Yarl Forum
விசப்பாம்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: விசப்பாம்பு (/showthread.php?tid=8414)



விசப்பாம்பு - Guest - 04-15-2003

ஒருவருக்கு பாம்பு கடித்து 2 நாட்கள் தாமதித்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்தார்களாம்.பாம்பு கடி வாங்கியவரும் சற்று உற்சாகமாகவே பேசிக்கnhண்டே வந்தவராம்.

வைத்தியர் காயத்தை பார்த்துவிட்டு சொன்னாராம்.
ஐயோ உது நாகமெல்லோ கடிச்சிருக்கு.எவ்வாறு இப்படியிருக்கிறீர்கள் என்று திகைக்க வைத்தியரின் சொல்லைக்கேட்டு அதுவரை உற்சாகமாகவிருந்த நோயாளி மயங்கி இறந்துபோனார்.

நாகம் கடித்தவர் அதுவரை எவ்வாறு உயிருடனிருந்தார் என்பது பலருக்கு ஆச்சரியமாகவிருந்தது.
பலருக்கு தெரியாத விடயம் நாகம் கடித்தபொது அதைக்கண்ட ஒரு வழிப்போக்கன் உது சும்மா சாரைப்பாம்பு ஒன்றும் செய்யாது என்று சொன்ன ஒரு சொல்லே.


- Selan - 04-26-2003

சுரதா அண்ணா நல்லதத்துவத்தை நகைச்சுவைப்பகுதியில் போட்டு விட்டீர்கள்.