Yarl Forum
யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவி (/showthread.php?tid=988)



யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவி - மேகநாதன் - 02-07-2006

<b>யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவிக்கு பேராசிரியர் எஸ்.குமாரவடிவேலை சிபார்சு செய்தது பல்கலை மானியங்கள் ஆணைக்குழு </b>

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.குமாரவடிவேலை நியமிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக கடந்த மாத பிற்பகுதியில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் பேராசிரியர்களான எஸ்.கந்தசாமி, எஸ்.குமாரவடிவேல், ரட்ணஜீவன் கூல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த மூவரில் ஒருவரை தற்போது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. எனினும், மூவரில் எவராவது ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் இந்த நியமனத்தில் அரசியல் தலையீடு அதிகமிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்கள் எதுவித பிரச்சினையுமின்றி சுமுகமாக இயங்கவேண்டுமென்பதே மானியங்கள் ஆணைக்குழுவின் நோக்கமாகும். இதனாலேயே பேராசிரியர் குமார வடிவேலின் பெயரை தெரிவு செய்ததாகவும்

<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>