குது; மதுரையில இருந்த நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்களா?'' என்று கேட்டான். ''அப்படிக்கூட வச்சுக்கலாம்... இவங்களும் நமக்கு சொந்தங்கள் தான்; அடுத்த நொடி வாழ்க்கைக்கு பாதுகாப்பையும், நம்பிக்கையும் யார் ஏற்படுத்தி தராங்களோ, அவங்க தான் நமக்கு உறவுன்னு நீ தான் எனக்கு கத்துக்குடுத்ததே... அதனால தான் அடுத்த வேளை வாழ்க்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக்க, வீட்டில், 'ஓல்டு ஏஜ் ஹோம்' ஆரம்பிச்சுட்டேன்,'' என்றார், சிரித்தபடி! மறுமுனையில் பதறிப் போனான் சந்துரு. ''என்னப்பா உளறல் இது... சொந்த வீடுப்பா அது... இன்னைக்கு தேதிக்கு, ரெண்டு கோடி ரூபாய் பெருமானமுள்ள வீடு. நீங்க பாட்டுக்கு டிரஸ்ட், அது, இதுன்னு எழுதி வச்சுட்டு, பின்னாடி கஷ்டப்படுத்தாதீங்க. முதல்ல, அம்மாவ கூப்பிடுங்க, நான் பேசணும்...'' ''சாரி சந்துரு... ஹோம்ல இருக்குற பிரண்ட்ஸ் கூட சேர்ந்து, தாயம் விளையாடிட்டு இருக்கா, உங்கம்மா. இப்ப, எங்களுக்கும் உனக்கு அப்பா, அம்மாவா இருந்துட்டு, உன்னை எதிர்பார்த்து காத்திட்டு இருக்கிறது மட்டும் வேலை இல்ல; உன்னை கஷ்டப்படுத்த இந்த வார்த்தைய சொல்லல... ஆனா, நீ தான், வாழ்க்கையில எனக்கு கடினமான விஷயத்தை, லேசா புரிய வச்ச... அதுக்கு, உனக்கு நன்றி சொல்லணும்...'' என்ற அப்பாவை, அன்பு மேவ பார்த்தான், சந்துரு. அந்த பார்வை, அவர்களுக்குள் இருந்த இடைவெளியை தகர்த்தது. http://www.dinamalar.com
 20. இளமை புதுமை பல்சுவை

  கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்! யாழ் ஸ்ரீதேவி கலம்கரி... ஆந்திராவின் பழைமையான கலை வடிவம். முகலாயர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்களின் ஆதரவில் வளர்ந்த அழகு ஆர்ட்! ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டணம் நகரின் அருகில் உள்ள பெத்தென்னா... கலம்கரியின் பிறப்பிடம். குர்தா தொடங்கி, பிளவுஸ், அனார்கலி, லெஹங்கா, துப்பட்டா, கைப்பை என அனைத்திலும் ஃபேஷன் மெட்டீரியலாகியிருக்கிறது கலம்கரி. கடந்த ஐந்தாண்டுகளாக கலம்கரிக்குப் புத்துயிரூட்ட உழைத்து வருபவர், ஹைதராபாத் தில் வசிக்கும் சங்கீதா. இந்திய அளவில் ஆண்டுக்குப் பத்து இடங்களில் கலம்கரி திருவிழா நடத்திவரும் சங்கீதா, இதன் பழைமை சிதையாமல் புதுமைப் படுத்திவரும் டிசைனர். ஆன் லைனில் இவருக்கு (facebook.com/SangeethaKalamkari) மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்! ``நான் மதுரைப் பொண்ணு. திருமணத்துக்குப் பிறகு, இருபது வருஷங்களா ஹைதராபாத்வாசி'' என்று சிநேகமாகப் பேசுகிறார் சங்கீதா. ``டிஸ்லெக்சியா, ஆட்டிசம் எனக் கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ‘ஸ்மைல்ஸ்’ என்ற பெயரில் பத்து வருஷங்களா ஸ்பெஷல் ஸ்கூல் நடத்திட்டு வர்றேன். அஞ்சு வருஷங்களுக்கு முன்னால, ஒரு பிசினஸ் செய்ய லாமேனு யோசிச்சு, ‘லூம்ஸ்’ என்ற பெயர்ல ஒரு சின்ன ஜவுளிக்கடை ஆரம்பிச்சேன். அதுல தனித்த அடையாளம் பெற என்ன செய்ய லாம்னு யோசிச்சப்போ, கலம்கரி வேலைப்பாடு நினைவுக்கு வந்துச்சு’’ என்பவர், அதற்கான கிரவுண்ட் வொர்க்கில் இறங்கியிருக்கிறார். ``காளஹஸ்திக்குப் போய் கலம்கரி ஓவியங்கள் துணிகளில் உருவாகும் விதத்தைப் படிப்படியா தெரிஞ்சுக் கிட்டேன். இயற்கை முறை, கடினமான மனித உழைப்பு, நுணுக்கமான வேலைப்பாடுகள்னு தயாரானாலும், காட்டன் துணியில வரையப்படுறதால அது அதிக பிரபலம் ஆகலைனு புரிஞ்சுக்கிட்டேன். ஒரு ப்யூர் கலம்கரி வொர்க் புடவை 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும். ஆனா, காட்டன்ல அந்த விலைக்குரிய ரிச்னஸ் தெரியாது. அதுவே, கலம்கரி ஓவியங்களை சில்க், சந்தேரி என வேற ஃபேப்ரிக்ல போடும்போது கிராண்ட் லுக் கிடைக்கும்னு முயற்சி செய்தேன். கலம்கரி கலைஞர்கள்கிட்ட என் ஐடியாவைச் சொல்லி, ஆர்ட்டிஸ்ட் குழுவை உருவாக்கினேன். வழக்கமான கலம்கரியில சிவப்பு, பச்சை, மெஜந்தானு இயற்கையில் கிடைக்கிற வண்ணங்கள் மட்டுமே இருக்கும். அவற்றை இன்னும் பளிச்னு காட்ட, பிக்மென்ட் கலர்ஸை அவற்றுடன் சேர்த்தேன். ஒரு வைப்ரன்ட் லுக் கிடைச்சது. இருந்தாலும், புடவை அல்லது சல்வார் முழுக்க கலம்கரியா இருந்தா அவ்வளவா ஈர்க்காதுனு, கலம்கரி பார்டர், கலம்கரி அப்ளிக்னு அங்கங்க பேட்ச் வொர்க் செய்யலாம்னு டிசைன் செய்தேன்’’ என்பவருக்கு, முதல் சில படிகள் வழுக்கவே செய்திருக்கின்றன. ``இவ்வளவு மெனக்கெட்டும், ஆரம்ப காலத்துல பெரிய வரவேற்பு கிடைக்கலை. மனம் தளராம குர்தா, அனார்கலினு அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கினேன். ஆடைக் கண்காட்சிகளில் கலந்துக்கிட்டப்போ, ஜிகுஜிகு உடைகளுக்கு மத்தியில் கலம்கரியை மக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தாங்க... வாங்கலை. அப்போதான், கலம்கரி தனித்துவமானது, அதுக்குத் தனியா கண்காட்சி நடத்தணும்னு கத்துக்கிட்டு களத்தில் இறங்கினேன். நான் டிசைன் செய்த புடவை, சல்வாருக்கு நானே மாடலா மாறினேன். என் முகநூல் பக்கத்தில் என் கலம்கரி முயற்சிகளை அப்டேட் செய்துட்டே இருந்தேன். ஆன்லைன்ல கலம்கரியைத் தேடுறவங்க என்னோட புராடக்டை வாங்க ஆரம்பிச்சாங்க’’ என்பவருக்கு, அன்று முதல் வெற்றிதான்! ``காளகஸ்தியிலுள்ள 50 கலைஞர்களை ஒருங்கிணைத்து எனது டிசைன்களை உருவாக்குறேன். அதுல பெரும்பாலானவங்க பெண்கள். என்னோட புதிய முயற்சிகள் அவங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கு. பழைமைக்கு உயிர்கொடுக்கிறதுதான் ஃபேஷன். அதை நம்பினதுனாலதான் கலம்கரி எனக்குப் புகழ் கொடுத்திருக்கு’’ என்கிறார் சங்கீதா நன்றியுடன்! கதை சொல்ல உருவான கலை! நாயக்க மன்னர்களின் காலத்தில் இந்து சமயப் புராணக் கதைகளைப் பாடகர்களும் இசைக் கலைஞர்களும் ஊர் ஊராகச் சென்று சொல்லி வந்தனர். அப்போது அந்தக் கதைகளை பெரிய சீலைகளில் ஓவியக் காட்சிகளாக வரைந்து எடுத்துச்செல்லத் தொடங்கினர். முதல் கலம்கரி ஓவியம் அதுதான். நாயக்கர் காலத்தில் இக்கலை தஞ்சை வரை பரவியது. கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சிக்கல் நாயக்கன் பேட்டையில் இன்றும் கலம்கரி ஓவியங்கள் வரையப்படுகின்றன. இங்கு நம் மண்ணின் மரபுகளுடன் ‘தஞ்சாவூர் கலம்கரி’ என்ற புதிய பாணி பின்பற்றப்படுகிறது. தாவரச் சாயங்களே அசல் கலம்கரி! அடிப்படையில் கலம்கரி என்பது, தாவரச் சாயங்கள்கொண்டு பருத்தித் துணிகளில் கைகளால் அழகிய ஓவியங்களாகத் தீட்டப்படுவது. இன்று கலம்கரியை பல ரகத் துணிகளிலும், செயற்கைச் சாயங்களைக் கொண்டும், மெஷின் பிரின்ட்களாகவும் உருவாக்குகின்றனர். என்றாலும், இயற்கைச் சாயம் கொண்டு பாரம்பர்ய முறையில் தயாரிக்கப்படும் கலம்கரிக்கு ஒரு ஸ்பெஷல் மார்க்கெட் இருக்கிறது. http://www.vikatan.com
 21. உயிர் வளர்த்தேனே

  உயிர் வளர்த்தேனே 24: வணிகப் பண்டங்களில் இருந்து விலகி நிற்க... பள்ளிக்குப் போகும் குழந்தைகளின் அன்றாட காலை உணவு மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கிறது. தனிப்பயிற்சி, வீட்டுப்பாடம் என வேலைகள் அனைத்தையும் முடித்த பின்னர்த் தங்களைத் தளர்த்திக்கொள்வதையும் ஒரு வேலையாகவே அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சி பார்ப்பது, கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது, தலையைப் போனுக்குள் நுழைத்துக்கொள்வது என மீண்டும் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகிக் கிட்டத்தட்ட நள்ளிரவில்தான் படுக்கவே செல்கிறார்கள். நள்ளிரவில் தூங்கச் செல்லும் குழந்தைகளைக் காலையில் பள்ளிக்கு அனுப்புவதற்கு, இரக்கமில்லாமல் அடித்து எழுப்ப நேர்கிறது. குளியல், காலைக்கடன் கழிப்பது போன்றவற்றை அரைகுறையாகவே முடித்த நிலையில் பிளஸ் டூ பையனுக்கும்கூட அம்மாவே ஊட்டினாலும் அந்த உணவு அரைத் திடப்பொருளாகத்தான் வயிற்றுக்குள் இறங்குமே தவிர, உணவாக இரைப்பையைச் சென்றடையாது. குழந்தைகளின் படிப்பில் அக்கறையுள்ள பெற்றோர் அவர்களது முக்கியப் பருவமான பள்ளி வயதில் உடல்நலனில் கண்டிப்பான அக்கறையைக் காட்ட வேண்டும். அவர்களது எதிர்காலத்திற்கென்று காசைக் கொட்டுகிறோம், கடன்படுகிறோம். ஆனால் நிகழ்காலத்தில் அவர்களது உடலைப் பாழ்படுத்துவதை ‘வேறு என்ன செய்வது?’ என்று கேள்விகளுடனேயே தொங்கலில் நிறுத்துகிறோம். மதிய உணவு முழு ஆற்றல் தருமா? காலை 7 – 9 மணிக்குச் சிறுகுடல் ஆற்றலுடன் இயங்கும் நேரம். அந்த நேரத்தில் கடனே என உணவு திணிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த உடலையும் கண்டிப்பாகப் பாதிக்கும். சரி, காலை உணவுதான் பொருத்தமாக இல்லை. மதிய உணவாவது முழு ஆற்றலை வழங்கக்கூடியதாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. இந்த அம்சங்களைத் தெளிவாக உணர வேண்டும் என்பதற்காகவே இங்கே விரிவாகப் பேசுகிறோம். பல லட்சங்கள் நுழைவுக் கட்டணமாகவும், பதினாயிரங்களை மாதாந்திரக் கட்டணமாகவும் கல்விக்குச் செலுத்தினாலும் சர்வதேசப் பள்ளிகள் உட்படப் பெரும்பாலான பள்ளிகளில் மதிய உணவு உடனடியாகச் சமைத்து வழங்கப்படுவதில்லை. அதற்கு நம் அரசுப் பள்ளிகளே தேவலாம். சத்துணவு என்ற பெயரில் ஓரளவு ஒப்புக்கொள்ளும் உணவை வழங்குகின்றன. இப்போது சில பள்ளிகள், குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுகிறேன் என்ற பெயரில், ஒவ்வொரு நாளும் என்ன மெனு என்பதைப் பட்டியலிட்டுக் கொடுத்து மதிய நேரத்தில் கண்காணிக்கிறார்கள். இதை அவர்கள் அக்கறையாகவே செய்தாலும், அது அராஜகமான ஒன்றாகவே தோன்றுகிறது. குழந்தை கள் அனைவரும் ஒரே உணவைக் கொண்டுவந்தால் எப்படித் தங்களுக்குள் பரிமாற்றம் செய்துகொண்டு, நிறைவாக உண்ண முடியும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. உணவில் சத்துக் கணக்கைவிட மன நிறைவுக்குத்தான் முதலிடம் என்பதை உணரும் பக்குவத்தை நம் தனியார் பள்ளிகள் ஒருபோதும் அடைந்துவிட முடியாது. தீவிரக் கட்டுப்பாடு அவசியமா? ஒவ்வொரு நாளும் விதவிதமான காய்கறிகளை உண்ண வேண்டும் என்று நிர்பந்திக்கின்றன சில பள்ளிகள். சதை பிடித்து வளர்கிற பருவத்தில் குழந்தைகள் வயிற்றை எளிதில் அடைக்கும் நார்ச்சத்து மிகுந்த உணவை வெறுப்பது இயல்புதான். பெரியவர்களுக்கான நல்ல உணவு என்று சொல்லப்படுபவை அத்தனையும் குழந்தைகளுக்கும் பொருத்தமானவையல்ல. காய்கறி, கீரை நல்ல உணவு என்று சொல்லித் தலையணைக்குள் பஞ்சை திணிப்பதுபோல, குழந்தைகளின் வாயில் காய்கறிகளைத் திணிக்க முயற்சிக்கக் கூடாது. ஓடியாடி உடலாற்றலை எரிக்கும் பருவத்தில் எரிமச் சத்து (கார்போஹைட்ரேட்) உணவையும், உடல் கட்டுமானத்துக்குரிய கடினத்தன்மை கொண்ட கிழங்கு போன்றவற்றை வறுவலாகவும் உண்ணக் குழந்தைகள் விரும்புவது இயற்கையே. குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட உணவை அறிவார்த்தமாகத் தேர்வு செய்வதில்லை. அப்படித் தேவையும் இல்லை. துரித உணவுக்கு மாற்று? அப்படியானால் பளபளப்பான காகிதங்களில் சுற்றிவரும் சக்கைப் பண்டங்களையே குழந்தைகள் விரும்புகிறார்களே, அது சரியா என்ற கேள்வி எழுகிறது. சரியல்லதான். `ஜங்க் ஃபுட்’ எனப்படும் இந்த வணிகப் பண்டங்கள் எந்தச் சத்துகளையும் தருவதில்லை என்பதுடன், குழந்தைகளின் மென்மையான உள்ளுறுப்புகளை மோசமாகச் சிதைத்து நிரந்தர நோயாளிகளாக்கி விடுகின்றன. வேறு நல்ல பண்டங்களை உண்ண விடாத அளவுக்கு நாவின் சுவை மொட்டுகளையும் சுரண்டி கெடுத்துவிடுகின்றன. குழந்தைகளை எப்படித் தமது தயாரிப்புக்கு அடிமையாக்குவது என்று பரிசோதனைக்கூடத்தில் தலையைக் கசக்கிக் கொண்டிருப்பவர்களை ஆராய்ச்சியாளர்கள் என்று சமூகம் நம்பிக்கொண்டிருப்பதே இதற்குக் காரணம். இந்த நம்பிக்கை அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. வணிக நொறுவைப் பண்டங்களில் இருந்து நம் குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி என்று நம் பெற்றோர்கள், வணிக நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதல் சிரத்தையுடன் சிந்தித்து, செயல்பட வேண்டியிருக்கிறது. இயற்கையான, விதம்விதமான சுவை கொண்ட உணவைப் பச்சிளம் பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்குப் பழக்கிவிட்டால் வணிகப் பண்டங்களை நிச்சயமாக அவர்கள் விரும்ப மாட்டார்கள். சாக்லேட் விரும்பாத சிறுவன் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர்ச் சிங்கப்பூர் சென்று திரும்பி இருந்தேன். நம்மவர்களிடம் உள்ள அதே வழக்கத்துடன் வயதானவர்களுக்குக் கோடாலித் தைலம், நண்பர்களுக்கு டி சர்ட், பெண்களுக்குப் புடவை, பிள்ளைகளுக்குச் சாக்லேட் வாங்கி வந்திருந்தேன். என்னைக் காண ஒரு நண்பர் வந்திருந்தார். உடன் அவரது ஆறு வயதுப் பையனும். என் அக்கம்பக்க வீட்டுக் குழந்தைகள் நாவில் உமிழ்நீர் ஊற, நான் வாங்கி வந்த சாக்லேட்களின் ஜிகுஜிகுப்பான உறைகளைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். நண்பரின் பையன் கைக்குச் சில சாக்லெட் பார்களை எடுத்து நீட்டினேன். நண்பர் மிகுந்த மென்மையான சுபாவம் கொண்டவர். அதே பண்புடன் பதற்றமின்றி “இதெல்லாம் வேண்டாம் … அவன் சாப்பிட மாட்டான்” என்றார். அப்படிச் சொல்லிக் கொண்டி ருக்கும்போது அவனும் மற்றக் குழந்தைகளைப்போல மினுமினுப்பான காகிதத்தை ஆர்வத்துடன் பிரித்துக் கொண்டிருந்தான். “குழந்தைகளின் சின்னச் சின்ன விருப்பங்களுக்கு நாம் பெரிய கட்டுப்பாடு விதிக்க வேண்டியதில்லை” என்று நண்பரிடம் தத்துவார்த்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். பாரின் காகிதத்தைப் பிரித்த பையன், சாக்லேட்டை வாயில் வைத்தானே தவிர, அவனால் அதைச் சுவைக்க முடியவில்லை. உதட்டில் அரக்கு நிறத்தில் கூழாக வழிய விட்டான். கண் விழிகள் பிதுங்கின. நண்பர் சிரித்தபடியே “நான் சொன்னேனில்லையா….. சிறுவயது முதற்கொண்டே இதைச் சுவைத்துப் பழக்கமில்லாததால் மற்றக் குழந்தைகளைப் பார்த்து ஆர்வத்தில் முயன்றாலும், இது போன்றவற்றின் சுவையை அவனது நாவும் உடலும் ஏற்றுக் கொள்வதில்லை” என்றார். இந்நிகழ்வு எனக்கு மிகப்பெரிய படிப்பினையைக் கொடுத்தது. நமது ஏட்டுப் படிப்புகளை மட்டுமல்ல, ‘நெட்’ மேய்ச்சலையும் கள அனுபவங்களுடன் பொருத்திப் பார்த்த பிறகே பின்பற்றத் தொடங்க வேண்டும். பட்டாணி சாதம் பராக்! இந்த வாரம் குழந்தைகளின் கண்களுக்கே விருந்து அளிக்கும் சத்தான ஒரு சாத வகை குறித்துப் பார்த்து விடுவோம். தேவையானவை: உரித்த பச்சைப் பட்டாணி நூறு கிராம், கிட்டத்தட்டப் பட்டாணி அளவுக்குச் சிறுசிறு கியூப்களாக வெட்டிய கேரட், துருவிய இஞ்சித் துண்டுகள், நசுக்கிய பூண்டு இரண்டு பல், சுமார் 20 கிராம் வெண்ணெய், நான்கு கிராம்பு, அரை அங்குல நீளப் பட்டை. சமைக்கப் போகும் அரிசியைத் தேங்காய்ப் பாலில் ஊற விட வேண்டும். குக்கரை அடுப்பில் ஏற்றி வெண்ணெயைப் போட்டு உருகியதும், இஞ்சி பூண்டைச் சேர்த்துப் புரட்ட வேண்டும். அது வாசம் கிளப்பியதும் கிராம்பு, பட்டையை ஒன்றிரண்டாகத் தட்டி போட வேண்டும். இரண்டும் கலவையான வாசனையை எழுப்பும்போது பச்சைப் பட்டாணி, கேரட் இரண்டையும் போட்டு நிறம் மாறாமல் புரட்டி அரிசியின் அளவுக்கு ஒன்றரை மடங்கு (தேங்காய்ப் பாலில் ஊறியிருப்பதால் அரைப் பங்கு குறைத்துக்கொண்டு) நீர் விட்டுக் கொதி வந்ததும், அரிசியைப் போட்டு மூடி வைக்க வேண்டும். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கமகமவென்ற வாசனையோடு பட்டாணி சாதம் நம்மை அழைக்கும். பச்சை, சிவப்பு அங்கங்கே இளங்கறுப்பு நிறத்தில் மின்னும் பட்டைக் கிராம்பு எனப் பல வண்ணச் சாதம், அப்போதே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும். அரிசி தேங்காய்ப்பாலில் ஊறியிருப்பதால் சாதத்தின் நிறம் வெள்ளையாக டாலடிக்கும். சுவையும் மென்மையாகக் கரைந்து உடலெங்கும் பரவும். கட்டுரையாளர், உணவு எழுத்தாளர் http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-24-வணிகப்-பண்டங்களில்-இருந்து-விலகி-நிற்க/article9559145.ece
 22. புதிய அர­சியல் அமைப்பு குறித்து மஹிந்­த­வுடன் விவா­தத்­திற்கு தயார் முக­மூ­டி­களை கிழித்­தெ­றிவோம் என்­கிறார் அனு­ர­கு­மார (ஆர்.யசி) புதிய அர­சியல் அமைப்பு நாட்­டினை பிரிப்­ப­தாக கூறு­வ­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி நாட்­டினை பிரிக்கும் அணியில் உள்­ள­தாக கூறு­கின்­றனர். தைரியம் இருந்தால் அர­சியல் அமைப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ என்­னுடன் விவா­தத்­திற்கு வர­வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக சவால் விடுத்தார். மக்கள் முன்­னி­லையில் இவர்­களின் ஊழல் குற்­றங்­களை வெளிப்­ப­டுத்தி நிர்­வா­ணப்­ப­டுத்­தவும் தயார் எனவும் அவர் குறிப்­பிட்டார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தேர்தல் இயக்கக் கூட்டம் அம்­பாந்­தோட்டை தங்­கல்லை பிர­தே­சத்தல் இடம்­பெற்­ற­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், இந்த நாட்­டினை புதிய பாதையில் மாற்றி செல்ல இன்று மக்கள் மாற்று சக்தி ஒன்­றினை எதிர்­பார்க்­கின்­றனர். நாம் சரி­யான பாதை­யினை மக்­க­ளுக்கு காண்­பிக்க முடியும் ஆனால் மக்­களே மாற்­றத்­தினை உரு­வாக்க வேண்டும். இன்று நாடு முகங்­கொ­டுத்து வரும் பிரச்­சி­னை­களில் இருந்து விடு­பட வேண்டும் என்றால் மக்கள் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த வேண்டும். அதற்­கான தலை­யீ­டு­களை மக்கள் கையில் எடுக்க வேண்டும். மேலும் ஊட­கங்­களில் இன்று ஆழ­மான அர­சியல் கொள்கை ஒன்று தேவைப்­ப­டு­கின்­றது. மக்­களை குழப்பும் அல்­லது தொடர் நாட­கத்­தினை போல் ஊட­கங்கள் செயற்­ப­டு­வது வெறுக்­கத்­தக்­க­தாகும். வேடிக்­கை­யான அர­சியல் காட்­சி­களை காட்டி மக்­களை போலி­யான அர­சி­யலின் பக்கம் திருப்­பவே முயற்­சிக்­கின்­றனர். தொலைக்­காட்­சியில் ஒரு மணி­நேரம் ஆழ­மான அர­சியல் கலந்­து­ரை­யாடல் செய்ய வேண்டும். பத்­தி­ரி­கை­களும் மக்கள் மத்­தியில் சென்­ற­டையும் அர­சியல் பத்­தி­களை வெளிப்­ப­டுத்த வேண்டும். ஊட­கங்­களில் சிறிது கால­மாக தொடர்ச்­சி­யாக ரவி கரு­ணா­நா­ய­கவை மட்டும் தலைப்பு செய்­தி­யாக வைத்­தி­ருந்­தனர். அதன் பின்னர் விஜ­ய­தாச ராஜபக் ஷவை பிடித்­துக்­கொண்­டனர். இப்­போது அர­சியல் அமைப்பு பற்றி பேசுகின்றனர். எமது நாடு இன்று பொரு­ளா­தார ரீதியில் வீழ்ச்சி கண்­டுள்­ளது. நாட்டின் பொரு­ளா­தாரம் வளர்ச்சி கண்­டுள்­ளது என்றால் வேலை­வாய்ப்­புகள் கிடைக்கும், சுகா­தாரம், விவ­சாயம், கல்வி அனைத்தும் வளர்ச்சி காணும். ஆனால் இவை அனைத்தும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து துறை­க­ளிலும் வீழ்ச்சி கண்­டுள்­ளது. நாட்டில் 40 வீத­மான இளம் பராயத்தினர் தொழில் இல்­லாது உள்­ளனர், அல்­லது படிக்­காது உள்­ளனர். ஏனெனில் எமது நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. எமது நாட்டின் மிக முக்­கிய நெருக்­கடி நாம் வாங்­கிய கடன்­களில் தான் தங்­கி­யுள்­ளது. நாடு பாரிய கடன் நெருக்­க­டியில் உள்­ளது. முன்­னைய ஆட்­சியின் போது வாங்­கிய கடன்­களின் தொகை மிக அதி­க­மாக உள்­ள­தாக இந்த அர­சாங்கம் கூறு­கின்­றது. ஆனால் ஆட்­சியை பிடிக்கும் போது சர்­வ­தேச நிதிகள் குவி­கின்­றன, நன்­கொ­டைகள் வரு­கின்­றன என இவர்கள் கூறினர். அவை அனைத்தும் எங்கே? எவரும் எமக்கு கடன் தரு­வ­தில்லை, முழு­மை­யான நிதி கடன் அடிப்­ப­டி­யி­லேயே தரு­கின்­றனர். ஆனால் இந்த ஆட்­சி­யா­ளர்கள் மக்­க­ளுக்கு பொய்­களை கூறி ஏமாற்­றியே ஆட்சி செய்து வரு­கின்­றனர். இப்­போது மட்டும் அல்ல, கடந்த காலங்­க­ளிலும் இதே பொய்யை கூறியே ஆட்சி செய்­கின்­றனர். நாம் ஜப்பான், சீனா, குவைத், இந்­தியா, டென்மார்க், அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடுகள் மற்றும் உலக வங்கி, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி, இலங்கை வங்கி, செலான் வங்­கியில் கூட அர­சாங்கம் கட­னா­ளி­யாக உள்­ளது. இதன் கார­ண­மாக தான் இலங்­கையின் நிலங்­களை அவர்கள் சொந்தம் கொண்­டா­டு­கின்­றனர். அர­சாங்­கமும் இலங்­கையின் வளங்­களை விற்­றா­வது மேலும் கொஞ்சம் பணத்தை பெற்­றுக்­கொள்ள முடி­யுமா என்றே பார்க்­கின்­றனர். ஆகவே இந்த நிலை­மை­யினை தடுக்க வேண்டும். எமது முழு நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் அடி­மை­யாக்க முன்னர் இந்த மோச­மான ஆட்­சி­யா­ளர்­களை விரட்­டி­ய­டிக்க வேண்டும். மக்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்த வேண்டும். இலங்­கைக்­கான பொருட்­களை இறக்­கு­மதி செய்ய ஒரு ஆண்­டுக்கு 2000 கோடி டொலர் தேவைப்­ப­டு­கின்­றது, ஆனால் ஏற்­று­மதி மூலம் எமக்கு 1000 கோடியே கிடைக்­கின்­றது. ஆகவே எமது பொரு­ளா­தார முகா­மைத்­துவம் மிகவும் மோச­மா­ன­தாக உள்­ளது. உள்­நாட்டு உற்­பத்தி எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்­பது தெரி­ய­வில்லை. இதன் கார­ண­மா­கவே டொலர் பெறு­மதி இன்று அதி­க­ரித்­துள்­ளது. எமது நாட்டின் ரூபாய் வீழ்ச்சி கண்­டுள்­ள­மையே இதற்குக் காரணம். இது எமது மொத்த பொரு­ளா­தா­ரத்­திலும் தாக்­கத்தை செலுத்தும். இதனால் எமது கடன் தொகை மேலும் அதி­க­ரிக்கும். இருக்கும் கடன் தொகையை விடவும் 28 கோடி ரூபாவால் எமது கடன் அதி­க­ரிக்கும். அம்­பாந்­தோட்டை, மத்­தள, திரு­கோ­ண­மலை திட்­டங்­களை முன்­னெ­டுக்க நாம் வாங்­கிய கடன் 40 ஆயிரம் கோடி­க­ளாகும் . ஆனால் இன்று நாட்டின் ரூபாயின் வீழ்ச்சி கண்­டுள்­ளது அடுத்து 47 ஆயிரம் கோடி­யாக எமது கடன் தொகை அதி­க­ரித்­துள்­ளது. இதுவா நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி? 30 வீத­மாக எமது ஏற்­று­மதி இன்று 14 வீத­மாக குறை­வ­டைந்­துள்­ளது. இது நாட்­டுக்கு ஒரு­போதும் நல்­ல­தல்ல. இன்று எம்மை விட பின்­தங்­கிய நாடுகள் அனைத்தும் பொரு­ளா­த­ரத்தில் வளர்ச்சி கண்டு வரு­கின்­றன. ஆனால் எமது ஆட்­சி­யா­ளர்கள் இன்­று­வ­ரையில் கொள்­ளை­ய­டித்து வாழ்ந்து வரு­கின்­றனர். ஏழைகள் போல் வாழ்­வதால், வெள்­ளைக்­காரர் போல் வாழ்­வ­தாலோ , சர்­வ­தேச நாடு­களின் நண்பன் என்று கூறும் எவரும் தலை­வர்கள் அல்ல. நாட்டின் பொரு­ளா­த­ரத்தை சரி­யான முறையில் கொண்­டு­சென்று மக்­களை பாது­காக்கும் நபர்­களே தலை­வர்கள். மக்கள் கட­னா­ளி­யாக்கி, நாட்­டினை சர்­வ­தே­சத்­திற்கு விற்று, சொத்­துக்­களை கொள்­ளை­ய­டிக்கும் இவர்கள் எவரும் மக்கள் தலை­வர்கள் அல்ல. இன்று மக்கள் நோயா­ளி­க­ளாக மாறி வரு­கின்­றனர். கல்­வி­யற்ற சமூகம் உரு­வாகி வரு­கின்­றது, ஊழல், குற்­றங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றது, இந்த தலை­வர்கள் மூலம் உரு­வாக்­கப்­பட்­டுள்ள சமூகம் இவ்­வாறே அமைந்­துள்­ளது. ஆனால் இவற்றை எல்லாம் விட்டு வெறு­மனே நாடக அர­சி­யலில் அனை­வரும் மூழ்­கி­யுள்­ளனர். புதிய அர­சியல் அமைப்பு நாட்­டினை பிரிப்­ப­தா­கவும், இன­வா­தத்­திற்கு வாய்ப்­பு­களை கொடுப்­ப­தா­கவும் கூறு­வ­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி அதற்கு துணை போவ­தா­கவும் கூறு­கின்­றனர். எம்மை பிரி­வி­னை­வா­திகள் என்று கூறிக்­கொண்டு மஹிந்த, விமல் போன்­ற­வர்­களே பிரி­வி­னை­வா­தி­களின் பக்கம் சேர்ந்­துள்­ளனர். அர­சியல் அமைப்பு குறித்து விவா­தத்­திற்கு எம்மை அழைக்­கின்­றனர். அர­சியல் அமைப்பு குறித்து விவாதம் செய்ய நான் தயார், ஆனால் அவர்­களின் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்­னுடன் விவா­தத்­திற்கு வர­வேண்டும். அவர்­களின் தலைவர் மஹிந்­தவும் ஜே. வி.பி யின் தலைவராக நானும் விவாதம் செய்யலாம். அதற்கான தைரியம் இருக்கும் என்றால் அவர் என்னுடன் விவாதத்திற்கு வரவேண்டும். தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொண்டு இந்த நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்து நாட்டினை நாசமாக்கிய அனைத்துமே எமக்கு நன்றாகத் தெரியும். கொலைகள், கொள்ளைகள் இவர்கள் செய்த அனைத்துமே எமக்கு நன்றாகத் தெரியும். இவை அனைத்தையும் வெளிப்படுத்தி இவர்களை மக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி இவர்களின் முகமூடிகளை கிழித்தெறிய நாம் தயார். அதற்கான எந்த மேடையிலும் இவர்களுடன் நாம் விவாதிக்க தயாராக உள்ளதாக என்றார். http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-24#page-1
 23. படம் - 1: ஏழை நாடான இந்தியாவில் - பட்டினி பிரதேசமான இந்தியாவில் - பிரதமர் மோடி வருகை... படம் - 2:. நெதர்லாந்தின் பிரதமர் Appointment வாங்கிய நேரத்தில் தனது நாட்டு அரசரை சந்திக்க அவரது இருப்பிடத்திற்கு வருகை... உங்கள நீங்களே கலாய்ச்சிகிட்டா, நாங்க எதுக்குடா இருக்கோம்....
 24. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
 25. பார்முலா-1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி பார்முலா-1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 33 நிமிடம் 50.991 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். ஆஸ்டின்: பார்முலா-1 கார் பந்தயத்தின் 17-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி போட்டி ஆஸ்டினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) 1 மணி 33 நிமிடம் 50.991 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ) 2-வது இடம் பிடித்தார். இன்னும் 3 சுற்று பந்தயங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் லீவிஸ் ஹாமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 265 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஹாமில்டன் 4-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை பறிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. http://www.maalaimalar.com/News/Sports/2017/10/24093150/1124641/Formula1-car-racing-England-Lewis-Hamilton-win.vpf
 1. Load more activity