Yarl Forum
வசியக்காரி.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வசியக்காரி.... (/showthread.php?tid=7969)



வசியக்காரி.... - sharish - 10-19-2003

<b><span style='font-size:25pt;line-height:100%'>வசியக்காரி....</b></span>

வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத வசியக்காரி...
ஒரு தடவைதான் சிரித்தாய்
ஓராயிரம் தடவை
மனசுக்குள் எதிரொலி...!


கத்தியை நினைவுபடுத்தும்
அபாயமல்ல நீ
இருப்பினும் அதன்
கூர்மையை நினைவுபடுத்தும்
உன் விழிகள்...!


வேலவன் வேல்விழி வேதனாயகி...
திருப்பு முகம்
மறுப்பு ஏன்..?
விழிதிறந்து விருந்துவை
ஒரு கோடி சூரியனை
ஒரே நேரத்தில் பார்க்கும்
பாக்கியசாலி நான்தான்...!


றோஜா இதழ்களுக்கேன்
நிறச்சாயம்...?
உன் உதடுகளுக்கேன்
உதட்டுச்சாயம்..?


மலர்கள்
அலங்காரம் செய்வதில்லை
மனிதன்தான் அதைக்கொய்து
தன்னை அலங்கரிக்கின்றான்..!
புதுவாசம் கொண்ட மகாதேவி...
நீ மலர்...!
வா... வந்தென்னை அலங்கரி...!


திடீரென்று வீதியில்
மலர்வாசனை வந்தது
அதோ...
தூரத்தில் நீ வருகிறாய்...!


ஏதோ..
சில கவிதைகள் எல்லாம்
எழுதுகிறேன்
கவிஞன் என்கிறார்கள்
""கலங்காத"" காதல்சமுத்திரமே...
நீ கொஞ்சம் காதல் தா...!
என்னையும்...
காதல்க்கவிஞனாக்கு....!


உயிரை அலைபாயவைத்த
அமுதகாவியா...
கவிதை
உனக்குப் பிடக்கும் என்றாய்
இதயம்
உனக்குப் பிடிக்கும் என்றாய்
இரண்டும்
என்னிடம் உண்டு...!
இரண்டுக்கும் பிடித்த
காதல்தான் உன்னிடம் உண்டு...!


உனக்கு உரிமையுண்டு
என் இதயத்தைக் கொள்ளையடிக்க
வா வந்து கொள்ளையடி...!
கோலாகலமாக கொண்டாடு...!
கொலைசெய்யாதே...!!!


கடல்மேல் தவழும்
அலைபோல் எழுந்து
தரைமேல் நடக்கும்
நுரையாலான சிலையே
கழுத்துவரை உன்னை
அற்புதமாய்ப் படைத்த பிரம்மன்
அதன்பின்
திறமையுள்ள சிற்பியைத்தான்
அழைத்திருப்பான்
அழகாக செதுக்கிவிட...!


பார்த்ததும் ©க்கும்
பாரிஜாதமே....
பாதணி அணிந்து நடக்காதே
நல்ல ஓவியத்தை
நாள்தோறும் நான்பார்க்க
விரும்புகிறேன்..!


உன் சிறு சிறு பொருட்களைத்தான்
நான் திருடி திருடி சில்மிஷம் செய்தேன்
""திருடன்"" என்று அழைக்கிறாய்....!
என் உயிரையே திருடிக்கொண்ட
உன்னை நான் எப்படி அழைப்பது...???


""கள்ளி"" உன்னையும்
பள்ளிப் பாடத்தையும்
ஒரே நேரத்தில்
இரகசியமாய்...
வாசித்துக்கொண்டிருந்தேன்
சத்தமில்லாமல் அழைத்து
""கவனி"" என்கிறாய்...!?!??


உனக்கும் எனக்கும் உள்ள
உறவை...
காதல் என்கிறார்கள்...!
எப்படி சாத்தியமானது...?
எண்ணிப்பார்க்க முடியாத
நேசத்தை
பிரித்துவிட முடியாத
பாசத்தை
மொழியின் உறவுச்சொற்களால்
சொல்லமுடியாத உறவை
மூன்றே மூன்று
எழுத்துக்களாலான
வார்த்தையால் சொல்வது....
எப்படி சாத்தியமானது....???
......................................

த.சரீஷ்
19.10.2003 (பாரீஸ்)


(இன்னும் வரும்....)


- nalayiny - 10-19-2003

ஆகா கவிதையிது கவிதையிது.ஒரு தடவைதான் சிரித்தாய்
ஓராயிரம் தடவை
மனசுக்குள் எதிரொலி...!


மனசை வசீகரித்துக்கொண்ட வரிகள். இவை.

மலர்கள்
அலங்காரம் செய்வதில்லை
மனிதன்தான் அதைக்கொய்து
தன்னை அலங்கரிக்கின்றான்..!
புதுவாசம் கொண்ட மகாதேவி...
நீ மலர்...!
வா... வந்தென்னை அலங்கரி...!


அற்புத கற்பனை வரி நிசமும் கூட.மலருக்கே வாழ்வு கொடுத்த உன்னதம். ம் பாராட்டுக்கள் கவிஞரே......!!!!!! பெண்களை மலர்களாய் உவமை அமைத்து குதறியது போக மலரே வந்து எனை அலங்கரித்து கொள் என்ன மனித நேய பக்குவம்....!!!! அருமை எனது மனசு நிறைந்த பாராட்டுக்கள்.


Re: வசியக்காரி.... - AJeevan - 10-20-2003

<b><span style='font-size:25pt;line-height:100%'>வசியக்காரியை வசீகரித்தவனுக்கு........</b>

[quote=sharish]
உனக்கு உரிமையுண்டு
என் இதயத்தைக் கொள்ளையடிக்க
வா வந்து கொள்ளையடி...!
கோலாகலமாக கொண்டாடு...!
கொலைசெய்யாதே...!!!</span>


பார்த்ததும் ©க்கும்
பாரிஜாதமே....
பாதணி அணிந்து நடக்காதே
நல்ல ஓவியத்தை
நாள்தோறும் நான்பார்க்க
விரும்புகிறேன்..!


""கள்ளி"" உன்னையும்
பள்ளிப் பாடத்தையும்
ஒரே நேரத்தில்
இரகசியமாய்...
வாசித்துக்கொண்டிருந்தேன்
சத்தமில்லாமல் அழைத்து
""கவனி"" என்கிறாய்...!?!??

கொள்ளைக்காரனாய் - கால்
தட ஓவிய ரசிகனாய்
மெளன வாசகனாய் - வந்தவனே
கவனிக்க வைத்து விட்டாய்.............

-அஜீவன்

[scroll:9252468f93][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்


- Paranee - 10-20-2003

எனக்கும் வார்த்தைகள் இல்லை
விமர்சித்துக்கொள்வதற்கு
வாழ்த்துக்கள் நண்பா
வசியக்காரி என்று ஏன் பொய் சொல்கின்றீர்கள்.
உங்களைவிடவா வசியம் இருக்கின்றது அவளிடம்
கவிதையில் வசியம்புூசி அவள் மனதை கொள்ளையிட முயல்கின்றீர்கள். வாழ்த்துக்கள்

Quote:வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத வசியக்காரி...
ஒரு தடவைதான் சிரித்தாய்
ஓராயிரம் தடவை
மனசுக்குள் எதிரொலி



- இளைஞன் - 10-20-2003

நண்பரே சரீஷ்...
முன்னைய கவிதைகளில் இருந்து இந்தக் கவிதை மாறுபட்டிருக்கிறது. எழுத்து நடை வித்தியாசமாகவும், கற்பனைகள் புதியனவாகவும் உள்ளன. வாழ்த்துக்கள்... தொடருங்கள்.

எனக்குப் பிடித்த வரியமைப்பு:

Quote:கடல்மேல் தவழும்
அலைபோல் எழுந்து
தரைமேல் நடக்கும்
நுரையாலான சிலையே

எனக்குப் பிடித்த கற்பனை:

Quote:கழுத்துவரை உன்னை
அற்புதமாய்ப் படைத்த பிரம்மன்
அதன்பின்
திறமையுள்ள சிற்பியைத்தான்
அழைத்திருப்பான்
அழகாக செதுக்கிவிட...!

மகிழ்ச்சி