Yarl Forum
சதி கொன்ற சாவு.'கௌசல்யன்" - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சதி கொன்ற சாவு.'கௌசல்யன்" (/showthread.php?tid=994)



சதி கொன்ற சாவு.'கௌசல்யன்" - shanthy - 02-06-2006

கௌசல்யனின் சாவறிந்த தினம் எழுதப்பட்ட கவிதை. இன்று கௌசல்யனின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு மீளவும் பதிவாகிறது.

சதி கொன்ற சாவு.

'கௌசல்யன்"
சத்தமின்றி இருந்த வீரன்
சத்தமின்றி எங்கள் மனங்களை
வென்று போன சத்தியன்.

மோப்பர்களை மீட்பர்களாய்
நம்பிய பாவம்
எங்கள் மீட்பர்களே
உங்களை நாம் இழந்து போக
அரச மோப்பரே சாட்சியாக.....


கண்காணிப்போர் கண்களில்
உங்கள் சாவு
குழு மோதல் என்பதாக.....
சார்ந்து நின்று நீதி சொல்லும்
பணிசெய்ய வந்த
பிணியரே இவர்களெல்லாம்.

கருணாவின் சதியென்று கதைபூசி
கௌசல்யன், புகழன்,
செந்தோழன், நிதிமாறன்
சாவிதனை விதியென்றா எழுதிவிட....?

இல்லையில்லை,
சதிகொன்று போனதெங்கள்
சந்ததியின் விதிமாற்றி எழுதிப்போன
வீரர்கள் வரிசையிலே
உரமாகிப் போனவர்கள்.
07.02.05.


- வர்ணன் - 02-06-2006

லெப்.கேணல் கெளசல்யன் அவர்கள் இழப்பின் வலியை- மீண்டும் நினைவில் இருத்திய கவிதைக்கு -நன்றி -சாந்தி!


- iruvizhi - 02-06-2006

<b>நேரம் அறிந்து
நினைவேந்தி வந்தவரே!

நித்தம் அவனை நினைக்கும்
போதெல்லாம்.
மனதிற்குள் ஓசையில்ல
எரிமலை ஒன்று வெடித்து
ஓயும்.

அந்த தூய உள்ளம்
பற்றி யாரும் அறிவார்
துரோகத்தை தூர
விரட்ட.
துணிந்து போரிட்ட
மாவீரனவன்.


சதி என்னும்
இருளை அகற்ற
தன்னை திரியாக்கி
தமிழாழ மண் காத்த உத்தமன்</b>


- வர்ணன் - 02-06-2006

மேற்கோள்:

அந்த தூய உள்ளம்
பற்றி யாரும் அறிவார்
துரோகத்தை தூர
விரட்ட.
துணிந்து போரிட்ட
மாவீரனவன்.

ஹ்ம்ம்- இருவிழி- அந்த தூய உள்ளம் யாரறிவார்?-
அடுத்த பொழுது- விடிஞ்சால் கல்யாணம்-என்றதொரு நிலமையில்-
எதுவும் வேணாம் என்று -உதறி தள்ளி தலைவருக்கு உண்மையை சொல்ல ஓடி போய்-
புலிகள் இயக்கத்தை வாழவைத்து- மீண்டுவந்து-பிறகு மாண்டுபோன -

கெளசல்யன் - போல -மனித சுகங்களுக்கு எளிதில் - மயங்காத- மனம்-துணிவு -கொள்கை பற்று- எம்மில் யாருக்கு இருக்கு?


- தூயவன் - 02-07-2006

லெப். கேணல் கௌசல்யனின் நினைவுகளை கவிதை வடிவில் இணைத்த அனைவருக்கும் நன்றிகள்!


- Mathuran - 02-08-2006

லெப். கேணல் கௌசல்யன் அவர்களின் நினைவினை மீட்டிய உங்களின் உணர்வுகள் உன்னதமானவை.
உன்னனத போராளியின் நினைவுகளை பகிர்து கொள்ளும் கவிதகளுக்கு நன்றி.


- RaMa - 02-09-2006

லெப். கேணல் கெளசல்யன் அவர்களுக்காக எழுதப்பட்ட கவிதைகள் அருமை.
சாந்தியக்காவிற்கும் இருவிழிக்கும் எனது நன்றிகள்.


- Mathan - 02-10-2006

நினைவூட்டிய கவிதைக்கு நன்றி சாந்தி அக்கா