24 hours

Showing topics posted in the last 1 days.

This stream auto-updates   

 1. Past hour
 2. அட அருமை நிமிடக் கதை
 3. அருமையான கதை. மனம் கனத்துவிட்டது.
 4. Today
 5. பகிர்வுக்கு நன்றி
 6. ஆயிரம் பேரில் ஒருவரிடம் தான் மனிதம்...வாழும்! அதுவே உங்கள் மகனிடம் மாட்டுப்பட்டது...உங்களினதும், மகனினதும் அதிர்ஷ்டமே! எனினும் மனிதம்..ஏதாவது வடிவில்...எப்போதும் தன்னை இனங்காட்டிய படியே இருக்கும்! இல்லா விட்டால்...உலகம் இயங்காது!
 7. இது உங்கள் பதிவா இல்லையா கொழும்பான் ???
 8. இத்தனை காலத்துக்குப் பிறகு ரொம்ப முக்கியம் உந்தக் கவலை.
 9. உரலும் உலக்கையும்
 10. நன்றாக உள்ளது கதை. இன்றுதான் பார்த்தேன்.
 11. என்றாலும் தவறு தவறுதானே
 12. சரியான பதில்: நாக்கு பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா சப்பாணி, தங்கை நடனப்பெண், இருவரும் இல்லாவிடடால் இல்லறப்பெண் சிணுங்குவாள், அவர்கள் யார்?
 13. தொடர்ந்தும் பாராட்டத்தக்க மீம்ஸ்களை இணைத்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
 14. சுவியர்....உவமான, உவமேய விசயங்களில்.....கம்பன் கூட ...உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும்! இப்போது ..கதையை மேலோட்டமாக் மேய்வதில்லை! ஆற அமர அமர்ந்து ....ஒவ்வொரு வரியையும்..உள்வாங்கிய படியே.....வாசித்து அனுபவிக்கிறேன்! தொடர்ந்தும்..வீணையை...மீட்டுங்கள்! கண்களை மூடிய படியே...நாங்களும் அந்த நாதத்தின் சுகத்தில் திளைப்போம்!
 15. இனி நாங்கள் அந்தப்பக்கம் எட்டிப் பாக்கிறமாதிரியோ சுவி அண்ணா எழுதிறார்.
 16. நாக்கு
 17. ஓம், சுமே! சுவியருக்குக் கொதி ஏத்திறதுக்காக ..பின் வளவுக்குள்ள ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்து போட்ட படம்! அகத்தி இரவில நித்திரை கொள்ளிற நேரத்தில படம் எடுத்த படியால...அவ்வளவு உசாரைக் காணேல்லை! சுவியர் ..சிலுக்கைத் துருச்சாமியில இருந்து திருப்பி எடுக்கப் போறதாகச் சொன்ன படியால....பதிவை நீக்கியாச்சு! எனக்கெல்லோ தெரியும்....சிலுக்குவை துருச்சாமி கதையுக்கிள்ள கொண்டு வரப்பட்ட பாடு! இற் இஸ் நொற் வேர்த் .....றிமூவிங் 'சிலுக்கு' புறம் துருச்சாமி!
 18. வணக்கம், யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை தொடர்ந்தும் வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம். 28 மார்ச் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 34 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. வாந்தி.....! தாயக மண்ணின் கோலங்கள் துருக்கியும்.... நானும். - தமிழ் சிறி. - குச்சி ஐஸ்பழம் அண்ணே நோட்டீஸ் அண்ணே அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? கடவுளின் மரண வாக்குமூலம்...... இது ஒரு பொன் மாலைப்பொழுது….. பால் சுரக்கும் ஆண்கள். மனப்பொருத்தம் நாளேட்டின் பக்கத்தில் நனையும் ஓர் பொழுதில்…… குடி - மதி அழகோ அழகு துருச்சாமி. நானும் ஒரு அகதி தான்! (பகுதி ஒன்றும், பகுதி இரண்டும்!) ஈரநிலா இம்மாலையில் ஏகாந்தமாய் நானும் அவனும் முகநூலும் நம்பிக்கையும் ஏமாற்றமும் இலகுவான வீட்டுத் தோட்டம் - hugelkultur நானும் படமெடுப்பன் முகநூல் நண்பர்கள்.... முதல் விமானப்பயணம் பழகிய நரிக்கும் பசிக்கும்.. ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் பெண்ணே நீ பேரழகு - சிறுகதை சிதைவு...... அடுத்த சம்பளம் வரட்டும்....! சுகரும், பிறசரும் இருட்டடி என் முதலாவது காதலி...! ஒரு சாதாரண பயணம் பணி ஓய்வும் ஓய்வற்ற பணியும் மனிதம்..... இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். நன்றி.
 19. விசேட தேவையுடையோரின் பிரச்சினைகள்: சர்வரோக நிவாரணியா அரசியல் தீர்வு? - கருணாகரன் நோர்வேயிலிருந்து சஞ்சயன் செல்வமாணிக்கம் என்பவர் தொடர்புகொண்டு, “வன்னியில் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட கொஞ்சப்பேருக்கு உதவிகளைச் செய்யச் சிலர் விரும்புகிறார்கள். உடல் பாதிப்புக்குள்ளான சிறார்களைப் பராமரிக்கும் அமைப்பு அல்லது, கூடுதலான பாதிப்பைச் சந்தித்துள்ள சிலரைத் தெரிவு செய்து தரமுடியுமா?” எனக் கேட்டார். ஏற்கெனவே, மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலிருக்கும் முன்னாள் போராளிகள் உட்பட, போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு நண்பர்களுடன் இணைந்து, சஞ்சயன், உதவிகளைச் செய்திருக்கிறார். அந்தப் பணிகளின்போது, படுவான்கரைப் பிரதேசத்தில் அவர் பார்த்த, அறிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு “படுவான்கரை” என்றொரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். போர் சிதைத்த மனிதர்களின் மெய்க்கதைகளைக் கொண்ட உண்மைப் பிரதி அது. அந்தப் புத்தகம், படுவான்கரையின் மீது கவனத்தை உண்டாக்கி, உதவிப் பணிகளுக்கு ஏராளமானவர்களை ஊக்குவித்தது. நோர்வேயிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வரும்போதெல்லாம், இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது காரியத்தைச் செய்வது, அவருடைய வழமை. சஞ்சயனைப் போன்ற புலம்பெயரிகள் பலர், தங்களுடைய விடுமுறைக்காலத்தில் இலங்கைக்கு வந்து, வடக்கு - கிழக்கிலே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். ஆனால், “பெரும்பாதிப்பைச் சந்தித்து, பெரிய வரண்டு, காய்ந்த நிலத்தைப்போன்றிருக்கும் சமூகத்துக்கு, இந்த உதவிகள் எல்லாம் சிறிய மழைத்துளியே. இந்தச் சிறிய மழைத்துளியால், இந்தப் பெரும் வரட்சியைப் போக்க முடியுமா?” என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுடைய கேள்வியிலும் நியாயமுண்டு. ஏனென்றால், போர் முடிந்து ஏழு ஆண்டுகள் முடிகின்றன. இந்த ஏழு ஆண்டுகளிலும் அரச, அரச சார்பற்ற மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவிகளும் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்புகளும் எல்லாம் கிடைத்தும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், இன்னும் மீளமுடியாப் பேரவலத்துள்ளேயே இருக்கிறார்கள். இப்படியிருக்கும்போது, இந்தப் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முறையாகத் திட்டமிடப்படாமல், இப்படிச் சிறிய சிறிய உதவிகளைச் செய்வது, வரண்ட மணலில் விழும் மழைத்துளியைப்போல காணாமலே போய்விடும் என்பது உண்மையே. ஆனால், சிறுதுளிதான் பெரு வெள்ளம் என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்தவர்களின் இத்தகைய பங்களிப்புகளுக்கு, வரலாற்று முக்கியத்துவமும் சிறப்பும் உண்டு. போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர், கஞ்சியாவது இன்று குடிக்கிறார்கள் என்றால், அதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தவர்கள் புலம்பெயரிகளே. தனியாகவும் கூட்டாகவும் இந்தப் பங்களிப்புகள் நடந்திருக்கின்றன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதை முறைப்படுத்தியிருந்தால், இந்தப் பயன், மிகச்சிறப்பானதொரு வாழ்க்கையை, மீள்நிலையை அந்த மக்களுக்குக் கொடுத்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக தமிழ் அரசியல் நடத்தைகள், அதற்கான வாய்ப்பைச் சிதறடித்து விட்டன. அரசாங்கமும் இதில் சரியாக நடந்து கொள்ளவில்லை. இது தனியாக, விரிவாக, அவசியமாக ஆராயப்படவேண்டியது. அரசாங்கத்துடன் நெருங்க முடியாத ஒரு முரண்வெளியை, புலம்பெயர் சமூகமும் புலம்பெயர் சமூகத்துடன் நெருங்க முடியாத இடைவெளியை அரசாங்கமும் கொண்டிருப்பது மிகமிகப் பாதிப்பானது. இதற்குக் காரணம், முரண்நிலை அரசியலே. மக்களின் நிலைமையைப் புரிந்து கொள்ள மறுக்கும், மக்களுக்கு அப்பாலான, யதார்த்தத்துக்குப் புறம்பான அரசியல் தீர்மானங்கள், இந்த இடைவெளியை உருவாக்கியுள்ளன. இப்படியே சிக்கலடைந்திருக்கும் அரசியல் பிளவுகளினால், பாதிக்கப்பட்ட மக்களே மேலும் பாதிக்கப்படுகின்றனர். இருந்தும், இதையெல்லாம் கடந்து, தங்களால் முடிந்த அளவுக்குச் சாத்தியமான வழிகளில் புலம்பெயரிகள் உதவிக்கொண்டிருக்கின்றனர். இந்த உதவிகள், பல வகையிலானவை, பல்வேறு தரப்பினாலானவை. இவற்றை, இந்தச் சிறிய பத்தியில் பட்டியல்படுத்துவது சாத்தியமில்லை. சஞ்சயன், நோர்வேயிலிருந்து கொண்டே இந்தப் பத்தியாளரை சற்று முன் தொடர்பு கொண்டு பேசினார். தங்கள் உதவித்திட்டத்தின் வழியாக, மேலும் ஒரு தொகுதியினருக்கு உதவுவதற்குத் தாம் விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால், இந்தத் தடவை அவர் கேட்டது, மாற்றுத்திறனாளிகளுக்கு அல்லது சிறார்களுக்கு உதவுவதைப் பற்றி. கடந்த மாதமும் அவர்கள் இதைப்போல இன்னோர் உதவியைச் செய்திருந்தனர். அப்போது கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்பு மக்கள், போராடிக்கொண்டிருந்தனர். “அவர்களுடைய போராட்டத்துக்குத் தமது பங்களிப்பாக எத்தகைய உதவிகளைச் செய்யலாம்? என்ன மாதிரியான உதவிகள் தேவை?” எனக் கேட்டனர். இது தொடர்பாக பிலவுக்குடியிருப்பு மக்களிடம் பேசியபோது, “எங்களுக்கு இப்போது எந்த உதவிகளும் அவசியமாக இல்லை. எங்களுடைய காணிகள் மீட்கப்படுவதே இன்று முக்கியம். அந்தக் காணிகள் மீட்கப்படுவதற்கான எங்களுடைய இந்தப் போராட்டத்துக்குத் தார்மீக ஆதரவைத் தந்தால், அதுவே போதும். காணிகளை மீட்டுக்கொண்டு, அந்தக் காணிகளில் நாங்கள் குடியேறும்போதுதான், எங்களுக்கான உதவிகள் அதிகமாகத் தேவைப்படும். அப்போது அதைச் செய்யுங்கள்” என, அந்த மக்கள் கூறினார்கள். இந்தத் தகவலை சஞ்சயனின் தரப்புக்கு நாம் சொன்னோம். அவர்கள் தாம் சேர்த்துக் கொண்ட பணத்தை, சேகரிப்பில் வைத்திருந்தனர். பிலவுக்குடியிருப்பு விடுவிக்கப்பட்டு, அங்கே அந்த மக்கள் மீளக்குடியேறியபோது அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று, தண்ணீர்ப் பிரச்சினை. இந்த நிலையில் சஞ்சயனின் தரப்பினர், அங்கே ஒரு கிணற்றினை அமைத்துக் கொடுப்பதற்கு தங்களிடமிருந்த நிதியை வழங்கினார்கள். அந்த வகையில், அடுத்த கட்டமாக இன்னொரு வகையில் இந்த உதவியைச் செய்ய இந்த புலம்பெயர் நண்பர்கள் முன்வந்திருக்கிறார்கள். மனமிருந்தால் இடமுண்டு என்பது உண்மையே. மனதில் இடமிருந்தால், உதவும் கரங்களை எங்கே இருந்து கொண்டும், எந்தப் பகுதிக்கும் நீட்டிக் கொள்ள முடியும். இப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளைச் செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் எப்படியானவர்களுக்கான உதவி என்பதும் என்ன வகையான உதவி என்பதுமே, இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. மாற்றுத்திறனாளிகளாக இருப்போரில், மிகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதே இந்த உதவியாகும். இதை முறைப்படுத்திச் செய்வதற்கு, பெருந்தொகை நிதியும் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட திட்டமிடலும் கட்டமைப்பும் தேவை. சஞ்சயன் போன்ற தனி ஆர்வம் கொண்ட சிறிய குழுவினரால், இது முழுமைப்படுத்தக்கூடியதல்ல. ஆனாலும், இது ஒரு தொடக்கமாக அமையலாம். முடிந்தவரையில் சிலருடைய அவலத்தையாவது தீர்க்கலாம். அந்த அடிப்படையில் இப்போது மேற்கத்தேய பாணியிலான (கொமட்) மலசலகூடத்தை அமைத்துக் கொடுப்பதற்கு, இந்த நண்பர்களின் உதவிகள் பயன்படவுள்ளன. இதை விரிவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, இந்தப் பத்தி கவனம் செலுத்துகிறது. உலகிலேயே மிகப்பெரிய பிரச்சினை, சாப்பிடுவதற்கும் மலங்கழிப்பதற்கும் வழியில்லாமல் இருப்பதாகும். இது இரண்டுக்கும் வழியில்லாமல் இருப்பவர்களே, மிகக் கொடுமையான சூழலில் வாழ்கின்றவர்கள். போரினால் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு, குந்தியிருந்து மலங்கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றவர்களாக, சுமார் 12,760 பேர் இருக்கிறார்கள். இது, மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் புள்ளிவிவரம். இதில் இரண்டு கால்களும் இல்லாதவர்கள், இரண்டு கைகளும் இல்லாதவர்கள், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் நிலை, மிக மோசமானது. இவர்களுக்குத் தனியான ஏற்பாடுகள் தேவை. ஒட்டுமொத்தத்தில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே, மேற்கத்தேயப் பாணியிலான மலசலகூடங்கள் உள்ளன. ஏனையவர்களுக்கு இந்த வசதி கிடையாது. இதனால் இவர்கள், தினமும் படுகின்ற சிரமம் சாதாரணமானதல்ல. ஆனால், இதைப்பற்றி இன்னும் யாரும் முறையாகச் சிந்தித்ததில்லை. சில தொண்டர் அமைப்புகள், மிகச் சிறிய அளவில் சிலருக்கு “கொமட்” வசதியுடைய மலசலகூடங்களை அமைத்துக் கொடுத்திருக்கின்றன. ஏனையவர்கள், பிளாஸ்டிக் கதிரையை வெட்டி, அதையே சாதாரண மலசலகூடத்தில் வைத்து, தற்காலிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இது, ஆபத்துகள் நிறைந்தது. எந்த மருத்துவரும் இந்த முறையைச் சிபாரிசு செய்யவில்லை. இதேவேளை, வடக்கு மாகாணசபை, கொமட் வசதியுடைய மலசல கூடங்களை அமைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுக்கப்போவதாக அறிவித்திருந்தது. முதலமைச்சரின் நிர்வாகம் நேரடிக் கவனமெடுத்து, இதற்கான விவரங்களும் திரட்டப்பட்டது. இதன்படி, இதுவரையில் 298 மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒரு இலட்சத்து இருபத்தி இரண்டாயிரம் ரூபாய், ஒரு மலசல கூடத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இதைப்பெறும் பயனாளி தரப்பு நாற்பது ஆயிரம் ரூபாயைப் பங்களிப்பாகச் செய்ய வேண்டும். மொத்தமாக 162,000 ரூபாய் மதிப்பிடப்பட்ட திட்டம் இது. இந்தத் திட்டத்தின்படி, இன்னும் 240 மலசல கூடங்களுக்கு, முதற்கட்டக் கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர, 1,000 வரையான மலசல கூடங்களை நிர்மாணிப்பதற்கான திட்டமிடல் உண்டென்று தெரிவிக்கப்படுகிறது. இது வரவேற்கப்படவேண்டியதே. ஆனால், இதை முழுமையாகச் செய்து கொடுப்பதே சிறப்பானது. குறிப்பாக, பயனாளிகளின் பங்களிப்பை இதில் எதிர்பார்க்காமல், முழுமையான நிர்மாணப் பொறுப்பை மாகாணசபை எடுத்திருக்க வேண்டும். இந்தப் பயனாளிகளின் பங்கேற்பு என்ற நிலைப்பாட்டினால், ஒவ்வொரு பயனாளரும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டவாறே உள்ளனர். ஏற்கெனவே உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உழைப்பு, வருமானம் போன்றவற்றைச் சீராகப் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். இப்படியிருக்கும்போது, இதற்கான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்றால், அவர்களால் என்னதான் செய்ய முடியும்? இதைப் பற்றி ஒவ்வொரு பயனாளியும் கவலையே தெரிவிக்கின்றனர். இதைப்பற்றி, எங்களுடைய நிலையைப் பற்றி யாரிடமாவது சொன்னால், “அரசியல் தீர்வு கிடைத்தால், எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் எண்டு சொல்லுகினம். அரசியல் தீர்வு வாற வரைக்கும், கக்கூசுக்குப் போகாமல் இருக்க முடியுமோ?” என்று, ஒரு மாற்றுத்திறனாளி கவலையோடு சொன்னார். இந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள வலி, சாதாரணமானதல்ல. அது, மிக வலியது. இதை நமது சமூகம், உணர்ந்து கொள்ள வேண்டும். மிகச் சிறிய, எளிய தேவை ஒன்றை, பாதிக்கப்பட்ட நிலையில் தினமும் அவலப்படுகின்ற மக்களுக்குச் செய்து கொடுக்க முடியாத நிலையில்தான், தமிழ்ச் சமூகம் இன்னும் இருக்கிறது. நாட்டிலே சமாதானத்தையும் சுபீட்சத்தையும் உண்டாக்குவதாகக் கூறிக்கொண்டிருக்கிற அரசாங்கமும் இதையிட்டு, இந்த மனிதர்களையிட்டுக் கவனம் கொள்ளவில்லை. குறைந்தபட்சம், சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் ஆர்வமாக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூட, இந்த மாதிரிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியும். நல்லிணக்கத்தின் அத்திவாரம் என்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்களிடமிருந்தே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியும். அவர்கள் அவநம்பிக்கைப்படும்போது, அவர்களின் நிலையைக் காணுகின்ற சமூகம் நம்பிக்கை இழக்கும். இதுதான் யதார்த்தம். இதற்குள்தான் ஆயிரமாயிரம் பெருங்கதையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பொதுவாகவே, எந்தப் பிரச்சினைக்கும் சொல்லப்படுகின்ற பதில், அரசியல் தீர்வு கிடைத்தால் எப்ல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்பது தான். அரசியல் தீர்வு என்பது, சர்வரோக நிவாரணி என்ற விதமாகக் கட்டமைக்கப்படுகின்ற தோற்றப்பாடு. எத்தனை மாயையானது? அதுவரையிலும் இதுபோன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீள முடியுமா? இப்போது, சஞ்சயன் தரப்புத் தொடங்குகின்ற இந்தப் பணி, இந்தப் பிரச்சினையை முழுதாகத் தீர்ப்பதற்கு உதவ வேண்டும். இதை இன்னும் இன்னும் வெளிப்பரப்பெங்கும் உள்ள உறவுகள் இணைந்து, செய்ய வேண்டும். இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை, மிஞ்சியிருந்த உறவுகளே இணைந்து மீளமைத்தனர். அவர்களால் அப்போது உருவாக்கப்பட்ட அமைப்புகளே, இன்று உலகமெங்கும் இருக்கின்ற பல தொண்டர் அமைப்புகளாகும். இன்று, எமது மக்களுக்காக உருவாக்கப்படுகின்ற அமைப்புகளும் உதவிகளும் இந்த மக்களுக்கு மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவும் உதவிச் செயற்பாடுகளாகவும் நாளை மாற வேண்டும். உலகமெங்கும் தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள். திக்கெட்டும் தமிழர்கள் உள்ளனர் என்று, சொல்வது முக்கியமில்லை. அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், இந்த உலகம் அவர்களை எப்படித் தன்னுடைய பதிவில் கொண்டிருக்கிறது என்பதே முக்கியமானது. அதிலும் முக்கியமானது, உலகமெங்கும் உள்ள தமிழர்கள், எங்களுக்கு என்ன செய்தார்கள், எங்கள் அவலங்களைத் தீர்ப்பதற்கு எப்படி உதவினார்கள், குறைந்த பட்சம் நாங்கள் உண்பதற்கும் மலங்கழிப்பதற்கும் எப்படி ஆதரவாக இருந்தனர் என்று பாதிக்கப்பட்டவர்கள், போரின் குழந்தைகள் நினைவெடுத்துப் பேச வேண்டும். போரின் காயங்களை ஆற்றுவதற்கு, இப்படி ஏராளமான முறைகள் உள்ளன. இதைச் செய்தே, பாதிக்கப்பட்ட சமூகத்தை ஈடேற்ற, மீள்நிலைப்படுத்த முடியும். அல்லற்பட்டு, அவதியுறும்வேளை, சொல்லாமல் செய்யும் உதவியே பேருதவியும் சிறப்புமாகும். - See more at: http://www.tamilmirror.lk/193835/வ-ச-ட-த-வ-ய-ட-ய-ர-ன-ப-ரச-ச-ன-கள-சர-வர-க-ந-வ-ரண-ய-அரச-யல-த-ர-வ-#sthash.gCaQgqDI.dpuf
 20. சிக்கலோ சிக்கல் இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது! #HealthyFood ‘இடியாப்பேம்ம்ம்ம்...’ அநேகமாக இந்தக் குரல் ஒலிக்காத தமிழகத்தின் பெருநகரங்களே இன்றைக்கு இல்லை என்று சொல்லிவிடலாம். குரலைக் கேட்டவுடனேயே, சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டப்பட்ட பெரிய பாத்திரம் நம் கண்களுக்குத் தெரியும். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் இப்படி வீடு வீடாகப் போய் இடியாப்பம் விற்கிறவர்கள் அதிகம். உணவுத் துறையில் வளர்ந்துவரும் முக்கியமான தொழிலாக உருவெடுத்துவிட்டது இடியாப்ப விற்பனை. இது ஒரு வகையில் நல்லதும்கூட. பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மோகத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் தமிழர்களாவது தப்பித்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம்! உண்மையில் சிக்கல் நிறைந்த இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது! சங்க காலத்திலேயே இடியாப்பம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. `சூடாமணி நிகண்’டில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது. `இடி’ என்றால் நெல்லில் இருந்து தயாராகும் மாவு, அதில் செய்யப்படும் அப்பம் என்பது இதன் பொருள். இந்திய உணவு வரலாற்று ஆசிரியர் கே.டி.அச்சயா (K.T.Achaya), முதலாம் நூற்றாண்டிலேயே இடியாப்பம் இந்தியாவில் இருந்தது என்று தன் `தி ஸ்டோரி ஆஃப் அவர் ஃபுட்’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழில் `நூல்புட்டு’, கன்னடத்தில் `நூபுட்’, மலேஷியாவில் `புட்டுமாயம்’... என அழைக்கப்படும் இடியாப்பம் இலங்கை வரை பிரபலமான ஓர் உணவு. கடலோரப் பகுதிகளிலும், நகரத் தெருக்களிலும் தெரு வியாபாரிகள் கூவிக் கூவி விற்ற அரிய உணவு. `பெரும்பானாற்றுப்படை’, `சிலப்பதிகாரம்’, `மதுரைக்காஞ்சி’ போன்ற தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. வரலாற்று ஆசிரியர்கள் சிலர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்களின் வருகைக்குப் பின்னர்தான் இடியாப்பம் தென்னிந்தியாவில் நுழைந்தது என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது போர்ச்சுகீசியர்களின் வருகை என்பது இந்தியாவில் 1498-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் நிகழ்ந்தது. ஆனால், அதற்கு முன்னரே இது இங்கே புழக்கத்தில் இருந்ததாக நம் இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன. அதோடு இடியாப்பம் செய்ய மூங்கில் தட்டுகள் பயன்படுத்தப்படும். ஆனால், மூங்கிலைக்கொண்டு செய்யப்படும் சமையல் முறை ஐரோப்பாவுக்கு அறிமுகமானது 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான். அதுவும் ஜப்பான் மற்றும் சீன நாட்டினரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, போர்ச்சுக்கீசியர்கள்தான் இதை தென்னிந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள் என்பது உறுதி இல்லை. டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவர்கள்! அதோடு அவர்களின் செய்முறைக்கும் நம் முறைக்கும் எத்தனையோவிதங்களில் வேறுபாடு இருக்கின்றன. சுத்தமான அரிசி மாவில் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுத்து அவித்தால் இடியாப்பம்! தேங்காய்ப் பால், பால், மீன் குழம்பு, பாயா இவற்றுடன் சாப்பிட அபாரச் சுவை! கேரளாவில் கொண்டைக்கடலையை கிரேவியாக்கி, அதனுடன் சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உண்டு. இது, எளிய, ஆரோக்கியமான காலை உணவு. இடியாப்பத்தை உதிர்த்து, உப்புமாவாக்கலாம். நம் ஊரில் `சேவை’ என்று சொல்வார்கள். இதைக்கொண்டு எலுமிச்சை, தக்காளி, புளி என விதவிதமாக `சேவை’ செய்து ருசிக்கலாம். இடியாப்பத்தில் பிரியாணி செய்பவர்கள்கூட உண்டு. தினை, வரகரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு என சிறுதானியங்களில் செய்து ருசி பார்க்கும் அளவுக்கு இடியாப்பத்தின் மகத்துவம் இன்றைக்கு அனைவரும் உணர்ந்த ஒன்றாகிவிட்டது. இன்றைக்கு தமிழ்நாட்டில் இடியாப்பம் பெரும்பாலான ஹோட்டல்களில் கிடைக்கின்றது. ஆனால், அத்தனை உணவகங்களும் தாங்களே இதைத் தயாரிப்பதில்லை. இதற்கு தனி ஆள் போட வேண்டும்; செலவும் கூடுதல் என்பதால், மொத்தமாகத் தயாரிக்கும் இடங்களில் வாங்குகிறார்கள். உணவகங்களுக்கு இடியாப்ப சப்ளைக்கென தனியாக தொழிலே நடைபெறுகிறது. மொத்த மொத்தமாக தயாரித்து, விற்கிறார்கள். திண்டுக்கல், மணப்பாறை பகுதியில் இருந்து வந்தவர்கள்தான் இந்தத் தொழிலில் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள்தான் தெரு வியாபாரிகளுக்கும் இடியாப்பத்தை விற்பனைக்குக் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் இடியாப்ப சிறுதொழில் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அரசின் கடன் வசதிகூட பெறலாம். இதைத் தயாரிக்க மெஷினகள் வந்துவிட்டன. இடியாப்பம் தயாரிக்கும் இயந்திரம்! இடியாப்பத்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன... விளக்குகிறார் டயட்டீஷியன் பத்மினி... “இடியாப்பம், குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. ஒரு இடியாப்பத்தில் சராசரியாக 45 கலோரிகள், 0.27 கிராம் கொழுப்பு, 9.68 கிராம் கார்போஹைட்ரேட், 0.72 கிராம் புரோட்டீன் ஆகியவை உள்ளன. ஆயுர்வேத மருத்துவமுறையில், இது வாதத்தையும் பித்தத்தையும் சமநிலையில் வைத்திருக்கும் என்கிறார்கள். இதை இளஞ்சூடாக சாப்பிடுவது நல்லது. இதில் நமக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து அனைத்தும் உள்ளன. எனவே, உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். எண்ணெய் சேர்க்காத, ஆவியில் வேகவைத்துச் செய்யப்படுவது என்பதால், வயிற்றுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, நோயின் தன்மைக்கேற்ப இடியாப்பம் செய்து, மற்றவற்றுடன் கலந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க ஏற்ற உணவு. ஜுரம் - இடியாப்பத்தை இளஞ்சூடான நீருடன் கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு - மோர் மற்றும் கல் உப்புடன் சேர்த்துத் தரலாம். பசியின்மை - எலுமிச்சை சேவை, தக்காளி சேவை என செய்து கொடுக்கலாம். வயிற்றுக்கோளாறுகள் - எலுமிச்சை சேவையாக கல் உப்பு போட்ட மோருடன் தரலாம். கர்ப்பிணிகள் - இத்துடன் தேங்காய்ப்பால், பால், நெய், நாட்டுச்சர்க்கரை, டிரைஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்துக் கொடுக்கலாம். அரிசியைத் தவிர்த்துவிட்டு, சிறுதானியங்கள் மற்றும் கோதுமையில்கூட இதைச் செய்யலாம். பலன்கள் அதிகமாகக் கிடைக்கும். உதாரணமாக, கோதுமை இடியாப்பத்தின் பலன்கள்... இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், சீரான செரிமானத்துக்கு உதவுகிறது; கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; இதய நோய்களுக்கான அபாயத்தை வெகுவாகக் குறைக்கும்; உடல் எடை கூடுவதைத் தவிர்க்கும்; சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு நல்லது; கோதுமை, சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மைகொண்டது, இதில் உள்ள வைட்டமின் இ சருமத்துக்கு நல்லது. இதேபோல சிறுதானியங்களில் இதைச் செய்தால் அதிகப் பலன்களைப் பெறலாம்’’ என்கிறார் பத்மினி. ஆக, இடியாப்பம் நல்லது. என்ன... வெளியில் வாங்கும்போது இது, சுத்தமானதுதானா, ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்டதுதானா என்பது தெரியாது. எளிதான செய்முறை. ஒருமுறை கற்றுக்கொண்டால் நாமே வீட்டில் தயாரிக்கலாம். ஆரோக்கியம் காக்கலாம்! http://www.vikatan.com/news/health/84692-idiyappam-does-not-harm-our-health.html
 21. மூளை வளர பழங்கள் காரணமா? நம் முன்னோர்கள் பழங்களை தேடி உண்டதால் அந்த செயல்கள் அவர்களின் மூளை பெரிதாக வளர உதவியிருக்கும் என ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைMEGAN PETERSDORF இந்த கண்டுபிடிப்பு சமூக உறவுகள் தான் நமது அறிவு வளர காரணம் என்ற பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு கருத்துக்கு சவாலாக உள்ளது. 140க்கும் மேற்பட்ட குரங்குகள் மற்றும் மனிதக் குரங்கு வகையை சார்ந்த இனங்களின் உணவு நுகர்வு மற்றும் சமூக நடத்தையை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். படத்தின் காப்புரிமைMEGAN PETERSDORF தங்களது உணவில், இலைகளை விட பழங்களை அதிகமாக உண்ட விலங்குகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அவற்றில் மூளை பெரிதாக இருப்பதாக அவர் கூறுகின்றனர். சமூகத்தில் இணைந்து இருப்பதற்கான தேவையை விட, எளிதாக அணுகமுடியாதபடி உள்ள பழங்களை தேடி அவற்றை உரித்து உண்பது போன்ற செயல்கள்தான் அவர்களின் மூளை வளர்வதற்கு முக்கியமாக இருந்திருக்க முடியும் என்று ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். பிபிசி தமிழ்
 22. மீண்டும் சந்தைக்கு வரவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 7 கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனை மீண்டும் சந்தைப்படுத்தவுள்ளதாக சாம்சாங் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் சந்தைப்படுத்தப்பட்டு இரண்டு மாதத்துக்குள்ளாகவே அதன் மீது கடுமையான புகார்கள் வந்தன. இந்த போன்கள் தானாக தீ பிடித்து எரிந்தன. இதனையடுத்து சாம்சங் நிறுவனம் தன் நிறுவனத்தின் மீது தவறை ஒப்புக் கொண்டு அனைத்து கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை திரும்பப் பெற்றது. தீ பிடித்து எரிந்ததற்கு பேட்டரியில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு தான் காரணமாக பார்க்கப்பட்டது. தற்போது, சாம்சங் நிறுவனம் பேட்டரியில் மாற்றத்தைக் கொண்டு வந்து மீண்டும் இந்த போனை சந்தைப்படுத்தவுள்ளது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தென்கொரியாவில் இது கடைகளில் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது. தென்கொரிய நிறுவனமான சாம்சங், வரும் ஜூலை முதல் தனது நாட்டில் மட்டும் 4,00,000 முதல் 5,00,000 ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. புதிய அறிமுகத்தின் மூலம் இழப்பீடுகளை ஈடுகட்ட முடியும் என்று சாம்சங் நிறுவனம் கருதுகிறது. http://www.vikatan.com/news/information-technology/84822-samsung-firm-to-re-introduce-galaxy-note-7.html
 23. ராகுல் அரைசதம்; ரஹானே அதிரடியில் ஆஸி.யை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா பார்டர்-கவாஸ்கர் கோப்பையுடன் இந்திய அணி. | படம்.| ஏ.பி. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உணர்ச்சிவயப்பட்ட ராகுல். | படம். | ராய்ட்டர்ஸ். தரம்சலா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதோடு டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா வசம் இருந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா தன் வசமாக்கியது இந்திய அணி. இந்த சீசனை 4-வது டெஸ்ட் தொடர் வெற்றியுடன் இந்திய அணி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 19/0 என்று தொடங்கிய இந்திய அணி முரளி விஜய், புஜாரா விக்கெட்டுகளை இழந்தாலும் ராகுல் (51 நாட் அவுட்), ரஹானே (38 நாட் அவுட்) ஆகியோரின் ஆட்டத்தினால் 106/2 என்று 24-வது ஓவரில் வெற்றியைச் சாதித்தது. ரஹானே அமைதியாக இருந்தார், அரைசதம் கண்ட ராகுல், ஓகீஃப் பந்தை மிட்விக்கெட்டில் பஞ்ச் செய்து வெற்றிக்கான ரன்களை எட்டினார். 7 இன்னிங்ஸ்களில் ராகுல் 6-வது அரைசதம் எடுத்தார். சவாலான பிட்சில் சவாலான பந்து வீச்சில், சவாலான சூழ்நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு உண்மையில் ஒரு அருமையான டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்தியா. இந்திய அணியினர் குதூகலத்துடன் மைதானத்திற்குள் வந்து ஆஸி. வீர்ர்களுடன் கைகுலுக்கினர். இந்த உள்நாட்டு சீசனில் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-இல் டிரா செய்து ஒன்றில் தோற்றுள்ளது. டாஸ்களை இழந்த பிறகும் வெற்றி பெற்றது இந்திய அணியின் வெற்றியை நோக்கிய லட்சியார்த்தமே காரணம். இன்று காலை முதல் ஓவரிலேயே ஹேசில்வுட், விஜய்க்கு ஒரு பெரிய எல்.பி.முறையீடு எழுப்பினார். வெளியே பிட்ச் ஆனதால் அவுட் இல்லை. ரிவியூவும் செய்யவில்லை.இதற்கு அடுத்த பந்தே வெடிப்பில் பட்டு உள்ளே வர விஜய் மட்டை உள்விளிம்பில் பட்டதால் பிழைத்தார், கடந்த பந்தை விடவும் உரத்த எல்.பி.முறையீடாகும் இது, முரளி விஜய் தடுமாற்றத்துடன் தொடங்கினார். மறு முனையில் ஓகீஃப் ஒரு பந்தை தாறுமாறாக திருப்ப அது 4 பை ரன்களுக்குச் சென்றது. ராகுலும் தன் முதல் பவுண்டரியை எட்ஜில் எடுத்தார், ஸ்லிப்புக்கு மேல் சென்றது அது. பிறகு அடிக்கும் முனைப்பில் ராகுல், ஓகீஃப் பந்தை ஒரு அருமையான ஸ்கொயர் டிரைவ் மற்றும் ஒரு சக்திவாய்ந்த ஸ்வீப் பவுண்டரிகளை விளாசினார். 12-வது ஓவரில் கமின்ஸ் வீசிய லெக் திசை எழுச்சிப் பந்து விஜய் கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனதை ஆஸி. அணி கவனிக்கவில்லை, முறையீடே செய்யவில்லை, அது அவுட், ஆனால் கேட்கவில்லை. விஜய் தப்பித்தார், விஜய்யின் உத்தியில் நிச்சயம் முன்னேற்றம் தேவை. பிறகு ஹேசில்வுட் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட்டில் பவுண்டரி அடித்தார் ராகுல். அடுத்த கமின்ஸ் ஓவரில் எப்போது வேண்டுமானாலும் என் விக்கெட் உனக்குத்தான் என்று ஆடிய முரளி விஜய்க் கமின்ஸ் பந்தை தொட்டு வேடிடம் கேட்ச் கொடுத்தார். 35 பந்துகள் வேதனையான இன்னிங்சில் விஜய் 8 ரன்களில் அவுட் ஆனார். அதே ஓவரில் திருப்பு முனை ஏற்பட்டு விடுமோ என்று ரசிகர்கள் அஞ்சும் விதமாக புஜாராவும், ராகுலும் ஒரு சிங்கிளுக்கு நடு பிட்சில் கபடி ஆட ரன்னர் முனையில் மேக்ஸ்வெல் ஸ்டம்பை நேர் த்ரோவில் பெயர்க்க புஜாரா 0-வில் ரன் அவுட்.46/2 என்ற நிலையில் பதற்றம் ஏற்பட கேப்டன் ரஹானே இறங்கினார். இறங்கியவுடனேயே ஆக்ரோஷம் காட்டிய ரஹானே, கமின்ஸை மிகவும் நேர்த்தியாக ஒரு நேர் டிரைவ் ஆடி பவுண்டரியும், அடுத்த பந்தே கமின்ஸின் ஷார்ட் பிட்ச் முயற்சியை ஹூக் செய்து பவுண்டரிக்கு விரட்டினார். மீண்டும் கமின்ஸையே ஃபைன் லெக்கில் பவுண்டரி விளாசினார். 20-வது ஓவரில் கமின்ஸ் தொடர்ந்து பவுன்சர் வீசும் முயற்சியில் ரஹானேயிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார், ஷார்ட் பிட்ச் பந்தை சச்சின் ஆடும் கோபக்கனல் ஹூக் ஷாட்டில் மிட் விக்கெட்டில் சிக்ஸ் விளாசினார் ரஹானே அடுத்த பந்து மீண்டும் உடலை நோக்கி பவுன்சர் வீசுவார் என்பதைக் கணித்த ரஹானே ஒதுங்கிக் கொண்டு கவரில் பிளாட் சிக்ஸ் விளாசினார். ஒன்று சச்சின் பாணி கோபம் மற்றொன்று சேவாக் பாணி விளாசல், இதுதான் ஆக்ரோஷத்தைக் காட்டும் விதம் என்று ரஹானே காட்டினார். கடைசியில் ரஹானே 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 38 ரன்கள் என்று நாட் அவுட்டாகத் திகழ ராகுல் 76 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 51 நாட் அவுட். தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றி, பார்டர்-கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியாவிடமிருந்து மீட்டது இந்திய அணி. மிகவும் சவாலான தொடரில் இந்திய அணி ஒரு போட்டியை இழந்த பிறகு மீண்டு வந்து வென்றுள்ளது, கடந்த போட்டியில் ஆஸ்திரேலியா மன உறுதியுடன் டிரா செய்தது, ஆனால் இப்போட்டியில் குல்தீப் யாதவ்வின் முதல் நாள் பந்து வீச்சும், இந்திய அணியில் புஜாரா, ராகுல், ரஹானே, ஜடேஜா பேட்டிங்கும், நேற்று ஆஸி.யை அபாரப் பந்து வீச்சில் 137 ரன்களுக்குச் சுருட்டியதும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ளது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டு விருதுகளையும் ஜடேஜா தட்டிச் சென்றார். இந்தத் தொடரில் 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், 127 ரன்கள் அதில் இரண்டு அரைசதங்கள். http://tamil.thehindu.com/sports/ராகுல்-அரைசதம்-ரஹானே-அதிரடியில்-ஆஸியை-வீழ்த்தி-தொடரை-கைப்பற்றியது-இந்தியா/article9604215.ece?homepage=true சபாஷ் இந்தியா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பறியது. இதற்கான பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ரகானேவிடம் வழங்கிய முன்னாள் கேப்டன் கவாஸ்கர். இடம்: தர்மசாலா, இமாச்சல பிரதேசம்.
 1. Load more activity