![]() |
|
இன்றைய செய்தி 19-08-2003 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இன்றைய செய்தி 19-08-2003 (/showthread.php?tid=8216) |
இன்றைய செய்தி 19-08-2003 - Paranee - 08-19-2003 இன்றைய செய்தி - நன்றி உதயன் வேளை வந்துவிட்டது.தீவிரமாகச் செயற்படாவிட்டால் இலங்கையில் புதிதாகத் தேசம் ஒன்று உருவாவதை இந்தியா காண நேரிடும். அந்நாட்டுத்தலைவர்களிடம் கதிர்காமர் எச்சரிக்கை இலங்கை இனப்பிரச்சினைக்கு சட்டாPதியாக எத்தகைய தீர்வைக் காணமுடியும் என்பது குறித்து இந்தியா தீவிரமாகச் சிந்திக்கவேண் டிய நேரம் வந்துவிட்டது. இதில் இந்தியா சரியாகச் செயற்படத் தவறு மானால் இலங்கையில் புதிய நாடு ஒன்று உருவாகுவதை இந்தியா பார்க்க நேரிடும்.- இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி யின் வெளிவிவகார ஆலோசகரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சரு மான லச~;மன் கதிர்காமர்.இந்தியாவுக்கு விஜயஞ்செய்து அங்கு ஒருவார காலம் தங்கியுள்ள லச~;மன் கதிர்காமர் கடந்த சனி யன்று புதுடில்லியில் செய்தியாளர்கள் மத்தியல் பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.இலங்கையில் யுத்தநிறுத்த காலத் திலும் எழுந்துள்ள அச்சநிலைமை தொடர்பாக இந்திய உயர் பீடத்துக்குத் தெளிவுபடுத்தவே தான் இந்தியா வந் திருக்கின்றார் எனத் தெரிவித்த லச~;மன் கதிர்காமர் செய்தியாளர் கள் மத்தியில் மேலும் குறிப்பிட்ட தாவது?கடந்த ஒன்றரை வருட யுத்த நிறுத்த காலத்தில் இலங்கையில் அமைதி நிலவிவிட்டது எனக் கருத முடியாது. இந்தக் காலப்பகுதியினுள் புலிகள் தமது பலத்தை பலமடங்கு அதிகரித்துள்ளனர். குறிப்பாக திரு ணகோணமலை துறைமுகத்தை சுற்றி புலிகள் பலமுகாம்களை அமைத்துள் ளனர். திருகோணமலைக் கடற்பரப் பில் கடற்புலிகள் தற்கொலைப் படை யணிகளின் நடமாட்டம் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் அதிகரித்துள்ளது.திருமலையில் உள்ள எண் ணெய்க் குதங்களை இந்தியாவின் இந்திய எண்ணெய்க் கூட்டுத்தா பனம்| பெற்றுள்ள நிலையில் இந்த அச்ச சூழ்நிலையை இந்தியா வெறு மனே வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்கக் கூடாது. இதற்காக இந்தியா நேரடியாக இலங்கைக்கு வந்து புலி களை எச்சரிக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு சட்ட ரீதி யான தீர்வு குறித்து இந்தியா ஒரு செயல்திட்டத்தை வகுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.புலிகள் இந்தியாவைப் பற்றி பெரி தும் கவலைப்படுகிறார்கள்| பயப்படு கிறார்கள். அது வெளிப்படையான உண்மை. ராஜீவ் காந்தி விவகாரம் குறித்து அவர்கள் பெரிதும் வருந்து கிறார்கள். இதற்குக் காரணம் இருக் கிறது. இலங்கையில் நாளை யுத் தம் ஒன்று வந்தால் அமெரிக்கா அதில் தலையிடாது. ஆனால், இந்தியாவால் அப்படி இருக்கமுடியாது எனப் பிர பாகரனுக்கு நன்றாகத் தெரியும். அத னால்தான் கடந்தகாலத் தவறுகளில் இருந்து விடுபட வேண்டும் என புலிகள் விரும்புகிறார்கள்.இவ்வாறு அவர் மேலும் தெரி வித்தர். இந்தியாவின் பல முக்கிய அமைச் சர்களையும் சந்தித்த கதிர்காமர், செய்தியாளர் சந்திப்பின்போது திரு கோணமலை துறைமுகத்தின் வரை படத்தை வைத்து அதனைச் சூழு உள்ள அபாயங்கள் குறித்து சுமார் மூன்று மணித்தியாலங்கள் செய்தி யாளர்களுக்கு விளக்கமளித்தார். இலங்கையில் எழுந்துள்ள அச்ச சூழ்நிலை குறித்து இந்தியத் தலை வர்களுக்கு எடுத்துக்கூறவே இங்கு தாம் வந்திருப்பதாக அழுத்திக் கூறிய கதிர்காமர், இதில் இந்தியா தலையிட வேண்டும் எனத்தாம் இந் தியத் தலைவர்களிடம் வலியுறுத்தி னார் எனவும் தெரிவித்தாh . . - sethu - 08-19-2003 அவர் கத்தினா கத்திப்போட்டு போகட்டும் கவலை விடுங்கோ எங்கள் அண்னை இருக்கிறார் இவருக்கு அறிக்கைகள் எண்டா கதைப்புத்தகம் மாதிரி எல்லோ? - Mathivathanan - 08-19-2003 sethu Wrote:அவர் கத்தினா கத்திப்போட்டு போகட்டும் கவலை விடுங்கோ எங்கள் அண்னை இருக்கிறார் இவருக்கு அறிக்கைகள் எண்டா கதைப்புத்தகம் மாதிரி எல்லோ? - sethu - 08-20-2003 மட்டக்களப்பு-திருமலை வீதியிலுள்ள சத்துருக்கொண்டானில் வாகன விபத்து. 12 பெண்கள் உட்பட 20 பேர் காயம். மட்டக்களப்பிலிருந்து வாழைச்Nனை நோக்கி சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான வான் ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் 20ற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 12 பெண்களும், 16 ஆண்களுமாவார்கள், இவர்கள் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மு.ப 11.00 மணியளவில் மட்டக்களப்பு- திருமலை வீதியிலுள்ள சத்துருக்கொண்டான் என்னுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. - sethu - 08-20-2003 <img src='http://www.paadumeen.com/News/20.08.2003.jpg' border='0' alt='user posted image'> 24-08-2003 - Paranee - 08-24-2003 இன்றை உதயன் செய்தியிலிருந்து தமது வீடுகளை ஒப்படைக்கும்படி கோரி படையினருக்கு எதிராக நீதிமன்றில் மனு மந்துவில் கிழக்கு மக்கள் தாக்கல் செய்வர் மந்துவில் கிழக்குப் பகுதியில் படையினர் வசம் உள்ள வீடுகளை மீள ஒப்படைக்குமாறு கோரி சாவகச் சேரி நீதிமன்றத்தில் எதிர்வரும் புதன் கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட விருக்கிறது.அந்தப் பகுதியில் படையினர் வசம் உள்ள வீடுகளின் உரிமையாளர்களே இந்த மனுக்களைத் தாக்கல் செய்ய வுள்ளனர். தமது வீடுகளைத் தம்மி டம் ஒப்படைக்குமாறு கோரி பலவித போராட்டங்களை அவர்கள் நடத்தி வந்தனர். அவை பயனளிக்காததை யடுத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட் டுள்ளது.தமது வீடுகளில் தங்கியுள்ள படையினரை அங்கிருந்து வெளி யேற்றி வீடுகளை உரிமையாளர்களி டம் ஒப்படைக்கும்படி கோரி, படை உயர் அதிகாரிகளுக்கு எதிராக இந்த வழக்குத்தாக்கல் செய்யப்படவிருக் கின்றது.அதேவேளை -படையினர் தமது வீடுகளை வைத் திருப்பதால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சொத்து இழப்புக்களுக்கு ந~;டஈடு பெறுவதற்காக மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை கொழும்பு நீதிமன் றத்தில் தாக்கல் செய்யவும் வீட்டு உரிமையாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா |