![]() |
|
உண்மையில் என்ன நடக்கின்றது !! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: உண்மையில் என்ன நடக்கின்றது !! (/showthread.php?tid=8172) |
உண்மையில் என்ன நடக்கி - Paranee - 09-05-2003 உண்மையில் என்ன நடக்கின்றது !! யாழ் நகரின் பிரதான வீதியில் பட்டப்பகலில் சம்பவம் கத்திகள் பொல்லுக்கள் சகிதம் இளைஞனை விரட்டிய கும்பல் உயிர் தப்ப அவர் காவலரணில் தஞ்சம் யாழ்.பிரதான வீதியில் நேற்று மாலை கத்திகள், பொல்லுகள் சகிதம் கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரைத் தாக்கியுள்ளது. உயிர் தப்புவதற்காக ஓடிய இளைஞரை அந்தக் கும்பல் வீதியில் நீண்ட து}ரம் விரட்டிச் சென்றுள் ளது.அந்த இளைஞன் உயிர் தப்புவ தற்காக யாழ்.சிறைச்சாலைக்கு அண் மையில் இருந்த இராணுவக் காவல ரணில் தஞ்சமடைந்தார்.யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டால் உயிராபத்தை எதிர் நோக்குவார் என்று தெரிவிக்கப்பட் டதையடுத்து யாழ்.நீதிமன்றத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை பிணை யில் விடுவிக்கப்பட்ட டி.ஈ.ஏ.ஜெயக் குமார் என்ற இளைஞரே இவ்வாறு வீதியில் விரட்டப்பட்டு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். இவரை வீதியில் விரட்டிச் சென்ற கும்பலில் 10இற்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட வர்கள் தெரிவித்தனர்.இளைஞன் இராணுவக் காவல ரணில் தஞ்சமடைந்ததை அடுத்து துரத்திவந்த கும்பல் அவரை வெளியே விடுமாறு கோரி காவலரண் முன்பாகக் கூச்சலிட்டுள்ளது.~~அவர்கள் கூச்சலிட்டதைக் கண்ட அந்த இளைஞர் தன்னை அவர்களி டம் ஒப்படைக்கவேண்டாம் என இராணு வத்திடம் கெஞ்சி மன்றாடினார். இராணு வம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி யதால் அந்தக் கும்பல் காவலரணுக் குள் நுழையாமல் பின்வாங்கி நின் றது||- என்றார் சம்பவம் முழுவதையும் நேரில் பார்த்த ஒருவர்.சிறிது நேரத்தில் சம்பவ இடத் துக்கு வந்த பொலீஸார் அங்கு கூடியிருந் தவர்களை கலைந்து போகச் செய் தனர்.அவர்களில் இரு இளைஞர்க ளைக் கடுமையாக எச்சரிக்கை செய் தனர். பொலீஸார் சம்பவ இடத்துக்கு வரும் முன்னரே இளைஞர் காவலர ணின் பின்புறமாக வெளியேறி தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட் டது. எனினும் பின்னர் யாழ்.பொலீஸ் நிலையத்துக்கு வந்த அவர் தான் கும் பலால் தாக்கப்பட்டது குறித்து முறைப் பாடு செய்துள்ளார்.யாழ்.நீதிமன்றத்தில் இந்த இளை ஞருக்கு எதிராக ஏற்கனவே சில முறைப்பாடுகள் உள்ளன. இதில் ஒரு முறைப்பாடு தொடர்பாக இவர் யாழ். சிறைச்சாலையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறைச்சாலை அதிகாரிகளால் தான் தாக்கப்பட்டதாக அவர் மனித உரிமை கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் செய்திருந்தார். அது தொடர் பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.இதற்கிடையில் - கடந்த திங்கட்கிழமை இரவு கோயில் வீதியில் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் அலுவலகத் துக்கும் சமீபமாக இளைஞர் குழு ஒன்று சில வீடுகளைத் தாக்கி சேதப்படுத்தியதில் இந்த இளை ஞரது வீடும் அடங்கியுள்ளது என் பதும் குறிப்பிடத்தக்கது. www.uthayan.com - Guest - 09-06-2003 இன்னும் கொஞ்சக்காலம்தான் ஆட்டம் பாட்டம் எல்லாம்... |