![]() |
|
உதவி கிடைக்குமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: உதவி கிடைக்குமா? (/showthread.php?tid=8091) |
உதவி கிடைக்குமா? - PATCHI - 09-24-2003 சிறு கதையை களத்தில் இணைப்பது எப்படி? வழி காட்டுங்கள் உரியவர்கள். தமிழின்பம் தனியின்பம் படைப்போம் ரசிப்போம் - வலைஞன் - 09-24-2003 மகிழ்ச்சி பட்சி. யாழ் கருத்துக்களத்தில் சிறுகதை இணைப்பதற்கான பிரிவு இல்லை. காரணம் யாழ் இணையம் அதற்கென்று தனிப் பகுதியை உடையது. யாழ் முற்றம் என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில் "ஈழம், கவிதை, கட்டுரை, சிறுகதை, அறிவியல், ஏனையவை" என ஆறு பிரிவுகள் உள்ளன. இதனை நீங்கள் யாழ் இணையத்தின் முதற்பக்கம், அல்லது முகப்பில் காணலாம். இங்கு உங்கள் சிறுகதையை இணைக்க வேண்டுமாயின், பொறுப்பாளர் மோகன் அவர்களுடன் தனிப்பட்ட செய்திச்சேவையின்/Private Message ஊடாகவோ அல்லது அவரது மின்னஞ்சல்/Email முகவரி ஊடாகவோ தொடர்புகொண்டு அனுப்பி வைத்தால் அவர் அதனை நிச்சயமாக இணைப்பார். நன்றி. - PATCHI - 09-24-2003 நன்றி உப பொறுப்பாளரே..நன்றி கடமைக்கு வீரனாய் வந்தாய் தகுந்த நேரத்தில் தகவலைத் தந்தாய் வளர்த்துவிடு வாழ்ந்துவிடு புரிந்துவிடு அறிந்துவிடு இன்பத்தமிழை.... அது கொண்ட இன்பத்தின் விதைகளை.. பாவம் மனிதன் மட்டும்.. இயலாமையால் தவிக்கிறான் .... ஃஃஃஃஃ நன்றிகள் ஃஃஃஃஃஃஃ ஷ்..பட்சி சென்றிடுச்சு..பட்சி சென்றிடுச்சு.. - இளைஞன் - 09-24-2003 கவிதை மழை பொழிகிறது அதன் ஒவ்வொரு வரியிலும் உட்பொருள் தெரிகிறதே கம்பனின் தோட்டத்துப் பறவை இதோ இணையத்தில் விரித்திட்ட சிறகுகளோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->உங்கள் சிறுகதையை நாங்கள் யாழ் முற்றத்தில் விரைவில் எதிர்பார்க்கிறோம்... - shanmuhi - 09-24-2003 பட்சியின் சிறுகதையை வாசிக்க ஆவலோடு இருக்கிறேன். வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> shanmuhi - Paranee - 09-25-2003 வாருங்கள் பட்சி தாருங்கள் சுவைமிகு சிறுகதைகள் முற்றத்தில் நானும அமர்ந்திருக்கின்றேன் சிறு அலகால் நீங்கள் வரையப்போகும் சிறுகதையை ரசிப்பதற்கு புசிப்பதற்கு வாழ்த்துக்கள் - PATCHI - 09-29-2003 உள்ளத்து உருகுநிலையில் உண்மையான நன்றிகள் அனைவருக்கும் இந்தக் கூட்டில் உயிரிருக்கும் வரை இனியாரையும் இன்னலாரையும் இன்முகத்துடன் நினைவில் நிறுத்தி இன்புறுவோம்.... கூட்டிலிருந்து காற்று பிரிந்தால் கண்டதெல்லாம் மாயையாகிடும்.. காண்பதையே இனிமையென்றால் கொண்டதெல்லாம் இன்பமாகிடும் வாழும் வரை வாழ்ந்து நிற்போம் தமிழிற்காய் இணைந்திடுவோம் கதையது அவர் வசம் கிடைத்திருக்கும் இன்றுக்கு முன் தினம் நேரமது கிடைக்கும்.. அது போது.. அவர் அதை இணைத்திடும்.. காலைமதை - எண்ணியே அனைவரும் காத்திருப்போம்! இனித்திடும் இன்பமே - தமிழின்பம் இனித்திடச் சுவைப்போம் இதமாக ரசிப்போம் ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்.. - inian - 09-30-2003 பட்சி அவர்களே .. அருமையாகக் கவிதை எழுதுகிறீர்கள் ... நன்றி.... - vasisutha - 03-12-2004 முற்றத்தில் மட்டும் தான் கதைகள் எழுதவேண்டுமா? களத்தில் எழுதக்கூடாதா? :?: - sOliyAn - 03-12-2004 ÓüÈò¾¢Ä §¸Ùí¸û! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shanmuhi - 03-12-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->முற்றத்தில் மட்டும் தான் கதைகள் எழுதவேண்டுமா? களத்தில் எழுதக்கூடாதா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> முற்றத்தில்தானே கதைகள் இடமபெறுகின்றன... களம் அனுபதித்தால் சின்ன சின்ன கதைகள் இடம்பெறலாம் இடம்பெறாமலும் இருக்கலாம். எது எப்படியாகிலும் இருக்கட்டும். தங்கள் சிறுகதையை வாசிக்க ஆவல். advance வாழ்த்துக்கள்... - Mathan - 03-13-2004 பட்சி நல்ல கவிதைகள். நீங்க கவிதை பக்கத்துல இன்னும் கொஞ்சம் எழுதினா என்ன? - sivajini - 03-13-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - sOliyAn - 03-13-2004 செப்ரெம்பர்ல எழுதின கவிதையைப்பற்றி இப்ப பேசுறாங்க, சிவாஜினி! - Mathan - 03-13-2004 இப்பதான் பார்த்தேன் சோழியான் - ganesh - 06-06-2004 படங்களை சரியானமுறையில் இணைப்பது எப்படி? உதவிசெய்யுங்கள் - kuruvikal - 06-06-2004 பாவம் இவர் கணேசுக்கு கணணி விற்பன்னர்கள் கொஞ்சம் உதவி செய்யுங்களேன்....தாத்தா கேட்டா விழுந்து விழுந்து செய்யுறியள்....இவருக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கோவன்....! :wink: பொறுத்திருங்கள் கணோஷ் உதவி கிடைக்கும்....அதுபோக ஐரோப்பாக் கிண்ண கால்பந்தாட்டம் முடிவுகளை உடனுக்குடன் யாழ் களத்தில் தர மறக்க வேண்டாம்...உங்களை நம்பித்தான் இருக்கின்றோம்....! - Mathan - 06-07-2004 படம் ஏற்கனவே இணையத்தில் இருந்தால் கீழே உள்ள கட்டளையை உபயோகித்து படத்தை இணைக்கலாம். [b][img]படத்தின் இணைய முகவரி இணையத்தில் இல்லாத படங்களை களத்திற்கு Upload செய்து இணைக்கும்போது படங்கள் சரியாக தெரிவதில்லை. படங்கள் நேரடியாக யாழ் களத்தில் பதிவு செய்துவைத்து கருத்துக்களுடன் இணைக்க ஏதாவது வழி இருக்கின்றதா? வசி அந்த முக்கனி படங்களை எப்படி இணைத்தீர்கள்? - Eelavan - 06-07-2004 முதலில் படத்தை Upload செய்யுங்கள்(இதற்கு மறுமொழிப்பெட்டியில் ஏதாவது எழுதியிருக்கவேண்டும்) படம் Upload ஆன பின்னர் தெரியும் மறுமொழி Window இல் Upload பண்ணப்பட்ட File நீல நிற எழுத்துகக்ளில் தெரியும் அதனைக் Click பண்ணினால் புதியதொரு பக்கம் Open செய்யப்படும் அப்பக்கத்தின் முகவரியை Copy பண்ணிக்கொள்ளவும் மீண்டும் Back Button ஐ உபயோகித்து திரும்பவும் மறுமொழிப்பெட்டிக்கு வரவும் மறுமொழிப்பெட்டியில் Copy செய்ததை Paste பண்ணி பின்னர் BBC சொன்னது போன்று IMG Command கொடுக்கவும் - ganesh - 06-07-2004 நன்றி முயற்சிசெய்து பார்க்கின்றேன் |