Yarl Forum
காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளை பிடித்து திருமணம் செய்து வைப - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளை பிடித்து திருமணம் செய்து வைப (/showthread.php?tid=968)



காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளை பிடித்து திருமணம் செய்து வைப - SUNDHAL - 02-08-2006

உலகம் முழுவதும் காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் காதலர் தினம் பிரபலமாகி விட்டதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை காதலர்கள்ஆவலோடு எதிர் நோக்கி உள்ளனர்.

இந்திய கலாச்சாரத்துக்கு காதலர்தினம் எதிரானது என்று கூறி பாரதீய ஜனதா கடந்த சில ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இதே போல இந்த ஆண்டும் காதலர் தினத்துக்கு பாரதீய ஜனதா புதுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது. காதலர் தினத்தை கொண்டாடும் காதல் ஜோடியை பிடித்து போலீசார் உதவியுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று பீகார், ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதாவின் மாணவர் பிரிவான அகில்பாரதீய வித்யாத்தி பரிஷத் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறும்போது நாங்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து காதலர்களை பிடித்து உள் ளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்போம். அவர்களது பெற்றோர்களை அங்கு வர வழைத்து திருமணம் செய்து வைப்போம். எந்த மதமாக இருந்தாலும் சரி, எந்த சாதியாக இருந்தாலும்சரி கவலைப்படமாட்டோம் என்றார்.

காதலர் தினத்துக்கு எதிராக போராடும் அகில் பாரதீய வித்யாத்தி பரிஷத்து ஆதரவாக சிவசேனாவும், விசுவஇந்து பரிஷத்தும் களம் இறங்கி உள்ளன. அந்த அமைப்புகளும் காதலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

பீகார் மாநிலத்தில் கடந்த காலங்களில் ராஷ்டீரிய ஜனதா தள ஆட்சி நடந்தது. அப்போதே பாரதீய ஜனதா வின் எதிர்ப்பு இருந்தது.தற்போது பீகார் ஜார்கண்ட் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருவதால் காதலர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
Thanks:malaimalar...


- SUNDHAL - 02-08-2006

ke ke ke ke lolz <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->