Yarl Forum
கவிக்குள் ஓர் கவி....... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கவிக்குள் ஓர் கவி....... (/showthread.php?tid=8254)



கவிக்குள் ஓர் கவி....... - J.Premkumar - 08-01-2003

கவிக்குள் ஓர் கவி.......

கவிக்குள் ஓர் கவி.....
இசையா...?
நாதமா..?
அல்லது
இசையின் நாதமா..?..!
இடியா...?
மழையா....?
அல்லது
இடியின் மழையா....?...!
காதலா..?
நட்பா..?
அல்லது
நட்பின் காதலா...?.....!
வானமா..?
பூமியா..?
அல்லது
வானுக்குள் பூமியா...?...!
இரவா...?
பகலா....?
அல்லது
பகலில் ஓர் இரவா.....!
எனக்குள் நானோ.....?
எனக்குள் நீயோ...?
உனக்குள் நானோ...?
யாருக்குள் யாரோ..?
எதற்குள் எதுவோ..?
அதற்குள் அதுவே - கவிக்குள்
ஓர் கவி - அது
ஓர் புதுக்கவி.........!

ஜெ.பிறேம் குமார்..