![]() |
|
அன்னையர் தினம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: அன்னையர் தினம் (/showthread.php?tid=8403) |
அன்னையர் தினம் - Manithaasan - 05-07-2003 அன்னையர் தினம் கருவில் உருவான காலமுதல் காதலித்து உருவமொடு உணர்வு தந்தென்னை உலகிற் பிறப்பித்த அம்மா! விருப்போடு பாலூட்டித் தாலாட்டி தெருப் புழுதி நானாடி வந்தாலும் அருவருப்பின்றி வாவெந்தன் செல்லத் திரவியமே யென்றணைத்து அமுதூட்டிச் சீராட்டியெனை வளர்த தாயே... நீயறியாக் கல்வியெலாம் நான்கற்க வேண்டுமென பள்ளிசெல்ல எனைப் பணித்த பாரதியே.. கல்வியொடு கலையார்வம் கொண்ட என்மனமறிந்து தடையேதுமின்றி வழிவிட்ட அம்மா.. வாலிபத்தின் வாயிலுக்கு நான்வந்த வேளையிலே படிப்பித்தே னென்றெனக்கு விலையேதும் வைக்காமல் மிடியேதுமின்றி நீயாய் உன்துணையைத் தேடென்று வரமளித்த தாயே.. புலம்பெயர்ந்து வந்தாலும்.. நாலுபேர் மெச்சும் வாழ்வு மணியான தெய்வம் அம்மா நீ தந்த வாழ்வுதானே! அம்மாவுன் மலர்ப்பாதம் என்றுமென்; மனதிருக்கும் இம்மாநிலத்தில் நான் வாழும் காலமெலாம்..அம்மா எனக்கென்றும் அன்னையர் தினம் தாயே! - sethu - 07-12-2003 முதியவர் தினம் எப்ப எண்று சொல்ல முடியுமா தாத்தாவிற்கு விளா எடுக்க? |