![]() |
|
நில்லாமல் வா நிலாவே...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நில்லாமல் வா நிலாவே...! (/showthread.php?tid=8143) |
நில்லாமல் வா நிலாவே...! - sharish - 09-12-2003 வணக்கம் அன்புக்குரியவர்களே... ஒரு புதிய முயற்சியோடு மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றேன் கடந்த ஒரு சில நாட்களாக என்னை உறங்கவிடாமல் உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு சிந்தனைக்கு... என் கண்ணெதிரே சிறு அரும்பாக துளிர்விடும் ஒரு காதல் (க)விதைக்கு.... மொழிவடிவம் கொடுக்கத் துடித்தேன்..! அதுதான் இந்த '''நில்லாமல் வா நிலாவே...!"""" இது ஒன்றும் """கண்மணிக்குள் ஒரு காதல்""" போல்... என் கிராமத்தின் ஒரு காலகட்ட சுயசரிதையோ... அல்லது ஒரு காலத்தின் பதிவோ அல்ல இது ஒரு... காதல் கல்வெட்டு...! இந்த உலகத்தை இன்னும் உயிரோடு வைத்திருக்கும் காரணிகளில் காதலும் ஒன்று இதோ..... அந்த உயிர்கொடுக்கும் மிகநீண்ட காதல் நதிக்காக... என்னால் முடிந்த ஒரு மிகச்சிறிய துளி...! இந்தத் தொடர்.... வாரா வாரம்தான் வரும் என்ற வரையறைக்கு உட்பட்டதல்ல இதன் அடுத்தடுத்த பாகங்கள் நினைத்த நேரத்தில் வரும் அதாவது...... எப்போதெல்லாம் எனக்கு நேரம் கிடைக்கின்றதோ... அப்போதெல்லாம் இந்த நிலவும் வரும் அன்பானவர்களே.... இந்தப் படைப்பிற்கான விமர்சனங்களை உங்களிடமிருந்து எதிர்பாற்கின்றேன் நீங்கள்... பிழையேதும் இருப்பின் அலைபோல் எழுந்து வரலாம் சரியாக திருத்திக்கொள்ளவும் அழகாக செதுக்கிக் கொள்ளவும் நான் சம்மதம். என்றும் அன்புடன்.... த.சரீஷ் ---------------------- <b><span style='font-size:25pt;line-height:100%'> நில்லாமல் வா நிலாவே...!</span> [b]<i>பகுதி-01</i></b> யார் அவள்...? யோரோ ஒரு காந்தக்கண் தேவதை என் கண்ணெதிரே வந்து வண்ணமுகம் மலர்த்தி ''வணக்கம்'' என்றுசொல்லி கண்சிமிட்டிப் பார்த்து கைகலுக்கிப்பேசுகிறாள்...!!? அவள் உதடுகளின் அழகும்... அசைவும்... என் உயிரை ஒருமுறை உலுக்கி... உரசியது விழிகளின் அற்புத நடனம் மனதை நனைத்து... ஈரமாக்கியது வட்டநிலா முகம் நனைந்த மனதில் அலைபோல் வந்து அடிக்கடி மோதிச் சென்றது யார் அவள்...??? அறிந்துகொள்ளுமுன்னமே அவசரமாய் கண்முளித்தேன்...!!! ஓ..... இது கனவா...? அவள்... கனவிலே வந்த கறுப்பு நிலவா...? ம்........ இன்றைய இரவு கனவோடும் நிலவோடும் முடிந்தது...! ஏன் இன்றுமட்டும் விரைவில் விடிந்தது..? ஏன் என் கனவு இடையில் கலைந்தது..? எரிச்சலுடன்... விடியலைப்பார்க்க விரும்பாதவனாய்.... கடிகாரம் பார்த்தேன் அ...ய்....யோ.......... ஏழு மணியாச்சு..! சொல்லிக்கொண்டே குளியலறைக்கு ஓடினேன் இன்று எனக்கு புதிய வகுப்பு ஆரம்பம் ஆசிரியர் புதியவர் சில மாணவர்கள் புதியவர்கள் புதிய அனுபவம் என்பதனால்... ஆறுமணிக்கே ""அலாரம்"" வச்சு ஆசையோடு பள்ளிசெல்ல திட்டமிட்டிருந்தேன் ஆனால்... முன்னறிவித்தலின்றி திடீரென்று வரும் மழைபோல்... திடீரென்று வந்த கனவு... தந்த மயக்கத்தால் நிலவு... சொன்ன வணக்கத்தால் காலை விடிந்ததே தெரியாமலா..? பதறியடிச்சு அவசரமாய்த் தயாராகி தாமதமாக வகுப்பறைக்குச் சென்று கதவைத் தட்டிக்கொண்டே உள்ளே நுளைந்து முதலில்... வணக்கம் என்பதற்குப் பதிலாக மன்னியுங்கள் என்று சொல்ல... ஒரு வினாடி எல்லோர் முகங்களும் என்பக்கம் திரும்பியது அவசரமாய்ப்போய்... ஆசனத்தில் அமர்ந்தபடி சக மாணவர்களை கடைக்கண்ணால் ஒரு சுற்றுச் சுற்றி வந்தேன் சிலர் ஏற்கனவே தெரிந்த முகங்கள் சிலர் என் நண்பர்கள் பலர் தெரியாத புதிய முகங்கள் ஆவலோடு சுழன்றுகொண்டிருந்த என் கண்கள் அசையாமல் அப்படியே நின்றது...! இது என்ன அச்சரியம்...? ஆனால் உண்மை புதியவர்கள் பட்டியலில் அதோ... கனவில் வந்த கறுப்பு நிலா...!!! இதோ.... பகலில் வந்த புது நிலவாய் நினைவில்தான்..... நம்புங்கள் நிஜமாய் என்... கண்எதிரே...!!! (நிலவு வரும்...) த.சரீஷ் 11.09.2003 (பாரீஸ்) - Paranee - 09-13-2003 வாழ்த்துக்கள் நண்பா தொடரட்டும் உங்கள் நிலவுடனான கனவுக் காதல் (கறுப்பை வெறுக்கும் இளைஞர் மத்தியில் கறுப்புநிலவுடன் காதல் செய்ய துடிக்கும் என் நண்பனிற்கு எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்) எனக்கு பிடித்த நிலவு அது உங்களிற்கும் பிடிக்கின்றதே (கறுப்புநிலவு) - nalayiny - 09-14-2003 கனவே கற்பனையோ நிசமோ அல்லது உங்கள் உணர்வுகளோ எதுவாக இருந்தாலும் படிப்பவரை கவிதைகளோடு ஒன்றிக்க செய்து சில நிடங்களாவது மௌனிக்க வைப்பது தான் ஓர் கவிஞனுக்கு அழகு. தொடருங்கள். |