Jump to content
  • entries
    24
  • comments
    7
  • views
    97482

From: VLC மீடியா பிளேயரில் எவ்வாறு snapshot எடுப்பது?.


கறுப்பி

1072 views

VLC மீடியா பிளேயரில் எவ்வாறு snapshot எடுப்பது?....

[Wednesday, 2011-09-28 16:13:10]

கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணணியில் வீடியோ, ஓடியோ கோப்புகளை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு வசதிகளை பற்றி பார்ப்போம்.

வீடியோவில் இருந்து Snap Shot எடுப்பது எப்படி:

VLC மீடியா பிளேயரில் ஏதேனும் ஒரு வீடியோ ஓடிகொண்டிருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு காட்சியை புகைப்படமாக Snapshot எடுக்க வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட காட்சி வந்தவுடன் மேனுபாரில் Video - Snapshot கொடுத்தால் போதும். உங்களுக்கு பிடித்த காட்சி புகைப்படமாக உங்கள் கணணியில் சேமிக்கபட்டுவிடும்.

snapshot எடுத்த பகுதியின் மாதிரியை சிறியதாக இடது பக்கத்தின் மேலே உங்களுக்கு காட்டும் மற்றும் புகைப்படம் சேமிக்கும் இடத்தையும் உங்களுக்கு காட்டும்.Snapshot போர்மட் மாற்ற: டீபால்டாக png போர்மட்டில் உங்களுடைய Snapshot சேமிக்கப்படும். இதனை JPG போர்மட்டிற்கு மாற்ற விரும்பினால் Tools - Preferences - (or) Ctrl+P கொடுத்து வரும் விண்டோவில் Video என்பதை தேர்வு செய்யவும். அதில் Snap shot பகுதியில் புகைப்பட போர்மட்டை மாற்றி Apply பட்டனை அழுத்துங்கள்.

ஒரே கிளிக்கில் Snapshots எடுக்க:

ஒரே கிளிக்கில் snapshot எடுக்கும் வசதி வேண்டுமெனில் View - Advanced Controls தேர்வு செய்தால் கீழே சில பட்டன்கள் தெரியும். இரண்டாவதாக உள்ள Camera ஐக்கான் பட்டனை அழுத்தினால் ஒரே க்ளிகிங் snapshot எடுக்கும் வசதியை பெறலாம்.

http://seithy.com/br...&language=tamil

Source: VLC மீடியா பிளேயரில் எவ்வாறு snapshot எடுப்பது?.

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.