Sign in to follow this  
  • entries
    7
  • comments
    0
  • views
    15,410

சுயத்தைத் தொலைத்தவர்கள்

Sign in to follow this  
naanal

653 views

சுயத்தைத் தொலைத்தவர்கள்

ஒட்டகம் புகுந்த வீடு, ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம்

இப்படியான பொழுதுபோக்கான வியங்களை எழுதும்போது

அதிகமான களத்துறவுகள் ஓடிவந்து படித்தீர்கள்.

நாணல் ஆள் புதிதாக இருந்தாலும் கைலாக்குக் கொடுத்து ஊக்குவிக்கும்விதத்தில்

பதில் கருத்துக்களும்

மெல்ல எழுதத் தொடங்கினீர்கள்.

ஆனால் மத்தியஸ்தம்.

செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது

என யதார்த்தமாக சிந்திக்க வேண்டிய அழுத்தமான கருத்துக்களை

மீள் ஆய்வு செய்ய வேண்டிய விடயங்களை மெல்ல

உங்கள் முன் வைக்கத் தொடங்கியதும்.

ஒரு சின்ன இடைவெளி.

பதில் கருத்தை முன்வைக்கத் தயக்கம்.

யாரிந்த நாணல்?

நல்லவனோ? இல்லைக் கெட்டவனோ?

பசுத்தோல் போர்த்திய புலியோ?

புலித்தோல் போர்த்திய குள்ள நரியோ?

என்று ஒருவித குழப்பம் சஞ்சலம் பலருக்கும் வந்திருக்கும்.

நாணல் எனும் முகமூடிக்குள் யாராயிருக்கம்?

எதற்காக இப்படியான கருத்துக்களை முன்வைக்கமுயலுகிறான்.

என்ற சந்தேகம் தோன்றியிருக்கும்

இதுவும் நியாயமான சந்தேகம்தான்.

இப்படியெல்லாம் தோன்றினால் நல்லது

சற்றே சிந்திக்கத் தொடங்விட்டம்

என்பதுதான் அர்த்தம்.

அதுமட்டுமில்லை அநேகமான களத்துறவுகளும்

கொஞ்சம் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவை

அதனால் உணர்வுகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான எதிர்க்கருத்துக்களும்

சட்டென்று வைக்கப்படுவது வழமை.

ஆனால் இங்கு எந்தவிதமான கருத்துக்களுமே வைக்கப்படவில்லை

அந்த ஆக்கங்களை களத்தில் எழுதும்போதே

இப்படியானதொரு நிலை ஏற்படும் யாரும் பதில் கருத்து முன்வைக்கமாட்டார்கள்

எனத் தெரிந்துதான் எழுதினேன்.

இதிலும்கூட வரவேற்கத்தக்க மாற்றம்

சட்டென்று யாரும் வசைபாடும் வகையில்

எனது கருத்துக்களுக்குப் பதில்களைக்கொட்டித்தீர்க்கவ�

�ல்லை.

அதனால் உங்களது சிந்தனையிலும் இந்தவிடயங்கள் மேலோட்டமாக,

உணர்வுபுர்வமான அல்லாது அறிவுபுர்வமான சிந்தனையைத் தூண்டியிருப்பது புரிகிறது.

ஆனாலும் பதில் கருத்து எழுத ஒருவிதப் பயம்.

ஆமோதிக்கும்விதமான கருத்துக்களை எழுதினால்

எங்களது சமுதாயம் என்னைப்பற்றி என்ன நினைக்கும்?

தமிழர் நலனுக்கு எதிரானவன் எனமுத்திரை பதிக்கப்பட்டு

ஒதுக்குவிடுவார்களோ என்ற பயம் தடுக்கிறது.

எதிரான கருத்துக்களை முன்வைக்கவும் தயக்கம்

எனக்துத்தான் விடயம் புரியவில்லை

பிற்போக்கானவன் என நினைப்பார்களோ என்ற நினைப்பு.

இப்படியாக தனது கருத்து எது என்பதை ஆணித்தராகச் சொல்லமுடியாதவர்களாக நாம் வளர்க்கப்பட்டிருக்கிறம்.

கள உறவு புத்தன் எழுதிய உந்தவயசில... ...

குட்டிகதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.

எமது சமுதாயம் எங்களை சுயசிந்தனையற்று

சுற்றஉள்ளவர்களின் கருத்துக்களையும் விருப்பு வெறுப்புக்களையும்

பிரதிபலிப்பவர்களாகவே வளர்தத்திருக்கிறது.

பிறந்தது முதல் கட்டையில் போவதுவரை சுயத்தைத் தொலைத்தவர்களாக வாழக் கற்றுக்கொடுக்கப்பட்டுவிட்ட�

�ு.

நான் விரும்பும் உடை

நான் விரும்பும் கல்வி

நான் விரும்பும் வாழ்க்கைத்துணை

எனது குறிக்கோள்

என எதிலுமே என்னால் சுயமாக ஆணித்தரமான முடிவெடுக்கமுடியாமல்,

யார் யாரினதோ விருப்பு வெறுப்புகளுக்கும் இசைந்து

எனது சமுதாயம் என்ன நினைக்குமோ என்ற பயந்து பயந்து வாழ்வதல்ல

உண்மையான அர்த்தமுள்ள வாழ்க்கை.

இந்தப்பயத்தை தூக்கித் தூரப்போடுங்கோ!

இந்த சமுதாயம் என்ன நினைக்குமோ?

சுற்றிலும் உள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காக

உங்கள் விருப்புகள் எண்ணங்களை மூடி நீங்கள் அணிந்திருக்கும்

முகமூடிகளைக் கிழித்து எறியுங்கோ. பிரகாசமான உலகம் கண்களில் தெரியும்.

சுயசிந்தனையில் தோன்றும் சரியான கருத்துக்களுக்கு வடிவம் கொடுங்கோ

நிறைந்த தேடுதல் சிந்தனையைத் தூண்டும்

சிந்தனை சீரிய கருத்துக்களைத் தரும்.

நான் வைக்கும் இந்தக் கருத்துக்களைக்கூட நீங்கள் ஏற்கவேண்டுமென்றில்லை.

நான் ஏன் இந்தக் கருத்துக்களை முன்வைக்கிறேன்.

இதை முன்வைப்பதால் எனக்கென்ன லாபம்.

இதை ஏற்பதாலோ அன்றி மறுப்பதாலோ

உங்களுக்குள்ள ஆதாயங்கள் அல்லது பாதிப்புக்கள் என்ன?

எனக்குப் பதில் தரவேண்டுமென்பதோ

அல்லது களத்தில் பதில்கருத்து எழுதவேண்டுமோ என்பதல்ல முக்கியம்.

சிந்தியுங்கோ! செயல்படுங்கோ!

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து செய்படும் காலம் வெகுதூரமில்லை.

Sign in to follow this