![]() |
|
புதிய தளம் பற்றிய விளக்கங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: புதிய தளம் பற்றிய விளக்கங்கள் (/showthread.php?tid=8416) |
புதிய தளம் பற்றிய விளக - Mohan - 04-14-2003 இது தற்போது பரீட்சார்த்தமான தளமாகவே இயங்குகின்றது. இந்த யுனிகோட் முறைபற்றி, இதன் சாதக பாதகம் பற்றி முழுமையான ஒரு தகவல் பரிமாற்றத்தினை நாங்கள் இங்கு செய்து அதன் அடிப்படையில் இதற்கு ஆதரவு கிடைக்குமாயின் இதனையே வருங்காலத்திற்குரிய களமாகப் பாவிக்கலாம் என எண்ணியுள்ளேன். யுனிகோட் சம்பந்தமான ஒரு விளக்கம் மிக விரைவில் இங்கு இணைத்துவிடப்படும். சில அறிவித்தல்கள் இங்கு பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்களுக்கும், ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவர்கட்கும் என இரண்டு வடிவமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பதிவு செய்தாலே, அல்லது இங்கு பரீட்சார்த்தத்திற்கென திறந்து விடப்பட்டிருக்கும் களத்தில் எழுதும்போதோ பாமினி எழுத்துரு அமைப்பிலேயே எழுதக்கூடிய முறையாக அமைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்கள் விரும்பினால் தாங்கள் எழுதும் முறையை ஆங்கில உச்சரிப்பு முறையில் வைத்திருக்கவிரும்பினால் மேலே உள்ள profile என்பதில் அழுத்தி bordstyle என்பதில் english2unicode என்பதைத் தெரிவு செய்துவிட்டால் போதுமானது. இங்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். வலது பக்க பெட்டியில் அனைத்தையும் எழுதிய பின்னர் இடது பக்க பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதவேண்டிய சொல்களையோ படங்களையோ இணைக்க வேண்டும். அவ்வாறு இடதுபக்கம் ஏதாவனை இணைத்துவிட்டு மீண்டும் வலதுபக்கம் நீங்கள் ஏதாவது எழுதினால் நீங்கள் செய்த வடிவமைப்பு இழக்கப்பட்டுவிடும். இந்தப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். தற்போது இங்கு களத்தில் யாழ்இணையம் பகுதியும், பரீட்சார்த்தம் பகுதியும் அனைவரும் எழுதக்கூடியதாக திறந்துவிடப்பட்டுள்ளது. தேவையற்ற கருத்துக்கள் தொடர்ச்சியாக நீக்கப்படும். நீங்கள் பழைய களத்தில் எழுதும் கருத்துக்களையும் இங்கும் அவ்அவ் பிரிவுகளில் இணைத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றேன். இது பரீட்சார்த்தத்தினை மேலும் வெற்றிகரமாக நடாத்துவதற்கு உதவும். பெயர்களை ஆங்கிலத்திலேயே பதியுங்கள் உங்கள் கேள்விகளையும், எனது நேரத்தினையும் பொறுத்து மேலதிக விளக்கங்கள் தொடர்ந்து தரப்படும். - Mohan - 04-14-2003 யுனிகோட் தேவையின் சிலகாரணங்கள். அவசரத்தில் எழுதுகின்றபடியால் முறையான விளக்கம் சிலவேளை கிடைக்காது. கேள்விகள் பலதும் வரும்போதுதான் இவை பற்றிச் சரியாகக் கலந்துரையாடலாம். ஆதலால் கேள்விகள் அனைத்தையும் முன்வையுங்கள். அத்துடன் யுனிகோட் சம்பந்தாமாக தெரிந்த அனைவருடம் இங்கு தங்கள் கருத்துக்களை, பதில்களை எழுதுங்கள். நாங்கள் யுனிகோட்டிற்கு போவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்போம். - புதிய windows os களுடனூம் எதிர்காலத்தில் வரவிருக்கும் windows os களுடனூம் இவ் யுனிகோட் இணைந்து வரவிருப்பதால் எழுத்துக்களைத் தரவிறக்கம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. - இன்று நாம் பாவிக்கும் தமிழ் எழுத்துக்கள் சில குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக ஈ எனூம் எழுத்து இருக்குமிடம் இணையப்பக்கங்களை தயாரிக்கும்போது மிக முக்கியமான ஒரு குறியீடாகப்பாவிக்கப்படுகின்றது. கல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் ஈ என்று எழுத்து எழுதும்போது கணணி அதன ஒரு குறியீடாக எடுத்துக்கொள்வதால் பல்வேறு சந்தர்பங்களில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. - மிக இலகுவான முறையில் ஆவணங்களின் பெயரினைத் தமிழில் பதிந்து வைத்துக்கொள்ளலாம். -நிகழ்வுகள் தயாரிப்பவர்கள் மிக இலகுவாக தமிழ் எழுத்துக்களையும் விளக்கங்களையும் (உதாரணத்திற்கு menu) இணைத்துக்கொள்ளலாம். ஆங்கில தமிழ் எழுத்துக்களை எதுவித சிரமமும் இல்லாது எங்கும் எழுதலாம். மற்றும் உலகின் எங்கிருந்தும் பிரபல்யமான தேடல்பெறிகள் மூலம் பலவிதமான விடயங்களைத் தேடலாம். உதாரணமாக google.com எனூம் தேடற்பொறி மூலம் யாழ் கருத்துக்களத்தில் உள்ள விடயங்களைத் தமிழில் எழுதித் தேடமுடியும். இதற்கு யாழ் இணையப் பக்கமும் சில வேலைகள் செய்யவேண்டும் எனினூம் இப்படியான விடயங்கள் இலகுவாக அமையும். மற்றும் உங்கள் தளங்களை இவ் யுனிகோட் முறையில் அமைப்பதன் மூலம் தமிழில் தேடப்படும் விடயத்தினை இலகுவாகக் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும். உலகெங்கும் இம்முறை பொதுவாக வரும்பட்சத்தில் அனைத்து தமிழர்களும் இலகுவான முறையில் தேவையான விடயங்களைத் தமிழில் பெற்றுக்கொள்வார்கள். google.com ல் யுனிகோட் முறைமூலம் தமிழ் என்பதை எழுதித் தேடிப்பாருங்கள். சில தளங்கள் உங்களுக்கு கிடைக்கும். Google.com இணையத்தில் பாவிக்கப்படும் தமிழ்எழுத்துக்கள் தொடர்பாக இன்றைய நிலையினை எடுத்துக் கொண்டால் அது மிக மிக மோசமானதாகவே இருக்கின்றது. பல்லாயிரக்கணக்கான தமிழ் இணையத்தளங்கள் இருந்தாலும் பொதுவான ஒரு எழுத்துரு இல்லாத காரணத்தில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்படுவதுடன் பல நல்லவிடயங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திலேயே முடங்கியும் போகின்றது. உதாரணத்திற்கு பாமினி எழுத்துருவில்கூட இரண்டுவகை உள்ளது. இது கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் சில சிக்கல்களைக் கொடுக்கின்றது. ஒரு பாமினி எழுத்தில் சில எழுத்துக்கள் அதிகமாக உள்ளது. வித்தியாசமான இவ்பாமினி எழுத்துரு வைத்திருக்கும் இருவர்கூட சில சிக்கல்களை எதிர்நோக்குகின்றார்கள். யுனிகோட் எழுத்து முறையின்படி ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதலால் குழப்பங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. இது உலக ரீதியாக அனைத்து தமிழர்களாலும் பாவிக்கும்பட்சத்தில் தமிழர்கள் தமிழ் இணையத்தில் உச்சபாவனையினைப் பெறக்கூடியதாக அமையும் என நினைக்கின்றேன். தொடரும் - Mohan - 04-15-2003 * ஒரு தளத்தின் உதவி விபரங்களை பலமொழிகளில் மாற்றிக்கொள்ளலாம். உதாரணத்திற்கு இங்கு புதிய கருத்துக்களத்தினை Danish, Dutch, English, Finnish, French, German, German [sie], Norwegian, Swedish ஆகிய மொழிகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். (தமிழ் மொழி விரைவில் இணைக்கப்படும்) ஒரு மொழியில் பரீச்சயம் குறைந்தஒருவர் தனக்கு புரியும் மொழியின் மூலம் (அது அனூமதிக்கப்பட்டிருந்தால்) விளக்கங்களைப்பெற்றுக்கொள்ளமுடியும். (தமிழில் எழுதிய விடயங்கள் மாறாது, உதவி விடயங்கள் மட்டும் மாறும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்) * எதிர்காலத்தில் domain பெயர்கள் விரும்பும் அனைத்து மொழிகளிலும் பெறக்கூடியதாக அமையும் என நினைக்கின்றேன். yarl.com தமிழர்கள் மட்டும் பாவிப்பவர்கள் எனில் யாழ்.com என்று பதிந்து எடுக்கும்போது அது இலகுவானதாக அமையும். பலர் இன்றும் jarl.com என்றும் எழுதிப்பார்த்துவிட்டு என்ன தளம் வேலை செய்யுதில்லை என்கின்றார்கள். இப்படி தமிழில் மாற்றுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றதெனினூம் இவ்வாறன பலசெய்ற்பாடுகளை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம். * புதிய களத்தில் எழுதுபவர்களின் வேலையை மிக இலகுவாகச் செய்துள்ளேன். பாமினியில் எழுதுபவர்களோ, ஆங்கில உச்சரிப்பு முறைமூலம் எழுதுபவர்களே எதுவித சிரமமும் இல்லாது தொடர்ந்தும் தங்கள் முறைப்படி எழுதலாம். * தற்போது உள்ள தமிழ் எழுத்துக்கள் மூலம் இணையத்தளங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றது. முன்னர் குறிப்பிட்ட ஈ பிரச்சனை தவிர மூ, கூ, ஜ, ஸ, + போன்ற எழுத்துக்கள் முறையே %, $, [, ], + என்ற எழுத்துக்களில் இருப்பதால் பலசிக்கல்கள் கருத்துக்களத்தில் மொழிமாற்றம் செய்யும் எனக்கு ஏற்பட்டது. * இவை அனைத்தையும்விட தளத்தினை இயக்குபவர்பக்கமும் வேலை இலகுவாக அமைகின்றது. * இப்போதே மெல்ல மெல்ல நாங்கள் யுனிகோட் எழுத்துருவிற்கு மாறத்தொடங்குவதுதான் மிகவும் நல்லது. அல்லாதுவிடில் நாங்கள் எதிர்காலங்களில் இன்னூம் உயரவிருக்கும் தொடர்பாடல் முறைகளில் பின்தங்கியவர்களாகவே இருக்கப்போகின்றோம். - Mohan - 04-15-2003 Windows XPயில் எடுக்கப்பட்ட சில படங்கள் <img src='http://forum.yarl.com/images/yarl/unicode_pic01.gif' border='0' alt='user posted image'> <img src='http://forum.yarl.com/images/yarl/unicode_pic02.gif' border='0' alt='user posted image'> <img src='http://forum.yarl.com/images/yarl/unicode_pic03.gif' border='0' alt='user posted image'> <img src='http://forum.yarl.com/images/yarl/unicode_pic04.gif' border='0' alt='user posted image'> <img src='http://forum.yarl.com/images/yarl/unicode_pic05.gif' border='0' alt='user posted image'> <img src='http://forum.yarl.com/images/yarl/unicode_pic06.gif' border='0' alt='user posted image'> - Guest - 04-27-2003 வணக்கம் ஏன் உழனந2000 எழுத்துருவுடன் இந்த புதியதளத்தை பாக்கமுடியவில்லை. ஏனெனில் அதுவும் ரniஉழனந கழவெ தானே அன்புடன் செல்வம் - Mohan - 04-28-2003 <!--QuoteBegin-Anonymous+-->QUOTE(Anonymous)<!--QuoteEBegin-->வணக்கம் ஏன் உழனந2000 எழுத்துருவுடன் இந்த புதியதளத்தை பாக்கமுடியவில்லை. ஏனெனில் அதுவும் ரniஉழனந கழவெ தானே அன்புடன் செல்வம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஏன் உழனந2000 எழுத்துருவுடன் இந்த புதியதளத்தை பாக்கமுடியவில்லை. ஏனெனில் அதுவும் ரniஉழனந கழவெ தானே <!--QuoteEnd--><!--QuoteEEnd--> code 2000ம் யுனிகோட் எழுத்துருதான். அந்த எழுத்துருவினை நான் இங்கு இணைத்துவிடவில்லை. இணைத்துவிட்டு தெரிவிக்கின்றேன் - yarlmohan - 06-16-2003 Quote:சில அறிவித்தல்கள் - yarlmohan - 06-16-2003 சிறிதாய் ஒரு விளக்கம் Flash செய்து இணைத்துள்ளேன். (Sound இணைக்கவில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )http://home.broadpark.no/~rmohanar/flash/uniflash.html - veera - 06-26-2003 எந்தத்தலைப்பிற்குள் தான் கருத்தெழுதுவது? அனைத்துத் தலைப்பிற்குள்ளும்.........இப்படி தொடர்ச்சியாக எழுதி முடித்தால் நாங்கள் எதிர்த்துத்தானே எழுத வேண்டும்.வீண் சிக்கலாகிவிடுமே? எப்போது வந்தாலும் ஒவ்வொரு தலைப்பிற்குள்ளும் கடைசிக்கருத்து ......... என்பவருடையதாகவிருக்கின்றது. யாழ் இணையத்தில் மற்றவர்கள் கருத்தே எழுத முடியாத நிலையாகவிருக்கின்றதே? http://www.yarl.com/forum/index.php இந்தப்பக்கத்தை பார்க்கவே உள்ளே போக மனதுக்குக் கஸ்டமாகவிருக்கின்றது.கொஞ்சம் கட்டுப்படுத்த முடியாதா? - Guest - 06-26-2003 என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள்... - veera - 06-26-2003 அங்கத்துவன் என்ற ரீதியில் முறைப்பாட்டினை முன்வைத்துள்ளேன். மீண்டும் இதைத்தான் வலியுறுத்த விரும்பிகிறேன். <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> கொஞ்சம் கட்டுப்படுத்த முடியாதா? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> - sethu - 08-16-2003 veera Wrote:அங்கத்துவன் என்ற ரீதியில் முறைப்பாட்டினை முன்வைத்துள்ளேன். - Manithaasan - 08-16-2003 Quote:எந்தத்தலைப்பிற்குள் தான் கருத்தெழுதுவது?உண்மை.. அக்கிரமம் கூடவே அருவருப்பும்.. வதைக்கிறார்..................... - sethu - 08-17-2003 ஆரைத்தான் உந்த சிந்தனை ஓட்ட பார்வையில் நோக்குகிறீர் - Mathivathanan - 09-14-2003 புட்டு நீத்துப்பெட்டியிலை அவிசாலென்ன.. குழலிலை அவிச்சாலென்ன.. இரண்டும் ஒண்டுதான்.. ஏன்தான் அலைஞ்சு திரியிறியளே..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-16-2003 [quote=Mathivathanan] <span style='font-size:30pt;line-height:100%'>புட்டு நீத்துப்பெட்டியிலை அவிசாலென்ன குழலிலை அவிச்சாலென்ன இரண்டும் ஒண்டுதான். ஏன்தான் அலைஞ்சு திரியிறியளே..?</span> - sennpagam - 09-16-2003 ரேஸ்ரில் வித்தியாசமிருக்கிறது. - kuruvikal - 09-16-2003 Dear Mohan anna, 'About New face of Kalam' Again, u made a mistake.... I could not see and use english tamil converter...please add it as soon as possible...! Thanks. Kuruvikal. - kuruvikal - 09-16-2003 And We have lost members' profiles as well. Please take action quickly and help us to write in tamil. Thanks. Kuruvikal. - Paranee - 09-16-2003 வணக்கம் குருவிகள் உதவி என்ற பகுதியில் நான் இணைத்துள்ளதை பின்பற்றுங்கள். |