![]() |
|
விபரம் சொல்லுங்கோ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: விபரம் சொல்லுங்கோ (/showthread.php?tid=8095) |
விபரம் சொல்லுங்கோ - ampalathar - 09-24-2003 விபரம் சொல்லுங்கோ ஆலமரமாய் நின்று தாயகத்தில் அல்லலுறும் எம் தொப்புள்கொடி உறவுகளுக்கெல்லாம் ஆறுதல் தந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகம் எனும் விருட்சம். புலம்பெயர் நாடுகளில் நடத்திவந்த கலை நிகழ்வுகளை நிறுத்திக்கொள்வது ..................... செயல்பாடுகளில் பல மாற்றங்களைச் செய்வது எனத் தனது வேலைத்திட்டங்கள் பலவற்றைக் குறைத்துக் கொள்ள இருப்பதாக அறிய முடிகிறது. மக்களிடமிருந்த தன்னை விலக்கிக் கொள்ளும் இந்த நகர்வுகள் தேவைதானா? நம்ம வீடுகளிலெல்லாம் ஒருபிள்ளைக்கு அப்பாவைப் பிடிக்கும் மற்றொன்று அம்மாச் செல்லமாக இருக்கும். அம்மாவுக்கு மகன்மேல் பாசம் ஜாஸ்த்தியாக இருக்கும் அப்பாவுக்கோ மகளிற் பிரியமாக இருக்கும். அதுபோலப் பலருக்கு விடுதலைப் போரில் பற்றிருக்கும் பங்களிப்பர். சிலருக்கு புனர்வாழ்வில் அக்கறை அதிகமிருக்கும். நமது படை வெல்ல வேண்டும் அதில் யாருக்கும் மறுகருத்திருக்காது. சுரியனை என்றும் நிலவு மறைக்காது. பயமெதற்கு இடரில் எம்மோடு தோளுடன் தோளாய் நின்ற நீங்கள் சுரியனுக்கு ஒளியேற்ற ஒளிந்துகொள்ள வேண்டாம். நீவிர் இருவரும் நம் இருகண்கள். தொடரட்டும் உம் பணிகள் இது தொடர்பா விசயம் தெரிந்த முனாக்கள் விசயத்தைச் சொல்லுங்கோ. விபரம் தெரியாத சாதாக்களும் உங்கட கருத்துக்களைச் சொல்லுங்கோ கேப்பம். ஊதுறது நம்ம வேலை ஊதுவம் கேக்கிறவங்களுக்குக் கேட்டா நல்லது. நேசமுடன் அம்பலத்தார் - shanmuhi - 09-24-2003 "ஆலமரமாய் நின்று தாயகத்தில் அல்லலுறும் எம் தொப்புள்கொடி உறவுகளுக்கெல்லாம் ஆறுதல் தந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகம் எனும் விருட்சம். புலம்பெயர் நாடுகளில் நடத்திவந்த கலை நிகழ்வுகளை நிறுத்திக்கொள்வது ..................... செயல்பாடுகளில் பல மாற்றங்களைச் செய்வது எனத் தனது வேலைத்திட்டங்கள் பலவற்றைக் குறைத்துக் கொள்ள இருப்பதாக அறிய முடிகிறது. " வேதனைபட வேண்டிய விடயம் தான். மீண்டும் புனர் வாழ்வுக்கழகம் தன் பணிகளை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதே என் ஆசை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> shanmuhi - yarl - 09-24-2003 இதில் வேதனைப்பட என்னவிருக்கிறது..சரியான முடிவுதான்... - shanthy - 09-25-2003 யாழ்/yarl Wrote:இதில் வேதனைப்பட என்னவிருக்கிறது..சரியான முடிவுதான்... hock: :?:
- shanmuhi - 09-25-2003 எந்த ஒரு நாட்டிலும் புனர் வாழ்வுக்கழகம் என்ற ஒன்று இயங்க வேண்டும். அது உள்நாட்டவர்களையும், வெளிநாட்டவர்களையும் இணைக்கும் பாலமாக அமைய வேண்டும் நாம் உதவிசெய்யும் மனப்பான்மையில் இருப்போமேயானால்தான் அதன் செயற்பாடுகள் அங்கு ....எமது தமிழீழத்தில் வெற்றியுடன் வழிநடத்திச் செல்லக்கூடியதாக இருக்கும். இன்று இஸ்ரேல் நாட்டை உற்று நோக்குவோமேயானால் அன்று...வெளிநாட்டு யுூதர்கள் தங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பலவழிகளிலும் உதவி செய்தார்கள். இன்று அந்த நாடு சுபிட்சமுள்ள நாடாக விளங்குகின்றது. நாமும் எமது தமிழீழத்தை பரந்த அளவில் அபிவிருத்தி செய்வதற்கு புனர் வாழ்வுக் கழகம் ஊடாக எமது பங்களிப்பை செலுத்தலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> shanmuhi - yarl - 09-25-2003 புனர்வாழ்வுக்கழகம் புலத்தில் இயங்காமல் விடுகிறது என செய்தி இல்லையே??? - ampalathar - 09-25-2003 அப்படிச் சொல்லுங்கோ சண்முகி. நாடு என்பது ஒரு ஆலமரம்போல அதுக்குப் பல விழுதுகளும் தேவை. இல்லாவிடின் எதற்கு ஒவ்வொரு நாடும் அரசாட்சுவதற்கு தனித்தனியே பல அமைச்சுக்களை வைத்திருக்கின்றன. ஒரு அமைச்சே போதுமே. அது போக பல்வேறு நிர்வாக அலகுகளும் தேவை இல்லையெனில் எதற்கு தலைவர் இப்பொழுது தமிழீழக்காவல்படைத் தலைமைப்பணிமனை அமைப்பது.... போன்ற செயல்திட்டங்கள் மூலம் பல் வேறு நிர்வாக அலகுகளைப் பலப்படுத்த முனைகிறார்? நேசமுடன் அம்பலத்தார் - ampalathar - 09-25-2003 புனர்வாழ்வுக்கழகம் புலத்தில் இயங்காது எனச் சொல்லப்படவில்லைத்தான். ஆனால் அது ஈழத்தில் இயங்குவதற்கு வேண்டிய நிதி வழங்கலைச் செய்பவர்கள் புலம்பெயர் தமழராகிய நாங்கள்தான். இன்றுவரை எந்தவொரு நாடாவது அபிவிருத்திக்கான நிதியுதவியை நேரடியாக எம்மவரிடம் கொடுக்கத் தொடங்கிவழட்டார்களா என்ன?சுவரிருந்தால்தான் சித்திரம் மறக்காட்டில் சரிதான். அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதையள் நிறைய இருக்கு தெரியும்தானே? - ganesh - 10-01-2003 படியுங்கள் சிந்தியுங்கள் செயற்படுங்கள் http://www.tamilworldnews.com/Thirumahal150903.htm - tamilchellam - 10-01-2003 சரியான நேரத்தில் தகவலைத் தந்தமைக்கு நன்றிகள் பல. தமிழ்செல்லம். - ampalathar - 10-03-2003 நாங்கள் எவ்வளவு பெரிய உதவியள் செய்தவர்களையும் சீக்கிரமே மறக்கிறதிலை வலு விண்ணர். திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களை அரசியல் ஆலோசகர், அரசியல் மதியுரைஞர் அப்பிடி இப்பிடி எண்டெல்லாம் வாய்க்குவாய் புகழ்ந்து உரைத்தம், தமிழ் ஊடகங்களெல்லாம் தினமும் அவரது புராணம் பாடின. மேடைக்கு மேடை முளங்கினம். கொஞ்ச நாளுக்குமுன் உடல்நலம் சரியில்லாததால் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றமாட்டார் என்று அறிந்தம். இந்த இடைப்பட்ட கொஞ்சக்காலத்துக்குள் அவரை மறந்திட்டம்? மறக்கடிச்சிட்டம்? விபரம் தெரிஞ்சவை சொல்லுங்கோ? - Mathivathanan - 10-03-2003 Ampalathar Wrote:நாங்கள் எவ்வளவு பெரிய உதவியள் செய்தவர்களையும் சீக்கிரமே மறக்கிறதிலை வலு விண்ணர். திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களை அரசியல் ஆலோசகர், அரசியல் மதியுரைஞர் அப்பிடி இப்பிடி எண்டெல்லாம் வாய்க்குவாய் புகழ்ந்து உரைத்தம், தமிழ் ஊடகங்களெல்லாம் தினமும் அவரது புராணம் பாடின. மேடைக்கு மேடை முளங்கினம். கொஞ்ச நாளுக்குமுன் உடல்நலம் சரியில்லாததால் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றமாட்டார் என்று அறிந்தம். இந்த இடைப்பட்ட கொஞ்சக்காலத்துக்குள் அவரை மறந்திட்டம்? மறக்கடிச்சிட்டம்? விபரம் தெரிஞ்சவை சொல்லுங்கோ?எக்கணம் செல்லம்மா வந்து பேசப்போறா.. தேவையில்லாமல் கிண்டுறியளெண்டு பேசாமலிருங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarl - 10-03-2003 ஊடகங்கள் மறந்தாலும் நாங்கள் தமிழ்மக்கள் மறக்கமாட்டோம் . - ampalathar - 10-03-2003 செல்லம்மா வீட்டிலை இல்லாத நேரங்களிலைதானே இந்தமாதிரி வெளிவிகாரங்கிளைக் கவனிக்கிறனான் |