Yarl Forum
இருவிழி அரைநொடி பார்வையிலே.. .. .. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இருவிழி அரைநொடி பார்வையிலே.. .. .. (/showthread.php?tid=8308)



இருவிழி அரைநொடி பார்வ - Paranee - 07-05-2003

இருவிழி அரைநொடி பார்வையிலே.. .. ..

பொத்திவைத்த மனதை
மலர் வீசி பறித்தது யார்

இருபதுவருட வாழ்க்கை
இரண்டு நொடிக்குள்
திணறுகின்றது
திக்குமுக்காடுகின்றது

நேற்றைய நினைவுகள்
கடந்துவிட்ட காலங்கள்
எல்லாம் மறந்துபோய்
புதிதாய் எனக்குள்
ஏதோ புணர்கின்றதே

அழுகை சிரிக்கின்றது
சிரிப்பு அழுகின்றது
பறக்க தோன்றுகின்றது
புூக்கள்மேல் புதிய ஈர்ப்பு வருகின்றது

பலவிழிகள் என்னை மொய்ப்பதுபோல்
புூகோளமே என்மேல்
மலர் அம்புகள் வீசுவதுபோல்
என்ன இது புதிய மாற்றம்

ஆடை சரிசெய்கின்றது
மனம் அழகு பார்க்கின்றது
அடிக்கடி முகம் கழுவ
உள்ளம் எண்ணுகின்றது
என்ன இது
இப்படி மாற்றுகின்றதே

எதிரிகூட நண்பனாய்
எண்ணத்தோன்றுகின்றது
போர்க்களம் எல்லாம்
புூக்களமாய் புூஜிக்கத்தோன்றுகின்றதே
ஏன்ன இது

இதையா காதல் என்பது
இதையா கனவு உலகம் என்பது

அன்பே வேண்டாம்
எதுவும்வேண்டாம் உன்
இரட்டைவிழிக்கு முன்னே
எனக்கு எல்லாமே எளிமையாகின்றதே..


- J.Premkumar - 08-05-2003

கனவுலகில்
பறக்கும் நண்பா
விழித்து விடடா
ஏன் இந்தக்கற்பனை உனக்கு
நாட்டில் இருந்து கொண்டும்
நீ இந்தக்கற்பனையா கானுகிறாய்
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது
கிடைக்காமல் இருக்கிறது கிடைக்காது.