![]() |
|
"வீடியோ" மென்பொருள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26) +--- Thread: "வீடியோ" மென்பொருள் (/showthread.php?tid=8310) |
"வீடியோ" மென்பொர - இளைஞன் - 07-04-2003 வணக்கம் நண்பர்களே... இன்று தொழில்நுட்பத் துறை என்றாலே, அதன் வேகம் எவ்வாறிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தத் துறையில் வீடியோத் தொழில்நுட்பமும் அடங்கும். ஒளிப்பதிவு செய்த காட்சிகளைக் கணணிலயுள் இறக்ககி அதனை வெட்டி, ஒட்டி நிற, ஒளி அளவுகளைக் குறைத்துக் கூட்டி அளவாய்க் கண்ணுக்கு விருந்தாயப் படைப்பது எந்தளவு ஒரு பெரிய நுட்பம்...!!! அந்த வகையில் இவற்றையெல்லாம் கணணியில் செய்வதற்கு வசதியான, மிகவும் இலகுவாகக் கையாளத்தக்க மென்பொருட்கள் யாவை? (எனக்குத் தெரிந்ததும், நான் கொஞ்சம் கற்றதும் ADOBE PRIMIER தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ). இவை பற்றிய விளக்கங்கள் மற்றும் இவற்றை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன? என்பது போன்ற விடயங்களைப் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். வீடியோத் தொழில்நுட்ப வல்லுனர்களே உங்கள் அறிவை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்... நாங்களும் உங்களோடு கைகோர்த்து வருவோம்.
Re: "வீடியோ" மென்பொ - AJeevan - 07-05-2003 இளைஞன் Wrote:வணக்கம் நண்பர்களே... உங்கள் தேவைகளை எழுத்து வழி பகிர்ந்து கொள்வது மிகக் கடினமான விடயம்.எனவே தயவு செய்து நீங்கள் வாழும் பகுதிகளில் இவற்றைக் கற்றுக் கொடுக்கும் நிலையங்கள் இருக்கும். அல்லது தெரிந்த நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள். அநேகமாக பலர் சொல்லித் தர விரும்புவதில்லை. விதிவிலக்காக ஒரு சில நல்லவர்கள் அகப்பட்டால் உங்கள் நேரம் நல்லது.நமது சமூகம் முன்னேற நல்லவர்கள் சேர வேண்டும்.பகிர்தலே வாழ்வில் மகிழ்ச்சி. அல்லது என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். ஏதாவது செய்யலாம். - P.S.Seelan - 07-15-2003 வணக்கம், இவைகளைக் கற்றுக் கொள்ளக் கூடிய புத்தகங்கள் ஏதாவது இருப்பின் அல்லது இணையதளம் ஏதாவது இருப்பின் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள். நன்றி அன்புடன் சீலன் - AJeevan - 07-27-2003 http://www.dmnforums.com/ இணையத் தளத்தினூடாக வீடியோ தொழில் நுட்பம் பற்றிய பிரச்சனைகளை அலசும் ஒரு பகுதியை இணைத்துள்ளேன். இங்கு உங்கள் விபரங்களைப் பதிந்து விளக்கம் கேட்கவோ தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவோ முடியும். http://www.dmnforums.com/htm/homeset.htm - thambythasan - 09-17-2003 please give me ur msn id or please ad mine rajkumar1974@hotmail.com I am also learning Adobe Premier Pro for my movie. - AJeevan - 09-17-2003 thambythasan Wrote:please give me ur msn id or please ad mine Dear RajKumar; please try to get help from Adobe Solution People. http://www.adobe.com/products/premiere/tra...ing.html#videos http://partners.adobe.com/asn/partnerfinde...ch_training.jsp நிச்சயமாக உங்களால் உங்கள் நாட்டிலேயே படிக்கலாம். அல்லது DVD, VHS போன்ற வழிகாட்டி பாடதிட்டங்கள் மேலே தரப்பட்டுள்ள இணையதளங்களுக்கு போனால் பார்த்து inernet மூலமே வாங்கலாம். என்னைப் பொறுத்தவரை நீங்கள் இத்துறைக்கு புதியவராக இருந்தால் தயவு செய்து ஒரு adobe pro. Training course ஒன்றுக்கு போய் அடிப்படையை படிக்கவே ஆலோசனை சொல்லுவேன்.அடிப்படையை முறையாகத் தெரிந்து கொண்டால் பின்னர் புத்தகங்கள் அல்லது online Training ,DVD போன்றவை மூலம் முன்னேற முடியும்.நிச்சயம் நீங்களும் ஒரு திறமைசாலியாக மிளிர்வீர்கள். வாழ்த்துகள்............. AJEEVAN www.ajeevan.com info@ajeevan.com - AJeevan - 09-17-2003 Total Training for Adobe Premiere Pro Has Arrived... https://www.totaltraining.com/store/Dept.as...=0917PP&t=email |