![]() |
|
இறுதிச்சடங்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: இறுதிச்சடங்கு (/showthread.php?tid=804) |
இறுதிச்சடங்கு - Shankarlaal - 02-18-2006 <b>இறுதிச்சடங்கு</b> எல்லா கடிகாரங்களையும் நிறுத்துங்கள் தொலைபேசியைத் துண்டியுங்கள் எலும்புத்துண்டுடன் கத்தும் நாயை அடக்குங்கள் பியானோவையும், தப்லாவையும் அமைதியாக்குங்கள் சவப்பெட்டியைக் கொண்டுவாருங்கள் அஞ்சலி செலுத்துபவர்கள் வரட்டும். விமானம் தலைக்குமேல் ஆகாயத்தில் சுற்றியப்படி அவரின் மரணச் செய்தியைப் பரப்பட்டும் அன்புள்ளம் கொண்டோரின் வெண்கழுத்தில் மென் துணியை அணிவியுங்கள் போக்குவரத்துக் காவலரை கருப்பு கையுறை அணியச் செய்யுங்கள் அவன் தான் எனக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் எல்லா திசைகளும் என் வேலையின் வாரமும், எனது ஓய்வின் ஞாயிறும். என் பகல், என் நடு இரவு, என் பேச்சு, என் பாடல்… அனைத்தும் அவன் தான் நான் நினைத்தேன் இந்த அன்பு காலத்தையும் கடந்து நிற்கும் என்று. அது தவறு. நட்சத்திரங்கள் இப்போது தேவையில்லை. எல்லாவற்றையும் வெளியேற்றிவிடு நிலவை மூடி, சூரியனைப் பிரித்துப் போடு கடலை தூரத்தில் கொட்டி, காட்டை துடைத்து ஒதுக்கி விடு இனி எப்பொழுதும் எதுவும் எந்த நல்லதையும் செய்துவிட முடியாது Translation from W. H. Aude's Funeral Blues (Thanks to Jagan) |