Jump to content
  • entries
    7
  • comments
    0
  • views
    16610

மத்தியஸ்த்தம்


naanal

987 views

மத்தியஸ்த்தம்

மீண்டும் தமாசானதொரு கதை

திட்டின கோபம் அடங்காத ஒட்டகம் என்னுடன் சேர்ந்து பேருந்தில் ஏறினாலும்கூட

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே இருந்த பேருந்தில்

எனக்குப் பக்கத்தில் உட்காராமல் நான்கு ஐந்து இருக்கைள் தள்ளி உட்கார்ந்தது.

கொஞ்ச நேரத்திலை சரிவரும் என்றால்

வராதாம்.

யன்னலுக்கு வெளியே ஓடுற காட்சியளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.

எட்ட இருந்து பார்க்க வடிவாத் தெரியவில்லை கண்ணும் கலங்கியிருக்குமாப்போல கிடந்தது.

அதிகமாத் திட்டிப்போட்டனோ?

எதுக்கும் அலட்டிக்கொள்ளாத ஒட்டகம் இப்படிப் பேசாமல் இருக்க பாவமாகக்கிடந்தது.

சரி முதலிலை நான் கொஞ்சம் இறந்கிப் போவமோ?

எதுக்கும் அவதானமாக இருக்கவேணும்.

பொது இடமெண்டும் பார்க்காமல் நாலுபேருக்கு முன்னாலை

இடக்குமிடக்கா எதையாவது சொல்லி மானத்தை வாங்கிப்போடும்.

இடையிலை யாரரையாவது வைத்துக் கதைப்பமோ? என்று யோசித்தவாறு

அடுத்த இருக்கையிலை இருந்தவரைப் பார்த்தன்.

கிள்ளி எடுக்கச் சதையே இல்லாமலுக்கு எலும்புக்கு ஒரு தோலைச் சுத்திவிட்டது போல

ஒல்லியும் உயரமுமாக முட்டைக் கண்ணும் அதிலை ஒரு வட்டக் கண்ணாடியுமாக,

உடம்பிலதான் ஒன்றுமில்லையென்றால் தலையிலையும் ஒன்றையும் காணம் வெட்டவெளியாக்கிடந்தது.

முட்டையிலை மயிர்பிடுங்கிறது என்றது இதைத்தானோ?

தமாசான ஆளாக்கிடக்கு.

விசயகாரனா இருப்பானோ?

எதுக்கும் கேட்டுப் பார்ப்பம்.

அண்ணை ஒரு உதவி.

காதிலை விழுந்தமாதிரித் தெரியேல்லை. பேப்பரைப் படிக்கிறதிலை தீவிரமாக இருந்தார்.

இந்தமுறை சற்றே உரத்து

வணக்கம் அண்ணை உங்களைத்தான்! ஒரு சின்ன உதவி செய்வியளே?

முகத்துக்கு முன்னாலை பிடிச்சிருந்த பத்திரிகையைச் சற்றுப் பதித்து

என்னவென்று கேட்குமாப்போல என்னைப் பார்த்தார்.

அது வந்து ....... வந்து.....

சின்ன உதவிதான்.

அங்கை பாருங்கோ அந்த நாலாவது சீற்றிலை உக்காந்திருக்கிற ஒட்டகத்தை,

அது என்ரை நண்பன்தான் ஆனால் இப்ப கொஞ்சம் மனஸ்தாபம்

அதுதான் கதைக்கமாட்டனென்று கோபித்துக்கொண்டு அங்கை உட்கார்ந்து இருக்கிறது.

அதனிடம் சொல்லுங்கோ, நான் அப்படித் தவறாக் கதைத்தற்கு மன்னிப்புக் கேட்கிறனென்று.

நான் மற்றவர்களின் விடயத்தில் தலையிடுவதில்லை என்றொரு கொள்கை வைத்திருக்கிறன்

அதனால் உதவமுடியாமைக்கு மன்னிக்கவேணும்.

சீ சீ நீங்களொன்றும் உங்கட கொள்கையை விடவேண்டாம்.

சும்மா நான் சொல்லுறதை அப்படியே ஒட்டகத்திடம் சொன்னால்போதும்.

No No I can´t do it.

இப்ப உங்களை என்ன பிரச்சனையைத் தீர்த்துவைக்கவே கேட்டனான்.

ஒரு கிளிப்பிள்ளைபோல காதாலை கேட்டதை அப்படியே வாயாலை சொல்லுங்கோ

அவ்வளவுதான் ரொம்பச் சுலபமான வேலை.

அரை மனதா அந்தப்பக்கம் திரும்பி

Hallo Hallo Mr. ஒட்டகம்

எனக்குப் பக்கத்திலை இருக்கிறவர் தான் உம்முடன் நடந்துகொண்டவிதத்திற்கு மன்னிப்புக் கேட்கிறாராம்.

அடுத்த நொடியே கோபமா என்ன வெறும் மன்னிப்புக் கேட்கிறாராமோ?

எப்ப பார்த்தாலும் கேடுகெட்ட மிருகமே! ஓசிச் சீவியம் நடத்திறவன் என்றெல்லாம் வாய்க்குவந்தபடி திட்டுகிறது.

பிறகு மன்னித்துக்கொள் என்ற ஒரு சொல்லோட சரி.

நான் என்ன மானம் ரோசமில்லதவனே.

எனக்கென்றும் ஒரு சுயகௌரவம் இருக்கு.

எல்லம் முடிஞ்சுது இன்றையோட எங்களுக்குள் இருந்த நட்பெல்லம் முறிந்துவிட்டது,

முடிந்தது என்று சொல்லுங்கோ

என்று என்று ஒட்டகத்தார் கத்த

நான் பக்கத்தில இருந்தவரைப் பார்த்து

அதுதான் மன்னிப்புக் கேட்கிறனே

பக்கத்து ஆளுக்குச் சொல்லமுதல் ஒட்டகத்தாரிடமிருந்து சத்தமாக பதில் வந்தது.

வெறும் மன்னிப்புத்தான் என்றால் எல்லாம் முடிந்துபோச்சுது.

நான் மெதுவா ஒல்லிக்குச்சியருக்குப் பக்கத்தலை நகர்ந்து உட்கார்ந்து.

என்ன பிரச்சனை என்று சொல்லுறன் கேட்டுப்போட்டு நீங்களே சொல்லுங்கோ முடிவை.......

அது சரிவராது நான் உங்களோட இருந்து என்ன நடந்ததென்று நேரிலை பார்க்கவில்லை

அதாலை என்னாலை............

முடிக்கவிடாமல் ஒட்டகத்தார்

உங்களை என்ன இப்ப உங்கட மகள் ஆரோட சுத்துறாள்.

உங்கட வங்கிக் கணக்கில எவ்வளவு பணமிருக்கு?

மனிசி வடிவானஆளோ?

என்று சொந்தக் கதையளேயே அந்த ஆள் கேட்டவர்.

எங்கட விசயத்தைத்தானே.................

ஒல்லிக்குச்சியர் கோபமாகக் கையில இருந்த பத்திரியைத் தூக்கிஒட்டகத்தாரை நோக்கி விசிக்கிப்போட்டு

எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று எதெதோ முணுமுணுத்தக்கொண்டு

இரண்டு இருக்கை தள்ளி

அங்காலை இருந்த ஒரு வடிவான பொம்பிளைக்குப் பக்கத்திலை போய் இருந்தார்.

பாருமன் அந்த ஆளுக்கு வந்த கோபத்தை இப்ப நாங்கள் என்ன கதைத்துப்போட்டமென்று இப்படிக் கோபித்துக்கொண்டு போட்டார் என்று என்னைப்பார்த்துச் சொல்லிக்கொண்டு

இருந்த இடத்தைவிட்டு எழும்பின ஒட்டகத்தார்.

அந்த வடிவான பொம்பிளயிற்குப்பக்கத்திலை உட்காரந்து

அக்கா அக்கா ஒரு உதவிசெய்யவேணும்

உங்களுக்கு அந்நதப்பக்திலை கிள்ளி எடுக்கச் சதையே இல்லாமலுக்கு எலும்புக்கு ஒரு தோலைச் சுத்திவிட்டது போல

ஒல்லியும் உயரமுமாக முட்டைக் கண்ணும் அதிலை ஒரு வட்டக் கண்ணாடியுமாக

ஒல்லிக்குச்சியர்போல இருக்கிற அந்த ஆள் எங்களோட கோபித்துக்கொண்டு................................

கதை தொடர்ந்தது.

--------------------

நட்புடன் நாணல்

0 Comments


Recommended Comments

There are no comments to display.

Guest
This blog entry is now closed to further comments.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.