Yarl Forum
ஆரோக்கியா கோப்பை 2006 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41)
+--- Thread: ஆரோக்கியா கோப்பை 2006 (/showthread.php?tid=998)



ஆரோக்கியா கோப்பை 2006 - MUGATHTHAR - 02-06-2006

<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/vishal-500.jpg' border='0' alt='user posted image'>

ஷார்ஜாவில் நடப்பதாக இருந்த தமிழ் தெலுங்கு நடிகர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது
ஆரோக்கியா கோப்பை என பெயரிடப்பட்ட அந்த போட்டி 30 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்றது

<b>21ஓட்டங்களால் தமிழ் நடிகர் அணி கோப்பையை வென்றது</b>

தமிழ் நடிகர்கள் அணிக்கு நடிகர் <b>அப்பாஸ் கப்டனாகவும் </b>தெலுங்கு நடிகர் அணிக்கு நடிகர் <b>தருண் கப்டனாகவும் </b>இருந்தார்கள். நாணயச் சுழற்சியில் தமிழ் நடிகர்கள் அணி வென்று துடுப்பாட்டத்தை தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக நடிகர்கள் <b>ஷாமும் ரமணாவும் </b>களம் இறங்கினார்கள். 2 ஓவருக்கு 8 ஓட்டங்கள் என்ற நிலையில் ஷாம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய <b>ரமணா 108 ஓட்டங்கள் </b>எடுத்து ஆட்டமிழந்தார். <b>விக்ராந்த் 56 ஓட்டங்களுடனும் </b><b>ஜீவா 25 ஓட்டங்களுடனும் ஆர்யா 24 ஓட்டங்களுடனும் </b>ஆட்டமிழந்தனர். 30 ஓவர்களுக்கு ஒரு பந்து இருந்த நிலையில் களம் இறங்கிய சிம்பு அந்த ஒரு பந்திலேயே ஆட்டமிழந்தார்.

30 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு <b>248 ஓட்டங்கள் என்ற நிலையில் தமிழ் நடிகர்கள் அணி ஆட்டத்தை முடித்துக் கொள்ளஇ 249 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது தெலுங்கு நடிகர் அணி.

5 ஆவது ஓவரில் நடிகர் ஷ்ரீகாந்த் திருப்பம் ஏற்படுத்தினார். அவர் வீசிய பந்தில் தெலுங்கு நடிகர் ஜீவி ஆட்டமிழந்தார். தொடர்ந்து விஷால் 3 விக்கெட்டுகளையும் விக்ராந்த் ஆர்யா அப்பாஸ் ஜீவா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். 30 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு [b]227 ஓட்டங்கள் </b>மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது தெலுங்கு நடிகர்கள் அணி.


- Luckyluke - 02-06-2006

தெலுங்கு நடிகர்கள் அணிக்கு தமிழர் கேப்டனாகவும், தமிழ் நடிகர்கள் அணிக்கு ஒரு கன்னடர் கேப்டனாகவும் பணியாற்றியது இந்திய ஒருமைப்பாடுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கியது.....


- MUGATHTHAR - 02-06-2006

Quote:தெலுங்கு நடிகர்கள் அணிக்கு தமிழர் கேப்டனாகவும்

நீங்க தருணைதானே குறிப்பிடுகிறீயள்
எனக்கென்னவோ அவர் தெலுக்கு என்றுதான் தெரியுது அவரின் அனேக படங்கள் தெலுங்கில்தான் வந்திருக்கின்றன???


- Luckyluke - 02-06-2006

அவர் நடிகை ரோஜாரமணியின் மகன்.... அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்....

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கூட தமிழன் தான்.....