Jump to content

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. தோனி விளையாடாவிட்டாலும் ஏதாவது ஒரு கோச்சாக சென்னையில் இருப்பார்.
  3. அரகலய காலத்தில் ராஜபக்ஷேக்கள் சொல்லிவந்தவை எல்லாமே பொய்கள் தான் என்கிற தெளிவை சிங்கள மக்கள் உணர்ந்தபோதிலும், இறுதி யுத்தம் தொடர்பாகவும் ராஜபக்ஷேக்கள் பொய்களையே கூறினார்கள் என்பதையும், இறுதியுத்தம் அரசினால் உருவாக்கப்பட்ட பொய்க்கான களத்திலேயே நடத்தப்பட்டது என்பதையும் சிங்களச் சமூகம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறும் அவர், போர் குறித்து முற்றான பொய்களைப் பரப்பக்கூடிய சில ஊடகவியலாளர்களை முன்னேறிச் சென்ற இராணுவ அணிகளுடன் அரசு அனுப்பியதென்றும், நடுநிலையான செய்தியாளர்களை அரசு ஒருபோது இறுதி யுத்த களத்தில் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறார். நல்ல கலந்துரையாடல். தமிழில் வரவேண்டும். யுத்தத்தின் இறுதிநாட்களின்போது தனது இராணுவம் ஒரு கையில் ஐ நா மனிதவுரிமைகள் சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்தியே போரிட்டதென்றும், உலகிலேயே மனிதவுரிமைகளை மதிக்கும் ஒரே ராணுவம் சிங்கள இராணுவம் என்றும், ஆகவே யுத்தத்தில் ஒரு தமிழ் மகனும் கொல்லப்படவில்லை என்று அரசு கூறியதை இன்றுவரை சிங்களச் சமூகம் நம்ப விரும்புவதாலேயே தமிழர்களுக்கு நடந்த அவலங்களை, அக்கிரமங்களை அச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது என்றும், இதனாலேயே தமிழர்களால் அக்காலத்தில் சேகரிக்கப்பட்ட போர்க்குற்ற சாட்சியங்களைப் பொய்கள் என்று சிங்களச் சமூகத்தால் இலகுவாகத் தட்டிக் கழித்துவிட முடிகிறதென்றும் அவர் கூறுகிறார்.
  4. நினைவு வணக்கங்கள்! 🙏 அவலங்களில் சனங்கள் சீரழிந்த சம்பவங்கள் நேற்றுப்போல் உள்ளது. புதிய தலைமுறை பிள்ளைகளுக்கு நமது வாழ்வு பற்றி கூறலாம் என்றால் பிரமிப்பு வருகின்றது. எதை தொடுவது எதை விடுவது என்று குழப்பமே ஏற்படும். வரலாற்றில் நாங்கள் வாழ்ந்துள்ளோம், வாழ்கின்றோம். இது வாயால் சொல்லி முடிக்கக்கூடிய விடயம் இல்லை என உணர்கின்றேன்.
  5. முதன் முதலாக சிங்களக் கல்விமான் ஒருவரால் புலிகள் உருவாக்கப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. சிறப்பு !
  6. உங்களுக்குப் புரிந்த இந்த காலம் காலமாக விட்ட தவறுகளை இங்கு பட்டியலிடலாமே? நாமும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். சசி, அருமையான காணொளி. இதனை இங்கு எத்தனை பேருக்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை. ஆனால், கல்விகற்ற சிங்கள மக்களில் சிலரிடம் தெரியும் மாற்றம் இது. சிங்களம் தெரிந்தவர்கள் நிச்சயம் இதனைக் கேட்க வேண்டும். தமது இனத்தில் சமூகமாக தாம் செய்யும் விடயங்களைத் தமிழ் மக்கள் செய்யும்போது தடுக்கும் தமது அரசின் கொடூரத்தைக் கேள்விகேட்கும் பெண்மணி. முள்ளிவாய்க்கால் நோக்கிய இறுதி யாத்திரையில் தமிழ் மக்கள் சென்ற வழிகளில் தானும் சென்ற தெற்கின் சகோதரன். இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நன்றி !
  7. எமது தேசத்தின் விடுதலையினை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம் என்று இந்தநாளில் உறுதியெடுத்துக் கொள்வோம். தமிழினக்கொலையில் இலங்கை, இந்திய சர்வதேசப் பேய்களால் பலியிடப்பட்ட என் மக்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். உங்கள் தியாகங்கள் வீண்போவதில்லை!
  8. Today
  9. 1989 பகை வரவை அவதானிக்கின்றனர் புலிவீரர்
  10. தேசிய தலைவர் பிரபாகரனுக்கும், இறுதி போரில் இறந்த மாவீரர்களுக்கும் வீரவணக்கம். இறுதி போரில் மரணமடைந்த அனைத்து பொதுமக்களுக்கும் நினைவு வணக்கங்கள்.
  11. KKR அசுர‌ ப‌ல‌த்துட‌ன் நிக்குது இந்த‌ ஜ‌பிஎல்ல‌ கே கே ஆர் கோப்பைய‌ தூக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு RCB வென்றாலும் ம‌கிழ்ச்சி ந‌ண்பா🙏..........................
  12. அப்பாடா CSK வெளியே போனது ஒரே மகிழ்ச்சி. இன்றைக்கு சந்தோசமா நித்திரை கொள்ளலாம். தோனி இந்தமுறையுடன் ஓய்வு பெறுவது நல்லது. காசு ஆசை யாரை விட்டது!! போற போக்கை பார்த்தால் RCB தான் கப் வெல்லும் போல இருக்குது!
  13. சுன்னாகத்தில் இருந்து மாவிட்டபுரம் தான் கிட்ட.அங்க போய் மாட்டுக் கொத்து சாப்பிட்டிருக்கலாம். நான் நாய்க் கொத்து என்று சொல்லல்லை.மாடு,மாடு,மாட்டுக் கொத்து.
  14. அம்பிகா அன்ரி இலங்கை மனித உரிமை சபை ஆணையராக இருந்த போது என்ன பதிலை சொல்லியிருப்பாரோ அதுவே பதில். ரிட்டயர்மென்ட் கேசெல்லாம் கூத்தமைப்பு சீட்டுக்காக ஒரளவுக்கு மேல் துள்ளக்கூடாது
  15. வடமாகாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான தெல்லிப்பளை யா/ மகாஜனாக் கல்லூரியின் மாணவனான சரவணபவன் தரம் பத்தில் கல்வி கற்கும் போதே மாணவர் அமைப்பில் இணைந்ததின் மூலம் தனது தாய்நாட்டுக்கான விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தான். பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் தனது வகுப்பில் எப்போதும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று முதலாவது அல்லது இரண்டாவது தரநிலையைத் தட்டிச் செல்லுவான். கற்றல் செயற்பாடுகளில் மட்டுமல்ல விளையாட்டு ஓவியம் வரைதல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினான். அத்துடன் முதலுதவிப் பயிற்சிகளும் பெற்று அவற்றிலும் சிறந்து விளங்கி எல்லாவற்றிலும் முன்னணி மாணவனாகத் திகழ்ந்தான். வீரவேங்கை சிந்து (சரவணபவன் ரகுநாதன்) உடுவில் சுன்னாகம். பிறந்த திகதி – 11.07.1974 வீரமரணம் – 25.02.1991. தாய் தந்தைக்கு குலம் தளைக்க வந்த ஒரேயொரு செல்வ மகனாக பிறந்து வளர்ந்த சரவணபவனின் குடும்பநிலையானது எந்தக் குறையுமற்ற நல்ல வசதிவாய்ப்பைக் கொண்ட பாரம்பரியமிக்கதாக அமைந்திருந்தது. தந்தையார் ரகுநாதன் அரசாங்க உதவி வைத்திய அதிகாரியாகவும் தாயார் அரசாங்க ஆசியராகவும் பணி புரிந்திருந்தனர். இவர்களது பணிகள் பெரும்பாலும் சிங்கள மொழி பேசும் மாகாணங்களிலேயே அமையப் பெற்றதனால் சரவணபவன் ஆண்டு 3 வரை தனது ஆரம்பக் கல்வியை சிங்கள மொழி பேசும் பிரதேசங்களிலேயே கற்க வேண்டிய தேவை இருந்திருந்தது. ஆனால் தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்த அவனது பெற்றோர் தமது ஒரேயொரு மகனின் பிரிவையும் பொறுத்துக் கொண்டு அவனது எதிர்கால தரமான கல்விக் கற்கை நெறிக்காக வலிகாமத்தில் யாழ். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய சிறிய தாய், சிறிய தந்தையினரிடம் அனுப்பி வைத்தனர்.இதன் காரணத்தினால் தான் அவனுக்கு தெல்லிப்பளை மகாஜனா மாதாவிடம் கல்விகற்கும் சிறந்ததொரு சந்தர்ப்பம் அமைந்தது. 1987 இல் தியாகி திலீபனின் வரலாற்றுப் பதிவுத் தியாகம் அந்தச் சிறுவனின் மனதில் ஆழ வேரூன்றியதன் காரணமாக அவனது மனதில் புரட்சித்தீ கொழுந்து விட்டெரிந்தமை அப்போதே அவனது உரையாடல்கள் மூலம் இனங்காணக் கூடியதாக இருந்தது. 1989 இல் அவனது தந்தையார் இயற்கை மரணமெய்தினார். தாயாரும் சிங்களமொழி பேசும் பிரதேசத்தில் பணி புரிந்தமையினால் தந்தையை இழந்த நேரத்தின் பிறகும் அவனது தாயாருடன் ஒன்றாக வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் 1990 ஆம் ஆண்டு தை மாத முற்பகுதியில் வலிகாமம் இளவாலைப் பிரதேசத்தில் “ஐயன் முகாமில் ” தன்னை ஒரு முழுநேரப் புலிப் போராளியாக இணைக்கக் கோரிச் சென்று பின்னர் செம்மலை – நாயாறு பயிற்சிப் பாசறையில் ஆரம்பப் பயிற்சியைப் பெற்று “சிந்து” எனும் பெயருடன் தனது A. K 47 சுடுகலனை முதுகில் சுமந்தபடி பெருமிதத்துடன் தனது தாயாரைச் சந்தித்தான். துப்பாக்கியுடன் வந்த தனது செல்ல மகனைப் பார்த்து அரண்டு போன தாயிற்கு நம்பிக்கையையூட்டி அவரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டதுடன் தனது பாட்டனாரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டவன் மண்கிண்டி மலைச் சமர் போன்ற தான் பங்குபற்றிய சமர்களைப் பற்றி நகைச்சுவை கலந்த வீராப்புடன் எடுத்துக் கூறி தனது தாயினதும் மற்றைய உறவினர்களினதும் பயத்தினைப் போக்கினான். செம்மலைப் பாசறை வாழ்க்கையின் போது எமது விடுதலைப் போராட்ட அமைப்பின் கட்டளைப்படி மருத்துவப்பிரிவுடன் இணைந்து விழுப்புண்ணடைந்த, சுகவீனமுற்ற போராளிகளுக்காகக் காத்திரமான பணி புரிந்தான்.போர் முன்னரங்கப்பகுதிகளில் சுடுகலனை ஏந்தியபடி அந்த இளம் போராளி விழுப்புண்ணடைந்த போராளிகளை மிகவும் பாதுகாப்பாக மீட்டு மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சையளிப்பதில் தன்னையும் கவனியாது முன்னின்று உழைத்தான். எல்லாப் போராளிகளைப் போலவே அவனும் மற்றைய போராளிகளையும் தனது உடன்பிறப்புகள் போல கருதி தனக்கு தாயாரினால் வழங்கப்படும் அனைத்துப் பொருட்களையும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்வான்.அப்படி ஒரு சம்பவம் அவனது தாயாரினால் நினைவு கூரப்பட்டது. ஒருமுறை அவன் மட்டுவில் பகுதியிலுள்ள மருத்துவப்பிரிவு முகாமில் பணி புரிந்து கொண்டிருந்தபோது தாயாரினை வந்து சந்தித்து விட்டுப் போகும் போது அவனது தாயாரிடம் கேட்டு தனது முகாமிலுள்ள அனைத்துப் போராளிகளுக்கும் தாராளமான அளவுக்கு போதுமான உணவுப்பொருட்களை அவரைக் கொண்டு தயாரித்துக் கொண்டதுடன் அப்போது காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணத்தினால் போராளிகளுக்கு தலைக்கு வைப்பதற்கு எண்ணெய் போதுமான அளவு வழங்கப்படாத காரணத்தினால் தனது தாயாரிடம் கேட்டு அனைத்துப் போராளிகளுக்கும் போதுமான அளவுக்கு நல்லெண்ணெயையும் வாங்குவித்து அனைவருக்கும் வழங்கினான். விழுப்புண்ணடைந்த போராளிகளை ஒரு தாயைப் போன்ற மகிழ்வுடன் தலைக்கு எண்ணெய் தேய்த்து முழுகச் செய்து உணவூட்டுவான். மானிடர்கள் அந்த இளம் போராளியிடமிருந்து தான் பாச உணர்வைக் கற்றுக் கொள்ள வேண்டும். அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக விளங்கிய மேஜர் செங்கதிர், டொமினிக் அண்ணா, ஜவான் அண்ணா , மூர்த்தி மாஸ்டர், தயா மாஸ்டர் போன்ற தளபதிகள், பொறுப்பாளர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய செல்லப்பிள்ளையாக விளங்கினான். அவனது கல்வித்திறமையைக் கவனித்த அவர்கள் அவனைக் கல்வி கற்பிப்பதற்கு முயன்றும் அவன் அதனைத் தவிர்த்து போர் முன்னரங்கப் பகுதிகளில் பணியாற்றுவதிலேயே முனைப்பாக நின்றான். அவனது களப்போராட்டப் பணியில் முக்கியமானது யாழ் கோட்டை விடுவிப்புச் சமர். அங்கு போர் முன்னரங்கப்பகுதியில் தன்னுயிரையும் பாராது எதிரியை எதிர்த்து ஓர்மத்துடன் சமராடியபடியே விழுப்புண்ணடைந்த போராளிகளையும் பாதுகாப்பாக மீட்டெடுத்து மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்று காப்பாற்றி தன் பணியினைக் காத்திரமாக ஆற்றியிருந்தான் சிந்து. தன் சகபோராளிகளில் பேரன்பைக் கொண்டிருந்த சிந்து மக்களுடன் பழகுவதிலும் மிகவும் கண்ணியமானவனாகவும் ஆளுமையுடயவனாகவும் பொறுப்பாளர்களினால் இனங் காணப்பட்டான். இதன் காரணத்தினால் 1991 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அரசியல் பரப்புரைக்காக மாவீரர் மேஜர் செங்கதிர் அவர்களுக்கு உதவியாளனாக எமது அமைப்பால் வன்னிப்பகுதிக்கு அனுப்பப்பட்டான். அங்கு செல்ல முதல் தனது தாயாரிடமும் பாட்டனாரிடமும் சென்று ஆசீர்வாதம் பெற்று பிரியாவிடை பெற்றுக் கொண்டான்.அப்போது அவனும் அறிந்திருக்கவில்லை தனது தாயாரையும் பாட்டனாரையும் சந்திப்பது இதுவே இறுதித் தடவை என்பதை… அவனது தாயாரும் அறிந்திருக்கவில்லை தனக்கென்றிருந்த ஒரேயொரு உயிர் சொத்தான ஆருயிர் மகனைக் காண்பது இதுவே இறுதி என்பதை…. வன்னிப் பகுதிக்குச் சென்ற சிந்து மேஜர் செங்கதிருடன் அரசியல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கு பற்றி மக்களுக்கு எமது போராட்டத்தின் உண்மைத் தன்மையையும் முக்கியத்துவத்தையும் அழகுற எடுத்துக் கூறி மக்களின் மனங்களில் எமது போராட்டம் பற்றிய தெளிவை உணர வைப்பதில் பெரும் பணியாற்றினான். பின்பு எமது அமைப்பினால் மேஜர் செங்கதிரையும் அவனையும் மீண்டும் யாழ் நோக்கி வருமாறு பணிக்கப்பட்டதற்கு அமைவாக யாழ் நோக்கி தாண்டிக்குளம், ஓமந்தைப் பகுதிகளினூடாக உந்துருளியில் இரவுப் பயணத்தை மேற்கொண்டான். மீண்டும் தனது தாய், பாட்டனாரையும் சக போராளிகளையும் சந்திப்பதில் பெருமகிழ்வு கொண்டு உற்சாகத்துடன் புறப்பட்ட சிந்து அங்கு தனது உயிருக்கு பேராபத்து காத்திருப்பதை உணரவில்லை. தனது பொறுப்பாளரான மேஜர் செங்கதிரை பாதுகாப்பாக கொண்டு வருவதில் முழுக் கவனத்தையும் செலுத்தியபடி சிந்து மன்னார் கல்மடு காட்டுப் பகுதியில் கும்மிருட்டில் அஞ்சாது தனது உந்துருளியை செலுத்திக் கொண்டிருந்தான். இருட்டிலே காட்டுப் பாதையிலே யாழ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது இராணுவத்தினரின் திடீர் வழி மறிப்புத் தாக்குதலுக்கு உள்ளாகி தீரமுடன் போராடி தாம் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற எமது அமைப்பின் கொள்கைப்படி சயனைட் மருந்தினை அருந்தி சிந்துவும் அவனது பொறுப்பாளரான மேஜர் செங்கதிரும் வீரமரணத்தினைத் தழுவிக் கொண்டார்கள் . அவர்களது வித்துடலும் கிடைக்கப்படவில்லை. சிறிலங்கா இனத்துவேச இராணுவத்தினால் அவர்களது வித்துடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன. சிந்துவினது விடுதலைப் போராட்ட வீரவரலாறு விடைகாணா விடுகதையானது. இந்த இளம் புலிவீரன் சிந்து தனது இளம் வயதிலேயே தனது தாய் நாட்டிற்காக தன் இன்னுயிரீந்து கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் ” நினைவுக்கல் 500 ” இல் வீரவேங்கை சிந்துவாக தன்னைப் பதிவு செய்து கொண்டு எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரவரலாறு ஆகினான். தாய் நாட்டுக்காக தனது ஒரேயொரு தனயனையீந்த அவனது தாயாரும் தற்போது தனிமரமாக தனது வீர மைந்தனின் நினைவுகளைச் சுமந்தபடி ஒரு வீரத்தாயாக தனது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தாயைப் போன்ற எத்தனையோ வீரத்தாய்கள் எமது போராட்ட வரலாற்றில் தமது வரலாற்றைப் பதித்துச் சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. -நிலாதமிழ். குறிப்பு :- இவ் நினைவுப் பகிர்வுக்கு நினைவுக் குறிப்புகளைத் தந்து உதவியவர் வீரவேங்கை சிந்துவின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. https://eelamhouse.com/?p=2868
  16. செல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று நினைக்கின்றேன், லெப். கேணல். சூட்டண்ணையால், மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். நான் சந்திக்கும் போது போராளிக்குரிய எந்த சாயலும் இல்லாது சாதாரணமாக இருந்தார். அந்த நேரத்தில் யாழ் நகரை கலக்கிய போராளிகளான சூட்டண்ணை, யவானண்ணை போன்றவர்களுடன் குமாருக்கும் முக்கிய பங்குண்டு. இவர்கள் இந்திய இராணுவத்தை நித்திரை கொள்ளவிடாமல் செய்தவர்களில் முக்கியமானவர்கள். இந்திய இராணுவம் தோல்விகளுடன் வெளியேறி சென்றபின் புதிதாக பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறை மீள் உருவாக்கம் பெற்றபோது குமாரும் அதனுள் உள்வாங்கப்பட்டார். ஆரம்பகாலங்களில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய துரோகிகளைக் களை எடுப்பதில் முக்கிய பங்காற்றினார். காலில் பல தடவைகள் செருப்பும் இல்லாது தான் குமாரைக் காணமுடியும். குமாரே சத்தியம் பண்ணி, தான் ஒரு போராளி என்று கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அவனது தோற்றம் அப்படித்தான் இருக்கும். மிக எளிமையான உடை அலங்காரத்துடன் யாழ் நகர வீதிகளில் எந்த நேரமும் காணமுடியும். 1991ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பணிக்காக அனுப்பப்பட்டிருந்தான். அங்கு சென்று சிறிது காலத்தில் அங்கு நடந்த குண்டு வெடிப்பொன்றின் காரணமாக தமிழ்நாட்டில் தங்கி இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த எல்லாப் பிரிவுப் போராளிகளும் IB யால் இலக்கு வைக்கப்பட்டு, கைது செய்ய முற்படும் போது ஒரு சில போராளிகளைத் தவிர, யுத்தகளத்தில் படுகாயமடைந்து, மருத்துவத்திற்காக தங்கி இருந்த போராளிகள் உட்பட அனைவரும் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தனர். எப்படியோ IB இன் கண்களில் மண்ணைத் தூவி குமாருடன் தொலைத்தொடர்பைச் சேர்ந்த போராளியும், இன்னுமொரு போராளியுமாக மூவரும் கரையில் புலிகளின் படகுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்காக யாரும் வரவில்லை இவர்களுக்கு உதவி செய்யவும் தமிழ்நாட்டு மக்களும் பின்வாங்கிய நேரம். அப்போது இவர்களுக்கும் குப்பியைக் கடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த முடிவுக்கு குமாரை தவிர மற்ற இரு போராளிகளும் வந்திருந்தனர். அப்போது குமார், சாவது பிரச்சனை இல்லை அதற்கு முன் தப்புவதற்கு முயற்சி செய்வோம் முடியாவிட்டால் குப்பியைக் கடிப்போம் என்று முடிவெடுத்து அன்று இருட்டிய பின் கரையில் இருந்த சிறு தோணி ஒன்றில் தங்கள் கைகளையும், துடுப்பையும் நம்பி, நம்பிக்கையுடன் தாயகம் நோக்கி புறப்பட்டார்கள். அந்த நேரத்தில் இயற்கை இவர்களுக்கு சாதகமாக காற்றும் அடுத்தமையால், தங்கள் சாரம் (லுங்கி) கொண்டு தற்காலிக பாய்மரம் ஒன்றை உருவாக்கி இருவர் அதை பிடிக்க ஒருவர் துடுப்பு பிடிக்கத் தோணி வேகமெடுத்தது. இப்படியே பாய்மரமும், துடுப்பும் போட்டு மூன்று நாட்கள் உணவும் இல்லாது கொண்டு வந்த 5L நீரும் தீர்ந்து போக அரை மயக்கத்தில் கடல்தொழிலில் ஈடுபட்டிருந்த எம் மக்களால் கரை சேர்க்கப்பட்டார்கள். அன்று குமாரின் நம்பிக்கை மூன்று போராளிகளின் உயிரைத் காத்தது. அதன் பின்னரான காலங்களில் யாழில் இருந்தபடி தனது புலனாய்வு வேலைகளை விஸ்தரித்து தனது நேரடி வழிநடத்தலில் கொழும்பில் சில தாக்குதலும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். எப்போதும் போராளிகளுடன் மென்மையான போக்கையே கையாளும் குமார் தட்டிக் கொடுத்து வேலைவாங்குவதில் கெட்டிக்காரன். ஓய்வுறக்கமின்றி சுழன்ற போராளி. சிறிது காலம் சாள்சுக்கு (கேணல்.சாள்ஸ்) அடுத்த நிலையிலும், இறுதிக்கலாங்களில் தனி நிர்வாகம் ஒன்றை பொறுப்பெடுத்து செய்த சிறந்த நிர்வாகி. 12/01/1998 அன்று குமாரின் குழந்தையின் 31 விழாவிற்கான ஆயத்தங்கள் வீட்டில் நடந்து கொண்டிருந்த போதும், இலக்கொன்றை அழிப்பதற்கு, குண்டு ஒன்றை அனுப்புவதற்கான ஆயத்தங்களின் இறுதிக் கட்டம், கடமை தான் முக்கியமாக கருதிய அந்த போராளி அந்தக் குண்டை கொண்டு செல்லும் போது தவறுதலாக அது வெடித்து வீரச்சாவைத் தழுவியிருந்தார். இந்த செய்தியை நான் செய்தி. ஊடகங்கள் ஊடக அறிந்த போது அதிர்ந்துதான் போனேன். நான் ஊர் வரும் போதெல்லாம் எனக்காக காத்திருந்த நல்ல நட்பு பாதியிலேயே போய்விட்டது. மிகவும் திறமை மிக்க போராளி ஒருவனை எம் தேசம் அன்று இழந்தது..!! – நினைவுகளுடன் ஈழத்து துரோணர்..!!! https://eelamhouse.com/?p=2760
  17. சுகந்திரபுரம் சுடுகாடாய் எரிந்து கொண்டிருந்தது எறிகணைகள் கண் மூடித்தனமாக விழுந்து வெடித்தது. எரிபொருள் களஞ்சியங்கள் தீப்பற்றி எரிந்தது.அங்கு இயங்கிய எமது தற்காலிக மருத்துவ மனையும் இடம்பெயர்ந்து போவதற்காகன ஆயத்தங்கள் நடந்தன. எனது குழந்தைகள் எனது அப்பாவுடனும் எனது மாமாவின் வீட்டாரின்(மேஜர் அரி மாறனின் தாய் தந்தையுடன்) பாதுகாப்பிலும் இருக்கின்றனர். நானும் அங்கு செல்கின்றேன் சுகந்திர புரம் பிரதான வீதி. பகுதியில் இருந்து சற்று உள்நோக்கி இருந்த எமது இருப்பிடத்தில் பிரசன்னா அண்ணாவின் மனைவியும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். தொடர் இடப்பெயர்வுகளால் அந்த காணியில் தறப்பாள் கொட்டில்களைப் போட்டுக் கொண்டிருந்த 10 மேற்பட்ட குடும்பங்கள் அரையும் குறையுமா தறப்பாள் கொட்டில்களை பிடுங்கி இடம்மாறிவிட்டதால் அரை நாள் பொழுதில் இடம் காலியாகியது. மக்கள் வள்ளிபுனம் பகுதியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள் நாங்கள் குழந்தைகளை வங்கருக்குள் இருத்தி விட்டு வாசலில் இருக்கின்றோம் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க்க தொடங்க இனி இருக்க முடியாது ஆமி கிட்ட வந்திட்டான் என்று ஊகிக்க முடிந்தாலும் தொடர்ந்து விழுந்து கொண்டே யிருந்த எறிகைணகள் வெளியில் குழந்தைகளை அழைக்க அச்சமூட்டியது. ஆளையாள் தெரியாத மம்மல் இருட்டில் எங்கு பார்த்தாலும் தீ பற்றி எரிந்து கொண்டேயிருந்தது. அப்போது தோளில் தொங்கும் துப்பாக்கியுடன் எங்கள் முன் பிரசன்னா அண்ணா வந்து நின்றார் பிரசன்னா அண்ணா வின் குழந்தைகள் அவரின் குரலைக்கேட்டு “அப்பா என்றார்கள் குதுகலமாய். வங்கருக்க இருங்க” வரவேண்டாம் என்றார் . அவரது மனைவி எதுவும் பேசாது மெளனமாய் இருந்தார். நானும் அப்படியே அவரையே பார்த்தேன் எதையாவது களநிலை சொல்வார் என்று .. ஆனால் அவரிடம் சொல்வதற்கு அன்று நல்ல செய்தியில்லை…. “நின்ற நிலையிலையே கண்கள் கொப்பளிக்க ஏன் இன்னும் இருக்கிறிங்கள் வெளிக்கிட்டு போங்கோ என்றார். “ஆமி கிட்ட நிக்கிறான்” இன்னும் ஒன்றையும் எனக்கும் அவரது மனைவிக்கும் தெளிவாக சொன்னார். “ஆமியிட்ட மட்டும் பிடிபட்டிராதையுங்கோ ஆமி யை கண்டாலும் ஓடுங்கோ” என்று அவசரமாக சொல்லிவிட்டு தன் கடமைக்கு திரும்பிவிட்டார் நாங்களும் உடனடியாக கால்கள் போன திசையில் குழந்தைகளுடன் அவ்விடத்தைவிட்டு நடந்தோம். இது தான் நான் அவரைப்பார்த்த இறுதி நாளும் குரலும் இன்னும் அப்படியே ஈரமாய் அப்பிக் கிடக்கிறது பிரசன்னா அண்ணா ஒரு உறவினராக இருந்தாலும் போராட்ட களங்களில் தான் நான் அதிகமாக அறிந்திருக்கின்றேன் அடிக்கடி அவரை சந்தித்துக் கொள்வது நான் வேலை செய்த மருத்துவமனையிலும் மாவீர்துயிலும் இல்லத்திலும் தான் அதை விட களமுனையிலும் அவரது திறமைகளை பார்த்து வியந்திருக்கின்றேன். ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும் வன்னேரியில் இயங்கிய நீலன் மருத்துவமனைக்கு அவரினது துறை சேர்ந்த காயமடைந்திருந்த போராளி ஒருவரை சந்திக்கவந்திருந்தார். அப்போது இரவு காயமடைந்து வந்த போராளிக்கு 0_ மைனஸ் குருதிவகை தேவைப்பட்டது . எங்களிடம் வாகன வசதியும் இருக்கவில்லை எங்களிடம் இருந்த இரு குருதி பைகளும் ஏற்றி முடிவதற்குள் இன்னுமொன்று வேணும் என்ன செய்வது என்று ஒவ்வொருவராகா தேடிக்கொண்டிருந்தேன் கடவுளைப்போல் பிரசன்னா அண்ணா வந்து இறங்கினார் ஓடிப்போய் நிலமை சொல்லி உதவிகேட்டேன் .பதில் கூட சொல்லாமல நின்ற இடத்திலிருந்து அண்மையில் இருந்த அவரது முகாங்களிற்கு தொடர்பு கொண்டு 0 மைனஸ் குருதியிருக்கிறார்களா என்று கேட்டு ஒருவர் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியபின் என்னிடம் வந்து சொன்னார் .(போராளிகளிற்கு முன்னரே குருதிவகை தெரியும்) “நான் ஒரு ஒருவரை கொண்டுவாறன்” என்று வந்த வேலையை விட்டு திரும்பி சென்று அந்த போராளியை அழைத்து வந்தார் இது அவரது பணி இல்லாவிட்டாலும் ஒவ்வொரு போராளின் உயிரின் பெறுமதி அறிந்தவர்.இப்படி காலம் தேவை அறிந்து பணி செய்பவன் போராளியாக தனித்துவம் அடைகின்றான். பல தடவைகள் விழுப்புண்ணடைந்து மீளக் களம் சென்ற வீரன். நெடிய உயரிய தோற்றமும் எப்போதும் குறு குறு என விழித்திருக்கும் புலணாய்வு கண்களும் தனியாக கம்பீரம் கொடுக்கும் . எப்போதும் மரணத்திற்குள் வாழ்ந்தவன் மரணம் அவனைக் கண்டு அஞ்சிய நாட்கள் பல உண்டு . எப்போதும் எதையோ சாதிக்க துடிப்பவன் பல்துறை ஆளுமையாளன் போர்கலையில் மட்டுமன்று விளையாட்டிலும் சிறந்த வீரன். இவனைப்பற்றி வெளியில் தெரியாத பக்கங்கள் பல உள்ளன. இவனின் இலட்சிய உறுதியின் சாட்சியாய் எமது தேசத்தையும் மக்களையும் காக்க முள்ளிவாய்க்காலில் காவியமானான் இன்னும் தொடரும் நினைவுகள் …. மிதயா கானவி 17.05.20 https://eelamhouse.com/?p=2662
  18. அந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல இன்றுவரை அவன் வரவேயில்லை… எங்களால் என்றுமே மறக்க முடியாத அந்த இருள் சூழ்ந்த நாட்கள். இங்கே “அமைதி தேடுகின்றோம்” என வந்து – அக்கிரமங்கள் புரிந்த இந்தியத் துப்பாக்கிகளின் ஆட்சிக்காலம். வன்னியில் கருப்பட்ட முறிப்பு என்ற சிற்றூர்ப் பொறுப்பாளனாக ஜொனி இருந்தான். ஒரு நாள் அப்போதைய எமது பிரதான போக்குவரத்துச் சாதனமாக இருந்த மிதி வண்டியில் போய்க்கொண்டிருக்கிறான். அவன் சென்றுகொண்டிருந்த பாதை யாழ்ப்பாணப் பிரதான வீதியில் சந்திக்கின்ற மூலை. மிதிவண்டி வளைவில் திரும்பவும் பதுங்கியிருந்த இந்தியப் படையினர் அவன் மீது பாயவும் சரியாக இருந்தது. எதிர்பாராத தாக்குதல் – கண்ணிமைப்பொழுதிற்குள் அவன் செயற்பட்டான். தன்னைப் பிடிக்க வந்த படையினர் மீது வண்டியைத் தூக்கி வீசினான்; அருகில் பதுங்கியிருந்தவர்கள் மீது கைக்குண்டுகளை வீசினான். தப்பி விடுகிறான் ஜொனி. இந்தச் சம்பவத்தில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இப்படியாக அந்த ஊரில் ஜொனி அரசியல் வேலை செய்த நாட்களில் அடிக்கடி இந்தியப் படையினரைச் சந்தித்திருக்கிறான். அவை ஒவ்வொன்றும் மயிர்க்கால்களைக் குத்தி நிமிர வைக்கும் சம்பவங்கள். அப்போதெல்லாம் அவன் ஒரு புலிவீரனுக்கே இருக்கக்கூடிய சாதுரியத்துடன் தப்பிவிடுவான். அந்த ஊரில் மிகவும் நெருக்கடியான அந்தக் காலகட்டத்தில், கடினமான ஒரு சூழ்நிலைக்குள் நின்று அவன் போராட்டப் பணிகளை ஆற்ற வேண்டியிருந்தது. இந்தியப் படையினரும், இந்திய அடிவருடிகளும் எங்கும் நிறைந்திருந்த அந்த நாட்களில் கிராமங்களிலோ, நகரங்களிலோ அரசியல் வேலை செய்வதென்பது ஒரு சுலபமான காரியமாக இருக்கவில்லை. காடுகள், ஆறுகள், குளங்கள், வயல்வெளிகளினூடாக மைல் கணக்கான தூரங்களிற்கு அவனது கால்கள் நடக்கும். தனது பொறுப்பாளர்களால் ஒப்படைக்கப்படும் வேலைத் திட்டங்களை, இவ்வாறாகச் சிரமப்பட்டுத்தான் அவன் செவ்வனே செய்து முடிப்பான். கருதப்பட்ட முறிப்பு என்ற அந்த ஊர், எங்களது போராளிகளின் அணிகள், பொருட்கள், ஆயுதங்கள், ஆவணங்கள் என்பவற்றோடு முக்கிய தகவல்களையும் பரிமாறுகின்ற பிரதான இடங்களுள் ஒன்றாக இருந்தது. போராட்டத்தின் பெறுமதிமிக்க இவ்வகையான வேலைகளுக்காக, இந்த ஊருக்கு வருகின்ற போராளிகளை ஜொனி மிகுந்த இடர்களுக்கு நடுவில் பாதுகாத்துப் பராமரித்திருக்கிறான். இந்தியர்கள் வளைத்து நிற்கும் போதே கிராமத்துக்குள் நுழைந்து, போராட்டக் கருத்துக்களடங்கிய சுவரொட்டிகளை ஒட்டிவிட்டோ, பிரசுரங்களை விநியோகித்துவிட்டோ மிகச் சாதுரியமாகத் தப்பி, அவர்களின் முற்றுகைக்குள்ளிருந்து ஜொனி வெளியேறிய சம்பவங்கள் பல உண்டு. மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள், புத்திஜீவிகள் எனச் சமூகத்தின் எல்லா மட்டத்தினருக்குள்ளும் நுழைந்து, ஜொனி போராட்டக் கருத்துக்களை விதைத்தான். இதன்மூலம் இளைஞர்களையும், பெண்களையும் பெருமளவில் போராட்டத்தோடு இணைத்தான். 1989 ஆம் ஆண்டு எமதுதேசம் மாவீரர் நாளை முதற்தடவையாக அனுஸ்டித்த போது, கருப்பட்ட முறிப்புப் பகுதியில் அதனைச் சிறப்பாக நடத்தினான். தம்மை நோக்கி இந்தியர்களின் துப்பாக்கி முனைகள் நீண்டிருந்தபோதும், அந்த மக்கள் உணர்வுபூர்வமாக அந்நாளை அனுஸ்டித்தனர். அந்த அளவுக்கு ஜொனி அவர்களோடு இரண்டறக் கலந்து, அவர்களைப் போராட்டத்தின்பால் ஈர்த்திருந்தான். அவனையும், தோழர்களையும் ஆபத்து நெருங்கி வந்த பல சந்தர்ப்பங்களில், அவன் நேசித்த இந்த மக்கள் தான் அவர்களுக்குக் கவசமாக நின்றிருக்கின்றார்கள். 1990 இன் ஆரம்பம். இந்தியர்கள் எங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். இவனது திறமையான செயற்பாடு காரணமாக இவன் மல்லாவிப் பிரதேசப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். போர் நின்றிருந்த அந்த நாட்களில் மக்களிடையில் அரசியல் வேலைத்திட்டங்கள் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட போது, ஜொனி அவ்வேலைகளைச் சிறப்பாகச் செய்துடித்தான். கிராம அபிவிருத்தி வேலைகள், சிறுவர்களுக்குக் கல்வி வசதிகள் செய்தல், பெண்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் என இவனது செயற்பாடுகள் வளர்ந்தன. அந்த நாட்களில் சின்னக் குழந்தைகள் முதல் ஆச்சி அப்புவரை, மக்கள் ஒவ்வொருவரோடும் இவன் நெருக்கமான உறவுகளை வளர்த்திருந்தான். அவர்களால் என்றுமே ஜொனியை மறந்துவிட முடியாத அளவுக்கு அது இருந்தது. 1990இன் நடுப்பகுதி. சிறீலங்காப் படையினருடன் இரண்டாவது ஈழப் போர் ஆரம்பித்தது. சண்டைக்குப்போக வேண்டும் என்ற ஜொனியின் ஆவலைப் பூர்த்திசெய்யும் களமாக, அது அமைந்தது. மாங்குளம் இராணுவ முகாம்மீதான முதலாவது தாக்குதல் தொடுக்கப்பட்டது. எனினும்இ வெற்றியீட்டமுடியாமல் போய்விட்ட அந்தத் தாக்குதலின் போது, ஜொனி காலில் காயமடைந்தான். காயம் மாறி, வட்டக்கச்சிப் பிரதேசப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டுப் பணியாற்றிக்கொண்டிருந்த போதும், ‘என்றைக்காவது ஒரு நாள் இந்த முகாமை நிர்மூலமாக்கியே ஆகவேண்டும்.’ என்ற வேட்கையே, அவனுள் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அந்த நாளும் வந்தது. இரண்டாவது தடவையாகவும், இறுதியானதாகவும் மாங்குளம் இராணுவ முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஜொனி பெரும் பங்காற்றினான். அந்தத் தாக்குதலின் வெற்றி ஜொனியைப் பூரிப்படைய வைத்தது. இந்தத் தாக்குதல் முடிந்து சிறிது காலத்தின்பின், அவனது நீண்டநாள் கனவு நனவானது. அரசியல் வேலையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு அவன் சமர்முனைக்கு அனுப்பப்பட்டான். அந்த நாட்களில் அவனைக் காண்கின்றபோது ஓர் ஆத்மதிருப்தி அவன் முகத்தில் தெரிந்தது. ஒரு சின்னக்குழந்தை மிகமிக ஆசையோடு எதிர்பார்த்த ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும் போது, அக் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்வோடு, அவன் சண்டைக் களங்களில் உலாவினான். எவ்வளவு ஆர்வத்தொடும் திறமையோடும் அவன் அரசியல்துறை வேலைகளைச் செய்தானோ, அதைவிட அதிக ஆர்வத்தோடும் அவன் படைத்துறை வேலைகளில் ஈடுபட்டான். அரசியல் வேலைகளைச் செய்யும்போது, ஒரு சிற்றூர்ப் பொறுப்பாளனாக இருந்து பின்னர் கிளிநொச்சி மாவட்ட அரசியல் பொறுப்பாளனாக வளரும் அளவுக்கு அவனுள் இருந்த ஆற்றல், சண்டைகளின் போதும் வெளிப்படத் தவறவில்லை. நீண்டகாலமாக அரசியல் வேலை செய்துகொண்டிருந்த அவனுக்கு, அந்தச் சண்டைக்களங்கள் புதிய உற்சாகத்தைக் கொடுத்தன. போர் அரங்கிலே ஒரு முன்னணிச் சண்டைக்காரனாக நின்று…… ஓய்வின்றி உறக்கமின்றி அவன் போரிட்டான். ஜொனி 1969ஆம் ஆண்டு, ஓகஸ்ட் திங்கள் 19ஆம் நாள் பிறந்தான். அப்பாவும் அம்மாவும் இவனுக்குச் செல்லமாக இட்ட பெயர் ஜெகதீஸ்வரன். குடும்பத்தில் 3 ஆண்களும் 4 பெண்களுமாக 7 உடன்பிறப்புகளுக்குப் பின்பு, இவன் பிறந்தான். இவனுக்குப் பின்பு ஒரு தங்கை. எவருடனும் அதிகம் பேசாத சுபாவமுடைய ஜொனி, ஆடம்பர வாழ்வு முறைக்கும் புறம்பானவனாக இருந்தான். மீசாலை இவனது ஊர். வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற இவனுக்கு, சமூகத்திற்குச் சேவை செய்ய வெண்டும் என்ற சிந்தனையும், ஆர்வமும் இயல்பாகவே இருந்தன. சின்ன வயதிலிருந்தே பொது வேலைகளில் ஈடுபடுவான். மீசாலையின் புழுதி படிந்த தெருக்களில், வயல் நிலங்களில், தோட்ட வெளிகளில்…… எங்கும் அவனது சேவை பரந்திருந்தது. பாடசாலையில் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் திறமைமிக்கவனாக ஜொனி இருந்தான். அங்கு மாணவர் தலைவனாக இருந்த அவன், திறமையான செயற்பாடுகளுக்காகப் பரிசுகளும் பெற்றிருக்கிறான். இந்திய இராணுவம் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருந்த அந்தக் காலம், இவனுக்குள் ஒரு புயலையே வீசச் செய்தது. இயல்பாகவே மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்ற சுபாவமுடையவனாக இருந்த ஜொனி, அன்றைய நெருக்கடியான நாட்களில், ஊரில் எமது போராளிகளுக்கு உற்ற துணையாக நின்றான். வீட்டாரிற்கும் வெளியாட்களுக்கும் தெரியாமல், மறைமுகமாக இயக்கத்திற்கு வேலை செய்துகொண்டிருந்த ஜொனி, 1989 இன் முற்பகுதியில் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டான். இரணைமடுவில் வன்னியின் அடர்ந்த காடுகளின் நடுவில் தனது பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறிய இவனுக்கு, எல்லாப் புலிவீரர்களுக்கும் இருப்பதைப் போல, சண்டைக்குப் போகவேணும் என்ற ஆசை இருந்தது. ஆனாலும், இயக்கம் அரசியல் வேலைகளை வழங்கியபோது, திறமையுடன் அதனைச் செய்யத் தொடங்கினான். எங்கள் தேசத்தில் 1991 ஆம் ஆண்டின் சிறப்பான நிகழ்வு அதுதான். ஆனையிறவுப் பெருஞ்சமர்…… அந்த நீண்ட சண்டைகளின்போது, ஜொனி உயிர்த்துடிப்புடன் களங்களில் போரிட்டான். அந்தச் சமரின் இறுதி நாட்களில் ஒன்று. ஒரு மாலை நேரம்; ஐந்து மணிப் பொதுழு. எங்கள் காவலரணிற்கு வந்த ஜொனி எம்மோடு மகிழ்ச்சியாகக் கதைத்துக்கொண்டிருந்தான். நீண்ட நேரம் அன்பான உரையாடல். நேரம் போனதே தெரியவில்லை. இருண்டுவிட்டதால் தனது காவலரணிற்குப் போவதற்காக எழுந்தான். தட்டுவன்கொட்டிப் பகுதியில் இவனது அரண்கள் இருந்தன. அப்பகுதியின் பொறுப்பாளனாகவும் இவன்தான் இருந்தான். எழுந்தவன், திரும்பிச் சொன்னான்…… “என்ர பொயின்ரைக் கடந்து ஆமி வாறதெண்டால் என்ர உடம்புக்கு மேலாலதான் வருவான்” அவன் சொல்லிவிட்டுப் போனபோது நாங்கள் எவருமே அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்று இரவு கடந்து மறுநாள் விடிந்து விட்டது. நேரம் ஓடியது. காலை 11 மணியை நெருங்கியபோது விமானங்கள் இரைய, குண்டுகளை அதிரச் சண்டை தொடங்கிவிட்டது. ஜொனியின் காவலரண் பகுதியை நோக்கி படை நகரத்துவங்கியது. வானிலிருந்து குண்டுகள் பொழிய, எறிகணைகள் கூவிவர, கனரக வாகனங்கள், கனரன ஆயுதங்கள் சகிதம் எதிரி மெல்லமெல்ல முன்னேறினான். அது ஒரு கடுமையான மூர்க்கத்தனமான சண்டையாக இருந்தது. தங்களில் சிலர் பிணங்களாய்ச் சரிய, எதிரி அங்குலம் அங்குலமாக நகர்ந்து வந்தான். அந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை. இன்றுவரை அவன் வரவேயில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல ஆனால், அவனோடு பழகிய அந்த இனிய நாட்களின் நினைவுகள் என்றும் எம்மோடு பசுமையாய் வாழும். இந்த இலட்சியப் பயணத்தில் அவனது நினைவுகள், எம்மோடு துணையாய் வரும். நினைவுப்பகிர்வு: நிமால். வெளியீடு – விடுதலைப்புலிகள் இதழ் https://eelamhouse.com/?p=2585
  1. Load more activity
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.