![]() |
|
படுக்கையில் வைத்து மனைவியை வெட்டிக்கொன்றார் கணவன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: படுக்கையில் வைத்து மனைவியை வெட்டிக்கொன்றார் கணவன் (/showthread.php?tid=904) |
படுக்கையில் வைத்து மனைவியை வெட்டிக்கொன்றார் கணவன் - வினித் - 02-11-2006 படுக்கையில் வைத்து மனைவியை வெட்டிக்கொன்றார் கணவன் திருநெல்வேலி பாற்பண்ணைப் பகுதியில் சம்பவம் தலை மற்றும் பிடரிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை திருநேல்வேலி பாற்பண்ணைப் பகு தியில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தப் பெண்ணை அவரது கண வரே படுக்கையில் வைத்துப் படுகொலை புரிந்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகின்றது. பாற்பண்ணை, இரண்டாம் ஒழுங்கை யில் வசித்துவந்த சிவசீலன் ஜெயசுதா என்ற 29 வயதுடைய குடும்பப் பெண்ணே கொலை யுண்டவராவர். குறிப்பிட்ட வீட்டில் இவரும் கணவரும் மட்டுமே தங்கி இருந்தனர் என்று கூறப்படு கிறது. எட்டு வயதேயான இவர்களது மகள் ஒருத்தி தனது போர்த்தியார் வீட்டில் வசித்து வந்தார். நேற்றுக் காலை உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பிரஸ்தாப பெண் தரையில் படுக்கைப் பாயிலேயே சடலமா கக் காணப்பட்டார். தலையின் பின் பகுதி வெட்டுக்காயங்களால் சிதைந்து காணப்பட் டது. உடனடியாக அங்கு திரண்ட உறவினர் களும் இளைஞர்களும் பெண்ணின் கணவ ரான சிவசீலன் என்பவரைத் தேடிப் பிடித்து நையப்புடைத்தனர். தனது மனைவியை தானே கொன்றதாக அப்போது அவர் ஒப் புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. பின் னர் அவர் கோப்பாய் பொலீஸாரிடம் ஒப் படைக்கப்பட்டார். யாழ்.மேலதிக நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் நேற்றுப் பிற்பகல் சம்பவ இடத் துக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட் டார். உறவினர்களின் வாக்குமூலங்களைப் பதவுசெய்தார். அதன் பின்னர் பெண்ணின் சடலம் கோப் பாய் பொலீஸாரால் யாழ்.ஆஸ்பத்திரிக்கு எடுத்துவரப்பட்டது. http://www.uthayan.com/pages/news/today/04.htm - kuruvikal - 02-11-2006 யாழ்ப்பாணத்தில இதுவும் நடக்குதா....???????????????! hock: :roll:
- தூயா - 02-11-2006 இது என்ன கொடுமை!!!! சினிமா படங்களில் வருவது போல !!!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|