Jump to content
  • entries
    7
  • comment
    1
  • views
    28667

About this blog

Entries in this blog

எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.

மௌனித்துக் கொண்டவர்களே! இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள். பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும். எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து, இந்த இனஅழிப்பிற்கு, 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்று முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள். இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது. வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்... நாங்கள்தான் முட்டாள்கள் போலும். எங்கள் ஒப்பாரிகள்... உங்கள்

பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே! உன்னை இனி நானே பாடுவேன்.

கண்ணெதிரே கலையுமா கனவு? மண்ணெனவே உதிருமா மனது? நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம் ஒப்பேற முன்னரே உருகியா போகும்? இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை? இது காலச்சுழி சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது. சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும். தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும். நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும். மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும். மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும்

இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!

உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின் வேர்மடிக்கும் தாய்மடியே! உறுதி குலையாத உரம் அன்றுதந்து, விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே! ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக் காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே! எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ? வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம். ஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும், பார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும், கோர்த்துக் கைகுலுக்க

நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் கேட்கும் வல்லமைகள்

பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே! இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம். ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்? மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது? மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும் கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்? கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும், கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்? கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம் செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே!

நீர் ஊற்றி நிறைத்தாலும், பாலூற்றும் ஒளி நிறைத்துப் பனிநிலவு அணைத்தாலும், கார் காற்று மேனியத

என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன். தாயே!... என்னுளம் நுழைக. முத்தாய்த் தாங்கி முன்னூறு நாட்சுமந்து இத்தரையில் எனை ஈன்ற பெத்தவளை, மெத்தை மடிவிரித்தென் தத்துநடை பார்த்து, தள்ளாடி நான் விழுந்தால் தாங்கி இரசித்தவளை, சித்தமெலாம் எனையாளும் சித்திரையின் நாயகியாம் உலக சக்தியவள் பெருந்தாயை, நான் செத்தழிந்து போனாலும் என் சாம்பல்கூடத் தலைவணங்கும் மாவீரத் தோழர்களை, பத்திரமாய் தொழுது, எந

தகிக்கும் தீயாய், தளரா வலுவாய் உதிக்கும் சுடராய், ஓர்ம உணர்வாய் பதிக்கும் பொறியாய், பாரிய மல

உலக வல்லாதிக்கத்தின் அவலம் உணராக் கோட்பாடுகளும், ஆயுதப் பரீட்சிப்பும் தொடர்கதையாக எம்மீது எழுதப்படுகின்றன. தொடரும் போரும், கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும், பொருத்தமில்லாச் சமன்பாடுகளும் எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன. எங்கள் சுயமும், எமக்கான வாழ்வும் மறுக்கப்படுகின்றன. குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. ஒரு இனவாதத்தின் படர்கை எம் வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது. முற்றுப் பெறாத கால நீட்சியில் எம்மினத்தின் வாழ்வு வேதனைக்குள்ளாகிறது. வெற்றிக் களிப்பில் கூத்தாடும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.