Yarl Forum
புலிகளின் காவல் அரண்மீது தாக்குதல் 3 போராளிகள் படுகாயம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: புலிகளின் காவல் அரண்மீது தாக்குதல் 3 போராளிகள் படுகாயம் (/showthread.php?tid=88)



புலிகளின் காவல் அரண்மீது தாக்குதல் 3 போராளிகள் படுகாயம் - mayooran - 04-24-2006

மட்டக்களப்பு வவுணதீவு விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அரணைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் விடுதலைப்புலிகள் உறுப்பினர் மூவர் படுமடைந்துள்ளனர். மட்டக்களப்பு வவுணதீவு விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அரணைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் விடுதலைப்புலிகள் உறுப்பினர் மூவர் படுமடைந்துள்ளனர். அத்தோடு வீதியில் சென்று கொண்டிருந்த வயது முதிந்த பெண் ஒருவரும் படுகாயமடைந்தார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான மங்கிகட்டு சந்தியில் முன்னரங்கக் காவலரண் அமைக்கும் பணியில் விடுதலைப்புலி போராளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம் பெற்றது. சுமார் எண்பதுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஊடுருவித் தாக்குதல் நடாத்தினர். இதன் போது படுகாயமடைந்த போராளியை மீட்பதற்கு விடுதலைபுலிகளும் பதில் தாக்குதல் நடாத்திய போது தாக்குதல் சுமார் 45 நிமிடம் இடம் பெற்றது.

அத்துடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நோக்கி எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் விடுதலைப்புலிகள் தெரியப்படுத்திய போது சம்பந்தப்பட்ட இடத்திற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவர் நேரடியாக வந்து தாக்குதல் இடம்பெற்ற இடத்தையும் பார்வையிட்டு சென்றனர்.

இந்த நடவடிக்கை பாரிய போர் நிறுத்த மீறல் என விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதே போன்று சிறிலங்கா இராணுவத்தினர் வவுணதீவு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் ஊடுருவி பல முறைகள் தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

sankathi.