Yarl Forum
கவிதைகள். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கவிதைகள். (/showthread.php?tid=8028)



கவிதைகள். - nalayiny - 10-06-2003

1)முகத்திரை விலக்கு.
மனசை திற.
வானம் அகல நடைபோடு
உலகம் உனக்குள்.

2)களைப்பைக்காட்டும்
மூச்சை வெறு
உடல் எடை குறை.
துள்ளித்திரி
நோயில்லா வாழ்வு.

3)தலையில் காக்கா எச்சம்.
தற்செயல் நிகழ்வு.
தடை தாண்டு.

4)விழிகளைத் திற
இயற்கையுள் இறங்கு.
இன்பம் உனக்குள்.

5)மழையில் நனை.
வழிநீர் கரை.
புதிதாய்ப் பிற.

6)பாதம் எண்ணி நடைபோடு
பாதகம் கழை
புதுமை செய்.

7)தனித்திரு.
அசை போடு
விழித் தெழு.
வீரம் விதை.

8)உனக்கள் இறங்கு.
களை புடுங்கு.
உன்னை உழு
மூத்தோர் சிந்தனை விதை.
அறுவடைக்குத் தயாராகு.

9)பணிந்து நில்.
துணிந்து செல்
வீராங்கனை உனக்குள்.

10)கருவாசம் கொள்
தாய்மை உணர்.
சிசுக்கொலை முற்றுப்புள்ளி.

11)குழந்தைகளை நேசி.
குதாகலம் கொள்.
மூப்பைத்தள்ளிப்போடு.

12)முழுநிலா பாhர்.
தேய் பிறை மற.
பிரகாசமாய் வளர்.

13)சிந்தனை வளர்
செயல் கொள்.
உன்னத வாழ்வு.

14)மழைத்துளி விழிசேர்.
புதிய உணர்வுகள்
உடல் சேர்.

15)காதல் இதயம்
அன்பு மனசு
உடற் கூறுகள்
உணர்வுகள்
பிரித்தறி.
பிதற்றல் வேண்டாம்.

16)கற்பனை செய்
கனவு காண்
உண்மை உணர்.

17)தடை உடை
தழும்பு சேர்.
அடடே புரட்சி.

18)விதி விடு.
ஊக்கம் கொள்.
உயர்வு நிச்சயம்.

19)அன்பைப் பெருக்கு.
ஆழ விதை.
ஆதாயம் வேண்டாம்:

20)பொறாமை கொள்
பொசுங்கிப்போகாதே.
போட்டெரி.

21))வாழ்க்கை ஒரு முறை
வாழ்ந்து பார்.
விழ்ந்து விடாதே.

22)எல்லை தகர்
அறிவால் வேலியிடு.
போர் இல்லை.

23)சுட்டெரிக்கும்
சுூரியன் வெறு
சுடராய் மிளிர்.

ஆக்கம் நளாயினி தாமரைச்செல்வன்.
24-9-2003


Re: கவிதைகள். - AJeevan - 10-06-2003

nalayiny Wrote:<span style='font-size:22pt;line-height:100%'>விழிகளைத் திற
இயற்கையுள் இறங்கு.
இன்பம் உனக்குள்.

குழந்தைகளை நேசி.
குதுாகலம் கொள்.
மூப்பைத்தள்ளிப்போடு.

கற்பனை செய்
கனவு காண்
உண்மை உணர்.

அன்பைப் பெருக்கு.
ஆழ விதை.
ஆதாயம் வேண்டாம்:

வாழ்க்கை ஒரு முறை
வாழ்ந்து பார்.
விழ்ந்து விடாதே.</span>

ஆக்கம் நளாயினி தாமரைச்செல்வன்.
24-9-2003

அருமையான வரிகள்
வாழ்த்துகள்..........

அஜீவன்


- Paranee - 10-07-2003

புரட்சிக்கவிதைகள் இங்கு புூவாய் வீழ்ந்துள்ளன. வாழ்த்துக்கள நளாயினிஅக்கா !

இன்னமும் தாருங்கள்.


- sOliyAn - 10-07-2003

உற்சாகமூட்டும் வரிகள்.. சோர்வுக்குப் பகையான கருத்துக்கள்.. நீண்ட காலத்துக்குப்பிறகு ஆத்திசூடி கொன்றைவேந்தன்மாதிரி.. இதுவும் ஒரு 'எழுச்சிச்சூடி'. வாழ்த்துக்கள் நளா!


- nalayiny - 10-07-2003

நன்றி நன்றி.


- AJeevan - 10-07-2003

nalayiny Wrote:நன்றி நன்றி.

ஒரு கவிதையிலேயே அனைவரையும் கவர்ந்து விட்டீர்களே................
இப்படியே தொடருங்கள்.
மக்கள் கவியாகலாம்.
வாழ்த்துகள்.....................

அஜீவன்


- P.S.Seelan - 10-08-2003

கவிதைகள் மலர்களாகட்டும். கொதித்துப் போயுள்ள உள்ளங்களுக்கு தென்றலாய் வீசட்டும். அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள்.

அன்புடன்
சீலன்


- vaiyapuri - 10-08-2003

நளாயினியின் கவிதைத் திறன் என்பது அவர் கூடப்பிறந்த கவசம்.

இந்தக் கவசம் தான் நளாயினியை நளாயினியாய் இன்னும் வாழ வைக்கிறது என்பதாக என் உள் மனது சொல்கிறது.

மென்மேலும் நுன்
கவிகண்டு மனமகிழ
ஆவலுடன் .... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sOliyAn - 10-09-2003

கவிதையா? தாமரையா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- nalayiny - 10-09-2003

அனைவரது விமர்சனங்களிற்கும் நன்றி. கவிதைகளின் சரி பிழைகளையும் சுட்டிக்காட்டுங்கள்.


இதோ மீண்டும் சில எழுச்சிச்சுூடிகள்.
______________________________________
24)
மனிதருள் இறங்கு
மிரட்சி வேண்டாம்.
இயல்பறி.
25)
புரட்சி விதை சேகரி
உன்னுள் விதை.
விருட்சமாய் எழு.
26)
இயலாமை என்பது
சோர்வின் அறிகுறி.
துடைத்தெறி.
27)
அழுதது போதும்
உன்னை எழுது.
உயர்வாய் உணர்வாய்.
28)
சிந்தனை கொள்
சிறை உடை.
நீயாய் வாழ்.
29)
உணர்வுகளை மெல்லாதே.
உரத்துச்சொல்லு.
நீண்ட ஆயுள்.
30)
தவறு விடுவது மனித இயல்பு.
திருந்திக் கொள்வது
உயரிய பண்பு.
31)
ஆண் பெண்
அடிமை விலங்கு
நேயமாய் வாழ்.
32)
இறந்த காலம் எதிர்காலம்
புதை புதை.
கிடைத்த பொழுதை
இன்பமாய் ஆக்கு.
33)
எள்ளி நகையாடாதே.
உனக்கு நீயே
குழிதோண்டிக்கொள்கின்றாய்.
34)
சத்தியம் எதற்கு?
சபதங்கள் எதற்கு?
வீணான சற்சைகள்
அமைதியை கெடுக்கும்.
35)
மற்றோர் திறமையை
மதிக்கக் கற்றுக்கொள்.
உனது திறமையை
உலகம் உணரும்.

ஆக்கம்
நளாயினி தாமரைச்செல்வன்.
8-10-2003


- Paranee - 10-09-2003

ஆகா
காதல் கவிஞர் புரட்சிக்கவிஞராக மாறுகின்றாரே
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்

இன்னமும் படையுங்கள்


- sOliyAn - 10-09-2003

உண்மையிலேயே நன்றாக உள்ளது. ஒரு புத்தகமாக்கும் அளவுக்கு எழுதுங்கள்.. அவற்றை ஒரு புத்தகமாக உருவாக்குங்கள். வாழ்த்துக்கள்.


- shanthy - 10-10-2003

நளாயினி வாழ்த்துக்கள்.
கொத்தாய்த்தர வழியில்லை இதோ ஒரு மொட்டு பெற்றுக்கொள் தோழி.

'ஈரடிக்குறள் தந்த வள்ளுவத்தின்
குறள்வரிக்கு நிகராக
கவிச்செல்வி நளாயினியின்
கவிச்சொற்கள் அத்தனையும் கடுகு
எனினும் கனல் எழுந்து சுடுகிறது.
எத்துறையாயினும் எழும் இவள் பேனா
எவர்க்கும் துயரென்றால்
எழுதும் இவள் பேனா
அத்தகை ஈரம் மிக்க
அனல் இவள் கவி
ஆழட்டும் கவியுலகை."

Quote:என்னைக்கவர்ந்த வரிகள் இவை.

தடை உடை
தழும்பு சேர்.
அடடே புரட்சி.

அன்பைப் பெருக்கு.
ஆழ விதை.
ஆதாயம் வேண்டாம்

எல்லை தகர்
அறிவால் வேலியிடு.
போர் இல்லை.
4)விழிகளைத் திற
இயற்கையுள் இறங்கு.
இன்பம் உனக்குள்.

5)மழையில் நனை.
வழிநீர் கரை.
புதிதாய்ப் பிற.



- ampalathar - 10-10-2003

சட்டென்று உச்சிவரை ஊடுருவும் வார்த்தைகள். அதுசரி நீங்களெல்லாம் உங்கட திறமையளை இவ்வளவு நாளா எங்கை ஒழித்துவச்சிருந்தனிங்கள். இப்ப கொஞ்ச நாளதாத்தான் ஆளாளுக்கு அவிழ்த்துவிடுகிறியள்.


- KULAKADDAN - 09-25-2005

இவருடைய தற்போதைய வலைப்பூ உங்கள் பார்வைக்கு


http://nalayinykavithikal.blogspot.com/


- Rasikai - 09-26-2005

தகவலுக்கு நன்றி குளம்


- ப்ரியசகி - 09-26-2005

வாவ் சூப்பர் கவிதைகள்..தொடருங்கள்..