Jump to content
  • entries
    24
  • comments
    7
  • views
    97518

இலக்கணம் - எழுத்தியல்


கறுப்பி

3824 views

எழுத்தியல்

1. இலக்கண நூலாவதியாது?

உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்கும் கருவியாகிய நூலாகும்

2. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்

எலுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்று அதிகாரங்களாக வகுக்கப்படும்.

3. எழுத்தாவது யாது?

எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்

4. அவ்வெழுத்து எத்தனை வகைப்படும்?

உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.

5.உயிரெழுத்துக்கள் எவை?

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

6. உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்

7.குற்றெழுத்துக்கள் எவை?

அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.

8. நெட்டெழுத்துக்கள் எவை?

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்.

9. மெய்யெழுத்துக்கள் எவை?

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.

10. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.

11. வல்லெழுத்துக்கள் எவை?

க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம். இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.

12.மெல்லெழுத்துக்கள் எவை?

ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம். இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.

13. இடையெழுத்துக்கள் எவை?

ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம். இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.

14. சுட்டெழுத்துக்கள் எவை?

அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம்

15. வினாவெழுத்துக்கள் எவை?

எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.

உ-ம். எவன், எக்கொற்றன்

கொற்றான, கொற்றனோ

ஏவன், கொற்றனே

யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்

16. எந்தெந்த வெழுத்துக்கு எந்தெந்தவெழுத்து இனவெழுத்தாகும்?

அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்

17. உயிர்மெய்யெழுத்துக்கள் எவை?

புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணுாறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

உயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

18. உயிர்மெய் குற்றெழுத்து எத்தனை?

ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.

உ-ம். எஃகு, கஃசு, அஃது, பஃறி

19. ஆகத் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கும் எழுத்துக்கள் எத்தனை?

மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.

http://www.noolaham.net/library/books/01/68/68.htm என்ற பதிவிலிருந்து எனது தேவைக்காக மட்டும் கேள்வி பதிலாக பதிய பட்டிருக்கின்றது.

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.