Jump to content

Events happening today

  1. ALL
    DAY


    05 July 2017

    "கரும் புலிகளின்"  முதல்.... தாக்குதல், தினம்.
    கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது. கரும்புலித்தாக்குதலை நடத்தும் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பிரமிப்பூட்டும் தியாகங்கள், உலக சமுதாயத்தை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. மனிதன், பிறந்ததே..... வாழ்வதற்காகத்தான்.
    அப்படியானால் இறப்பதற்காகவே களம் புகும் இக் கரும்புலிகள் யார்..?
    இவர்களது உருவாக்கத்தின் வரலாற்றுப் பின்னணி என்ன ?
    ஈடு இணையற்ற இவர்களது ஈகமும்.. மன ஓர்மமும்,  சமுதாயத்தில் எற்படுத்தும் தாக்கம் எத்தகையது, என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளானது மானிட ஆய்வாளர்கள் மத்தியில் ஆராச்சிக்குரியனவாகி விட்டன.
    இன்று உலகெங்குமுள்ள அடக்குமுறையாளர்கள் தங்களுக்குள் கைகோர்த்தபடி, சுதந்திரச் சுவாசிக்க விழையும் மக்களை மிருகத்தனமாக அடக்கி ஒடுக்க முனைகின்றனர். இவர்களிடம் ஆள், ஆயுத பலம் உண்டு. ஆட்சி அதிகாரம் உண்டு. தொழில் நுட்பவலுவுண்டு. இவற்றை தேவைப்படும் இடங்களுக்கு, தேவைப்படும் நேரங்களில் கொடுத்து மாறி, போராட்ட சக்திகளை பலம் இழக்க செய்து, தமது அடக்கு முறைகளை வலுப்படுத்துகின்றனர். இந்த நவீன அடக்கு முறையாளர்களுக்கு ஈடு கொடுக்க கூடிய அளவிற்கு ஆள்-ஆயுத தொழில் நுட்பத்திறன்களைப் போராட்ட சக்திகள் கொண்டிருப்பதில்லை.
    மிகக் குறைந்த அளவில் இவர்களுக்கு இருக்கும் போராட்ட திறன்களில் இருந்து மிக உச்ச பயன்களைப் பெற்றாலொழிய போரட்ட சக்கரத்தை ஒர் எல்லைக்கப்பால் நகர்த்த முடியாது. எனவே ஒடுக்கு முறையாளர்களின் நாடியை ஒடுங்கச் செய்யும் அளவுக்கு, பல்வேறு திசைகளில் இருந்தும் வேவ்வேறு வடிவங்களில் போர்ச்சக்கரம் நகர்த்தப்பட வேண்டும்.
    இந்தப் போர் வடிவங்களுக்குள்ளே உயர்ந்ததும், உன்னதமானதுமான விடுததைப் புலிகளின் போர்வடிவம்தான் கரும்புலித் தாக்குதலாகும்.
    தன்னை இழந்து அல்லது எதிரிகள் பலரை அல்லது எதிரியின் பலமிக்கதொரு இலக்கை அழிக்க கூடிய படையணி ஒன்றை அமைக்கும் யோசனையை, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே கொண்டிருந்தார்.
    அந்த எண்ணக் கருவை செயற்படுத்தக் கூடிய ஆற்றலை விடுதலைப் புலி வீரர்கள் மத்தியில் சிறுகச் சிறுக எற்படுத்திக் கொண்டுவாந்தார். பின்னர் ” ஒப்றேசன் லிபறேசன் ” என்ற பெயருடைய இரணுவ நடவடிக்கை மூலம் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்த சிங்களப் படைகள் வெற்றிக் களிப்பில் ஆழ்ந்தன. இதன் மூலம் சிங்கள இராணுவத்திற்கு உளவியல் ரீதியான போரிடும் ஆற்றல் திடிரெனக் கூடியது. சிறிலங்கா அரசும் 
    விடுதலைப் புலிகளை அழித்துவிடலாம் எனத் திமிருடன் சிந்திக்க தொடங்கியது.
    இதே சமயம், அந்த இராணுவ நடவடிக்கை காரணமாக பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்து, மற்றைய பகுதிகளுக்கு சென்றதுடன், அந்த திடிர் நடவடிக்கையால் மக்கள் குழம்பியும், போராட்ட வெற்றியில் நம்பிக்கை இழக்கக் கூடிய,சூழலும் தோன்றியது. இந்த சூழ்நிலைகளில்தான் ஒரு கரும்புலித்தாக்குதலை நடத்த தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்தார்.
    1987 ஆம் ஆணடு ஜூலை மாதம் 5ம் திகதி, நெல்லியடிச் மத்திய மகாவித்தியாலத்தில் அதைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவ முகாமிற்குள் முதலாவது கரும்புலி வீரன்  புகுந்து அம் முகாமை
    சின்னா பின்னாமாக்கினான்.
    சிங்கள அரசையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் கிலி கொள்ளச் செய்த அந்த முதலாவது கரும்புலித் தாக்குதல், கப்டன் மில்லர் செய்து முடித்தான். அன்றிலிருந்து இன்றுவரை பல கரும்புலித்தாக்குதல்கள் நிகழ்தப் பட்டுவிட்டன. அதில் பல கரும்புலிகள் விரச்சாவு அடைந்து உள்ளனர்.
    ஒவ்வொரு விடுதலைப் புலி விரனும், விராங்கனையும் சாவைச் சந்திக்க தயாரான நிலையில்தான் இருக்கிறார்கள்;. அனால் தங்களுடைய சாவு எப்போது வரும் என்பது அவர்களுக்கு தெரியாது.
    போர்களத்திற்கு செல்லும் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையுடன்தான் ஒரு விடுதலைப் புலி விரன் செல்கிறான். சில வேளை அவன் அங்கே சாவை சந்திக்கலாம் அல்லது திரும்பி வரலாம்.
    ஆனால் கரும்புலிகள் நிலை வேறுபட்டது. களம் புகுவதற்க்கு பல நாட்கள் முன்னமே தங்களுடைய சாவை தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அடுத்த நிமிடத்தில் சாகப் பொகிறேன் என்ற உண்மையை பூரணமாக தெரிந்து கொண்டுதான் கரும்புலிகள் வெடிமருந்தை தங்களுடன் கொண்டு செல்கிறார்கள்.
    இராணுவ முகாங்களில் இருக்கும் பலநூறு எதிரிகளின் கரங்களில் இருந்து முழங்கி கொண்டிருக்கும் துப்பாக்கிகளை கருத்தில் எடுக்காது, உடைந்து நொருங்கி போய் கிடக்கும் பாதைவழியே சீராக நிதானமாக வெடிமருந்து வண்டியை ஓட்டி சென்று, எதிரி முகாமின் இதயத்திற்குள்ளே புகுந்து, தன்னையும் சேர்த்து வெடிக்கச் செய்வதென்பது சாதாரண விடயமல்ல.
    இயல்பாகவே அச்சமுட்டும் அலைகளை கொண்ட அகண்ட சமுத்திரத்துக்குள், நடு இரவில், எதிரியின் நவீன காவற் கருவிகளையும் புத்தி சாதுரியமாக மீறி, வெடி மருந்து படகுடன் உட்புகுந்து எதிரியின் கப்பலை நெருங்கி முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கை இனங்காண்பதற்காக ஒரு முறை கப்பலை சுற்றி வந்து, குறித்த இலக்கின் மீது மோதி, வெடிமருந்து படகுடன் சேர்ந்து வெடித்து சிதற ஒரு மனித மனம் உடன்படாது.
    இவைகள் ஒரு சாதரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதை செய்வதற்கென்றொரு ஆத்மீக பலம் தேவை. தன்னை தற்கொடை செய்து கொள்ளத் தயாரண மனோதிடம் வேண்டும். தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றம் இன்றி, உறுதியுடன் குறி பிசகாது எதிரியை தேடி ஓடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்து கொள்ள தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின்படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல. இது அடிமைப் பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்து விசையாக விளங்கும் உயரிய போர் வடிவம்தான் எங்களது கரும்புலிகள்.
    உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்த தொழில் நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும்தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம்.
    இந்த மனோபலம் வீர உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை எற்படுத்த போகும் சக்தி கொண்ட ஒரு அரசியல் வடிவமுமாகும்.
    ஒவ்வொரு கரும்புலியும் தனது உயிரை போக்கி கொள்ளும்போது நிகழும் பூகம்பம், தமிழீழ விடுதலை போரட்ட சக்கரத்தை முன்னோக்கி தள்ளிவிடுவதுடன் வீரம்மீக்க, யாருக்கும் அடிபணியாத, அடக்க நினைப்பவரை நடுங்க வைக்கும் ஆற்றல் கொண்ட தமிழ் சமுகத்திற்குத் தேவையான உணர்வையும் ஊட்டி விடுகின்றது.
    தேச பக்தியையும் வீர  உணர்வையும் அடித்தளமாக கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தால், உலகில் எவரும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தை நாம் பெற்று கொள்ள முடியும்.
    இன்று பல நூற்றுகணக்கான விடுதலைப்புலி விரர்கள் தங்களைக் ” கரும்புலி ” அணியில் இணைத்து கொண்டு இருக்கின்றனர்.
    ஓவ்வொரு முறையும் கரும்புலித்தாக்தலுக்கான திட்டம் தீட்டப்படும்போது, தன்னைத்தானே தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு வீரனும், வீராங்கனையும்   முண்டியடிக்கின்றார்கள்.
    அலையலையாக கரும் புலித்தாக்குதலுக்கு தயாராகும் இந்த தியாகச் செயலை உலகில் எங்குமே காணமுடியாது.
    இது உலக அதிசயங்களில்; புதியதொன்றாகும்.
    களம்புகும் கரும்புலிகளின் பிரமிப்பூட்டும்  வீரச் சாதனைகள், ஆழும் வர்க்கத்திற்க்கு கிலியை உண்டுபண்ணுகின்ற அதே சமயம், அந்த உன்னதமான அர்ப்பண உணர்வு எற்படுத்தும் சமுகத் தாக்கம், தமிழீழக் குடிமக்களின் மனதில் இருக்கும் சுதந்திர ஒளியை இன்னும் வளத்து செல்லும் என்பது உறுதி.
    – உயிராயியுத்திலிருந்து ….. -


      

     

    Event details


    நாட்காட்டி 0 Comments · 0 Reviews
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.