Yarl Forum
சாதனை பெண்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: சாதனை பெண்கள் (/showthread.php?tid=8224)



சாதனை பெண்கள் - Chandravathanaa - 08-16-2003

சாதனை பெண்கள்

[size=18]14 வயதில் ஆசிய சாம்பியன்

<img src='http://www.koodal.com/contents_koodal/women/images/kasthuri_01.gif' border='0' alt='user posted image'>

செஸ் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆசிய ஜூனியர் மகளிர் போட்டியில் 'சாம்பியன்' பட்டத்தை வென்று எல்லோரது பார்வையையும் தன் பக்கம் இழுத்து இருப்பவர்

மதுரை எஸ்.எஸ். காலனி, பிள்ளையார் கோவில் சன்னதி தெருவில் தனது பெற்றோருடன் வசித்து வரும் இவர் பெற்றோருக்கு ஒரே பிள்ளை ஆவார்.
கஸ்தூரி மதுரை டால்பின் பள்ளிக்கூடத்தில் 10-வது வகுப்பு படித்து வருகிறார்.

14 வயதான இந்த வீராங்கனை இந்த மாதம் கடந்த 20-ந் தேதி ஈரான் தலைநகர் டெக்ரானில் நடந்த ஆசிய ஜூனியர் மகளிர் (18 வயதுக்குட்பட்டோர்) செஸ் போட்டியில் கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் 6 நாடுகளைச் சேர்ந்த 16 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 11 சுற்றுகளில் விளையாடிய கஸ்தூரி 8.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றவர்.
இதற்கு முன்பு மாநில அளவில் நடந்த போட்டிகளில் 3 முறை 100 சதவீதம் புள்ளிகள் பெற்ற கஸ்தூரி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

நன்றி - கூடல்.கொம்


- sethu - 08-17-2003

உதைவிட 14 வயதைவிட குநைற்த வயது யாழ்த்தமிழ் இழைஞன் கனடதவில் வெண்றார்


- Mullai - 09-04-2003

<img src='http://www.tamilnet.dk/news/india2002/anju.jpg' border='0' alt='user posted image'>
தற்போது பாரிசில் நடைபெறும் உலக மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த அஞ்சு ஜோர்ஜ் என்பவர் வெங்கலப் பதக்கத்தை வெற்றிபெற்றார். இப்போட்டியில் இவர் 6.70 மீட்டர் து}ரத்தை பாய்ந்து மூன்றாவது இடம் பெற்றார். இவர் ஏற்கெனவே ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கமும், பொதுநலவாய நாடுகளின் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்ற அனுபவமுடையவர். இவருடைய பயிற்சியாளர் கூறும்போது மஞ்சு 7.0 மீட்டர் து}ரத்தை தாண்டக்கூடிய உடல் வாகு கொண்டவர். இவர் வரும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறினார். இவர் தமிழக அணியில் இடம் பெற்றாலுமஇ கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போட்டியில் முதலிடத்தை பிரான்ஸ்சைச் சேர்ந்த யூனிப்பார்பர் 6.99 மீட்டர் து}ரம் பாய்ந்து முதலிடத்தையும், ரஸ்ய வீராங்கனை 6.47 மீட்டர் தாண்டி இரண்டாமிடமும் பெற்றார்.
நன்றி அலைகள்