![]() |
|
நண்பர் சரிஷீற்காய் ஒரு வாழ்த்து - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நண்பர் சரிஷீற்காய் ஒரு வாழ்த்து (/showthread.php?tid=8160) |
நண்பர் சரிஷீற்காய் ஒர - Paranee - 09-07-2003 நண்பர் சரிஷீற்காய் ஒரு வாழ்த்து கண்மணிக்குள் ஓரு காதல் 28வது அங்கம் கழிந்து 29ற்குள் வெற்றிகரமாக நுழைந்துகொண்டிருக்கினறது. ஓன்றிலிருந்து இருபத்துஎடடுவரை விறுவிறுப்புடன் மனதைவருடிய வார்த்தைகள் கோர்த்து அழித்து வந்த அன்பு நண்பன் சாPஷிற்கு எனது வாழ்த்துக்கள். நன்றி..! - sharish - 09-08-2003 காதலுக்காய்... பெண்மையின் கண்மைதொட்டு உண்மையில் என் இதயம் தொட்ட கவிகள் பல வரைந்து... வானம்பாடியாய் பாடித்திரியும் கரவை பரணி.... ''கண்மணிக்குள் ஒரு காதலுக்காய்'' வாழ்துச்செய்திகொண்டு வாயார வாழ்திவிட வந்ததற்கு ஒரு நன்றி..! -------------------------- ""கண்மணிக்குள் ஒரு காதல்..."" இது....வெறும் கற்பனைக்கதையல்ல... என் கண்ணுக்குள் கருத்தரித்துப் பிறந்த ஒரு உயிர்ஓவியம்...! சிறுவயதில் நான் கண்களால் கண்ட வேதனைமிக்க காட்சிகள் என் இதயத்தை எரித்துவிட்ட இரத்தக்கறைபடிந்த கண்ணீர்த்துளிகள் என்னை அழவைத்த கொலைகளுக்கிடையிலான கொடிய அழுகுரல்கள் இப்பொழுதும் என் ஆண்மா எங்கும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நினைக்கின்ற போதெல்லாம் வலிக்கின்ற காயங்களாக அன்றிலிருந்து என் மனதுக்குள்... அவலங்களும் அழுகுரல்கள் ஒன்றுசேர்ந்து உருவான தீப்பிளம்பாய் குமுறிக்கொண்டிருந்தது...! ஓயாது தொடர்ந்து எரிந்துகெண்டிருக்கும் இந்த தீப்பிளம்பை எப்படி அணைப்பது...??? இல்லை.... இதை அணைக்க முடியாது....!?!? அதனால்தான் அந்தத் தீ... எரிமலையாய் வெடித்து என் எழுதுகோல்வழி வெளியேறி.... ''கண்மணிக்குள் ஒரு காதல்'' என்னும் பெயரோடு உங்கள் முன் பயணிக்கத்தொடங்கிவிட்டது....! த.சரீஷ் 08.09.2003 (பாரீஸ்) |