Yarl Forum
நிறம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: நிறம் (/showthread.php?tid=8022)



நிறம் - இளைஞன் - 10-07-2003

வணக்கம் நண்பர்களே...

நிறங்கள் பற்றிய தகவல்களை, கருத்துக்களை நாம்
இஙகே பகிர்ந்து கொள்வோம். சமூகம், இயற்கை
என்று அனைத்திலும் நிறம் ஏதாவதொரு பங்கு
வகிக்கிறது.

எனவே நிறம் பற்றிய அறிவியற் தகவல்களையும்,
சமூகம் சார்ந்த கருத்துக்களையும், நிறம் பற்றிய
எதுவாக இருந்தாலும் இங்கே எழுதுங்கள்.

ஒவ்வொருத்தரும் இதில் தங்கள் கருத்துக்களைப்
பதிக்க வேண்டும் என்பது எனது அவா.
நான் சில யோசனைகளை முன் வைக்கிறேன்:

1. நிறங்களின் பெயர்கள்
2. நிறங்களின் பெயரில் உள்ள திரைப்படப் பாடல்கள்
3. கொடிகளில் நிறங்கள் பற்றிய விளக்கம்

இப்படித் தொடருங்கள்...


- sOliyAn - 10-07-2003

சில திரைப்படங்கள்:
பச்சை விளக்கு
வறுமையின் நிறம் சிவப்பு
சிவப்பு மனிதன்
சிவப்பு ரோஜா
நீலமலைத் திருடன்
வெள்ளைரோஜா

வேறு?!! வேறு!!


- vasisutha - 07-21-2004

சிவப்பு, நீலம், மஞ்சள், கறுப்பு, வெள்ளை, பச்சை இந்த நிறங்களில் ஏதாவது ஒரு நிறமாவது நாடுகளின் கொடிகளில் இருக்க வேண்டும் என்று ஒரு விதி உள்ளதாக அறிந்தேன். உண்மைதானா என்று யாராவது அறியத்தாருங்கள்.


- ÀÃ狀¡¾¢ - 07-21-2004

திரைப்படம்:

சிவந்த மண்
வெள்ளை மனம்
கருப்பு ரோஜா


- வெண்ணிலா - 07-24-2004

<b>நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? </b>

<b>சிவப்பு:
சந்தோஷத்தின் அறிகுறி. இந்த நிறத்தை விரும்பி அணிபவர்கள் புதுப்புது விஷயங்களில் ஆர்வமாக இருப்பார்களாம். எந்த விஷயத்தையும் முடியாது என்று ஒதுக்கி வைக்காமல் சவாலாக எடுத்துமுடிப்பார்களாம். சிவப்பு நிறத்தை "danger" என்று சொல்லி வெறுப்பவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது</b>.

<b>பச்சை:
வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர்கள். தற்பெருமையாளர்கள். ஆனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலையேபடாதவர்கள்.</b>


<b>நீலம்:
எந்த விஷயமாக இருந்தாலும் அவர்களே முடிவெடுப்பர். அடுத்தவர் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர். இந்த நிறத்தைப் பிடிக்காதவர்கள் எதிலும் விருப்பம் இல்லாமல் ஏனோதானோ என்ற போக்குடையவர்களாக இருப்பார்கள்.</b>

<b>ஆரஞ்சு:
இவர்கள் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதை அடையும்வரை ஓயமாட்டார்கள். வருமானம், தகுதியை உயர்த்திக் கொள்ளவே விரும்புவார்கள். இதற்காகவே நேரத்தை செலவழிப்பார்கள். இந்த நிறத்தைப் பிடிக்காதவர்களின் எண்ணங்கள் நேர்த்தியாக இருக்கும்.</b>

<b>இளம்பச்சை:
எதையும் தீர ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். மற்றவர்கள் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர்கள். இந்த நிறம் பிடிக்காதவர்கள் எதிலும் விருப்பமில்லாதவர்களாக இருப்பார்கள்.</b>

<b>ரோஸ்:
இவர்கள் செல்லமாக வளர்பவர்கள். அதனால் இவர்களின் வாழ்வில் கவனம் வேண்டும். தான் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். ரோஸ் நிறம் பிடிக்காதவர்கள் அனாவசியமாக நேரத்தையோ, பொருளையோ வீணாக்கமாட்டார்கள். நன்றாக பேசும் அவர்களது பேச்சில் பலன் ஏதும் இருக்காது.</b>

<b>ஊதா:
அமைதியான சுபாவம் உள்ள இவர்கள் வெளிப்படையாக பேசமாட்டார்கள். சிரமமான வேலைகளில் ஈடுபடமாட்டார்கள். சுயமுயற்சியில் வெற்றி பெறுவார்கள். தனக்கு சரிபட்டுவரும் செயல்களில் ஈடுபட்டு வெற்றிபெறுவார்கள்.</b>

சாம்பல் நிறம்:
மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் தனிமையை நாடுபவர்கள். இந்த நிறத்தை விரும்பாதவர்கள் எடுத்த காரியத்திர் வெற்றிபெறும் வரையில் ஓயமாட்டார்கள்.

<b>மஞ்சள்:
இயல்பைவிட அதிகமாக யோசிப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். இந்த நிறம் பிடிக்காதவர்கள் சந்தேக எண்ணம் கொண்டவர்கள்.</b>

<b>கோப்பி கலர்:
இவர்களை யாராவது ஏமாற்றினால் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள். துரோகம் செய்பவர்களை அறவே பிடிக்காது. இந்த நிறம் பிடிக்காதவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை வெளிப்படையாக சொல்வர். சோர்வில்லாமல் உழைப்பவர்கள்.</b>
<b>
கறுப்பு:
இவர்களது எண்ணஅலைகள் மாறிக்கொண்டே இருக்கும். அவர்கள் நினைத்தது நடக்காவிட்டால் "அப்செட்" ஆகிவிடுவார்கள். கறுப்பு நிறத்தை பிடிக்காதவர்கள் விருப்பு வெறுப்பு இல்லாத சராசரி மனிதனாகவே இருப்பர்.</b>

<b>வெள்ளை:
என்றும் தூய்மையான மனம் படைத்தவர். என்றும் சுத்தமாக இருப்பார்கள்.</b>


நிறங்களில் வரும் பாடல்கள் - vasisutha - 02-17-2005

[size=13]நிறங்களில் வரும் பாடல்கள்..

<b>பச்சை</b> நிறமே பச்சை நிறமே,,,

<b>வெள்ளை</b> ரோஜா பூவே,,

<b>கறுப்பு</b>த்தான் எனக்கு பிடிச்ச கலரு,,

<b>மஞ்சள்</b> பூசும் வானம் தொட்டு...

<b>நீல</b> வான ஓடையில்...

<b>ஊதா</b> ஊதா ஊதாப்பூ,,,

<b>சிவப்பு</b>


- KULAKADDAN - 02-17-2005

நிறங்களில் வரும் பாடல்கள்..

செந்தாளம் பூவில்......
வெள்ளை புறா ஒன்று.....


- vasisutha - 09-22-2005

வறுமையின் நிறத்தை சிவப்பாக ஏன் குறிப்பிடுகிறார்கள்? :?:


- RaMa - 09-22-2005

இரத்தம் சிவப்பு தானே. ஆதனால் தான் வறுமையின் நிறம் சிவப்பு என்பார்கள் என்று நான் நினைக்கின்றேன்


- sathiri - 09-22-2005

நிறங்களிற்கும் வாழ்வின் சம்பவங்களிற்கும் கூட நெருங்கிய தொடர்புண்டு

மங்கலத்திறகு மஞ்சள்
அபாயத்திற்கும் வீரத்திற்கும் சிவப்பு
துக்கத்திற்கு கறுப்பு
மகிழ்ச்சி பச்சை
சமாதானம் வெள்ளை
இப்பிடி சம்பவங்களுடனும் இதாடர்பு படுகிறது ஆனால் விபச்சார பகுதிகளையும் சிவப்பு பகுதிகள் எண்டு சொல்லும் வழக்கம் உண்டு அது எதனால் அபாயத்திற்காகவா அல்லது வீரத்திற்காகவா?? எண்டு தெரியேல்லை
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kurukaalapoovan - 09-22-2005

மன உறுதி கட்டுப்பாடு கொஞ்சம் கேள்விக்குரிய நிலையில் இருப்பவர்களுக்கும் (potential customers) வாடிக்கையாளருக்கும் (customers) சிவப்புப் பகுதிகள் ஆபத்தை குறிக்குமாக்கும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தொழில் செய்யும் பெண்களிற்கு ஒரு வகையில் வீரத்தை குறிக்கலாம்.


- Vishnu - 09-22-2005

வறுமையை குறிக்கும் நிறம்.. சிவப்பு..
தூரத்தை குறிக்கும் நிறம்.. நீலம்..
மேலும்.. :roll: :roll:


- sankeeth - 09-22-2005

காதலர்தின நிறம் பச்சை.


- RaMa - 09-22-2005

மஞ்சள் மங்கலத்தை குறிக்கும்


- Mathan - 09-26-2005

குழந்தை பிறந்தவுடன் ஆடைகளை தேர்ந்தெடுக்கும் போது என்ன குழந்தை என்பதை பொறுத்து நிறம் மாறுபடுகின்றது

blue ஆண் குழந்தை
pink பெண் குழந்தை