Yarl Forum
தலைப்பு இங்கே கவி மழை எங்கே ?????????? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தலைப்பு இங்கே கவி மழை எங்கே ?????????? (/showthread.php?tid=8393)



தலைப்பு இங்கே கவி மழை - Paranee - 06-08-2003

தலைப்பு இங்கே கவி மழை எங்கே ?????????? என்ற பகுதிமூலம் புதிய கவியார்வாளர்களை வளர்க்க முயல்வோம். புதிய புதிய தலைப்புகளை இங்கு இட்டுக்கொள்வதன் மூலம் எமது திறமைகளையும் புதியவர்களின் திறமைகளையும் வளர்த்துக்கொள்வோம்.
நான் ஒரு தலைப்பிட்டு தொடக்கிக்கொள்கின்றேன்.

1) வானில் ஓர் நாள்.........

இறக்கைகள் கிடைத்துக்கொண்டால்
சிறகடித்துப்பறந்துகொண்டே
விண்மீண்கள் வெளிச்சம் பறிப்பேன்
நிலவின் பின்புறம் சென்று
வெளிச்சம் தருவது எதுவென்று
இரகசியமாய் பார்த்து வருவேன்
ஆதவனின் அருகில்போய்
தீயணைத்து வெப்பம் குறைப்பேன்

கனவுகண்டுகொண்டிருக்கின்றேன்
வானில் ஓர் நாள் நானூம் போவேன் என


- sOliyAn - 06-09-2003

வானில் ஓரு நாள் வலம்வர ஆசை
நட்சத்திரங்களின் இருக்கையைப் பார்க்க
அவையும் அங்கே தேர்தலில்தானே?
தமிழரை ஏய்க்கும் செயலிலும்தானோ?
அறிந்துகொள்ள மனதினில் ஆசை
வானில் ஒருநாள் வலம்வர ஆசை.


- Guest - 06-11-2003

அருந்ததி பார்த்த தோசம்..
முழுவியளம் சரியில்லை..


- sOliyAn - 06-12-2003

அருந்ததி பார்த்து தோசம் வந்தால்
அம்மி மிதித்து (மிதிக்க) விடுங்கள்
பாசம் வந்து பல்கிப் பெருகும்..


- sethu - 06-18-2003

சோளியன் என்ன களியானம் திரும்பவும் கட்டுற பிளானோ?


- Manithaasan - 06-20-2003

உச்சி வெய்யிலில் அருந்ததி காட்ட அண்ணாந்து பார்க்க கதிரவன் கண்ணைக் கூசவைக்க
கூச்சமின்றி காணாத அருந்ததியை கண்டேனென்று
பொய்யுரைத்தால் வாழ்வு பொய்யாகாமல் மெய்யாகுமோ?


- kuruvikal - 06-20-2003

இரவாகி இருள் சூழினும்
தொலை நோக்கி கொண்டேனும்
அருந்ததி காணலரிது
ஆகினும்
வாழ்வில் கற்புக்கு
இலக்கணமாகி - அவள்
வாழ்வதால்
காணாதும் கருத்தாள்கிறாள்
மனிதர் வாழ்வும் சிறப்புற
விளங்குகிறாள்
கற்பு நிறை தம்பதியர் வாழ்வினிலே!
வானம் பார்த்தலும்
நல் தம்பதி காண்பதும்
அருந்ததி காணுதலேயாம்!


- sethu - 06-21-2003

மணிதாசன் யதார்தம் புரியுத