Yarl Forum
நாதசுரக் கலாநிதி என்.கே. பத்மநாதன் மறைந்தார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நாதசுரக் கலாநிதி என்.கே. பத்மநாதன் மறைந்தார் (/showthread.php?tid=8286)



நாதசுரக் கலாநிதி என்.க - Manithaasan - 07-17-2003

<span style='font-size:25pt;line-height:100%'>நாதசுரக் கலாநிதி என்.கே. பத்மநாதன் மறைந்தார். </span>ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக தமிழீழத்தின் நாதஇசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சியவர் அமரர் பத்மநாதன் அவர்கள். அவரது இழப்பு தமிழீழ இசையுலகிற்கு பேரிழப்பு. கொழும்பில் காலமாகிய அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று யாழ் கோம்பயன்மணல் மயானத்தில் நடைபெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தின் முக்கிய அரசியற் பிரமுகர்களும்..பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இறுதியஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.நாதஇசைச்சக்கரவர்த்தியாருக்கு என் சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்.


- TMR - 07-17-2003

என் சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்
அமரர் பத்மநாதன் அவர்தம் குடும்பத்துக்கு
ஆழ்ந்த அனுதாபங்கள்


- Manithaasan - 07-18-2003

கலாசூரி பத்மநாதனின் உடல் தீயுடன் சங்கமம்
ஈழத்தின் புகழ்புூத்த நாகசுர விற்பன்னர் கலாசூரி என்.கே.பத்மநாதனின் புகழுடல் நேற்று நண்பகல் 12 மணியளவில் தீயுடன் சங்கமமாகி யது.
யாழ்.கில்னர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த அவரின் புகழுடலுக்கு பெரும் எண்ணிக்கையானவர்கள் நேற்றுக் காலை அஞ்சலி செலுத்தினர்.
நண்பகல் அஞ்சலிக் கூட்டம் இடம் பெற்றது. பலர் அஞ்சலியுரை நிகழ்த் தினர்.
அதைத் தொடர்ந்து அவரின் புக ழுடம்பு தாங்கிய பேழை, மலரால் அலங்;கரிக்கப்பட்ட தண்டிகையில் சேமக்கலம், சங்கு ஒலிகள் முழங்;க நிலப்பாவாடை விரித்து எடுத்துச் செல்லப்பட்டது.கோம்;பயன் மணல் மயானத்தில் நண்பகல் 12.30 மணியளவில் அவரின் புகழுடல் தீயுடன் சங்கமமாகியது.
நன்றி: உதயன்--ரி.ரி.என்
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும் பேராசிரியர்களும் இறுதியஞ்சலியில் கலந்து இரங்கலுரை நிகழ்த்தியுள்ளனர்.


- P.S.Seelan - 07-19-2003

செவிகளிளே தேனள்ளித் தெளித்த தென்றல் மறைந்துவிட்டது. எம் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி அஞ்சலித்து நிற்கின்றோம்.

சீலன்