![]() |
|
புதுப்பொலிவுடன் திங்கள்முதல் வரும் யாழ் களத்துக்கு வாழ்த்து - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: புதுப்பொலிவுடன் திங்கள்முதல் வரும் யாழ் களத்துக்கு வாழ்த்து (/showthread.php?tid=8379) |
புதுப்பொலிவுடன் திங் - sOliyAn - 06-15-2003 நித்தம் நித்தம் வந்தவர்கள் எத்தனைபேர் - யாழ் களத்தினிலே எழுதியவர் எத்தனைபேர் (நித்தம்..) எழுதிப்போட்டு அழித்தவர்கள் எத்தனைபேர் - அதில் தலை கவிழ்ந்துநின்றவர்கள் எத்தனைபேர் (நித்தம்..) கரு வந்த இடத்தில் பல கதை முளைத்தது - அது முடியுமுன்னே வேறும்பல செயல் விளைந்தது கருத்துக்கள பூட்டுவந்து கடமை என்றது - கூட தணிக்கை என்றும் சிவப்பில் வந்து வெருட்டி நின்றது (நித்தம்..) கவிதை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது - சிலர் கருத்தும்கூட ஆண்கள் என்று அடிக்க வந்தது பெண்களெல்லாம் அடிமையென கருத்தும் வந்தது - சில ஆண்க ளென்ன பெண்க ளென்ன சமமே என்றது (நித்தம்..) தனிமகனாய் சோர்விழந்து உழைத்தது ஒன்று - அதன் துணைக்கு வந்து எழுதிக் காட்டி நின்றது ஒன்று இருவருக்கும் வாழ்த்து என்று சொல்வதில் இன்று - நாம் யாழ் களத்தை வரவேற்போம் வாழ்க வாழ்கவே..!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 06-15-2003 மேலுள்ள பாடல் ஒரு சினிமா பாடலை தழுவியது.. 'நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ?" எனும் பாடல்.. பாடல் கேட்க விரும்புபவர்கள் கிழ்வரும் தொடுப்பில் கேட்கலாம்.. http://www.dhool.com/cgi-bin/display.pl?or...ike'N%'&prevq=1 - Paranee - 06-15-2003 ஆகா சோழியனா கொக்கா................ என்பதுபோல் வாழ்த்து மாலை வந்து வீழ்ந்திருக்கின்றது. - kuruvikal - 06-15-2003 திங்கள் முதல் பல நூறூ திங்கள் தன் தனித்துவ மணம் கமழ யாழ் புதிய களத்திற்கும் அங்கு தம் திறமை காட்டும் களமாடு அனபர்களுக்கும் வாழ்த்துக்கள்! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- Paranee - 06-15-2003 சிறுதுளியாய் பிரசவித்து ஆறாகி மணல்மீது மலைமீது முள்ளிலும் கல்லிலும் வீழ்ந்தெழுந்து இன்று கடலுடன் சங்கமமாகும் எம் தாய் மண்ணின் பெயர்கொண்ட இணையத்தளமே வருக வருக புதியதோர் இல்லத்திற்கு பல நு}று முகங்களை பலநு}று குணங்களை கண்முன்னே காட்டி வைத்த எங்கள் தளமே வருக வருக புதிய மனைக்கு அன்னையாய் தந்தையாய் மோகனும் யாழும் வளர்த்தெடுத்த மண்ணின் மைந்தனே வருக வருக புதிய மனைக்கு கலைஞர்களை கவிஞர்களை அறிஞர்களை அரசியல் மன்னர்களை கணனி வல்லுனர்களை இன்னும் பல பல ஓளி முகங்களை எமக்கு வெளிச்சமாக்கிய களமே வருக வருக புதிய மனைக்கு உன்னை வரவேற்க காத்திருக்கின்றோம் நாளைய நாளில் உனக்காய் ஒரு புூமாலையுடன் அல்ல பாமாலையுடன்... . வருக வருக எம் உறவே வருக - mathe - 06-17-2003 வணக்கமும், வாழ்த்துக்களும் யாழ் புதிய இணைய கருத்துக் களத்திற்கு, பழைய களத்திலிருந்த பலரை .."அதிரடி செய்தியாளர்" பிறேம் , "கிழட்டுக் கருத்தாளர்" ஜி தாத்தா :x , ...... போன்றோரெல்லாம் எங்கே சென்றுவிட்டார்கள் :?: தரமான, உண்மையான, துரோகத்தனமற்ற கருத்துககளுடன் மோதுவோம் வாரீர். ---------------------------------------------------------------------------------- <b>"தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள்"</b> - sethu - 06-17-2003 கட்டாயம் மதீ இங்கு நிற்கிண்றோம் தாங்களும் தங்கள் வேலைத்திட்டங்களை தரமாக செய்யுங்கோ. நாங்கள் பாத்துக்கொள்ளுவம் - vaiyapuri - 06-18-2003 மோகனின் முயற்சிகளுக்கும் கூடவிருந்து ஒத்துழைப்பவர்க்கும் வாழ்த்துக்கள். வளர்க யாழ் கருத்துக்களம். - sethu - 06-19-2003 வையாபுரி ஆர் யாழ் அண்னைதானே? - sOliyAn - 06-19-2003 sethu Wrote:வையாபுரி ஆர் யாழ் அண்னைதானே?யாழ் சுரதா என்றால்.. 'யாழ் அண்ணை" மோகனா? :wink: - sethu - 06-19-2003 ஆம் எண்டு நான் நினைக்கிறன் சோளிளன். |