![]() |
|
வெள்ளி மோதிரத்துக்காக 3 பேர் படுகொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: வெள்ளி மோதிரத்துக்காக 3 பேர் படுகொலை (/showthread.php?tid=902) |
வெள்ளி மோதிரத்துக்காக 3 பேர் படுகொலை - வினித் - 02-11-2006 வெள்ளி மோதிரத்துக்காக 3 பேர் படுகொலை பிப்ரவரி 11, 2006 சென்னை: சென்னையில் ஒரு வெள்ளி மோதிரத்துக்காக 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை அருகே துரைப்பாக்கம், சீவரம் என்ற இடத்தில் சென்னை மாநிநராட்சிக்குச் சொந்தமான இடம் உள்ளது. தென் சென்னை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்குதான் கொட்டப்படும். கிட்டத்தட்ட 50 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்தக் குப்பை மேட்டில் சேரும் பொருட்களை பிரித்து எடுப்பதற்காக ஏகப்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் உள்ளன. குப்பையில் கிடைக்கும் பொருட்களை இவர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்கள். அப்போது பெரும்பாலன சமயங்களில் அவர்களுக்குள் மோதலும் ஏற்படுவதுண்டு. அவர்களில் குமார் (40) என்பவரும் அடங்குவார். குப்பை பொறுக்கி வந்த இவரது மனைவி ஆண்டாள் (35), மகன் ஆனந்த். நேற்று குமார் குப்பை பொறுக்கிக் கொண்டிருந்தபோது ஒரு வெள்ளி மோதிரம் கிடைத்தது. இதனால் சந்தோஷமடைந்த குமார், அதை குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த மற்றவர்களிடம் காட்டியுள்ளார். இதைப் பார்த்த மற்றொரு குடும்பம், அங்கே வந்து அந்த பகுதியில் பொருட்களை சேகரிக்கும் உரிமை எங்களுக்கே உண்டு. எனவே மோதிரத்தை எங்களிடம் கொடுத்து விடு என்று குமாரிடம் சண்டை போட்டுள்ளனர். குமார் தர மறுக்கவே இரு தரப்புக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டது. பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து போய்விட்டது. இந் நிலையில் இன்று காலை துரைப்பாக்கத்தில் உள்ள சீவரம் குப்பைமேடு பகுதியில் குமார், ஆண்டாள், ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு கொலையாகிக் கிடந்தனர். இதையடுத்து தென் சென்னை காவல்துறை இணை ஆணையர் சைலேந்திரபாபு அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார். வெள்ளி மோதிரத்துக்காக இவர்களுடன் தகராறு செயத் இன்னொரு குப்பை பொறுக்கும் குடும்பம் தான் இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்துள்ளது. ஆண்டாள், குமாரின் தலையில் வெட்டுக் காயம் உள்ளது. ஆனந்தை விரட்டிச் சென்று அக் கும்பல் வெட்டியுள்ளது. அவனது இடுப்பு, கழுத்தில் வெட்டு விழுந்துள்ளது. கொலையான குமார் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ஆவார். கொலையைச் செய்த குடும்பமே தற்போது தலைமறைவாகி விட்டது. அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. http://thatstamil.oneindia.com/news/2006/0.../11/murder.html - kuruvikal - 02-11-2006 என்னப்பா எங்க பார் கொலை கொள்ளை வல்லுறவு... மனிசருக்கு என்ன ஆச்சு..???! hock: :roll:
|