![]() |
|
new topic - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: new topic (/showthread.php?tid=7960) |
new topic - Saniyan - 10-20-2003 அன்பு நிறை நெஞ்சங்களே, முதற்கண் எனது வணக்கங்கள் உரித்தாகுக. நான் இந்த இணையத்துக்கு புதுசு. கணிணிப் பகுதியில் நியூ டொபிக் எண்டு அழுத்தினன். ஏதோ ஸ்பெசல் ஆக்கள் மட்டும்தான் போஸ்ட் பண்ணலாம் எண்டு வருது. நான் எப்படி ஸ்பெசலா வாறது ??? விசயம் என்ன எண்டா? . . லினிக்ஸ் பற்றி தெரிஞ்ச யாராச்சும் நல்லவன் (ள்) பெரியவன் (ள்) எனது சந்தேகங்களை தீர்ப்பாரா ?? லினிக்ஸ் இணையத்துக்கு போனேன் . . ஆயிரத்தெட்டு விநியோகங்கள் இருக்கு . . எதை தரவிறக்கம் செய்வதென்று தெரியவில்லை . . . எனது வீடடுக் கணிணியில் பாவிப்பதற்கு எது உகந்தது. பி.கு. எனக்கு லினிக்ஸ் மொழி தெரியாது. பிறகு என்னத்துக்கு உனக்கு லினிக்ஸ் என்டு நீங்கள் மனசுக்குள்ள நினைக்கிறது எனக்கு விளங்குது. ஒரு ஆர்வம் தான். தமிழில் பிழைகள் இருந்தால் மன்னித்தருள்க. இஞ்ச வந்து நிறைய தமிழ் படிசிட்டன். பிழை இருந்தாலும் அதுக்கு நீங்கள் தான் பொறுப்பு. நான் சும்மா. - yarl - 10-21-2003 எதற்கும் இதற்குள் ஒருமுறை நுழைந்து பாருங்கள் http://www.tamillinux.org/ - வலைஞன் - 10-21-2003 வணக்கம் நண்பரே, உங்களை யாழ் இணையக் கருத்துக்களத்தில் நிர்வாகம் சார்பிலும், பிற அங்கத்துவர் சார்பிலும் மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொள்கிறோம். தேடலோடு முதல் பதிவை பதித்திருக்கும் நீங்கள் தொடர்ந்தும் பல தேடல்களோடும், தகவல்களோடும், கருத்துக்களோடும் எம்மோடு இணைந்திருங்கள். ஆரம்பத்தில் "களவாயில்" பகுதிக்குள் நீங்கள் மூன்று பதிவுகளை (உங்களைப் பற்றிய அறிமுகம், களம் பற்றிய கருத்து, மற்றும் பல) பதிந்தபின் உங்களிற்கு மற்றைய அனைத்துப் பிரிவுகளிற்குமான அனுமதி வழங்கப்படும். மேலதிக விபரம் தனிப்பட்ட செய்திச் சேவை மூலம் உங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்க - நன்றி - இளைஞன் - 10-22-2003 வாருங்கள் வாருங்கள்! எல்லோரையும் பற்றிக் கொள்ளுங்கள். தாருங்கள் தாருங்கள்! தரமான கருத்துக்களை(தலைவிதியை) எல்லோர்க்கும் தாருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|