![]() |
|
இன்றைய உதயன் செய்தி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இன்றைய உதயன் செய்தி (/showthread.php?tid=7965) |
இன்றைய உதயன் செய்தி - Paranee - 10-20-2003 இன்றைய உதயன் செய்தி பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்த யுவதி திரு மணத்திற்காக வெளிநாடு செல்ல விருந்த பயணம் அரச அலுவலர் களின் மெத்தனப் போக்கால் தடைப் பட்டதாக கூறப்படுகின்றது. தெல்லிப்பழையைச் சேர்ந்த இந்த யுவதியின் குடும்பம் 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து கோப்பாயில் தங்கியுள்ளது. இந்த யுவதியின் பிறப்புச்சான்றிதழ் பதிவு செய்யப் பட்ட சமயத்தில் அவரது பெயர் இருக்கவேண்டிய இடத்தில் அவரது தந்தையாரின் பெயர் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. காலம் தாழ்த்தியே இதனை யுவதியின் பெற்றோர் அறிந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட யுவதி தனது எதிர்கால நலன் கருதி 1999 இல் உரிய ஆவணங்களைக் காட்டி யாழ்.மாவட்டப் பதிவாளர் அலுவல கத்தில் தனது பெயரை உரிய இடத் தில் பதிவுசெய்து கொண்டார். அத் தோடு, பெயர் சரியாக பதியப்பட்ட சான்றிதழ் ஒன்றையும் அங்கு அவர் பெற்றுக்கொண்டார். கொழும்பிலுள்ள பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ள பிரதியிலும் இப்பெயர் திருத் தம் பதிவுசெய்யப்படும் என யாழ். மேலதிக மாவட்ட பதிவாளர் அலு வலகத்தால் இவருக்கு அப்போது கூறப்பட்டது. இதன் பின்னர் நான்கு வருடங் கள் கழிந்த நிலையில் தனது திரு மணத்திற்காக வெளிநாடு செல்லும் நோக்கோடு இந்த யுவதி கொழும்பு சென்றார். அங்கு கடவுச்சீட்டுப் பெறு வதற்கான விண்ணப்பத்தை குடி வரவு குடியகல்வு திணைக்கள அலு வலகத்தில் யாழ்ப்பாணத்தில் பெற்ற பிறப்புச் சான்றிதழுடன் இணைத்துக் கொடுத்தார். அப்பெயர் மாற்றத்தில் சந்தேகம்கொண்ட அதிகாரிகள் கொழும்புப் பதிவாளர் அலுவலகத் தில் பிறப்புச்சான்றிதழ் பிரதியை பெற்றுவருமாறு பணித்தனர். அந்த யுவதியும் உடனடியாக கொழும்பில் உள்ள பதிவாளர் அலு வலகத்தில் பிறப்புச்சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொண்டார். ஆனால், அதனைப் பார்த்த யுவதி அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் நான்கு வருடங்கள் கழிந்தும் கொழும்புப் பதிவாளர் அலு வலகத்தில் உள்ள பிரதியில் அவ ரது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்க வில்லை. இதனைத் தொடர்ந்து அந்த யுவதி யாழ்ப்பாணப் பதிவாளர் அலு வலகத்தில் விண்ணப்பித்து பெற்ற பிறப்பு சான்றிதழ் அங்குள்ள அதி காரிகளுக்கு காட்டினார். ஆனால், அவர்களோ தமக்கு அப்படியான பதிவு எதுவும் இதுவரை கிடைக்க வில்லை என்பதோடு அப்படிப் பெயர் மாற்றம் செய்யவேண்டுமெனில் உட னடியாக யாழ்ப்பாணம் சென்று அங்கு அனுமதிக்கடிதத்தை பெற்றுவருமா றும் கூறினார்கள். அந்த யுவதியும் விரைவில் வெளி நாடு செல்லவேண்டும் என்ற நோக் கோடு உடனடியாக யாழ். அலுவல கத்திற்கு வந்து விடயத்தைச் சொன் னார். ஆனால் இங்கோ தாம் உரிய பதிவுகளை 1999ஆம் ஆண்டிலேயே அனுப்பிவிட்டதாகவும் கடிதம் தர முடியாது எனவும் கூறிவிட்டதாக அறியமுடிகிறது. - தணிக்கை - 10-20-2003 இது தமிழ் ஈழம் அது சிறீலங்கா இங்கு யாழ்பானத்திலும் தவறு இல்லை அங்கு கொளும்பிலுத் தவறு இல்லை யாழ்ப்பானம் தமழ் ஈழத்தின் தலைநகரம் கொளும்பு சிறீலங்காவின் தலைநகரம் |