Jump to content
  • entries
    8
  • comments
    3
  • views
    34418

About this blog

Entries in this blog

மூளை, மனம், கால்கள் - (கவிதை)

ஓய்வு நாள் ஒன்றின் மாலை நேரம் சோகச் சுமைகளால் மனதில் பாரம் இரு மருங்கும் மரங்கள் நிறைந்த வீதி ஓரம் என் கால்கள் நடந்தன வெகு தூரம். 'ஏ... கால்களே, நாம் போகும் இடம் எதோ?' வேதனையான மனம் கால்களைக் கேட்டது. 'ஏதுமறியா என்னை மூளை தான் ஏவியது' வேலையாள் கால்கள் சொன்ன பதிலிது. எண்ணிவிட்ட கருமத்தில் மூளை முழு மூச்சாக, புண்பட்ட மனமோ வேதனையில் சோர்வாக, நீண்ட தூர பயணத்தால் கால்களும் தடுமாற விண்ணுயர்ந்த மலைச்சாரலை அடைந்தது என் பயணம். நுரை ததும்ப சலசலத்துப் பாயும் மலையருவி, இலையுதிர்த்து பூக்க

மிகவும் பிடித்த புத்தகம்

நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இங்கு பலர் இந்நூலை முன்பே ஏற்கனெவே வாசித்திருக்கக்கூடும். என்றாலும் இதைப்பற்றி அறியாதவர்களுக்காக இந்த குறிப்பை எழுதுகிறேன். நான் இங்கு எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் விரும்புவது நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து உணர்ந்து பயன் பெறுவது தான். 'Seven Habits Of Highly Effective People' என்பதுதான் இந்த புத்தகத்தின் பெயர். அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் ஆர். கொவே (Stephen R Covey

ஏமாற்றம் - (கவிதை)

துள்ளினான் காளை இவன் - தன் உள்ளம் அள்ளிச் சென்ற கள்ளியை கண்டதும் உள்ளத்தில் கள்ளூர.. அள்ளி எடுத்து முத்தமிட, அவள் கன்னம் கிள்ளி பல காதல் கதை சொல்லிட...- ஆனால், புள்ளி மானினத்தாள் தள்ளியே சென்றது கண்டு முள்ளிலே விழுந்த புழுவினம் போல துடித்தான்.

இரு உள்ளங்கள்

கடந்த சில நாட்களாக வசந்தனின் மனம் அமைதியின்றி தவித்தது. எப்படியாவது தனது மனதில் தோன்றிய எண்ணங்களை யமுனாவுடன் பகிர்ந்துவிட வேண்டும் என அவன் மனம் அடிக்கடி சொல்லியது. இருந்தாலும் அவனது சிறு ஈகோ அதை தடுக்கவும் செய்தது. ஆனாலும், இதை இப்படியே மனதில் பூட்டி வைத்திருக்க முடியாது என உணர்ந்து கொண்ட அவன், எப்படியாவது அவளுடனும், அவனது நண்பர்களிடமும் இது பற்றிக் கதைப்பது என்று முடிவு செய்தான். சரி, அவனது பிரச்சினை தான் என்ன? ********* உயர்தரம் படிக்கும்போதே வசந்தனுக்கும், யமுனாவுக்கும் ஒருவரை ஒருவர்

அன்பே நினைப்பிருக்கா? (கவிதை)

அன்றொருநாள் பொன் அந்தி மாலை நேரம் அமைதியான அழகு கடற்கரை ஓரம் அன்பே நீயும் நானும் அமர்ந்திருந்து ஆசை மொழி பேசி மகிழ்ந்த நினைப்பிருக்கா? 'விரிந்த அந்த வான வெளியினிலே பறந்த ஜோடி பறவைகள் போல் - கவலை மறந்து உன்னுடன் நான் உலகை ரசிப்பேன்' என்று உறவே நீ அன்று சொன்னது நினைவிருக்கா? 'அருகே நின்ற இரட்டை தென்னை மரங்களாய் ஒரு கணமும் உயிரே நான் உன்னை பிரியாது ஈருடல் ஓருயிராய் வாழ வேணும்' - அன்பே உருகி நானும் சொன்ன வார்த்தை நினைப்பிருக்கா? கடலின் கரை சேரா அந்த படகு போல - உன் காதலி நானிங்க

தமிழர் உணர்வெல்லாம் நிறைந்தோரே! மாவீரரே...!!

ஊனுடலை விட்டு உயிர் பிரிந்தாலும், - தமிழர் உணர்வெல்லாம் நிறைந்தோரே! மாவீரரே...!! பேரினவாதம் எனும் கொடிய மிருகம் ஒன்று கர்ச்சிக்கும் பலமாக தமிழர் உரிமைகளைக் கொன்று. தமிழர் தம் துயரத்தை துடைத்திட வேண்டும் என்று, கிளம்பிய வீரர்கள் நீங்கள் தியாக தீபங்கள் அன்றோ! அன்னையின் அரவணைப்பு, தந்தையரின் ஆதரவு, உடன் பிறந்து உறவாடிய சகோதரரின் பாசம், வாழ்வில் உயர்ச்சிகாண நீர் தொடர்ந்த கல்வி, இத்தனையும் துறந்திட்டீர்; வீரவேங்கைகளாய் புறப்படீர். தாய்மண்ணின் மீட்பிற்காய் உம் உயிரையும் ஈந்துவிட்டீர். ம

பிடித்த பொன்மொழிகள்

***உனக்கு என்ன தெரியும் என்பதை விட, உனக்கு யாரைத் தெரியும் என்பதுதான் முக்கியமானது. நீ சந்திக்கும் மனிதர்கள் புத்தகங்கள் போல நிறைய அறிவை, விஷயங்களை தருவார்கள். ***முயற்சி செய்யவில்லையே என்று வருத்தப்படுவதன் வலியானது, விடாமுயற்சியின் வலியை விட மிகவும் வேதனை தரக்கூடியது. எனவே, விடாமுயற்சி செய். ***ஒரு விஷயத்தை தெரிந்தால் மட்டும் போதாது. அதனை நடைமுறையில் பயன்படுத்தவும் தெரியவேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்படாத விஷயம், உனக்கு அந்த விஷயம் தெரியாமல் இருப்பது போலானது. ***வழிகாட்டும் ஒளியாக
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.