Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப் படுகொலையின் உச்சநாள். தமிழீழம் சிதைத்து அழிக்கப் பட்ட நாள்.

Event details

This event begins 05/18/17 and repeats every year forever

  Bild könnte enthalten: 1 Person   Bildergebnis für lighting candle gif

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen und Text  Bild könnte enthalten: Himmel, Wolken, im Freien und Natur

இனப் படுகொலையின்  உச்சநாள். தமிழீழம்  சிதைத்து... அழிக்கப் பட்ட  நாள் மே 18, 2009.

சர்வதேச நாடுகளின் துணையுடன் , தேசத் துரோகிகளினதும், தமிழீழ விரோதிகளினதும் முழுமையான ஒத்துழைப்புடன்..... பொய்மை புனைந்து,  உலகை ஏமாற்றி,  தன்னை நியாயப் படுதித்தியபடி வீரமிக்க தமிழீழ தேசத்தை சிங்கள இன வெறியரசு கோழைத்தனமாக ஆக்கிரமித்துக்கொண்ட நாள். 

21-ம் நூற்றாண்டில் மனிதம், அதன் உரிமைகள்... பற்றிய புதிய கருத்தேற்றங்கள் சபைகள் தோறும் நிறைந்து விரவிக்கிடக்க... இலட்சக்கணக்கான தமிழர்களை பலிகொண்டு, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை அங்ககவீனர்களாக்கி, மூன்று இலட்சத்திற்கும் மக்களை கைதிகளாக்கி அடைத்து வைத்தபடி, விடுதலைப் போராளிகளை சித்திரவதை செய்து, படுகொலைகள் செய்து, தமிழீழத்தை... சிங்கள தேசம் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட தினம்.

 Bild könnte enthalten: 2 Personen, Personen, die sitzen   Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: im Freien  Bild könnte enthalten: 5 Personen, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text  Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

 

Bild könnte enthalten: Text Bild könnte enthalten: eine oder mehrere Personen und Personen, die sitzen

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen, im Freien und Natur  Bild könnte enthalten: eine oder mehrere Personen und Personen, die sitzen

Bild könnte enthalten: 1 Person, sitzt    Bild könnte enthalten: eine oder mehrere Personen

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien Bild könnte enthalten: im Freien Bild könnte enthalten: eine oder mehrere Personen und Personen, die sitzen Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

 

 Bildergebnis für lighting candle gif Bildergebnis für lighting candle gif


User Feedback


'மே மாதத்தின் மத்தியில், அந்த சில நிமிடங்கள்' 
 
 
அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவது பற்றிய அவனது கனவுகள் இன்னும் நிலைத்து இருந்தாலும், சம உரிமையுடன் கௌரவமாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தனக்கென ஒரு மொழி, ஒரு நிலம், ஒரு பண்பாடு .... என சகல அம்சங்களையும் இலங்கையில் கொண்ட அவன், இலங்கைத் தமிழனாக என்றும் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தாலும், 'மே மாதத்தின் மத்தியில், அந்த சில நிமிடங்கள்'  அவனால் என்றும் மறக்க முடியாத ஒரு நாள். ஈழத்  தமிழனின் வாழ்வு அசைந்து, சிதைந்து, தற்காலிகமாக உடைந்த நாள்!  இந்த இழப்பைப் பற்றி எழுதுவது மிகவும் கடினமான ஒன்று. இந்த இழப்பு எவராலும் ஜீரணிக்க முடியாத ஒன்று! பதினைந்து ஆண்டுகளாக  தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டது போல் அது ஒட்டிக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இழப்பைப் பற்றிய எண்ணம் மனதில் எழுந்தவண்ணமே உள்ளது.
 
இது எப்படி, ஏன் நிகழ்ந்தது? அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், ஆயுதம் ஏந்திய போராளிகள் செய்த அல்லது விட்ட தவறுகள் என்ன? தமிழ் மக்கள் இடையில் ஒற்றுமை இல்லாதது ஏன்? இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கான அடிப்படைப் பதில்களுக்காக நாம் இன்னும் எப்படிப் போராடிக் கொண்டிருக்கிறோம்? காணாமல் போன மக்கள் தொடர்பில் நாம் இன்னும் எவ்வாறு விடை தேடுகிறோம்? நாம் இன்னும் எப்படி அதற்கான நீதி கேட்கிறோம்? ‘ஒற்றுமை’ என்று சொல்லப்படும் இடத்தில், எப்படி, ஏன்  குழிகளும் மேடுகளும் இன்னும் இருக்கிறது? 
 
நாம் எம் காலத்தை பின்னோக்கிப் பார்க்கும் போது, தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்தையோ அரசியல்வாதிகளையோ இனிமேலும் நம்பியிருக்க முடியாது என்ற ஒரு எண்ணத்தினால்,  எதிர்கால சந்ததியினருக்கு சமமாக உரிமையுடன் வாழும் ஒரு சூழலை விட்டுச் செல்ல வேண்டும் என்பதனால், ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை அவதானிக்க முடியும். 
 
ஆனால் நடந்தது என்ன? நேர்மையான புத்திஜீவிகளையும் மற்றும் நடுநிலையான அரசியல் அனுபவசாலிகளையும் அணைத்து  ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய அந்த இளைஞர்களிடையில் என்ன நடந்தது?, எத்தனை குழுக்கள்?, எத்தனை தலைவர்கள்? சேர சோழ, பாண்டியர் போல தங்களுக்குள்ளேயே காட்டிக்கொடுப்பும் போராடடமும்? அதனால் ஏற்பட்ட விரயமும் சமூக அநீதியும் தேவையாற்று தங்களை தாங்களே பறித்த உயிர்களும் எத்தனை?    
 
"மரணித்தவர் வணக்கத்திலும் பிரிந்து நிற்கும் 
ஒற்றுமை இல்லா தமிழர் இங்கே?  
யுத்தத்தை வெறுத்த புத்தனைப் போற்றி 
சிறுபான்மையினரை மதிக்காத அரசியல் ங்கே?"
 
"ஈன்றவன் இல்லை இணைந்தவன் இல்லை
இருந்ததும் இல்லை நிலமும் இல்லை
சிதைந்து போராடி வெற்றியும் இல்லை
புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!"
 
"கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம்
நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம்
நீதி வேண்டி சிலம்பை உடைத்தாள்
நியாயம் வேண்டி உண்மையைக் கேட்கிறோம்?"
 
நடந்தவை நடந்தவையே! அதை அலசுவதால் வருங்காலத்துக்கு ஒரு பாடமாக, அனுபவமாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த பாடத்தை உண்மையில் நாம் பின்பற்றுகிறோமா? இன்றும் இலங்கைத் தமிழருக்கிடையில் எத்தனை அரசியல் காட்சிகள், எத்தனைக் குழுக்கள்?  மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விட்டது என்பதே உண்மை?
 
 
"வாருங்கள், வந்து கை கொடுங்கள்
இமைகள் மூடி பல நாளாச்சு ...
சொல்லுங்கள், என் கண்களை மூடினால்
வரிசையாய் வருங்கள் பலஅப்பாவி சடலங்கள் --
தாருங்கள், தீர்வை தந்து கவலைதீருங்கள்
கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன ..."
 
"நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்
நங்கை இவள் உண்மை உரைத்ததால் ...
முலையை சீவினான் கொடூர படையோன்
வஞ்சி இவள் காமம் சுரக்காததால் ... "
 
"கண்களுக்குள் புதையாத அப்பாவிகளைத் தருகிறேன்
கவனமாக ஒன்று ஒன்றாய் புதைக்க ...
வரிசையில் வரிந்து வருகினம் பலஆயிரம்
இடையில் சின்னஞ் சிறுசு சிலஆயிரம் ... "
 
"முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்
விசாரணை எடு -உண்மையை நிறுத்து ...
கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள்
படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது ... "
 
 
முதலாவதாக, இது இலங்கை அரசாங்கம் மற்றும் பெரும்பான்மை தீவிரவாதிகளிடமிருந்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நிறுவன ஒடுக்குமுறை காரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு யுத்தமாகும். நாம் இங்கு அனைத்து சாதாரண சிங்கள மக்களை கூறவில்லை என்பதைக் கவனிக்க,  இரு தரப்பினரும் இழப்பை எதிர்கொண்டனர்.  நாங்கள் மீண்டும் ஒன்றாக கட்டியெழுப்ப விரும்பினால் முதலில் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
 
"இருஇனம் வாழும் ஒரு நாட்டில்
இருக்கையை தனதாக்கி பெரும்பான்மை அதிகாரத்தில்
இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி
இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "
 
"இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி
இணக்கம் கண்டு இதயம் பரிமாறி
இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு
இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! "
 
இரக்கமின்றி வாழும் காட்டுமிராண்டிகள் அவர்களல்ல
இந்தநாட்டின் பூர்வீககுடிகளில் அவர்களும் ஒருவர்
இணைந்து வாழ்ந்த குடிமக்கள் அவர்கள்
இன்பமாக வாழ அவர்களை சமனாகமதி! "
 
"இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி
இழிவு செய்த வெட்கமற்ற மனமே
இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து
இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' "
 
"இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது
இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது
இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல
இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! "
 
பழையதை ஒவ்வொன்றாக நினைவுகூரும் அதே தருணத்தில், தற்போதைய தருணத்தை நோக்கின், நாம் ஏன் இன்னும் சம உரிமை இன்றி, அடையாளங்கள் பறிக்கப்பட்டு வாழ்கிறோம்? போர் முடிந்துவிட்டது என்று சொன்னாலும், இலங்கையின் தமிழ் மக்கள் ஏன் இன்னும் முறையான இராணுவமயமாக்கலுடன் கண்காணிக்கப் படுகிறார்கள்? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் முன்னாள் போராளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏன் தொடர்ந்து துன்புறுத்தல்கள் / கண்காணிப்புக்கள் உள்ளன? காணாமல் போனோர்களின் போராட்டம் ஏன் இன்னும் முடிவுக்கு வரவில்லை?  .... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
 
 
மே மாதம் 18 இல் முடிவுற்ற இந்தப் போர் 80 களில் தொடங்கியது, ஆனால் அடக்குமுறை அதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, முதல் ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, உதாரணமாக, 1956 இல் சிங்களம் மட்டும் சட்டத்துடன் தீவீரப்படுத்தப் பட்டுவிட்டது. 1971 இல் கல்வி தரப்படுத்தல் சட்டம், 1981 மே 31 யாழ்ப்பாண நூலகம் எரிப்பு,  பிறகு, கறுப்பு ஜூலை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவை  எண்ணற்ற சாதாரண தமிழ்க்குடி மக்களின் வாழ்வை கடினமாக்கியது மட்டும் அல்ல  அப்பாவி உயிர்களையும் இழந்து, ஒரு தீப்பிழம்பைத் தூண்டி விட்டது, அது இன்றுவரை தொடர்ந்து எரிகிறது!
 
இன்றுடன் 15+ ஆண்டுகள் கழிந்துபோனாலும், 
 
காணாமல் போனவர்களுக்கு இன்னும் பதில் இல்லை. வெள்ளை வேன் கடத்தல்களுக்கு இன்னும் பதில் இல்லை. நீதி மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக எழும் அனைத்து கேள்விகளுக்கும் இன்னும் பதில் இல்லை. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஊடாக இராணுவ மயமாக்கல் தொடர்கிறது. இலங்கையின் தமிழ் மாகாணங்கள், சிங்கள அடிப்படையிலான அடையாளங்களுடன் பல கட்டமைப்புகள், பௌத்த விகாரைகள் நிறுவி, கலாச்சார மாற்றங்ககள் வலுக்கட்டாயமாக நடைபெறுகின்றன. 
 
 
அனைத்து இனப்படுகொலைகள் மற்றும் உள்நாட்டுப் போரின் பின்விளைவுகள் தமிழ் மக்களை அதே இடத்தில் அல்லது உள்நாட்டுப் போருக்கு முன்னர் அவர்கள் இருந்ததைவிட  மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. 
 
இவ்வளவு நடந்த பின்பும் இன்றும் தமிழ் மக்களிடையே சரியான ஒற்றுமை இல்லை. ஏன் மே மாத நினைவுகூறலிலும் கூட பிரிந்து பிரிந்தே வணக்கம் செலுத்துகிறார்கள்? எனவே நினைவுகூறலில் நாம் எல்லோரும் ஒன்றாக அணிதிரண்டு நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் ஒன்றிணைத்து,  தமிழுக்கும், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் எதிர்காலம் நம் கையில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினரின் கைகளில் உள்ளது என்பதை உணர்த்த வேண்டும்!!  
 
 
"மே மாதத்தின் மத்தியில், அந்த சில நிமிடங்கள்" [அங்கு நிகழ்ந்த சூழலை மையமாக வைத்து ஒரு கற்பனைக் கதை] 
 
 
தேம்சு ஆற்றின் ஓரத்தில் ஒரு கல்லில் நான் இருந்தவண்ணம், இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் பிக் பென் (Big Ben) மணிக்கூட்டு கோபுரத்தின் நேரத்தை பார்த்தேன். அது மூன்று மணிக்கு இன்னும் அரை மணித்தியாலயம் என்று காட்டியது. சுமார் 100,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய லண்டனில் பாலஸ்தீனத்திற்கு தங்கள் ஆதரவைக் காட்டவும் காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சை நிறுத்தக் கோரவும் "இப்போதே போர்நிறுத்தம்" மற்றும் "காசா மீது குண்டு வீச்சை நிறுத்து" என்று எழுதப்பட்ட பலகைகளை எதிர்ப்பாளர்கள் கையில் ஏந்தியவண்ணம், பாராளுமன்ற சதுக்கத்துக்கு திரண்டு வந்துகொண்டு இருந்தனர்.  
 
எனக்கு அங்கு நடப்பதில் அக்கறையும் போதுமான அனுதாபமும் இருந்தாலும், என் மனதில் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்தது "அந்த சில நிமிடங்கள்" தான்! இரண்டாயிரத்து ஒன்பது, மே மாதம், முல்லைத்தீவு, இலங்கையில் நான் கண்ணால் பார்த்து அனுபவித்த "அந்த சில நிமிடங்கள்" தான்! 
 
இளம் தாய் ஒருவள், குண்டுத் தாக்குதலால் இறந்த தன் குழந்தையைக் கையில் ஏந்தியவண்ணம் சாலையோரம் நின்று கொண்டிருந்தாள். 
அவளைச் சுற்றி, ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் குறுக்கே சிதறிய உடல்களுக்கு இடையே, அவர்களைச் சுற்றியுள்ள சண்டையிலிருந்து தப்பிக்க, பாதுகாப்பான வழியைத் தேடிக்கொண்டு, அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு இருந்தனர். அந்த இளம் தாயால் இறந்த உடலைக் மேலும் கொண்டு போக முடியவில்லை, ஆனால் அதையும் விட்டுவிட அவளுக்கு மனம் இல்லை. அவள் குழந்தையைப் பிடித்துக் கொண்டு ஒரு சிலையாட்டம் அங்கு நின்று கொண்டிருந்தாள். 
 
அவள் கையில் கொல்லப்பட்ட பிஞ்சு குழந்தையை பார்க்கும் பொழுது, புறநானுறு ஒன்பது சாட்சி சொன்ன போர் ஒழுக்கம் அங்கு என்னால் காண முடியவில்லை. இன்று பல இடங்களில் போர் விதி முறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள். குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள். அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை, ஆலயங்கள், பாதுகாப்பு இல்லங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன. சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள். போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள். அதைத்தான் நான் இங்கு அவள் கையில் காண்கிறேன். 
 
"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!"
 
பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்" / "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது. 
 
நான் ஒரு இளம் பொறியியலாளனாக முல்லைத்தீவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பதவி ஏற்றேன். அதன் பிறகு மெல்ல மெல்ல உள்நாட்டு போர் திவீரம் அடைந்து, இன்று அழிவின் விளிம்புக்கு போய்விட்டது. பல ஊழியர்கள் பாதுகாப்பு கருதி, வெளி மாவட்டங்களுக்கு நகர்ந்து விட்டார்கள். ஏனோ நான் அங்கேயே இருந்துவிட்டேன். நான் இளமையாக இருந்ததும், எல்லோரும் போல உடனடியாக வெளியே நகர மனம் இடம் தரவில்லை. ஆனால் திடீரென இப்ப நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இனி எவரும் வெளியே போவது முடியாத காரியமாகவும் அல்லது பாதுகாப்பற்ற ஆபத்து காரியமாகவும் இருந்தது. எனவே நான் அங்கேயே தங்கிவிட்டேன். நடப்பது நடக்கட்டும் என்று. 
 
நான் தற்செயலாக எனது துவிச்சக்கரவண்டியில் அப்பொழுது அவ்வழியால் போய்க்கொண்டு இருந்தேன், உடனடியாக துவிச்சக்கரவண்டியை ஒரு முறிந்த மரத்தின் அடியில் சாய்த்துவிட்டு அந்த இளம் தாயைப் பார்த்தேன். அவள் பிள்ளையும் கையுமாக கண்ணீருடன் சாலை ஓரத்தில் இருந்துவிட்டாள். ஷெல் குண்டுவீச்சு எந்த நேரமும் மீண்டும் வரலாம். ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே இருந்தனர், அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு அங்கு அண்மையில் இருந்த ஆலயம் ஒன்றுக்கு பாதுகாப்புக்காக விரைந்து கொண்டு இருந்தனர். அவள் தன் குழந்தையை, ஒரு நல்ல அடக்கம் செய்யாமல் அங்கிருந்து புறப்பட மனம் இல்லாமல், அதே நேரம் தூக்கிப்போகும் தைரியமும் இழந்து அங்கு நிலத்தில் இருந்துவிட்டாள்.
 
'மக்கள் என்ன தவறு செய்தார்கள்? ஏன் இப்படி கொல்கிறார்கள்?  , சர்வதேச அரசாங்கம் ஏன் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை?" நான் அப்பொழுது என் மனதில் நினைத்தேன், ஏன் நான் இன்றும் அதே கேள்வியைத்தான் இன்னும் கேட்கிறேன். அவளை அணுகி, அந்த அழகிய குழந்தையை என் கையில் ஏந்தி, அவளை ஒருவாறு சமாதானப்படுத்தி, எல்லோரும் போகும் அந்த ஆலயத்தை நோக்கி கூட்டிக்கொண்டு போனேன்.  
 
மே 2009 அங்கே குழப்பம், கொந்தளிப்பு மற்றும் மோதல்கள் நிறைந்த இடமாக, உண்மையில் பாதுகாப்பு என்று கூறக்கூடிய ஒரு இடமும் அங்கு இருக்கவில்லை. ஆலயம், பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் கூடினர். அவ்வளவுதான்! அது ஒரு அழிவுகரமான இறுதித் தாக்குதலுக்குள்ளான போர்க்களம். பீரங்கிகளின் இடைவிடாத கர்ஜனை மற்றும் புகையின் கடுமையான வாசனைக்கு மத்தியில்,நெகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அங்கு கூடியவர்கள் முகத்தில் தான் காணக்கூடியதாக இருந்தது. மற்றும் படி மக்களை தாக்கும் படைகளிடமோ, அதை வழிநடத்தும் தலைவர்களிடமோ அதைக் காணவில்லை. 
 
ஆலயத்தின் ஒரு சிறிய, பகுதியளவு இடிந்த கட்டிடத்தில், பொதுமக்கள் குழு கூடத் தொடங்கியது. இடைவிடாத சரமாரியான குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இருந்து ஒரு நம்பிக்கையில் தஞ்சம் தேடிக்கொண்டது. அவர்களில் குடும்பங்கள் மோதலால் சிதைந்தன, அவர்களின் முகங்கள் பயத்தாலும் சோர்வாலும் பொறிக்கப்பட்டன, ஆனால் அங்கு ஆண்டவனின் ஆலயத்தில் நம்பிக்கையின் சுடரைக் அவர்களின் முகத்தில் காணக்கூடியதாக இருந்தது. அந்த இளம் தாய் கூட, தன் பிள்ளையை அங்கு ஆண்டவனுக்கு முன்னால் வைத்து ஏதேதோ முணுமுணுத்தாள். அதன் பின் அங்கு கூடி இருத்த சிலரின் உதவியுடன் ஆலயத்தின் ஒரு அரச மரத்தின் கீழ், மரியாதையுடன், கண்ணீர் துளிகளுடன் அடக்கம் செய்தேன். அது அவளுக்கு ஆறுதலாகவும் இருந்தது. 
 
இந்த இடம்பெயர்ந்த ஆத்மாக்களில் மெல்லினி என்ற இளம் பெண்ணும் இருந்தாள். அவளது அகன்ற கண்கள் அவளைச் சூழ்ந்திருந்த போரால் சிதைந்த நிலப்பரப்பின் பயங்கரத்தை பிரதிபலித்ததுக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவளுக்குள் அமைதியான பலம் இருந்தது தெரிந்தது. தன் குடும்பத்தின் மங்கலான புகைப்படத்தைப் பற்றிக் கொண்டு அங்கு அவள் ஒரு மூலையில் தூணுடன் சாய்ந்துகொண்டு நின்றாள். நான் குழந்தையை அடக்கம் செய்தபின் "அந்த சில நிமிடங்களில்" தான் அவளையும் கவனித்தேன். என்றாலும் போரின் தொலைதூர ஒலிகள் நெருங்க நெருங்க, ஒரு பயங்கரமான மௌனம் அந்த ஆலய முன்றல் முழுவதும் கவ்வியது. ஒரு சாதாரண நாள் என்றால், அந்த கவலையிலும், அதை மீறி வெளிக்காட்டும் அவளின் அழகில், பெண்மையின் வனப்பில் கட்டாயம் நான் விழுந்து இருப்பேன். அப்படி ஒரு தோற்றம். என்ன நடந்ததோ, அடக்கம் செய்து ஒரு சில நிமிடங்களில், இயற்கையே எதிர்பார்த்து மூச்சு விடுவது போல துப்பாக்கிச் சூடு, ஷெல் அடிகள் நின்றது. அந்த அமைதியில், நிச்சயமற்ற நிலை மற்றும் விரக்திக்கு இடையே, அசைக்க முடியாத இரக்கத்தின் செயல் ஒன்று வெளிப்பட்டதை நான் கண்டேன். 
 
அந்த கூடத்தில், ஒரு முதியவர், நடுங்கும் கையுடன் எழுந்து நின்று, பயந்துபோன, களைத்துப்போன,  கூட்டத்தினருக்குத் தன்னிடம் இருந்த சிறிய உணவை பிரித்து வழங்கினார். துன்பங்களை எதிர்கொண்ட அவரது தன்னலமற்ற தன்மை, வேறுபட்ட உள்ளங்களுக்கு இடையே ஒற்றுமையின் மினுமினுப்பைத் தூண்டியது. மற்றவர்கள் விரைவில் இதைப் பின்பற்றினர், தங்கள் அற்ப பொருட்களைப் உடனடியாக பகிர்ந்து கொண்டனர் மற்றும் மௌனமாக இதுவரை இருந்த அவர்கள் ஆறுதல் வார்த்தைகளை ஒருவருக்கு ஒருவர் வழங்கினர், மதம் மற்றும் கலாச்சாரத்தின் தடைகளைத் தாண்டினர்.
 
அந்த விரைந்த தருணங்களில், போரின் அழிவுகளுக்கு மத்தியில், மனிதநேயம் மேலோங்கியது. அந்த இளம் தாய், மெல்லினி மற்றும் மற்றவர்களின் பார்வையில் தெரிந்த குழப்பம் மற்றும் அழிவுகளுக்கு மத்தியில், மனித உள்ளங்கள் ஓரளவு அதை சகித்துக்கொண்டடு - ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் பிணைப்புகளை அங்கு  உருவாக்கியது என்பதை என் மனம் "அந்த சில நிமிடங்கள்" அனுபவத்தில் சுவீகரித்துக் கொண்டது. ஆனால் அது தொடர்ந்ததா என்பது, இன்றைய தமிழர்களின் நிலையைக் காணும் பொழுது, கேள்விக்குறியாகவே உள்ளது?  
 
நன்றி   
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
Link to review
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.