Jump to content
  • entries
    21
  • comments
    80
  • views
    95856

வீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள்


போக்குவரத்து

1081 views

வீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள் :

3-3-2.jpg

1-பாதசாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள கடவையை ( pedestrians cross ) பாவியுங்கள்.

2-பாதசாரிகளுக்கான சிக்னலை ( Pedestrian signals ) பாவியுங்கள். நீங்கள் கடப்பதற்கான சிக்னல் தோன்றுவதற்கு அதில் உள்ள பொத்தானை ( pedestrian push buttons ) அழுத்துங்கள்.

3-3-1.jpg

3-நீங்கள் வீதியை குறுக்காக கடக்கும் போது மற்றைய ஒழுங்கையின் ஊடாக இடது, வலது புறமாக திரும்புகின்ற வாகனங்கள் உங்களை நோக்கி வரக்கூடும். அந்த வாகனத்தின் சாரதிகள் நீங்கள் வீதியை கடப்பதை அவதானிக்கலாம், அவதானிக்காமலும் விடலாம். எனவே, நீங்கள் வீதியின் குறுக்காக நடக்கும் போது இடது, வலது புறமாக திரும்பும் வாகனங்கள் உங்களை கவனித்துள்ளதை உறுதி செய்யுங்கள்.

4-வீதியை கடப்பதற்கு உங்களுக்கு உரிய சிக்னல் காட்டப்படும் போது இடது, வலது புறமாக திரும்பும் வாகனங்கள் உங்களை நோக்கி தொடர்ந்து வந்தால் அவதானமாக செயற்படுங்கள்.

5-நீங்கள் வீதியை கடக்கும் போது இடது, வலது புறமாக அல்லது நேராக வரும் வாகனங்கள் ஏதாவது அவதானம் இல்லாமல் செயற்பட்டால், சட்ட விரோதமாக ஓடினால் அவற்றின் இலக்க தகடினை ( Plate number ) குறித்து வையுங்கள். தேவை ஏற்படின் காவல் துறைக்கு அந்த இலக்கத்தை அறிவியுங்கள் (சம்பவம் நடந்த இடம், நேரம், வாகனத்தின் நிறம், model, சாரதியின் தோற்றம் இவற்றையும் குறித்து வைக்க வேண்டும், அருகில் யாராவது சாட்சி/witness கிடைத்தால் அவர்கள் விபரமும்)

6-நீங்கள் வீதியை பாதுகாப்பாக கடப்பதற்கான சிக்னல் காட்டப்படும் போது குறிப்பிட்ட ஒரு வாகனம் உங்களை நோக்கி தொடர்ந்து வரும் என சந்தேகம் தோன்றினால் அந்த வாகனத்தின் சாரதியுடன் eye contact செய்வது முக்கியம், அத்துடன் நீங்கள் வீதியை கடக்கும் வரை நகராது நிற்குமாறு கைகளை உயர்த்தி காட்டலாம்.

7-ஒரு போதும் வாகனத்தின் சாரதிகளுடன் வீதியை கடக்கும் போது வாய் தகராற்றில் ஈடுபடாதீர்கள். ஏதாவது வாகனம் சட்ட விரோதமாக ஓடி உங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் குறிப்பிட்ட வாகனத்தின் இலக்க தகடினை ( Plate number ) குறித்து வைத்து அதை காவல் துறைக்கு அறிவியுங்கள்.

8-அளவில் பெரிய ஊர்திகள் ( உ+ம் Truck ) உங்கள் அருகாக நிற்கும் போது அல்லது திரும்பும் போது மிக அவதானமாக செயற்படுங்கள்.

9-பாதசாரிகளுக்கான சிக்னல் காட்டப்படும் போது தனியாக இல்லாமல் ஏனைய பாதசாரிகளுடன் குழுவாக வீதியை கடக்க நேர்ந்தால் நெரிசல் மூலம் உங்களுக்கு பாதிப்பு ஏதும் வராத வகையில் பார்த்து கொள்ளுங்கள்.

10-வயோதிபர்கள், குழந்தைகளை உங்களுடன் அழைத்து கொண்டு வீதியை கடக்கும் போது மேலதிக அவதானத்துடன் செயற்படுவது அவசியம். குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் ஓடாதபடி பார்த்து கொள்ளுங்கள். பாதசாரிகளுக்கான சிக்னனில் போதிய கால அவகாசம் காட்டப்படும் போது மட்டுமே கடவுங்கள்.

11-மிகவும் அகன்ற பல அடுக்கு ஒழுங்கைகள் ஊடாக கடக்கும் போது விரைவாக நடக்காவிட்டால் வீதியை முழுவதுமாக கடக்க நேர அவகாசம் போதாமல் வரலாம்.

12-ஏற்றங்கள், இறக்கங்கள், வளைவுகள் உள்ள வீதிகளை கடக்கும் போது மேலதிக அவதானத்துடன் செயற்படுவது அவசியம்.

சிக்னல் இல்லாத சந்தியாக காணப்பட்டால் ( 6551143875_ac944281bb_t.jpg6551139813_3b19190eda_t.jpg ) வாகனங்களின் சாரதிகள் நீங்கள் கடப்பதை கண்டுள்ளதை ( eye contact with the driver ) உறுதிப்படுத்துவது உங்களுக்கு பாதுகாப்பானது.

படங்கள் ( MTO web )

ஆக்கம் : போக்குவரத்து

http://CarDriving.Ca

3 Comments


Recommended Comments

வீதியின் குறுக்காக வாகனங்களிற்கு எச்சரிக்கை கொடுக்க மேலே தொங்குகின்ற மஞ்சள் நிறமான பாதசாரி சிக்னலை பாவிக்கும் போது, நீங்கள் கடப்பதற்கான பொத்தானை அழுத்தியதும் மஞ்சள் நிறமாக விட்டு விட்டு சிக்னல் எரிவதை ( flashing ) உறுதி செய்து கொண்டு கடவுங்கள்.

Link to comment

பாதசாரிகளுக்கான சிக்னல் காட்டும் போதும் ஏன் நீங்கள் மேலதிகமாக சுற்று புறம் பார்த்து கவனம் எடுக்க வேண்டும்?

ஏன் என்றால்,

வாகனத்தை ஓடுபவர் அனுபவம் அற்ற புதிய சாரதியாக இருக்கலாம்.

வாகனத்தை ஓடுபவர் மது போதையில் இருக்கலாம்.

வாகனத்தை ஓடுபவர் குற்ற செயலுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம்.

வானத்தை ஓடுபவர் சுகவீனம் அடைந்து இருக்கலாம்.

மோசமான வீதி நிலமைகள், மோசமான weather ஆக இருக்கலாம்.

சிக்னலில் தவறுகள் ஏற்படலாம்.

தெளிவாக பார்ப்பதற்கு இருள்/போதிய வெளிச்சம் இல்லாமல் இருக்கலாம்.

இவை போன்றன.

இப்படியான சூழ்நிலைக்கு தமிழிலும் ஒரு அழகான பழமொழி உண்டு :

நம்ப நட, நம்பி நடவாதே!

Link to comment
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.