![]() |
|
தேடல்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தேடல்கள் (/showthread.php?tid=831) |
தேடல்கள் - கறுப்பன் - 02-16-2006 <span style='font-size:25pt;line-height:100%'>தேடல்கள்</span>----------------- <b>என் தேடல்களை உனக்குள்ளும் காதலுக்குமாய் வீணாக்கியதன் பிற்பாடு ஏதோ ஒரு ராத்திரியின் மௌனத்தை கனமான இதயத்தோடு ஏற்றுக்கொண்டது மனசு. என் இரவுகளை- நீ வெறுமையாக்கிய போதும் என் இதயத்தை போலவே கனக்கிறது மௌனம். என் மௌனங்களின் பிரிய காதலியே பிரிவு எனக்கும் உனக்கும் தான் காதலுக்கல்ல.....!!!!</b> - iniyaval - 02-16-2006 ம்ம் கறுப்பன் உங்கள் கவிதை நன்றாக்வுள்ளது. வாழ்த்துக்கள் - கறுப்பன் - 02-16-2006 நன்றி இனியவள். - Rasikai - 02-16-2006 உங்கள் கவிதை காதலுக்கு பிரிவு இல்லை என்றதை அழகாக கூறுகிறது. ஏன் தேடல்கள் என்று பெயர் இட்டுள்ளீர்கள்?? :roll: :roll: - RaMa - 02-17-2006 கறுப்பன். பிரிவு உனக்கும் எனக்கும் மட்டும் தான் காதலுக்கு இல்லை என்று அழகாக நிஐமாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். - ப்ரியசகி - 02-17-2006 அழகான வரிகள்... உண்மையான காதலுக்கு பிரிவில்லை தான்.. தொடர்ந்தும் எழுதுங்கள்..கறுப்பன்.. - கறுப்பன் - 02-17-2006 நன்றி, வாழ்த்துக்களுக்கு.... - Nitharsan - 02-17-2006 Quote:என் மௌனங்களின் பிரிய காதலியேமிகவும் பிடித்திருக்கிறது இந்த வரிகள்..... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் Re: தேடல்கள் - சந்தியா - 02-18-2006 என் இரவுகளை- நீ வெறுமையாக்கிய போதும் என் இதயத்தை போலவே கனக்கிறது மௌனம். என் மௌனங்களின் பிரிய காதலியே பிரிவு எனக்கும் உனக்கும் தான் காதலுக்கல்ல.....!!!![/b][/color] கறுப்பன் உங்கள் கவிவரிகள் முகவும் ஆழமானவையாக இருக்கின்றன தொடருங்கள் தங்கள் கவிப் பயணத்தை வாழ்த்துக்கள் - அனிதா - 02-18-2006 Quote:என் மௌனங்களின் பிரிய காதலியே நிதர்சன் அண்ணா சொன்ன மாதிரி இந்த வரிகள் நல்லாயிருக்கு எனக்கும் பிடித்திருந்தது .... தொடர்ந்து எழுதுங்கள் கருப்பன்....வாழ்த்துக்கள்...! |