![]() |
|
விடுதலை கீதங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: விடுதலை கீதங்கள் (/showthread.php?tid=8311) |
விடுதலை கீதங்கள் - Chandravathanaa - 07-04-2003 <img src='http://www.selvakumaran.de/oviyam/photos/selva34.jpg' border='0' alt='user posted image'> ஊரறியாமலே உண்மைகள் கலங்கும் ஓரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும் வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும். சாவினைத் தொழுது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ! நீங்கள் யாரை நினைத்தீரோ..! வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள். சாவினைத் தொழுது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ! நீங்கள் யாரை நினைத்தீரோ..! வென்றிடவே கரும் வேங்கைகளாகிய வீரக் கொழுந்துகளே! உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில் என்ன நினைத்தீரோ! வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள். சாவினைத் தொழுது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ! நீங்கள் யாரை நினைத்தீரோ..! தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில் சாவைச் சுமந்தவரே! உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில் ஆரை நினைத்தீரோ! வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள். சாவினைத் தொழுது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ! நீங்கள் யாரை நினைத்தீரோ..! தாலாட்டுப் பாடியே தன் முலையுூட்டிய தாயை நினைத்தீரோ! உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின் கையை நினைத்தீரோ!வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள். சாவினைத் தொழுது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ! நீங்கள் யாரை நினைத்தீரோ..! நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும் நாயகனை நினைத்தீரோ! உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன் சோகம்தனை நினைத்தீரோ! வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள். சாவினைத் தொழுது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ! நீங்கள் யாரை நினைத்தீரோ..! ------------------------ நன்றி - கரும்புலிகள் - இறுவெட்டு தமிழீழ விடுதலைப்புலிகள்(சுவிஸ் கிளை) - இளைஞன் - 07-04-2003 சாவினைத் தொழுது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ...! -------------------------------------------------------------------- கண்ணீரை வடிய வைக்கும் பாடல் வரிகள் அல்ல இவை செங்குருதி கசிய வைக்கும் பாடல் வரிகள் - அற்புதம்...! - P.S.Seelan - 08-09-2003 விடுதலை கீதங்கள் எம் உணர்வுடனானது. களத்திலிருந்து புலத்திலிருக்கும் எமக்கு அனுப்பப்படும் செய்தியாக எம் உள்ளத்து உணர்வுகளைத் தூண்டுவதாக அமைபவை. இந்தப் பகுதியை பொழுது போக்குப் பகுதியிலிருந்து எடுத்து தமிழீழப் பகுதியுடன் இணைத்தால் என்ன? இது பொழுது போக்கிற்காக கேட்கும் பாடல்கள் அல்ல என நினைக்கின்றேன். சம்பந்தப்பட்டவர்கள் ஆவனை செய்வார்களா? ஓன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - sOliyAn - 08-10-2003 கீதங்களின் வரிகளை இணைத்த சந்திரவதனாக்கு நன்றிகள்.. மூடவே சம்பந்தப்பட்ட பாடலின் ஒலிக்கான இணைப்பையும் இணைத்தால்.. சிறப்பாக இருக்குமே?! - sethu - 08-10-2003 கல்லில்கூட ஈரம் உண்டு கசிவதும் உண்டு கரும்புலிகள் விளியில் நீர் வடிவதும் உண்டு - Chandravathanaa - 08-13-2003 sOliyAn Wrote:கீதங்களின் வரிகளை இணைத்த சந்திரவதனாக்கு நன்றிகள்..கூடவே சம்பந்தப்பட்ட பாடலின் ஒலிக்கான இணைப்பையும் இணைத்தால்.. சிறப்பாக இருக்குமே?! நன்றி சோழியான். ஒலிக்கான இணைப்பு இது வரை எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்தால் இணைக்கிறேன். அதற்கிடையில் வேறு யாருக்காவது கிடைத்தால், இணைத்தால் எல்லோரும் கேட்கலாம். |