![]() |
|
தவறான வழிநடத்தல்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: தவறான வழிநடத்தல்? (/showthread.php?tid=7956) |
தவறான வழிநடத்தல்? - veera - 10-21-2003 யாழ் களம்,சில காலங்களாக அதாவது குறிப்பிட்ட <b>சில வாரங்களாக </b>மிகவும் நிம்மதியாக அர்த்தமுள்ள விடயங்களை ஆராய்ந்து கொண்டும் நல்ல முறையில் கருத்தாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டும் உண்மையில் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டிருந்தது. ஆனால்,திடீரென ஊருக்குப்போன சுப்பராயன் திரும்ப வந்தது போன்று களம் மீண்டும் குறிப்பிட்ட ஒரு நபரின் சேஷ்டைக் களமாக மாறி வருகிறது.அதாவது <b>வைத்தியசாலைப் பின்சுவர் போன்று மாறி வருகிறது.</b> என்றும் சொல்லலாம். எச்சரிக்கைகள்,வழங்குவதிலும் களத்தின் கண்காணிப்பாளர்கள் அதிகரிக்கப்பட்டு கருத்துக்களை நீக்குவதிலும் தணிக்கை செய்வதிலும் களத்தை தரமாக நிர்வகிக்க வேண்டும் என்கின்ற <b>திருவாளர் மோகன் அவர்களின் முயற்சிகள் எதுவுமே அர்த்தமற்றதோ </b>எனும் தவறான ஒரு ஊகத்தை வெளிக்கொண்டுவருகிறது. அதாவது களத்தில் எழுதும் ஒரு நபர் உச்ச கட்ட எச்சரிக்கைகளுடன் <b>வெளியேற்றப்பட்டாலும்</b> இன்னுமொரு பெயரில் பதிந்து எழுதலாம் என்பது இங்கு நிரூபிக்கப்பட்டிருப்பது என்னைப் போன்ற சாதாரண அங்கத்துவனுக்கு பெரும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றது. இது தவறான வழி நடத்தலாக அல்லது மற்றவர்களுக்கு யாழ் களத்தின் நிர்வாகத்தன்மையில் கேள்விகைளை எழுப்பக்கூடிய விதத்தில் அமைகிறது. எனவே களத்தின் எச்சரிக்கை என்பதற்கு ஒரு மரியாதை இருக்க வேண்டும்.வெளியேற்றம் என்பதற்கு ஒரு நியதி இருக்க வேண்டும். <b>அதையும் மீறி ஒரு நபரை சில மனிதநேய காரணங்களுக்காகவோ அல்லது களப் பொறுப்பாளர்களின் காருண்ய குணத்தாலோ மீண்டும் அனுமதித்தால் பொறுப்பாளர்களின் முடிவுக்குக் கட்டுப்படும் ஒரு அங்கத்துவனாக 'தணிக்கை' என்ற பெயரின் மீள் வருகையை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால்,களத்தினை மீண்டும் [b]சேஷ்டைக்களமாகவோ</b> அல்லது ஒரு காலத்தில் அவரே குறிப்பிட்டிருந்த <b>அரட்டைக்களமாகவோ</b> அவர் மாற்ற முயல்வதைப் பொறுப்பாளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். வெளியேற்றப்பட்ட ஒரு நபர் மீண்டும் சுதந்திரமாக தான் தான் அவர் என்கிறார்.அதன் உண்மை நிலையை அறிந்தவர்கள் களப் பொறுப்பாளர்கள் தான்.எனினும் கருத்துக்களின் அடிப்படையை தமிழின் நடையைப் பார்க்கும் போது நாங்கள் எதைக் கண்டிருந்தோமோ அது தான் இது என்ற முடிவுக்கு வர முடிகிறது. இவர்கள் யாழ் களத்தினை தமது சொந்தப் பிரச்சாரங்களுக்குத்தான் பாவிக்கிறார்கள்.இது அனைவரும் அறிந்த உண்மைதான். ஆக தவறான வழி நடத்தல் யாழ் களத்தில் இடம் பெறக்ககூடாது என்பதை மனப்பூர்வமான விரும்பும் நான், இந்தக் கருத்தினை பொறுப்பாளர்கள்,கண்காணிப்பாளர்களின் பார்வைக்கு [b]எனது தாழ்மையான அபிப்பிராயமாக முன்வைக்கிறேன் - mohamed - 10-21-2003 :oops: :oops: :oops: ரீச்சர்
- veera - 10-22-2003 இன்று அதிகமாக அழுதுவிட்டீர்கள்.பரிதாபமாக இருக்கிறது நாளைய அழுகைக்காகவும் கொஞ்சம் மிச்சப்படுத்தி வையுங்கள். இன்னுமொரு தடவை நோட்டீஸ் சுமந்து கொண்டு கடை கடையாக ஏற வேண்டிய காலம் வரும்.அப்போது ஆளில்லாமல் அழுவதற்கு. - இளைஞன் - 10-22-2003 வணக்கம் வீரா அவர்களே... உங்கள் கருத்துக்கும், களத்தின் மீது வைத்திருக்கும் அக்கறைக்கும் நன்றிகள். நீங்கள் குறிப்பிட்ட விடயம் பற்றி யாழ் இணையக் கருத்துக்கள நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. விரைவில் உங்கள் கருத்துக்கு உரிய பதில் தரப்படும். அதுவரை பொறுமை காக்கவும். நன்றி. |